வாருங்கள்!

வாருங்கள், Prayani, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--shanmugam 09:04, 17 பெப்ரவரி 2012 (UTC)

மொழிபெயர்ப்புதொகு

வணக்கம், விக்கியில் உங்களை வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள் என்ற பகுப்பில் பல கட்டுரைகளில் சில பகுதிகள் மொழிபெயர்க்கப்படாமல் உள்ளன. உங்களால் முடிந்தால் இவற்றை மொழிபெயர்த்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 11:45, 21 பெப்ரவரி 2012 (UTC)


நன்றி.. என்னால் முடிந்த வரை கண்டிப்பாக தமிழாக்கம் செய்கிறேன் திரு. Kanags--பிரயாணி 12:05, 21 பெப்ரவரி 2012 (UTC)

நன்றி பிரயாணி.--Kanags \உரையாடுக 20:24, 21 பெப்ரவரி 2012 (UTC)

ஒரு வேண்டுகோள்தொகு

பிரயானி...
உங்களின் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுங்கள். உங்களைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்ள இது உதவும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் 12:51, 28 பெப்ரவரி 2012 (UTC)

தகவல்களை கொடுத்து விட்டேன், நன்றி --பிரயாணி (பேச்சு) 06:47, 6 மார்ச் 2012 (UTC)

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
நீங்கள் பல பயனுள்ள கட்டுரைகளை உருவாக்கி வருவதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள். அன்புடன் இரவி (பேச்சு) 10:43, 3 ஏப்ரல் 2012 (UTC)

+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:41, 20 ஏப்ரல் 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


மிகவும் நன்றி திரு.இரவி அவர்களே--பிரயாணி (பேச்சு) 11:13, 3 ஏப்ரல் 2012 (UTC)

உசாத்துணை தேவைதொகு

நீங்கள் கொடுத்த கணித வரலாறு கட்டுரை தகவல்கள் எந்த புத்தகத்தில் உள என உசாத்துணையில் தரவும். மிக முக்கியமான கட்டுரை அல்லவா.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:42, 20 ஏப்ரல் 2012 (UTC)

உசாத்துணை கொடுத்துள்ளேன். ஆனால் தவறுதலாக மேல்பக்கம் வருகிறது. அதை அட்டவணையின் கீழே வரும் படி செய்ய உதவுங்கள். --பிரயாணி (பேச்சு) 06:18, 17 மே 2012 (UTC)

 Y ஆயிற்று. அட்டவணை முடிவில் |} இந்த குறியீடை தொகுக்கும் போது தவறுதலாக நீக்கியிருப்பீர்கள் என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:43, 17 மே 2012 (UTC)

நன்றி --பிரயாணி (பேச்சு) 06:43, 17 மே 2012 (UTC)

வேண்டுகோள்தொகு

காடு வளர்ப்பு என்ற பெயரில் ஏற்கனேவே ஒரு கட்டுரை உண்டு. எனவே உங்கள் காடுவளர்ப்பு கட்டுரையை அதனுடன் இணைத்து அதை உரைதிருத்தலமே...--Sank (பேச்சு) 05:20, 26 மே 2012 (UTC)

காடு வளர்த்தல் என்ற பெயரில் ஏற்கனவே கட்டுரை இருப்பது எனக்கு தெரியாது [[1]] இந்த இணைப்பில் இக்கட்டுரை தேவை என்பதைப் பார்த்து பின்பே கட்டுரையை எழுதினேன். தாராளமாக இக்கட்டுரையை இணைக்கலாம்.இணைக்க யாரவது உதவுங்கள். மூலக் கட்டுரையை உரைத் திருத்த முயலுகிறேன்.--பிரயாணி (பேச்சு) 14:52, 28 மே 2012 (UTC)

 Y ஆயிற்று பிரயாணி --சண்முகம் (பேச்சு) 15:23, 28 மே 2012 (UTC)

நன்றி. திரு.சண்முகம்--பிரயாணி (பேச்சு) 15:26, 28 மே 2012 (UTC)

கட்டுரையை என்னால் முடிந்த வரை உரைத்திருத்தி உள்ளேன். காடு வளர்ப்பு கட்டுரையில் உள்ள கூகுள் தமிழாக்கக் கட்டுரை என்பதனை நீக்கலாமா என்பதை தெளிவு படுத்தவும்--பிரயாணி (பேச்சு) 16:15, 28 மே 2012 (UTC)

முழுவதும் உரை திருத்தி விட்டால் அவ்வார்ப்புருவை நீக்கி விட்டு பேச்சுப் பக்கத்த்தில் பகுப்பு:திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள் எனும் பகுப்பை சேர்த்து விடுங்கள்--சண்முகம் (பேச்சு) 16:26, 28 மே 2012 (UTC)

தகவலுக்கு மிகவும் நன்றி--பிரயாணி (பேச்சு) 16:34, 28 மே 2012 (UTC)

பிறந்த நாள் குழுமம்தொகு

  வணக்கம்! Prayani அவர்களே! பிறந்தநாள் குழுமம் தங்களை அதன் புதிய உறுப்பினராக ஏற்றுகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது! ஏதேனும் ஐயம் எழுந்தால் இங்கே கேட்கலாம்! நன்றி!

--மதனாகரன் (பேச்சு) 12:38, 11 சூன் 2012 (UTC)

பாசுரங்கள்தொகு

வணக்கம். உங்களது திவ்விய தேசங்களின் கட்டுரைகள் நன்றாக உள்ளன. கோயிலடி மற்றும் புள்ளபூதங்குடி கட்டுரைகளில் தரப்பட்டுள்ள பாசுரங்களுக்குள், * மற்றும் - என்ற குறியீடுகளைப் பயன்படுத்தியுள்ளீர்களே, அவை பாசுரங்களின் அமைப்பிலேயே உள்ளவையா அல்லது நீங்களாகப் பயன்படுத்தியவையா? எனக்கு மூலப் பாசுரங்கள் குறித்து தெரியாமையால் கேட்கிறேன். பதிலைக் கட்டுரைகளின் உரையாடல் பக்கத்திலும் அளிக்கலாம்.--Booradleyp (பேச்சு) 17:29, 7 ஆகத்து 2012 (UTC)


மிகவும் நன்றி. கோயிலடி மற்றும் புள்ளபூதங்குடி கட்டுரைகளில் உள்ள * மற்றும் - குறியீடுகள் பாசுரங்களில் வரும் ஏற்ற இறக்கங்களை தெரிந்து கொள்ள மட்டுமே. மூலப் பாசுரங்களில் அவை கிடையாது. அவை . தேவை இல்லை எனில் மாற்றிக் கொள்ளலாம். --பிரயாணி (பேச்சு) 07:27, 8 ஆகத்து 2012 (UTC)

திருவாலி,திருநகரிதொகு

பேச்சு:திருவாலி,திருநகரி பார்க்கவும்.--Booradleyp (பேச்சு) 18:05, 14 ஆகத்து 2012 (UTC)

சூழல் மண்டலம்தொகு

நீங்கள் ஆரம்பித்த சூழல் மண்டலம் கட்டுரையில் ஓரளவுக்கு உரைதிருத்தம், விக்கியாக்கம் செய்துள்ளேன். அந்தக் கட்டுரை Ecosystem என்பதைக் குறிக்கும் கட்டுரைக்காக எழுதி இருப்பீர்களாயின், அதற்கான கட்டுரை ஒன்று ஏற்கனவே உள்ளது. அந்த சூழ்நிலைமண்டலம் கட்டுரையின் உரையாடல் பக்கத்தில், ஏற்கனவே அதன் தலைப்பை சூழல் மண்டலம் என மாற்றக் கோரப்பட்டுள்ளது. எனவே அவ்விரு கட்டுரைகளையும் ஒன்றிணைக்க பரிந்துரைத்துள்ளேன். தங்களுக்கு மறுப்பில்லை எனில் அவற்றை ஒருங்கிணைக்கலாம். மேலும், அந்தக் கட்டுரையில் சில பகுதியை சூழலியல் கட்டுரைக்குள் சேர்க்கலாம் எனத் தோன்றுகின்றது. உங்கள் கருத்தைக் கூறினால், அவற்றை ஒன்றிணைத்து விடுகின்றேன்.--கலை (பேச்சு) 15:48, 12 செப்டெம்பர் 2012 (UTC)


தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். சூழல் மண்டலம் மற்றும் சூழ்நிலை மண்டலம் இரண்டுமே ஒரே கருத்தைக் கொண்டவையே.. தாரளமாக இணைக்கவும்.. இணைப்பதில் உதவி மற்றும் குறிப்புகள் வேண்டுமாயினும் தருகிறேன். மிகவும் நன்றி--பிரயாணி (பேச்சு) 08:27, 19 செப்டெம்பர் 2012 (UTC)

பதிப்புரிமை மீறல்தொகு

வணக்கம், Prayani!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 17:40, 27 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Prayani&oldid=1851529" இருந்து மீள்விக்கப்பட்டது