விக்கிப்பீடியா பேச்சு:உசாத்துணைப் பக்கம்

இப்பக்கத்தை உசாத்துணைப்பக்கம் என்றோ அல்லது உதவிப் பக்கமென்றோ அழைக்கலாமா?--Umapathy 15:27, 19 ஜூலை 2006 (UTC)

இதற்கு உசாத் துணை என்று பெயரிடலாம். உசாவுதல் என்றால் கலந்து ஆலோசித்தல். மிக நல்ல சொல். வேறு சொற்கள் தேவை எனில்: மேல்துணை, ஒப்பீட்டுத் துணை, தரமான துணை, உறுதிகோள் துணை, அடிக்கோள்நூல் துணை என்று கூறலாம்.--C.R.Selvakumar 15:39, 19 ஜூலை 2006 (UTC)செல்வா
உதவிப் பக்கம் ரொம்ப பொதுவான பெயராக உள்ளது. பிற உதவிப்பக்கங்களோடு குழப்பிக்கொள்ள நேரிடும். உசாத்துணை என்பதின் மூலப் பொருள் அறியாமல் இத்தனை நாள் குழம்பிப் போய் இருந்தேன். விளக்கத்திற்கு நன்றி செல்வா. அது நல்ல பெயராகப் படுகிறது--ரவி 07:42, 20 ஜூலை 2006 (UTC)

கற்றாழை, சுண்ணாம்பு, சர்க்கரைச் சீமெந்து தொகு

"கட்டிடத் தேவைக்குச் சீமெந்து எடுப்பதென்பது முயற்கொம்பு. எம்மவரின் மூளையென்ன லேசுப்பட்டதா? கற்றாழை செடியை வெட்டிச் சாறாக்கினார்கள். அதனை மணலுடன் கலக்கினார்கள். அத்துடன் சுண்ணாம்பு, சர்க்கரை சேர்த்தார்கள். அளவு பார்த்து தண்ணீர் கலந்தார்கள். பிறநாட்டுச் சீமெந்துக்குப் பதிலா 'தமிழ் சீமெந்து' உருவாகியது. ஆனால் சீமெந்துபோல வேகமாகக் கட்டி முடிக்கமுடியாது. காரணம் காய்வதில் சிறிது தாமதம். ஆனாலும் எம்மவர் தளர்வின்றி சிறிய வேலைகளுக்கு அதனைப் பயன்படுத்தினார்கள். "

மேற்கண்ட சீமெந்து தொடர்பாக மேலதிக தகவல்கள் எதுவும் தெரிந்தால் இங்கு பகிரவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 15:29, 21 அக்டோபர் 2012 (UTC)Reply

சுண்ணாம்பு, நாமக்கட்டி, கடுக்காய் கொண்டு திருமலை நாயக்கர் மகால் கட்டப்பட்டதாக அறிந்திருக்கிறேன். மேற்கண்ட சிமெண்டு குறித்து எதுவும் தெரியவில்லை. கற்றாழையா ? கற்றாழையா ? அவ்வாறாயினும் கற்றாழை மரமல்லவே. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:58, 21 அக்டோபர் 2012 (UTC)Reply

மன்னிக்கவும் மேற்கோளை இணைக்க மறந்துவிட்டேன், மேற்கோள் இங்கே. இது ஈழத்தில் போர்க்காலச் சூழலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. கற்றாழை என்ற மரத்தைப் பயன்படுத்தி என்றுதான் நினைக்கிறேன். சீமெந்து பயன்படுத்திக் கட்டப்பட்ட வீடுகளைப் போன்ற நேர்த்தியுடனேயே சீமெந்து இல்லாத சிறிய வீடுகளைப் பார்த்து இருக்கிறேன். இவ்வாறான தொழில்நுட்பங்கள் முறையாக ஆவணப்படுத்தாமல் போய்விடும் ஆபத்து உண்டு. --Natkeeran (பேச்சு) 18:48, 21 அக்டோபர் 2012 (UTC)Reply

[[payanar :komara muthu|komara muthu katralai yenpathu oru chedi vagaiyai sarnthathu. Idhu valara kuraintha alavu thannir podum.

தமிழ்ப்பெயர்கள் இறுதியில் இ, ஆ விகுதிகள் குறித்த ஐயம் தொகு

நண்பர் ஒருவரின் பெண் குழந்தைக்குப் பெயர் வைக்கக் கேட்டிருக்கிறார். பொதுவாக, பெண் பெயர்கள் ஆ, இ என்று முடிவது வழக்கம். எடுத்துக்காட்டு: மோகனா, ஆனந்தி. நல்ல தமிழ் பெயர்ச்சொற்களை எடுத்துக் கொண்டு அதன் இறுதியில் இந்த விகுதிகளைச் சேர்த்துப் பெயர் வைக்க முயல்கிறேன். எடுத்துக்காட்டு: வியனா, வியனி, வானி, நலனா, நலனி... இவ்வாறு பெயர் வைக்கும் போது அது எதிர்மறை பொருளைத் தர வாய்ப்புண்டா? உண் -> உண்ணா என்பது எதிர்மறை பொருள் தருவது போல.. வினைச்சொற்களுக்கு மட்டும் தான் எதிர்மறை பொருள் வரும் என்று நினைக்கிறேன்.--இரவி (பேச்சு) 05:57, 5 ஏப்ரல் 2013 (UTC)

Sodhi Saththiram தொகு

Sodhi Saththiram என்பது ஒரு தமிழ் நூலில் பெயர். இதில் Sodhi என்பதை எவ்வாறு தமிழில் எழுதுவது?--Natkeeran (பேச்சு) 00:36, 29 ஆகத்து 2013 (UTC)Reply

சோதி சத்திரம் என்பது நூல் பெயரா? Sodhi என்பதை சோதி எனலாம், சோதியை தமிழாக்க தேவையில்லை--Kurumban (பேச்சு) 23:14, 7 அக்டோபர் 2013 (UTC)Reply
அது சோதி சாத்திரம்.--Kanags \உரையாடுக 00:22, 8 அக்டோபர் 2013 (UTC)Reply


ஆங்கில விக்கியின் இணையான பக்கங்கள் பட்டியல் தொகு

வணக்கம் நண்பர்களே, ஆங்கில விக்கியிலுள்ள பட்டியல்களின் இணையான தமிழ் விக்கியில் எப்படி காண்பது. உதாரணத்திற்கு இந்த பக்கங்களின் List of Wikipedians by article count, of Wikipedians by number of edits இணையான தமிழ் பக்கங்கள் என்ன? இது போன்ற பக்கங்களை ஒரு பட்டியலிட்டு முதற்பக்கத்தில் சேர்த்தால் நன்றாக இருக்கும் Cyarenkatnikh (பேச்சு) 04:43, 27 செப்டம்பர் 2017 (UTC)

Periodic review of the Admin's competency and impartial approach. தொகு

Since many of the Admins are appointed long time ago, do you have a process to review their competency and how do you ensure whether they are impartially using their vested power. I encountered a situation with the reviewer AntanO who is using power to mislead the fact of history and deleting the edits without properly reading the reference.

Could anybody look on to this and review his admin status.

Tamiledition (பேச்சு) 20:48, 6 செப்டம்பர் 2018 (UTC)

கிரந்த எழுத்துக்கள் தொகு

அனைவருக்கும் வணக்கம். கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவது சரியா தவறா என்ற வாதம் தமிழ் விக்கிப்பீடியாவில் இன்றுவரை தொடர்ந்துகொண்டே வருகிறது. சரியான ஒலிப்புடன் எழுதுவதற்கு கிரந்தம் தேவை என்பது மறுக்க முடியாத வாதமாகும். தமிழில் கலந்துவிட்ட பிறமொழிச் சொற்களே அதன் தனித்தன்மையை பாதிக்கின்றது. தன்னிடம் இல்லாத ஒரு ஒலியைக் குறிக்க இல்லாத ஒரு எழுத்தைப் பயன்படுத்துவதால் தமிழின் தனித்தன்மைக்கு எவ்வித பாதிப்புமில்லை. ஸ்வீடன், ஸ்காட்லாந்து போன்ற பெயர்களை இசுவீடன், இசுக்காட்லாந்து என்று எழுதுவதால் ஒலிப்புப் பிழை ஏற்படும்.

வடமொழி அறிஞர்கள் நூல்களைத் தமிழில் எழுத கிரந்த முறையை அறிமுகப்படுத்தினர். அதில் ஒருசில எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். எனவே கிரந்தம் தமிழை பாதிக்கவில்லை. தமிழக அரசு Tamil All Character Encoding (TACE16) என்ற குறியேற்றத்தை 2010ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. எனவே தற்போது ஜ, ஶ, ஸ, ஷ, க்ஷ ஆகிய ஐந்து கிரந்த எழுத்துக்களும் சட்டப்படி தமிழ் எழுத்துக்களில் ஒரு பகுதியாகிவிட்டது. அவற்றைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறுமில்லை. எனவே இனியும் கிரந்தம் குறித்த தவறான கண்ணோட்டத்தைக் களைந்துவிட்டு தமிழ் விக்கிப்பீடியாவை மேம்படுத்த முயற்சிப்போம். நன்றி. GangadharGan26 (பேச்சு) 03:27, 24 செப்டம்பர் 2019 (UTC) -  விருப்பம்-CXPathi (பேச்சு) 11:32, 7 செப்டம்பர் 2021 (UTC)

ஸ்டாலின், ஜெயலலிதா ஆகிய பக்கங்களில் கிரந்த எழுத்துக்கள் அனுமதிக்கப்படுகையில் பிற ஆளுமைகளின் பெயர்களில் உள்ள கிரந்த எழுத்துக்களைத் திருத்தலாமா? சக அரசியல்வாதி ஒருவரின் (விஜயகாந்த்) பெயரில் கிரந்தம் நீக்கப்படுவதுடன் ஒலிக்குறிப்பும் தமிழுக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. விக்கிப்பீடியா முழுமைக்கும் ஒரே கொள்கையைக் கடைபிடிக்க வேண்டாமா? ஏன் இந்த வேறுபாடு? -CXPathi (பேச்சு) 16:05, 7 செப்டம்பர் 2021 (UTC)
இங்கு பொதுவான நடைமுறை உள்ளது. அவற்றை அறிந்து பங்களியுங்கள். --AntanO (பேச்சு) 17:11, 7 செப்டம்பர் 2021 (UTC)
பொதுவான நடைமுறையின்படி கிரந்த எழுத்துக்களை திருத்தினால் நீங்கள் அந்த திருத்தத்தை நீக்குகிறீர்கள். எந்தெந்த கட்டுரையில் கிரந்தத்தை நூல் பிசகாமல் பயன்படுத்த வேண்டும் என்ற நடைமுறையைக் கூறினால் அதை முழுவதும் கடைபிடிக்க நான் தயாராகவே உள்ளேன். விஜயகாந்த் என்று அவர் எழுதும் பெயரை 'விசயகாந்து' என மாற்றினால் ஒன்றும் ஆகாது ஆனால் ஜெயலலிதா என்னும் பெயரை செயலலிதா என்று மாற்றினால் சர்சையாகும் என்று நாம் கொள்கைகளைத் தளர்த்தினால், நம்மிடம் ஒரு அறமின்மை இருக்கிறது என்றே நினைக்கிறேன். நன்றி! அன்புடன் CXPathi (பேச்சு) 18:05, 7 செப்டம்பர் 2021 (UTC)
Return to the project page "உசாத்துணைப் பக்கம்".