விக்கிப்பீடியா பேச்சு:சமூக ஊடகப் பராமரிப்பு

சமூக ஊடகங்களின் (Social Media) பயன்பாடு தொகு

  • விக்கி உள்ளடக்கங்களை பரந்த வட்டத்தோடு பகிர்தல்
  • விக்கி நிகழ்வுகளை விளம்பரப்படுத்தல்
  • விக்கி பரவலாக்கல்

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் முறை தொகு

  • தமிழ் விக்கியோடு தொடர்புடைய விடயங்களை மட்டும் பகிருங்கள்
  • இந்த ஊடகங்களின் ஊடாகப் பகிரும் போது நீங்கள் விக்கி சார்பாக கருத்தைப் பகிர்கிறீகள் என்று பார்க்கப்படுவீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

அணுக்கம் கோருதல் தொகு

  • விக்கியில் தொடர்ச்சியாகச் பொறுப்ப்டையும் செயற்படும் பயனர்கள் யாரும் தமிழ் விக்கி சமூக ஊடகக் கணக்குகள் ஊடாகப் பரவலாக்கல் பணிகளில் ஈடுபடலாம்.

அணுக்கம் தேவை தொகு

வணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவை சமூக ஊடகத்தில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல ஆர்வமுள்ளது. ஏற்கனவே முகநூலில் விக்கிப்பீடியா மற்றும் பிற விக்கித்திட்டங்கள் குறித்தும் பரப்புரை செய்து வருகிறேன். பிற சமூக ஊடகங்களிலும் எடுத்துச்செல்ல விரும்புகிறேன். அதற்கான அணுக்கம் தேவை. நன்றி. @Natkeeran, Neechalkaran, Ravidreams, Surya Prakash.S.A., Vatsan34, Logicwiki, and Ravidreams: --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:53, 31 ஆகத்து 2015 (UTC)Reply

வலைப்பதிவிற்கு மட்டுமே எனக்கு அணுக்கமுள்ளது. அதில் நீங்கள் இணைய அழைப்பை விடுத்துள்ளனேன். -நீச்சல்காரன் (பேச்சு) 08:03, 31 ஆகத்து 2015 (UTC)Reply
ஃபேஸ்புக்கில் நான் அழைப்பு விடுக்கிறேன். உங்கள் வரவுக்கு நன்றி. --Surya Prakash.S.A. (பேச்சு) 09:54, 1 செப்டம்பர் 2015 (UTC)

பகிரக் கோரல் தொகு

விக்கிப்பீடியா:கோயிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

  • வலைப்பதிவு -  Y ஆயிற்று
  • முகநூல்
  • டிவிட்டர்
  • பின்ரசு -  Y ஆயிற்று

--Natkeeran (பேச்சு) 01:55, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

முகநூலில் (தமிழ் விக்கிப்பீடியா) தென்காசியும் (நிருவாக அணுக்கம் உள்ளதென நினைக்கிறேன்) ஜெகதீசுவரனும் செயல்படுகின்றனர். சில முறை தினேசுகுமார் பொன்னுசாமியையும் அங்கு பார்த்துள்ளேன்.--குறும்பன் (பேச்சு) 02:13, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

தகவலுக்கு நன்றி குறும்பன். --Natkeeran (பேச்சு) 14:23, 5 அக்டோபர் 2013 (UTC)Reply
நண்பர்களுக்கு முகநூலில் https://www.facebook.com/groups/TamilWikipedians/ என்ற குழுமத்தினை தினேஸ்குமார் பொன்னுசாமி தொடங்கினார். தற்போது தென்காசியார், தினேஸ்குமார், சூர்ய பிரகாஸ், மதனாகரன், மற்றும் ஜெகதீஸ்வரனாகிய நான் என ஐந்து பேர் அனுக்கம் பெற்றுள்ளோம். குழுமம் என்பதால் உறுப்பினர்களாக உள்ள அனைவருக்கும் செய்தியை வெளியிடும் உரிமையுள்ளது. அனுக்கம் பெற்றவர்கள்தான் செய்தியை கூற வேண்டும் என்ற அவசியமில்லை. மேலும் இரு குழுமங்கள் முகநூல் இயங்கி வருகின்றன.
  1. இப்பயிலரங்கம் குறித்து தகவல் உழவன் முன்பே குழுமத்தில் செய்தியை வெளியிட்டுள்ளார். இச்செய்தி முதன்மையாக காணும் படி பின் செய்யப்பட்டுள்ளது,.

நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:11, 5 அக்டோபர் 2013 (UTC)Reply

அப்படியா. பகிர்வுக்கு நன்றி. மூன்று குழுமங்கள் இருப்பது சற்று குளப்பமாக இராதா. ஒன்றை முதன்மைப்படுத்தி அதற்கு ஆர்வம் உள்ளோர் அனைவருக்கும் அணுக்கம் தரலாமே. நாம் பகிரும் தகவல் ஒத்திசைவாக (consistent messaging) ஆக அமையும். நான் முகநூல் பயன்படுத்துவது இல்லை/அரிது. எனவே அதன் வழமைகளை அறியேன். --Natkeeran (பேச்சு) 15:39, 5 அக்டோபர் 2013 (UTC)Reply
1) குழுமங்களை ஒன்றினைத்தல் குறித்து கருத்து எழுந்தபொழுது, தற்போது உள்ளவற்றை ஒருங்கினைத்தாலும் புதிய குழுமங்களை உருவாக்கி கொள்ளலாம் என்ற வசதியுள்ளதால் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டவாறே இருக்க வேண்டியிருக்கும். அதன் காரணமாகவும், தற்போது மேலே குறிப்பிட்டுள்ள முகநூல் குழுமத்தில் அதிக விக்கிப்பீடியர்கள் இருப்பதால் மற்றவை ஓரளவு புறக்கணிக்கப்பட்டது போல இருப்பதாலும், இந்த கருத்தினை வலுவாக்க வில்லை.
2)குழுமத்தின் அணுக்கம் பயனர்கள் இடும் தகவல்களை மட்டுருத்தவும், பயனர்களை இனம் கண்டு சேர்ப்பதற்கு மட்டுமே தேவைப்படுவதால் அனைவருக்கும் அணுக்கம் வேண்டிய அவசியமில்லை நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:21, 5 அக்டோபர் 2013 (UTC)Reply

டுவிட்டர் கணக்கை ஒன்றிணைக்கலாமா? தொகு

டுவிட்டர் கணக்கை ஒன்றிணைத்து இருவரும் சேர்து பராமரிக்கலாமா. --Natkeeran (பேச்சு) 14:27, 5 அக்டோபர் 2013 (UTC)Reply

@tawiki கணக்கின் கடவுச் சொல் மறந்துவிட்டது. ஆனால், அது முகநூல் பக்கத்துடன் தொடர்பிலுள்ளது. கிட்டத்தட்ட @tamilwiki கணக்கிற்கும் ஒரே அளவு பின்தொடர்வோரே உள்ளனர். அப்பெயர் தானே விளக்கமுடையதாக உள்ளது. @tawiki-ஐக் காட்டிலும். எனவே, நானும் சிரீவத்சனும் சேர்ந்து @tamilwiki கணக்கை முகநூலுடன் இனி இணைத்துப் பயன்படுத்துகிறோம். @tawiki-ஐ எப்படியாவது நீக்கப் பார்க்கிறேன். கடவுச் சொல்லை என்னால் மீட்டெடுக்க இயலவில்லை. மின்னஞ்சல் முகவரியும் மறந்துவிட்டது. அது என் கணக்கே இல்லை. தற்போதுதான் கண்டறிந்தேன். மன்னிக்கவும். நான் வைத்திருந்த @tamil_wikipedia கணக்கை முடக்கிவிட்டேன். தற்போது @tamilwiki-யும் @tawiki-யுமே உள்ளன. @tamilwiki வத்சனாலும் மற்றொன்று பெயர் தெரியாத ஒருவராலும் நிர்வகிக்கப்படுகிறது. அதில், @tawiki நான் நிர்வகிக்கும் fb/TamilWikipedia பக்கத்தினுடன் இணைந்துள்ளது. எனவே, உறுதியாக @tawiki சிறீகாந்தினுடையதாகத்தான் இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால், அவர், வேறெங்கோ பணிநிமித்தமாக சென்றுள்ளதால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட ஈராண்டுகளாக அவரைத் தொடர்புகொள்ள முயல்கிறோம் (நான், பாலா, அருண்மொழி, யுவராஜ் பாண்டியன் முதலியோர்) ஆனால், அவர் யாருடனும் தொடர்பிலில்லை :( -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 17:42, 5 அக்டோபர் 2013 (UTC)Reply
வத்சனை அனுகி அனுக்கம் பெற இயலுகின்றதா எனப்பாருங்கள். இல்லையேல் அதிகார்வபூர்வ ஒரு கணக்கினை மீண்டும் கட்டமையுங்கள். உடன் சில ஆர்வமுள்ளோர்களுக்கும் அனுக்கம் கொடுத்து விடுங்கள். நிறைய பரப்புரைகள் இணையத்தின் வாயிலாக தேவையுறுவதால் டிவிட்டர் கணக்கினை அணுக முடிகின்றவர் கையில் வைத்திருப்பது அவசியமானது. நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:19, 6 அக்டோபர் 2013 (UTC)Reply

யூ டியூப் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் ஜிமெயில் கணக்கு வைத்துள்ளவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான யூ டியூப் அணுக்கம் பெற்றவர்கள். மற்றவர்கள் வேறு பெயரில் தான் செயல்பட முடியும்.--குறும்பன் (பேச்சு) 15:24, 5 அக்டோபர் 2013 (UTC)Reply

முன்னைய கணக்குக்கான கடவுச்சொல் யாரிடமும் நினைவில் இல்லை. ஆகவே tamil.wikipedia@gmail.com கொண்டு ஒரு புதிய channel உருவாக்குவது நன்று. ஆமாம் tamil.wikipedia@gmail.com அணுக்கம் உள்ளவர்களே அதனைப் பயன்படுத்த முடியும். --Natkeeran (பேச்சு) 15:28, 5 அக்டோபர் 2013 (UTC)Reply

விக்கிமீடியா முன்மாதிரிகள் தொகு

முகநூலில் நாம் உருவாக்கிய பிற பக்கங்கள் தொகு

பகிர வேண்டுகோள் தொகு

ஆகிய இரு நிகழ்வுகள் பற்றியும் பின்வரும் தளங்களில் தயந்து பகிருங்கள்:

  • வலைப்பதிவு
  • முகநூல்
  • டுவிட்டர்
  • பின்ரசுட்

--Natkeeran (பேச்சு) 17:23, 17 அக்டோபர் 2013 (UTC)Reply

பகிர வேண்டுகோள் - முகநூல், டுவிட்டர், மன்றங்கள் தொகு

விக்கிப்பீடியா:அக்டோபர் 28, 2013 - புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம்

பகிர்ந்தபின் திட்டப் பக்கத்தின் இணைப்புத் தந்து விடுங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 03:58, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஆவணப்படம் - பகிர்வதற்கான வேண்டுகோள்கள் தொகு

  • வலைப்பதிவு
  • முகநூல்
  • டுவிட்டர்
  • பின்ரசு

--Natkeeran (பேச்சு) 14:15, 5 நவம்பர் 2013 (UTC)Reply

முகநூல் பக்கத்தை புதுபதிகை செய்யாமல் பார்க்க விடவும் தொகு

https://www.facebook.com/TamilWikipedia பக்கத்தை புதுபதிகை செய்யாமல் பார்க்கக் கூடியதாக உள்ளது. ஆனால் FTamilWikipedians பக்கத்தை அவ்வாறு பார்க்க முடியவில்லை. ஏன்? --Natkeeran (பேச்சு) 14:38, 21 நவம்பர் 2013 (UTC)Reply

அணுக்கக் கோரிக்கை தொகு

@Surya Prakash.S.A. and Ravidreams: விக்கிப்பீடியா:ஆகஸ்ட் 28, 2017 மலையக விக்கிப்பீடியா - நூலகம் பட்டறை, விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் ஆகியவற்றை அறிமுகப்படுத்த, பரப்ப தமிழ் விக்கி சமூக வலைத்தளங்களுக்கு எனக்கு அணுக்கம் தரும்படி வேண்டுகிறேன். இந்தச் செயற்திட்டங்கள் நிறைவுற்றபின்பு அந்த அணுக்கத்தை மீள் பெற்றுக்கொள்ளலாம். நன்றி. --Natkeeran (பேச்சு) 02:47, 19 ஆகத்து 2017 (UTC)Reply

Return to the project page "சமூக ஊடகப் பராமரிப்பு".