விக்கிப்பீடியா பேச்சு:இலட்சம் கட்டுரைகள்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
ஒரு இலட்சம் கட்டுரைகள் என்று தலைப்பை மாற்றலாமா? நூறாயிரம் என்று சொல்வது வழக்கம் கிடையாது. --இரவி (பேச்சு) 10:25, 18 ஏப்ரல் 2017 (UTC)
சிம்மி வேல்சின் கூற்றாகக் காட்டப்பட்டிருக்கும் பகுதியில் ".....மனித அறிவு முழுவதையும் இலவசமாக பெற்றுக்கொள்ளும் ......" என்ற தொடரில் "இலவசமாக" என்பது சரியல்ல. அது "கட்டற்ற முறையில்" என்றிருக்கவேண்டும். ----மயூரநாதன் (பேச்சு) 04:07, 20 ஏப்ரல் 2017 (UTC)
- இலக்கணப்படி, ஓர் இலட்சம் கட்டுரைகள் என வர வேண்டும். ஆனாலும், அச்சொற்றொடர் பொருந்துவதாகத் தெரியவில்லை. "ஒரு இலட்சம்" என எழுதுவதற்கு விதிவிலக்கு உண்டா என எனக்குத் தெரியாது. அறிந்தவர்கள் கூறுங்கள். நூறாயிரம் கட்டுரைகள் என்பதே எனது பரிந்துரை.--Kanags \உரையாடுக 07:28, 20 ஏப்ரல் 2017 (UTC)
- நடைமுறையில் ஆயிரம், இலட்சம் என்று சுட்டினாலே அது ஓராயிரம், ஒரு இலட்சம் என்பதைத் தான் சுட்டும். எனவே, ஓர், ஒரு என்று குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லை. --இரவி (பேச்சு) 10:50, 9 மே 2017 (UTC)
- சில நாட்களுக்கு முன் சென்னையிலுள்ள ஒரு வங்கியில் நான் கொடுத்த காசோலையை மாற்றித்தர மறுத்தார்கள். காரணம் அதில் தொகை Thousand only என எழுதப்பட்டிருந்தது. அப்படி ஒரு தொகை இல்லை என்று சொன்னார்கள். அது எனது சொந்தக் காசோலையாக இருந்ததால் உடனேயே நான் Onethousand only என மாற்றி எழுதிக் கொடுத்துப் பணத்தைப் பெற்றுக்கொண்டேன். மக்கள் மத்தியில் ஆயிரம் என்பது ஓராயிரமாகக் கருதப்பட்டாலும் அது சரியான ஏற்கப்பட்ட நடைமுறை அன்று. ஆகவே ஓர் இலட்சம் என்பதே சரியானது. ஒருலட்சம் என ஒரு சொல்லாக எழுதலாம். அதில் தமிழ் இலக்கண வழுவும் இல்லை.--UK
Sharma3 11:14, 9 மே 2017 (UTC)