விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பிறந்தநாள் குழுமம்
இன்றைய சூழலில் பிறந்தநாள் முதலான தனிமனிதத் தகவல்களை பொது இடங்களில் இடுவது அவ்வளவாக நல்லதல்ல. பயனர்கள் கவனமாக இருக்க வேண்டுகிறேன்.--செல்வா 04:42, 13 அக்டோபர் 2009 (UTC)
- வணக்கம் அய்யா,தனிமனித தகவல்கள் தருவது ஆபத்தானதே!ஆனால் பிறந்தநாள் பகிர்வதால் நம்மை பற்றி எதுவும் தெரியபோவதில்லை. மிகவும் கடுமையாக இல்லாமல்,சற்று இளைப்பாறவே இது போன்ற குழுமங்கள்! நான் ஏதேனும் தவறாக கூறினால் மன்னிக்கவும்! Vatsan34 06:23, 14 அக்டோபர் 2009 (UTC)
- வணக்கம், வத்சன். உங்கள் முயற்சியையும் எண்ணத்தையும் பாராட்டுகிறேன். அதனால் விளையும் நன்மையையும் உண்டர்கிறேன். ஆனால் ஒருவருடைய பிறந்தநாள் என்பது முக்கியமான தனியாள் அடையாளங்களில் ஒன்றாக பயன்படுகின்றது (வட அமெரிக்காவில்). விக்கியின் வெளியே உள்ளவர்கள் தவறாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. பயனர்களில் சிலர் பொருட்படுத்தாதவர்களாக இருப்பார்கள். ஆனால் தீவாய்ப்பு உள்ளது என்று அறிந்திருப்பது நல்லது என்று சுட்டிக்காட்டவே எழுதினேன். உங்கள் நல்லார்வத்தை போற்றுகிறேன், மட்டுப்படுத்தவும் விரும்பவில்லை. விக்கியில் மன்னிப்பு போன்ற சொற்களுக்குத் தடை :) --செல்வா 04:20, 15 அக்டோபர் 2009 (UTC)
வத்சன், பங்களிப்பாளர்களிடையே உறவாடலை மேம்படுத்தும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால், பல இணையத்தளங்கள், வங்கி, கடன் அட்டை நிறுவனங்கள் ஆகியவற்றின் கணக்குகளில் நமது பிறந்த நாள் விவரம் ஒரு முக்கியத் தரவாக இருக்கிறது. நம் கணக்கு விவரங்களைத் தவறாகப் பயன்படுத்த, உளவு பார்க்க பிறந்த நாள் தகவலும் உதவலாம். இதன் காரணமாக என் பிறந்த நாள் விவரத்தை இணையத்தில் எங்கும் பொதுவில் அறிவிப்பதில்லை. மற்ற பங்களிப்பாளர்களும் இத்தகைய தீவாய்ப்பு இருப்பதை அறிந்த பின் இதில் இணைவது நன்று--ரவி 11:50, 15 அக்டோபர் 2009 (UTC)
- பல ஆவணங்களில் பிறந்த நாள், முக்கிய விவரமாகத் தேவைப்படுவதே ஆகும். எனினும், பிறப்பு வருடம் இல்லாது பதிவு செய்வதால், பெருமளவு இடர் குறையும் என்பது என் கருத்து. நமக்குள் தேவைப்படும், மேம்பாட்டு பணியாகவே நான் கருதுகிறேன். உளவியல் உற்சாகத்தை ஏற்படுத்தும் காரணிகளுள், இதுவும் ஒன்றே.த* உழவன் 15:12, 29 டிசம்பர் 2009 (UTC)
- பல விக்கிப்பீடியர்கள் விக்கிப்பீடியாவுக்கு வெளியேயும் இயங்குகிறார்கள். ஒளிப்படங்களை வெளியிடுகிறார்கள். வயதையும் பிறந்த ஆண்டையும் ஊகிப்பது அவ்வளவு கடினமான பணி அன்று--இரவி 15:26, 8 பெப்ரவரி 2012 (UTC)
இதனை, தமிழ் விக்கிப்பீடியா பிறந்தநாள் குழு என்று மாற்றினால், இக்குழு, த.வி.ன் ஒரு பகுதியே என்பது மிகத்தெளிவாகும். இக்குழுவில் இணைந்ததற்கு, இதன் உறுப்பினருக்கு, இந்த இனிப்பிலைகளை வழங்கி மகிழ்கிறேன்.த* உழவன் 15:07, 31 டிசம்பர் 2009 (UTC)
பயனர் பக்கம் -நீக்கம்
தொகுபயனர் பக்கத்தில் எவ்விதக் குறிப்புகளுமில்லாமல் சிகப்புக் குறியீடுடன் இருக்கும் பயனரது பிறந்த நாள் குறித்த தகவல் இருப்பின் அதை நீக்கிவிடுவதே நல்லது என நினைக்கிறேன். கருத்து வேண்டப்படுகிறது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:34, 5 ஆகத்து 2011 (UTC)
- அந்தப் பயனராலேயே அத்தகவல் இடப்பட்டிருப்பின் அது இருப்பதே நன்று! --மதனாஹரன் 09:33, 8 பெப்ரவரி 2012 (UTC)
- +1 மதனா, கனக்சு. அவர் தன் விருப்பத்தின் பேரில் இடுவதை நாம் நீக்கக்கூடாது. :) -- சூர்யபிரகாஷ் உரையாடுக 13:04, 8 பெப்ரவரி 2012 (UTC)
ந. பசுபதி என்று ஒரு பயனர் கணக்கே இல்லை. யனர்:Chanumaa பற்றிய குறிப்பு எதுவும் அவரது பயனர் பக்கத்தில் இல்லை என்பது பிரச்சினை இல்லை. ஆனால், விக்கிப்பீடியா பிறந்தநாள் குழுமத்தில் தன் பெயரை இணைத்ததைத் தவிர வேறு எந்தப் பங்களிப்பையும் நல்கவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் 35,000க்கும் மேற்பட்டோர் பயனர் கணக்கு பதிந்துள்ளனர். 600+ பேரே பங்களித்துள்ளனர். கூட்டிக் கழித்துப் பார்த்தால் யார் யாருக்கு வாழ்த்து சொல்வது என்று முடிவு செய்யலாம் :)--இரவி 15:24, 8 பெப்ரவரி 2012 (UTC)
- ந. பசுபதி என்பதை நீக்கி விடலாம். --மதனாஹரன் 09:56, 10 பெப்ரவரி 2012 (UTC)
நிறைவேற்ற முடியாததை தவிர்ப்போம்
தொகுதமிழ் விக்கிப்பீடியா பிறந்தநாள் குழுமத்தின் நோக்கமாகக் குறிக்கப்பட்டுள்ள விடயமாவது......
- குழுமத்தில் சேர்ந்துள்ள பயனர்களை அவர்களுடைய பிறந்தநாள் அன்று வாழ்த்துவது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும். எனவே பிறந்தநாள் கொண்டாடும் பயனர்களை அவரின் பிறந்த நாளன்று அவருக்கான பயனர் பேச்சு பக்கத்தில் சென்று வாழ்த்துவோம். விக்கிப்பீடியர் சமுதாயத்தை வலுப்படுத்துவோம்.'
நல்ல நோக்கம்
ஆனால் இது நடைபெறுகின்றதா?
எனென்றால்............
பிறந்தநாள் குழுமத்தில் ஓர் அங்கத்தவனான எனது பிறந்த நாள் நவம்பர் 11
யார் வாழ்த்தினார்கள் ....?
- நிறைவேற்ற முடியாததை தவிர்ப்போம்.
- இதற்காக காலத்தை விரயமாக்க வேண்டாம்--P.M.Puniyameen 16:39, 15 திசம்பர் 2011 (UTC)
தமிழ் திங்கள் மற்றும் நாட்களை பயன்படுதலாமே.
தொகுநாம் விக்கிபீடியாவில் நாட்களை குறிக்க ஆங்கில நாட்குறிப்பிலிருந்து சனவரி 1 போன்ற குறிகளை பயன்படுதிக்கிறோம். இதற்க்கு பதிலாக நாம் நமது தமிழ் தேதிகளை பயன்படுதினால் மிகவும் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன்.
அதை போன்று நமது தமிழ் எண்களையும் பயன்படுதலாமே.
தமிழ் திங்கள் மற்றும் நாட்களை பயன்படுதலாமே.
தொகுநாம் விக்கிபீடியாவில் நாட்களை குறிக்க ஆங்கில நாட்குறிப்பிலிருந்து சனவரி 1 போன்ற குறிகளை பயன்படுதிக்கிறோம். இதற்க்கு பதிலாக நாம் நமது தமிழ் தேதிகளை பயன்படுதினால் மிகவும் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன்.
அதை போன்று நமது தமிழ் எண்களையும் பயன்படுதலாமே.
நன்றி
தொகுஎனது பிறந்த நாளன்று வாழ்த்து தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி. இருப்பினும் நான் பிறந்த நாள் கொண்டாடும் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். I am sorry that I can't continue in Tamil. It takes very long time to type in Tamil. I believe that humans wish each other when they have achieved something or if they are going to. My birthday is not a big thing to celebrate every year. Passing out of Birth canal is not a big achievement. And you know what, I have even failed in that. Doctors have to operate and take me out. See how much trouble I have caused on my first day of earth to my mom. And speaking of my past year I failed in final exams in college, I lost the trust of my parents, I was addicted to habits that are considered bad by wise men. I spent four damn years in college and still I don't have a degree. And about my coming year I don't have a job and I have to repay my loan to the bank which believed that I will be successful, my ex-and only GF is getting married next month. I don't think that I deserve a birthday wish in this situation. I didn't mean to be mean and I am not being obscene, but this is all I can be. Thanks Again.
மீண்டும் செயற்படுகின்றது.....
தொகுதமிழ் விக்கியின் பிறந்தநாள் குழுமம் சில காலம் செயற்படாமல் இருந்தது. அதைத் தவிர்த்து பயனர்களை ஊக்குவிக்கும் நன்னோக்கம் கருதி பள்ளி மாணவர்களால் மீண்டும் செயற்படத் தொடங்குகின்றது என்பதை பள்ளிமாணவர்கள் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 06:32, 13 பெப்ரவரி 2014 (UTC)