விக்கிப்பீடியா பேச்சு:பிணக்குத் தீர்வுமுறை (வரைவு)

தெளிவான வரைவுப் பக்கம். இருப்பினும் இதனை நடைமுறையில் பயன்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களை அறிவதும் [முடிந்தவரை] நலம். எனக்கு ஓர் ஐயம் என்னவெனில், எடுத்தவுடனேயே ஒரு பிணக்கை 'அது இந்த வகைப்பாட்டில்தான் வரும்' என்று முடிவு எடுக்கலாமா? அல்லது எவ்வாறு? மேலும், இறுதியில் தரப்பட்டிருக்கும் சில விடயங்கள், இன்னும் தெளிவானதாக இருப்பின் பரவாயில்லை. அதாவது, ஏன் தடை? ஏன் அணுக்க நீக்கம்? என்ப போன்ற குறிப்புகள் மேலும் இப்பக்கத்தை எளிமையாக அணுக உதவும். மேலும், சமுதாயப் பொதுக்குழு அவ்வப் பிணக்குகளின் போது உருவாக்கத்தக்கனவா? அல்லது, நிலைக் குழுவா? அவ்வாறு நிலைக்குழுவாக இருப்பின் அதன் உறுப்பினர்கள் யாவராக இருக்க வேண்டும் அவர்களின் தேர்வு எவ்வாறெல்லாம் நடத்தப்பெறலாம். அத்தேர்வில் ஏதேனும் குழப்பம் ஏற்படினும் இதே தீர்வுமுறைப்படியே படிகள் பின்பற்றப்படுமா? அல்லது அதற்கேதேனும் சில முறைகள் [மேல் மட்ட அளவில்] உள்ளனவா? - இவை வினாக்கள் அன்று - யாரும் பதிலளிக்கத் தேவையில்லை - வரைவினை மேம்படுத்த சில ஆலோசனைகள் :) மற்றபடி, சுந்தர் அருமயான வரைவு :) எனக்கு மிகவும் பிடித்துள்ளது. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 18:23, 19 அக்டோபர் 2013 (UTC)Reply

இதில் முதல் இரண்டு நிலை விக்கிப்பீடியாவில் பழகிய ஒன்று. அதை நாம் சமாளித்துவிடலாம். 3ம் நிலையை இன்னும் மேம்படுத்த வேண்டும். சில நேரங்களில் 3ம் நிலைக்கு எடுத்த எடுப்பிலேயே சென்றுவிடாமல் 2ம் நிலையிலேயே பெரும்பாலான பிணக்குகளை தீர்த்துக் கொள்ள வேண்டும். தீர்வுமுறையின் அடிப்படையான முதல் இரண்டு நிலையை நன்கு எழுதியுள்ளீர்கள். --பழ.இராஜ்குமார் (பேச்சு) 18:33, 19 அக்டோபர் 2013 (UTC)Reply
நன்றி சூரியா, இராச்குமார். இயன்றவரை எந்தவொரு சிக்கலையும் முதல் கட்டத்திலிருந்தே அணுக வேண்டும். மூன்றாம் நிலைக்கான நிலைக்குழுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சூரியா எழுப்பிய கேள்விகளுக்கு விடைகாணும்விதமாக ஒவ்வொரு கட்டத்தின் நுணுக்கத்தையும் சேர்க்க வேண்டும். அதற்கு மற்ற பயனர்களின் முன்மொழிவுகளை வரவேற்கிறேன். -- சுந்தர் \பேச்சு 18:36, 19 அக்டோபர் 2013 (UTC)Reply
  • நல்ல வரைவு சுந்தர். சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது. ஆங்கில விக்கியில் கொள்கைப் பக்கத்தில் கூறியவாறு, "Do not follow an overly strict interpretation of the letter of policy without consideration for the principles of policies." என்பதைக் கருத்தில் கொண்டு இயங்க வேண்டும். தீர்ப்பாயம் பற்றியும் இங்கே கூறியதன் அடிப்படையில் ஒரு வரைவு எழுதலாம்.--செல்வா (பேச்சு) 21:34, 19 அக்டோபர் 2013 (UTC)Reply
    • கருத்துக்கு நன்றி செல்வா. உங்கள் திருத்தமும் நன்று. இது பெரிய பணியென்பதால் பலரும் சிறு சிறு துணைப் பகுதிகளைத் தொடங்கி விரிவாக்கினால்தான் செய்ய முடியும். காட்டாக, ஒவ்வொரு கட்டத்தையும் விரித்தும், நுணுக்கங்களைச் சேர்த்தும் எழுதலாம். இதற்கு நீங்கள், மணியன், சோடாபாட்டில் போன்றவொருவர் துணை கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும். :) -- சுந்தர் \பேச்சு 06:00, 20 அக்டோபர் 2013 (UTC)Reply
உதவ முடியும் சுந்தர்.--செல்வா (பேச்சு) 06:33, 20 அக்டோபர் 2013 (UTC)Reply
மிக்க நன்றி செல்வா. -- சுந்தர் \பேச்சு 06:36, 20 அக்டோபர் 2013 (UTC)Reply

அவதூறுகளை எதிர்கொள்வது எப்படி? தொகு

//விக்கியில் எந்தவொரு உள்ளடக்கமும் என்றுமே இறுதியாகி பூட்டப்படாது என்பதால் எத்தனை நாட்கள் கழிந்தாலும் சரியான நிலைக்கு மாற்றிவிட முடியும்.//

கட்டுரை தொடர்பற்று பயனரின் மேல் வைக்கப்படும் அவதூறுகளுக்கு இது பொருந்தாது. கட்டுரையை மீள்விப்பது போல் மனித உணர்வுகளையும், ஒருவர் இன்னொருவர் மேல் வைத்திருக்கும் மதிப்பீட்டையும், அவதூறுகளால் ஏற்படும் மன உளைச்சலையும், கால இழப்பையும் மீள்வித்து விட முடியாது. எனவே, முறையான ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பும் பயனர்களை எப்படிக் கையாள்வது, அவதூறு பரப்புதல் உறுதியானால் அதற்கு என்ன நடவடிக்கை என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.--இரவி (பேச்சு) 02:25, 20 அக்டோபர் 2013 (UTC)Reply

அவதூறினால் விளையும் பல கேடுகளில் ஒன்றை மட்டும் சரிக்கட்ட முடியும், அது பின்னால் மறுப்பு வெளியிடுவது. அதைப் பரப்புவது. ஆனால் மன உளைச்சல், நிகழ்வாழ்வில் இடர் போன்றவை முக்கியமான கேடுகள். அவற்றுக்கு என்ன செய்யலாம் என்பதைக் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். அதற்கு en:WP:BLP-இக்குத் தொடர்புடைய கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும். இவ்வாறான விசயங்களில் தடுப்பு நடவடிக்கை தவிர அடையாள ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கலாம் எனக் கருதுகிறேன். -- சுந்தர் \பேச்சு 05:53, 20 அக்டோபர் 2013 (UTC)Reply
தனி மனித அவதூறு பரப்பும் பயணர்கள், அந்த அவதூறிற்கு விருப்பம் தெரிவிக்கும் பயனர்கள், அதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவளிக்கும் பயனர்கள்,
நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பயனர்கள், அந்த அபாண்டத்தை விருப்பம் தெரிவிக்கும் பயனர்கள், அதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவளிக்கும் பயனர்கள்
என அனைவரும் நிரந்தரமாக தடை செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரையை முன்மொழிகிறேன்.
மேலும் அந்த பயனர்களின் கைப்பாவைகள் மற்றும் “கையாட்கள்” (sock puppets and meat puppets) கண்டறியப்பட்டு, அனைவரும் நிரந்திரமாக தடை செய்யப்படவேண்டும் என்ற பரிந்துரையை முன்வைக்கிறேன்
கட்டுரை எழுதிவதில் கருத்து வேறுபாடு என்பது வேறு. அதை மெதுவாக தீர்க்கலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். தினமும் 1.75 லட்சம் பார்வையாளர்கள் உள்ள ஒரு தளத்தை தனி மனித தாக்குதலுக்கும் பிறரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் பயன் படுத்துபவர்கள் மேல் கடுமையான நடவடிக்கைகள் தேவை புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 20:55, 20 அக்டோபர் 2013 (UTC)Reply
தெளிவாக ஐயமின்றி அவதூறு என்றால் எத்தகையவை என வரையறுக்க வேண்டும். களங்கத்தின் அளவுக்கேற்றாற்போல தடைக்கான காலத்தை வைக்கலாம். என்ன கூறினாலும் அவதூறு என வருங்காலத்தில் எவரும் கருத்திடுபவரின் விடுபாட்டுணர்வைக் கட்டுப்படுத்திடக் கூடாது. நல்லெண்ண நம்பிக்கை கொண்டு முதலில் தொடர்புடையவரிடம் விளக்கம் கேட்டுத் தராத நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கலாம். மிகப்பெரிய சிக்கல் என்றால் இடைக்காலத்துக்கு அவதூறான கூற்றுக்களை நீக்கி வைக்கலாம். -- சுந்தர் \பேச்சு 11:26, 21 அக்டோபர் 2013 (UTC)Reply
இது குறித்து விக்கிப்பீடியா:பயனர் மீது அவதூறு செய்வதை தடுத்தல் (வரைவு) பக்கத்தில் விரிவாக விவாதிக்கலாம்

கொள்கையாக அறிவித்தல் தொகு

ஏற்கனவே பலரும் ஆதரவு தந்து மாற்றுக் கருத்து ஏதும் இல்லாத இம்முன்மொழிவை முறையான கொள்கையாக அறிவிக்கலாம். --இரவி (பேச்சு) 21:06, 17 மார்ச் 2014 (UTC)

Return to the project page "பிணக்குத் தீர்வுமுறை (வரைவு)".