விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 15, 2012

இந்திய அல்லது தமிழ் தச்சு தொழிலாளிகள் புகைப்படம் எதுவும் கிடைக்கவில்லையா நண்பரே --Prayani (பேச்சு) 10:50, 12 ஏப்ரல் 2012 (UTC)

போடவேண்டியது வெறும் தச்சரின் படம் மட்டுமே! அதில் இந்திய, தமிழ்சார் படம் என்பதெல்லாம் கூறப்படும் கருத்துக்கு அப்பாற்பட்டது. இப்படத்தைப் பார்ப்பவர் தச்சரைப் புரிந்து கொள்ளமுடியும். :) எனவே, இது போன்ற சிந்தனையைக் கைவிட வேண்டுகிறேன். :) கூடியமட்டிலும் கிடைக்கக்கூடியதிலேயே சிறப்பான, துல்லியம் மிக்க படங்களை கடந்த பல மாதங்களாக தேர்வுசெய்து முதற்பக்கத்தில் காட்சிப்படுத்த அணியப்படுத்தி வருகிறேன். :) தங்கள் சுட்டிக்காட்டலுக்கு நன்றி! :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 11:32, 12 ஏப்ரல் 2012 (UTC)


எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள் என்று நம்புகிறேன். தமிழ் விக்கியில் வரும் படங்களில் தமிழ் சார் தொழிலாளி மற்றும் தொழில் உபகரணங்களை இணைக்கலாமே என்று தான் சொல்ல விரும்பினேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். தங்களின் உழைப்பை மிகவும் மதிக்கின்றேன். நன்றி--பிரயாணி (பேச்சு) 12:05, 12 ஏப்ரல் 2012 (UTC)

வணக்கம் சூர்யா. தச்சர் எனபது சாதிப்பெயர் அல்ல. தொழிற்பெயர். ஆசிரியர் என்பது எவ்வாறோ அவ்வாறே. தச்சசுத் தொழில் விசுவகர்மா அல்லது ஆசாரி எனும் சாதியருக்கு உரியதாக அக்காலத்தில் இருந்தது. தற்காலத்தில் அனைத்து சாதியைச் சேர்ந்தோரும் தச்சுத் தொழிலில் ஈடுபடுகின்றனர். சென்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது கூட எங்களுக்கு சாதிப்பட்டியல் அளிக்கப்பட்டது. அதில் தச்சர் என்பது குறிப்பிடப்படவில்லை என நினைக்கிறேன். இதனைக் கருத்தில் கொள்ளவும்.நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:48, 12 ஏப்ரல் 2012 (UTC)

Return to the project page "இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 15, 2012".