விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி/கட்டுரைத் தலைப்புகள்

கட்டுரைத் தலைப்புகளை அகரவரிசைப்படி அடுக்கலாம் என நினைக்கிறேன். என்ன நினைக்கிறீர்கள்?--Kanags \உரையாடுக 00:21, 27 மே 2017 (UTC)Reply

மிக நல்ல விடயம் Kanags. நானும் இதுபற்றி யோசித்தேன். ஒவ்வொரு துணைத் தலைப்பின் கீழும் அகரவரிசைப்படி அமைப்பதா அல்லது மொத்த பட்டியலையும் அகரவரிசைப்படுத்துவதா நல்லது?--கலை (பேச்சு) 08:08, 27 மே 2017 (UTC)Reply
துணைத்தலைப்புகளினுள் உள்ளவற்றை மட்டும் வரிசைப்படுத்தினால் போதும். செயரத்தினாவின் கருவி கொண்டு இவற்றை வரிசைப்படுத்தலாம். முன்னர் அறிவியலை நான் அகரவரிசைப்படி அடுக்கிய போது, அது பின்னர் ஏதோ காரணத்தால் மீளமைக்கப்பட்டது. அதனாலேயே யோசிக்கிறேன்.--Kanags \உரையாடுக 09:55, 27 மே 2017 (UTC)Reply
துணைத் தலைப்புக்களின் கீழ் வரிசைப்படுத்துவது நல்லது என்றே தோன்றுகிறது. எனவே அதனைச் செய்யுங்கள் Kanags.--கலை (பேச்சு) 12:55, 27 மே 2017 (UTC)Reply
தற்போதைக்கு வேண்டாம், துறை சார்பாகப் பிரித்தபின் செய்யலாம் என எண்ணுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:19, 28 மே 2017 (UTC)Reply
வேண்டாம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:23, 28 மே 2017 (UTC)Reply

துறைசார்பாகப் பிரிக்கப்பட்டுத்தானே துணைத் தலைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வேண்டாம் என்று கூறுவதற்கான காரணத்தையும் கொடுத்தால் நன்றாக இருக்கும். அகரவரிசையில் இருப்பது பணியை இலகுவாக்கத்தானே. ஏன் வேண்டாம் என்கிறீர்கள் என்பது புரியவில்லையே. விளக்க முடியுமா?--கலை (பேச்சு) 10:25, 28 மே 2017 (UTC)Reply

எடுத்துக்காட்டுக்கு தொழினுட்பம் பகுதியின் கீழ் தொழினுட்பம் எனும் முதன்மைக் கட்டுரை, அதன் பின்னர் பிற கட்டுரைகள் மிக்கியத்துவத்தின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டிருக்கும். அத்துடன் அகரவரிசைப்படுத்தினால் இலகுவாகும் என்று சொல்ல முடியாது. எ.கா- மிருகங்கள் பற்றிய தலைப்புகள் வேறு சம்பந்தமில்லாத் தலைப்புக்களினுடன் போய்க் கலக்கல் ஆகாது என்பதற்காக இந்நடைமுறை. வேண்டாம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:53, 28 மே 2017 (UTC)Reply

முதன்மைக் கட்டுரை முதலில் வந்தேயாக வேண்டும் என்று தோன்றவில்லை. அப்படியே அது அவசியமாக இருந்தாலும், முதன்மைக் கட்டுரையைத் தவிர்த்து, ஏனையவற்றை வரிசைப்படுத்தலாம். மேலும், இந்தப் பட்டியலில் கட்டுரைகள் எந்த முக்கியத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் புரியவில்லை. எங்காவது முக்கியத்தின் அடிப்படையில் ஏற்கனவே வரிசைப்படுத்தப்பட்டு உள்ளனவா? அதேபோல் மிருகங்கள் எல்லாம் ஏன் பட்டியலில் அடுத்தடுத்து வந்தேயாக வேண்டும் என்பதோ, அல்லது, அப்படி வராவிட்டால் என்ன பிரச்சனை என்பதோ புரியவில்லை. இதுபற்றி முன்பே எங்காவது உரையாடப்பட்டிருந்தால், பார்க்க விரும்புகிறேன். தயவுசெய்து இணைப்பைத் தருவீர்களா ஸ்ரீஹீரன்?--கலை (பேச்சு) 14:20, 28 மே 2017 (UTC)Reply

[meta.wikimedia.org/wiki/List_of_articles_every_Wikipedia_should_have], [meta.wikimedia.org/wiki/Talk:List_of_articles_every_Wikipedia_should_have]--ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:36, 28 மே 2017 (UTC)Reply

பக்கப் பார்வைகள் தொகு

ஆங்கில விக்கிப்பீடியாவில் முக்கியக் கட்டுரைகளை பக்கப் பார்வைகள் அடிப்படையில் வரிசைப்படுத்தி இருப்பது போல் இங்கிருக்கும் 1000 தலைப்புகளை வரிசைப்படுத்த முடியுமா? அவ்வாறு செய்தால், கூடுதல் பக்கப் பார்வைகள் பெறும் பக்கங்களை முன்னுரிமை கொடுத்து விரிவாக்க முடியும். உதவுக - @Aswn, Shrikarsan, Tshrinivasan, Tshrinivasan, and Shanmugamp7:இரவி (பேச்சு) 05:19, 27 சூன் 2017 (UTC)Reply

@Ravidreams: https://tools.wmflabs.org/topviews/?project=ta.wikipedia.org&platform=all-access&date=2017-06&excludes= ரவி, நீங்கள் கேட்பது இந்தப் பட்டியலா? --த.சீனிவாசன் (பேச்சு) 06:38, 14 சூலை 2017 (UTC)Reply

கட்டுரைத் தலைப்புகள் சரிபார்த்தல் தொகு

நடுவர்களின் கவனத்திற்கு, அருள் கூர்ந்து கட்டுரைப் போட்டியில் விரிவாக்கிய கட்டுரைத்தலைப்புகளை  Y வார்ப்பிடவும். பெரும்பாலான கட்டுரைகள் தொகுக்கப்பட்டும் இற்றை செய்யப்படாமலேயே உள்ளன. மேலும் தொகுக்கப்பட வேண்டிய கட்டுரைகளை அடையாளம் காண இயலும். நன்றி 16:10, 3 ஆகத்து 2017 (UTC)சரவணன் பெரியசாமி

பார்வைக் குறைபாடு & குருட்டுத் தன்மை தொகு

@Shriheeran, Sivakosaran, and Dineshkumar Ponnusamy: த.வி. யில் பார்வைக் குறைபாடு, குருட்டுத் தன்மை என்ற இரு கட்டுரைகள் உள்ளன. பார்வைக் குறைபாடு கட்டுரை ஆ.வி. யில் Visual impairment கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது. குருட்டுத் தன்மை கட்டுரை ஆ.வி. யில் இணைப்புக் கொடுக்கப்படவில்லை. ஆ.வி. யில் Blindness என்று தேடினால், அந்தக் கட்டுரை பார்வைக்குறைபாடு கட்டுரைக்கு வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. த.வி. யில் இவ்விரு கட்டுரைகளையும் இணைத்துவிட்டு, பொருத்தமான தலைப்பைத் தெரிவு செய்யலாம். பார்வைக்குறைபாடு கட்டுரையையே தலைப்பாகக் கொள்ளலாம் என நினைக்கிறேன். குறிப்பிட்ட தலைப்பையே போட்டிக் கட்டுரைத் தலைப்புக்கள் பட்டியலிலும் முன்னிலைப்படுத்துவது நல்லது. நன்றி. --கலை (பேச்சு) 10:56, 23 செப்டம்பர் 2017 (UTC)

கலை (பேச்சு) தங்கள் முடிவை ஏற்கிறேன்.குருட்டுத்தன்மையை வழிமாற்றுக் கட்டுரையாக மாற்றிவிட்டு போட்டிக்குப் பார்வைக் குறைபாடு கட்டுரையைப் பரிந்துறைக்கலாம்.நானும் இதே முடிவுக்கு வந்து போட்டியின் உரையாடல் பக்கத்தில் தங்கள் பரிந்துரையைப் பார்த்து இக்குறிப்பை எழுதுகிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:39, 23 செப்டம்பர் 2017 (UTC)

  விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:51, 26 செப்டம்பர் 2017 (UTC)

தலைப்புகள் மாற்றம் தொகு

கீழ்க்கண்ட தலைப்புகளை மாற்ற வேண்டுகிறேன். தங்களது கருத்தினை பதிவு செய்க

தாராண்மையியம் => தாராளமயம் ; ஆன் அரசமரபு => ஹன் அரசுமரபு

Cyarenkatnikh (பேச்சு) 19:05, 23 செப்டம்பர் 2017 (UTC)

Return to the project page "விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி/கட்டுரைத் தலைப்புகள்".