விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15

15 ஆம் ஆண்டு நிறைவையொட்டிய மாபெரும் போட்டிகள் - கருத்துக் கோரல் தொகு

வணக்கம்! தற்போது நமது தமிழ் விக்கி பல முன்னேற்றங்களைக் காணும் தறுவாயில் உள்ளது. அந்தவகையில் 15 வயதை எமது விக்கி அடையும் போது ஓர் மாபெரும் வளர்ச்சியை அடைந்திருக்க எதிர்பார்க்கப் படுகின்றது. இவ்வெதிர்பார்ப்பை வலுப்படுத்தும் நோக்கில்

 • கட்டுரைகளின் உருவாக்கம்
 • குறுங்கட்டுரை விரிவாக்கம்
 • சிறப்பு, நல்ல கட்டுரை உருவாக்கம்
 • கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைச் சீராக்கம்
 • கட்டுரைத் துப்புரவு (விக்கியாக்கம்)

ஆகிய பகுதிகளில் நல்ல நிலையில் அடைந்திருக்க எதிர்ப்பாக்கின்றேன். இதற்காக போட்டியொன்றையும் நடத்தி பரிசாக, பணத்தொகை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அதற்கு உங்கள் கருத்துகள் தேவைப்படுகின்றன. அத்துடன் இப்போட்டியின் காலம், பணத்தொகை ஆகிய விபரங்கள் பற்றி மேலும் அலசி ஆராய்ந்து கலந்துரையாடப்பட வேண்டும். மேலும் இதற்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர் இங்கு உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள். அத்துடன் மெலும் உங்கள் கருத்துகளை கீழே இடுங்கள்

கவனிக்க:-Nan,‎Selvasivagurunathan m , ‎Kanags, ‎Arulghsr, ‎Anbumunusamy, ‎சஞ்சீவி சிவகுமார் Muthuppandy pandian, ‎ ‎Dineshkumar Ponnusamy, ‎AntanO, ‎Ravi, ‎தகவலுழவன், மூர்த்தி, ‎பா.ஜம்புலிங்கம், ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, ‎ஜுபைர் அக்மல் Mayooranathan--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:56, 13 சனவரி 2017 (UTC)Reply
மேலதிக போட்டிபற்றிய விபரம்
 1. போட்டிக்காலம்:-ஆகஸ்ட் 2017 - சனவரி 2018
 2. பணப்பரிசு:-60,000 இந்திய ரூபாய்
 3. நோக்கம்:-
 • கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை ஒழித்தல்
 • கட்டுரை விரிவாக்கம் & உருவாக்கம்
 • கட்டுரைத் தரமுயர்த்தல் (சிறப்புக்கட்டுரை)
 • விக்கிப்பீடியாத் துப்புரவு--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:10, 13 சனவரி 2017 (UTC)Reply

போட்டிக்காலம் தொகு

 1. போட்டிக் காலத்தை 15 ஆவது ஆண்டு முழுவதற்கும் 12 மாதங்களுக்கு நீட்டிக்கலாம். இதனால், இப்போட்டியைப் பயன்படுத்திப் பிரசாரங்களை மேற்கொள்ளவும், கூடிய புதிய பயனர்களை உருவாக்கவும் போதிய காலம் கிடைக்கும். ---மயூரநாதன் (பேச்சு) 10:05, 13 சனவரி 2017 (UTC)Reply
 2. கட்டுரை ஆக்கத்திற்கும், மேம்படுத்தவும் ஆண்டு முழுவதும் கொண்டு செல்வது பயனளிக்கும், புதிய பயனர்களை கொண்டு வருவதற்கு ஆண்டு முழுவதும் என்ற காலக்கெடு கொஞ்சம் சிரமானது. ஒரு குறுகிய காலத்தில் புதுப்பயனர்களை ஈர்க்க தனித்த திட்டமே சிறப்பானதாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. பரப்புரைக்கும் ஏதுவாக இருக்கும். கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி பள்ளிகளில் ஒரு போட்டி வைக்கலாம். ஆனால் விக்கிப்பீடியாவில் எழுதுவது போன்று அல்லாமல் விக்கிப்பீடியா குறித்தான கட்டுரை ஓவிய போட்டியாகவே அவை அமையக்கூடும். :-( -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:55, 13 சனவரி 2017 (UTC)Reply
மயூரநாதன் அவர்களே போட்டியானது 12 மாதங்கள் தொடர்ந்து இருந்தால் பயனர்களிடையே சலிப்பு ஏற்படக்கூடும் ஆகவே தான் ஆறு மாதங்கள். அத்துடன் எனது எண்ணப்படி வாராவாரம் போட்டியை நடாத்தி மொத்தம் ஆறு மாதஙகள் தொடர்ந்து நடாத்தலாம். ஒவ்வொரு வாரமும் அதிகமான புள்ளியெடுக்கும் முதல் பத்துப்பேருக்கும் பணப்பரிசுகள். அத்துடன் குறைந்த அளவில் கட்டுரைகளை எழுதி விட்டு பணப்பரிசைத் தட்டிச் செல்லாமல் வெல்வதற்கு சற்று கடின வேலை செய்யவேண்டுமென் எதிர்பார்க்கப்படுகின்ரது. போட்டி அறிமுகாமும் முன் குறைந்தது 06 மாதகால விக்கி அனுபவமுடைய விக்கிப்பீடியர்களை புதுப்பயனர்கள் எனும் பகுப்பிலும். 06 மாதத்திற்கு அதிகாமா நஎங்களை போன்ற பயனர்களை தொடர் பங்களிப்பாளர்கள் எனும் பகுப்பிலும் இணைத்து, சாதாரணமாக ஒரு வாரத்தில் புதியகட்டுரைகளை போட்டிக்காக உருவாக்குவாராய் இருந்தால் பரிசு பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கை வரையறையை 25 ஆகக் கொண்டு மேலும் தொடர்பங்களிப்பாலராக இருக்கும் போது 40=45 ஆக வரையறையை வைக்கலாம். இவ்வாறே கட்டுரை விரிவாக்கம் ஆகியவற்றுக்கும் பொருந்தும். சாதாரணமாக வந்து கொஞ்ச கட்டுரைகளை அடித்துவிட்டு பணப்பரிசை வெல்வதில் எந்தவித பயனும் இல்லை என்பது என்கருத்து. ஆகையால் புதுப்பட்யனர்களை தக்க வைப்பதற்கும், நம் விக்கியின் எதிர்காலம் கருதியும் தமிழ் விக்கிப்பீடியாவின் மாபெரும் போட்டியான இப்போட்டியில் கலந்துகொள்ளுபவர்களை புதுப்பயனர் முன்னைய பயனர் என இரண்டு பக்குப்புக்களாக்கு இருசாராருக்கும் விதிகளில் வெவ்வேறு வரையறைகளை வத்து பணப்பரிசினை அளிப்பதுவே என்னுடைய நோக்கம் ஆகும். இங்கு நான் குறிப்பிட்ட விடயங்களை வாசித்து உங்கள் பதில்களை விரைவில் இடுவீர்கள் என நம்புகின்றேன். எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்கவும்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:06, 13 சனவரி 2017 (UTC)Reply
மயூரநாதன், சகோதரன் ஜெகதீஸ்வரன் கருத்துக்களை உள்வாங்கி 15ஆம் ஆண்டு முழுமையும் (2017 ஆ, 2018ஆ ?) தொடர் போட்டிகளை நடத்தலாம்; ஆனால் ஒவ்வொரு போட்டியும் குறிப்பிட்ட கூறினை ஒட்டி குறுகிய காலத்திற்கு இருக்கலாம். காட்டாக, முதல் மாதம் (அல்லது முதல் இரு மாதங்கள்) கூகுள் கட்டுரை துப்புரவாக்கம் என நடத்தலாம். அடுத்த போட்டியாக அடுத்த இரு மாதங்களுக்கு புத்தாக்க கட்டுரைகளுக்கு, குறிப்பாக புதுப்பயனர்களுக்கு மட்டுமே என்று, வைக்கலாம். இதுபோல தொடர்ந்து 15ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடி வரலாம். தொடர்ந்து கவன ஈர்ப்பும் இருக்கும்.--மணியன் (பேச்சு) 05:43, 14 சனவரி 2017 (UTC)Reply
ஸ்ரீஹீரன், உங்கள் முன்னெடுப்பு பாராட்டத்தக்கது, வாழ்த்துகள் ! பிழையின்றி எழுதும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுங்கள். எழுத்துப் பிழைகள் படிப்பதை கடினமாக்குவதை தவிர்த்து உங்கள் ஆளுமைக்கும் குறைபாடாக விளங்கும்.--மணியன் (பேச்சு) 05:43, 14 சனவரி 2017 (UTC)Reply

போட்டி உள்ளடக்கங்கள் தொகு

 1. புதியப் பங்களிப்பாளர்களை தமிழ் விக்கிக்கு கொண்டுவர வேண்டும். அண்மைக்காலங்களில் அதற்கு ஓரளவு முயற்சிகள் எடுக்கப்பட்டு, சிலர் இணைந்தனர். இவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதை நாம் உணர்கிறோம். ஆக, நிறைய பேரை இங்கு கொண்டுவர வேண்டும் என்பது திண்ணம். இதனைக் கருத்திற்கொண்டு போட்டிகளை வடிவமைக்க வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:46, 13 சனவரி 2017 (UTC)Reply
 2. கட்டுரைகளின் எண்ணிக்கையைக் கூட்டுதல், ஏற்கெனவே இருக்கும் கட்டுரைகளினதும், புதிய கட்டுரைகளினதும் தரத்தைக் கூடுதல் ஆகிய நோக்கங்களோடு, செல்வகுருநாதன் குறிப்பிட்டிருப்பதுபோல் புதிய பயனர்களைக் கொண்டு வருவதும் முக்கியம். அத்துடன், விக்கிப்பீடியாவின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வைப் பல்வேறு தரப்பினரிடையே ஏற்படுத்துவதற்கும் இப்போட்டிகளைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக மாணவர்களிடையே இவ்வாறான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போட்டிகளை வடிவமைக்கலாம். புதிய படிமங்களையும் பிற ஊடகங்களையும் சேர்ப்பதையும் போட்டியில் சேர்த்துக்கொள்ளலாம்.---மயூரநாதன் (பேச்சு) 10:21, 13 சனவரி 2017 (UTC)Reply
மயூரநாதன் வர்களே மாணவர்களை கிறிவைத்து போட்டி நடாத்துவதே என்னுடைய உண்மையான நோக்கம். அந்த வகையில் போட்டியில் பங்குபற்றுகின்ற புதிய பயனர்களை ஊக்கமளிக்கும் வகையிலும் பரிசுத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் போட்டியின் விரிவாக புள்ளி வழங்கும் திட்டத்தைப் பற்றி இங்கு உரையாடுவோம்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:06, 13 சனவரி 2017 (UTC)Reply
 1. குறிப்பிடப்பட்டுள்ள போட்டி உள்ளடக்கங்கள் விரிவானவையே.
  • இதுவரை நமது போட்டிகள் புதிய கட்டுரைகளை உருவாக்குவதையே இலக்காக கொண்டிருந்தன. 90,000 கட்டுரைகள் கொண்டுள்ள நிலையில் முன்னுரிமையாக உள்ளடக்க மேம்பாடு குறித்தே இலக்குகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். மேலும் கட்டுரைகளை ஒருங்கிணைக்கவும் தலைப்பு வாரியாக முழுமைப்படுத்தவும் வேண்டும். இயற்பியல் என்று எடுத்தால் தனித்தனியாக ஆயிரம் கட்டுரைகள் இருக்கலாம், ஆனால் அவை பல விடயங்களில் ஒன்றிற்கொன்று தொடர்பற்று உள்ளன. ஒரு வலைவாசல்களை உருவாக்கி உள்ளிணைப்புகளும் வழிநடத்து வார்ப்புருக்களும் உருவாக்கப்பட வேண்டும்.
  • புதிய கட்டுரைகள் உருவாக்கும் போட்டிகள் குறிப்பிட்ட துறைக்கு என இனம் காணப்படலாம்.
  • குறுங்கட்டுரை விரிவாக்கமும் இற்றையாக்கமும் முன்னுரிமை பெற முயலவேண்டும்.--மணியன் (பேச்சு) 06:01, 14 சனவரி 2017 (UTC)Reply
மணியன் அவர்களே, புதுப்பயனர்களுக்கு கட்டுரை உருவாக்கப் போட்டியை முன்வைக்கலாம். அத்துடன் போட்டிக்கென ஒரு வலைவாசலை விரைவில் உருவாக்குவேன். அல்லது போட்டி பக்கத்திலேயே எவ்வாறு போட்டியில் பங்கெடுப்பது எனும் துணுக்குகளை முன் வைத்துப் பங்குபெறச்செய்யலாம். எதுவெனினினும் பணம் கிடைத்த பின்னரே. அத்துடன் போட்டி தொடர்பான கருத்துக்கணிப்புக்கு இங்கு வருக--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:49, 14 சனவரி 2017 (UTC)Reply

முன்னேற்பாடுகள் தொகு

 1. கல்வியில் விக்கிப்பீடியாவின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் அது பெருமளவு வளர்ச்சி அடையக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும். அதனால், இவ்வாறான போட்டிகளை மாணவர்களின் கல்விச் செயற்பாட்டோடு ஒன்றிணைத்து நடத்த முடியுமா என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். இதற்கு பள்ளி ஆசிரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் போன்றவர்களுடன் கலந்து ஆலோசிப்பது நல்லது. இது தவிர போட்டியோடு இணைந்து நல்ல விக்கிப்பீடியாக் கட்டுரைகளை உருவாக்குவதற்கான அடிப்படைகள் குறித்த அறிவைப் போட்டியாளர்களிடம் உருவாக்குவதற்கான முன்னேற்படுகளும் அவசியம். ---மயூரநாதன் (பேச்சு) 10:36, 13 சனவரி 2017 (UTC)Reply
@Mayooranathan: அவர்களே, //விக்கிப்பீடியாக் கட்டுரைகளை உருவாக்குவதற்கான அடிப்படைகள்// இவ்விடயத்திற்கு தீர்வாக போட்டிக்கான புதுப்பயனர் வழிகாட்டி எனும் ஓர் பகுதியை போட்டிக்காக உருவாக்க விருப்பம். மேலும், பாடசாலை மாணவர்களின் நூலில் உள்ள பொதுவான விடயங்களை விக்கிப்பீடியாவில் விரிவாக கட்டுரைகளாக அடித்துவிட்டோமானால். அத்தலைப்புகள் தொடர்பில் அவர்கள் தேட முயலுவார்கள். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:20, 13 சனவரி 2017 (UTC)Reply

பணப்பரிசு தொகு

 1. என்னென்ன அம்சங்களில் போட்டிகள் இடம்பெறப்போகின்றன, ஒவ்வொன்றுக்கும் எத்தனை பரிசுகள், என்ன கால இடைவெளிகளில் பரிசுகள் வழங்கவேண்டும், எவ்வளவு காலம் போட்டி நடைபெற வேண்டும் போன்ற விடயங்களை ஓரளவுக்கு முடிவு செய்தபின் எவ்வளவு தேவை என்பதைக் கணக்கிட முடியும். பரிசுகளை உலகின் எந்தப் பகுதியில் இருப்பவர் வென்றாலும் அவருக்கு பரிசுத்தொகை வழங்கப்படக்கூடிய வகையில் ஒழுங்குகள் அவசியம். ---மயூரநாதன் (பேச்சு) 10:56, 13 சனவரி 2017 (UTC)Reply
 2. ஒரு சிறப்பான கட்டுரை, பல விக்கிமீடியத் திட்டங்களை உள்ளடக்கியது அதனால் பொதுவகம், விக்கித்தரவு, கருவி உருவாக்கம், குறிப்பாக கட்டற்ற மென்பொருட்கள் குறித்தவை, பிற கட்டற்ற திட்டங்கள், மொத்தத் தொகையில் எவ்வளவு பணம், எத்தகைய இலக்குகளுக்கு என முன்னறிவித்தல் மிகுந்த பயனையும், பிற திட்டங்களில் இருந்து விக்கிப்பீடியர் சற்று ஆழ்நோக்கோடும், உயர்ந்த இலக்குகளோடும் செயற்படுவர் என்பதை புதியவருக்கும், குறை கூறுவோருக்கும் தெளிவாக உரைக்கும். எடுத்துக்காட்டாக, உறைவிட விக்கிப்பீடியராக நான் செயற்பட்டபோது, எனக்கு 30, 000 ஊதியம் என பரப்பப்பட்டது. 6 மாத ஈடுபாட்டிற்கு பிறகே, அப்பரப்புரை தவறென்பதை உணர்ந்தேன். ஏனெனில், கிடைத்த பணமோ, அதில் பாதியே. முன்பு செய்த பணப்பணியை விட்டே, உறைவிட விக்கிப்பீடியராக சென்றேன். இதனால் கொஞ்சம் மன உளச்சலுக்கும் உள்ளாகி உள்ளேன். இன்னும் மீத ஊதியம் வரும் என்று நம்பியிருக்கிறேன். அதை விட, அத்திட்டத்தினால், பதிவேற்றிய 2200நூல்களும் காப்புரிமை என்ற நுட்பத்தால், பொதுவகத்தில் இருந்து நீக்கப்படும் நிலையில் இன்றுள்ளது. எனவே, இலக்குகளுக்கான விக்கி விதிகளை ஆய்ந்து, பிறகு செயற்படல் மிக மிக அவசியம். எத்தொகையும் பெறாமல், தனது ஊதியத்தினை மட்டுமே பெற்று, ஒவ்வொரு நாளும் 6-7மணிநேர பயணம் செய்து, என்னுடன் உடன், சென்னையில் செயற்பட்ட @கி.மூர்த்தி:யின் பங்களிப்பு அளப்பரியது. எனவே, திட்டபணச் செலவுகளை, முன் கூட்டியே திட்டமிட்டு, இங்கு பகிர்க என்ற கோரிக்கையை வைத்து, இவ்வுரையாடலில் இருந்து விடைபெறுகிறேன். வணக்கம்--உழவன் (உரை) 11:39, 13 சனவரி 2017 (UTC)Reply
 1. தகவலுழவன் அவர்களே தாங்கள் கூறியது போல் திட்டமிட்டு பணத்தை பகிர்வது சரியானது. அதுவே உண்மை. அந்த வகையில் பணப்பரிசு தவிர்ந்த ஒவ்வொரு விடயங்களுக்குமான ஒவ்வொரு பணத்தொகையும் அறியப்பட வேண்டும், எடுத்துக்காட்டு:-சான்றிதழ் பிறின்ட் செய்தலுக்கான பணம் ஆகியவை பற்றி அத்துடன் இங்கு விரிவாக குறிப்பிடவுள்ளேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:06, 13 சனவரி 2017 (UTC)Reply

பரப்புரை தொகு

 1. இந்தப் போட்டிகள் குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியாவதற்கு, ஊடகங்களோடு தொடர்புள்ள பயனர்கள் உதவி செய்யலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:37, 13 சனவரி 2017 (UTC)Reply
 2. பள்ளி, கல்லூரி மாணவர்களை பங்களிக்கச் செய்வதற்கு பள்ளி ஆசிரியர்கள் / கல்லூரி ஆசிரியர்களின் உதவியினை நாடவேண்டும். ஆனால் மாநில அளவில் / நாடளவில் (இலங்கை) எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்து பார்க்க வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:51, 13 சனவரி 2017 (UTC)Reply
 • இலங்கையில் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் முன்னெடுக்கலாம். அதற்கு இலங்கைக் கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் மூலம் போட்டி தொடர்பான சுற்று நிருபங்களை (விடயங்களை) நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் அனுப்பலாம். தொடர்பு கொள்ள (+94 112 785141-50) இத்தொலைபேசி இலக்கம் உதவியாக அமையும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அங்கு கல்விக்கு பொறுப்பான அமைச்சின் அதிகாரிகள் மூலமாக முன்னெடுக்கலாம். வழமைபோன்று, முகநூல் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இலங்கையில் பத்திரிகைகள் மூலமாகவும் பரப்புரைகளை என்னால் முன்னெடுக்க முடியுமென எதிர்பார்க்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:16, 13 சனவரி 2017 (UTC)Reply

தலைப்பு தொகு

தலைப்பு - மிகைப்படுத்தல் வேண்டாம் தொகு

மாபெரும் என்பது அரசியல் பேச்சாடல் போன்று உள்ளது. குறிப்பாக என்ன போட்டி என்று கூறிவிடலாம். --Natkeeran (பேச்சு) 14:00, 13 சனவரி 2017 (UTC)Reply

Natkeeran 2013 இல் இடம்பெற்ற தொடர்கட்டுரைப்போட்டி போன்று இதற்கும் ஒரு தனித்துவமான தலைப்பு வேண்டும், தயவு செய்து நல்ல தலைப்புகளை பரிந்துரைக்க வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:25, 13 சனவரி 2017 (UTC)Reply
Natkeeran கருத்தோடு உடன்படுகின்றேன். என்னென்ன போட்டிகள் என்னென்ன முறையில் நடைபெறப்போகின்றது எனத் தீர்மானித்தபின்னர் போட்டிகளுக்கான பொதுத்தலைப்பு ஒன்றை இடலாம். குறிப்பாக 15 ஆண்டுகள் நிறைவை ஒட்டிய போட்டி என்பது வெளிப்படும் விதமாக அமைதல் நன்று என்பது எனது கருத்து. இது விழிப்புணர்வு செயற்பாடுகளின் போதும் பரப்புரைகளின் போதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:34, 14 சனவரி 2017 (UTC)Reply

ஆதவன் அவர்களே தாங்கள் கூறிய கருத்தை முற்றுமுழுதாக ஏற்கின்றேன். தங்கள் கருத்துகள் இங்கு எதிர்பார்க்கப்படுகின்றன.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:44, 14 சனவரி 2017 (UTC)Reply

பொதுவான கருத்துகள் தொகு

ஸ்ரீஹீரன், உங்கள் ஆர்வமும் முயற்சியும் நன்று. 15ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் இப்போதே திட்டமிடுதல் சிறப்பு. என் பொதுவான கருத்துகள்:

 • தமிழ் விக்கிப்பீடியாவில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. அவை அனைத்தையும் கட்டுரைப் போட்டியின் கீழ் கொண்டு வருவது போட்டியாளர்களைக் குழப்பும், ஒருங்கிணைப்பாளர்களின் வேலையைக் கூட்டும். கட்டுரை உருவாக்கம் என்பது போன்ற ஒரே ஒரு அடிப்படையில் போட்டி விதியை அமைக்கலாம். குறிப்பாக, புதிய பங்கேற்பாளர்கள் தெளிவுடன் பங்களிக்க இது முக்கியம். மற்ற மேம்பாட்டுப் பணிகளை போட்டியின் மூலமாக அல்லாமல் வேறு வழிகளில் கவனிக்கலாம்.
 • கட்டுரைப் போட்டியை மூன்று மாத காலம் வைக்கலாம். அறிவிக்க, பரப்ப, பங்கேற்க போதுமான காலம் தரும். இன்னும் நீட்டிக்க வேண்டும் என்றால் ஐந்து மாதம் வைக்கலாம். அதற்கு மேல் வைத்தால் சலிப்பு தட்டும் என்பதே ஆண்டு முழுதும் நடத்திய 2013 போட்டியில் கண்டு கொண்டது.
 • மாணவர்களை ஈர்க்கும் நோக்கம் நன்று. அதற்கு போட்டி சரியான வழிமுறையா என்று ஐயம் உள்ளது. 2010 கட்டுரைப் போட்டியின் போது அரசு துணையும் மாநிலம் முழுக்க உள்ள கல்லூரி, பள்ளிகளைச் சென்று அடைந்தாலும் போதிய தரமான கட்டுரைகள் கிடைக்கவில்லை. போட்டி அல்லாமல் வேறு வழிகளில் மாணவர்களைச் சென்றடைய முடியுமா பார்க்கலாம்.
 • பணப்பரிசு என்பது சிறிய ஊக்குவிப்பாக இருக்க வேண்டுமே தவிர, கவனம் அதில் அமைகிற மாதிரி போட்டி வடிவமைப்பு இருத்தல் கூடாது. விக்கிமீடியா அறக்கட்டளையும் பெரிய தொகை, ஏராளமான பரிசுகளை ஊக்குவிப்பதில்லை.
 • தமிழ் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகள், நல்கை மேலாண்மை குறித்து பொதுவாக இயக்க அளவில் நல்லெண்ணம் உள்ளது. அதனைப் பேணும் வகையில், கருத்துகள், நல்கை விண்ணப்பத்தை நன்கு செப்பனிட்டு ஆலமரத்தடியில் இட்டு வாக்குகள் பெற்று அதன் பிறகு மேல்-விக்கிக்குச் செல்வது நன்று. மேல் விக்கி நல்கைப் பக்கத்தில் "வரைவு" வடிவில் கூட உள்ளடக்கத்தை மாற்றிக் கொண்டே இருப்பதும் அந்நிலையிலேயே பயனர்களை ஆதரவு இடக் கோருவதும் சரி அன்று. ஒருங்கிணைப்புக் குழு போன்ற இடங்களில் பயனர் பெயர்களை இணைக்கும் போது முறையாக கேட்டு இணையச் செய்ய வேண்டும். போட்டி நடத்த, நல்கை வேண்ட போதுமான காலம் உள்ளதால் பொறுமையுடன் அணுகுதல் நன்று.
 • தமிழ்விக்கி15 இலங்கையை மையமாகக் கொண்டு அமைய வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன். போட்டி தவிர, என்னென்ன நிகழ்வுகளை ஏற்பாடுகளைச் செய்யலாம் என்று தொடர்ந்து பேசுவோம்.--இரவி (பேச்சு) 14:03, 14 சனவரி 2017 (UTC)Reply
  விருப்பம் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:15, 14 சனவரி 2017 (UTC)Reply

இரவி அவர்களே, தங்கள் பொதுவான கருத்துக்களை வாசிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. கீழே தாங்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு விடயங்களுக்கும் எனது பதில்:-

 • "போட்டி, புதுப்பயனர்களுக்கும், எம்மைப்போன்ற தொடர் பங்களிப்புப் பயனர்களுக்கும் வெவ்வேறாக அமையலாம்." புதியவர்களுக்கு ஒரு தலைப்பிலும் (கட்டுரை உருவாக்கம்) நமக்கு வேறாகவும் (கூகுள் கட்டுரை சீராக்கம்) முன்னெடுக்கலாம். அவ்வாறு புதியவர்கள் கட்டுரை எழுதும் போது அவர்களுக்கென உருவாக்கும் கட்டுரைகளுக்கான பட்டியல் ஒன்றை இட்டுவிடலாம்.
 • //கட்டுரைப் போட்டியை மூன்று மாத காலம் வைக்கலாம்.// இக்கருத்துக்கு எனது முழு ஆதரவு அத்துடன் வேறு பல பயனர்களுக்கு இது தொடர்பிலான வேறு கருத்துக்கள் இருக்கும் என்பதால் முடிவுகளை எட்டும் இறுதி நேரத்தில் கருத்துக்கணிப்பு நடாத்துவது அவசியம்.
 • இலங்கையில் போட்டியில் பங்குபற்றும் மாணவர்களை, போட்டியில் பங்குபற்றும் முன்னதாக ஓர் பயிற்சிப் பட்டறை போல் நடாத்தி விழிப்புணர்வு ஊட்டலாம். இந்தியா தொடர்பில் யான் ஏதும் அறியேன்.
 • பணத்தொகை=இது பற்றி யான் கருதுவது, ஓர் மட்டமான அளவில் பணத்தொகை அமைய வேண்டும் என்பதனை. அத்துடன் புதிய பயனர்களை ஊக்குவிக்கும் வகையிலான சிறப்புப்பரிசு ஏதோ ஒரு விக்கியிலும் வழங்கியதாக ஞாபகம். அந்த வகையில் புதுப்பயனர்களுக்கு மட்டும் ஒரு போட்டி நடாத்தினால் அதற்கான தேவை இல்லை.
 • பொறுமையுடன் இனிவரும் காலங்களில் நிச்சயம் செயற்படுவேன்.
 • //தமிழ்விக்கி15 இலங்கையை மையமாகக் கொண்டு அமைய வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன். போட்டி தவிர, என்னென்ன நிகழ்வுகளை ஏற்பாடுகளைச் செய்யலாம் என்று தொடர்ந்து பேசுவோம்.// இலங்கையில் நடாத்த எனக்கும் விருப்பம். அத்துடன் இலங்கையில் நடாத்தினால் இந்தியாவில் இருந்து இலங்கை வரும் பயனர்களுக்கான பயணச்செலவு, அதிகமாக இருக்கும். அது பற்றிப் பின் சிந்திக்கலாம். அத்துடன் 15 ஆண்டு நிறைவையொட்டி, ஜெகதீஸ்வரன் அவர்கள் குறிப்பிட்டது போல் ஒரு ஓவியப் போட்டியை மாணவர்கள் மத்தியில் இந்தியாவில் நடாத்தில் பரிசு வழங்கலாம். பயிற்சிப்பட்டறைகள் போன்ற இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தலாம். தங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கின்றேன். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:45, 14 சனவரி 2017 (UTC)Reply

போட்டிக்குப்பதில் திட்டம் ஒன்று தொகு

சுருக்கம்:போட்டியின் ஒருசில நோக்கங்களை திட்டம் ஒன்றின் ஊடாக முன்னெடுப்பது தொடர்பான உரையாறட் பகுதி இப்போட்டியை இலகுவாக்கும் நோக்குடனும், போட்டிக்க்கான ஒருங்கிணைப்புப் பணியை இலகுவாக்கும்மா நோக்கிலும் பெரும் திட்டம் ஒன்றை முன்னெடுக்கலாம். போட்டியில் உள்ளடக்க எதிர்பார்க்கப்படும் சிறப்பு, நல்ல கட்டுரை உருவாக்கம், கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைச் சீராக்கம், கட்டுரைத் துப்புரவு (விக்கியாக்கம்) ஆகியவற்றை அத்திட்டம் ஊடாகவே முன்னெடுக்கலாம். எனினும் போட்டி என்பதை விட திட்டம் என்றால் பயனர்கள் முன்வந்து பங்களிப்பது குறைவாகவே இருக்கும். ஆனால் போட்டியாக நடாத்தினால் போட்டி மிகவும் சிக்கலான கட்டமைப்பைக் கொண்டிருக்கும். அவ்வாறு திட்டமாக நடாத்தும் போது, அனைவரும் முன்வந்து பங்களிக்கும் வண்னம் ஏதாவது செய்ய வேண்டும்? இது பற்றி ஏனையோரது கருத்துக்கள் தேவை...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:34, 14 சனவரி 2017 (UTC)Reply

இத்திட்டத்தில் பங்கு பெறும் பயனர்களின் பங்களிப்பைப் பொறுத்து அவர்களுக்கும் சிறிய ஊக்குவிப்புப் பரிசுகள் வழக்கலாம். உதாரணமாக ஒருவர் திருத்தும் ஒரு கூகுள் கட்டுரைக்கு 10 இந்திய ரூபாய். இவ்வாறு ஆயிரம் கட்டுரைகளுக்கும் 10000 இந்திய ரூபாய் தேவைப்படும். இது எனது சிறு எண்ணம். இது போலவே 100 சிறப்புக்கட்டுரைகளுக்கு 1000 இந்திய ரூபாய். அத்துடன் விக்கியாக்கம் செய்யும் 400 கட்டுரைகளுக்குத் தலா 05 ரூபாய்ப்படி 2000 இந்திய ரூபாய். மொத்தமாக 13000-15000 இந்திய ரூபாய் செலவாகும். அண்ணளவாக 200 அமெரிக்க டொலர்கள். இது மிகவும் எளிதாகவும், நேரத்தைச் செலவிட்டு முனைப்போடு பங்களிக்கும் பயனர்களுக்கு உந்துதலாகவும், உதவியாகவும் அமையும். இது பற்றி உங்கள் கருத்துகள் தேவை. இவ்வாறு செய்வது சாத்தியமாகக் கூடிய ஒன்றே...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:11, 15 சனவரி 2017 (UTC)Reply
திட்டத்திற்கு விக்கித்திட்டம்:15 எனப் பெயர் சூட்டலாம். திட்டத்தில் முனைப்புடன் செயல்படுவர்களுக்கு. சான்றிதழ்களும் வழங்கலாம்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:14, 15 சனவரி 2017 (UTC)Reply

ஏனைய குறும் போட்டிகள் தொகு

சுருக்கம்:வேறு குறும் போட்டிகளை நடாத்துதல் தொடர்பான உரையாடற்ப குதி 2018 ஆம் ஆண்டில் இடம்பெறும் ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதான போட்டிகளை விடுத்து ஏனைய குறும் போட்டிகளையும் நடாத்தலாம். அவற்றிற்கு உதாரணங்கள் சில.

 1. 15ஆம் ஆண்டு விழாவுக்கான Logo உருவாக்கப் போட்டி
 2. ஓவியப் போட்டி
 3. ஊடகப் போட்டி
 4. கட்டுரைப்போட்டி ஒன்று - 07 அல்லது 15 நாட்களுக்கு

இவற்றில் முதாவதுமான, நான்காவதுமான போட்டிகளை இலங்கையில் நடாத்த விருப்பம். அத்துடன் சிறியளவிலான பரிசுகளை முன்னெடுக்கலாம். 100 தொடக்கம்ஐ 250 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் எனும் பணத்தொகையை பட்ஜெட்டாகக் கொண்டு நடாத்தலாம். இது பற்றி மேலும் விரிவாக கலந்துரையாட வேண்டும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:34, 14 சனவரி 2017 (UTC)Reply

நல்கை உறுதியானது தொகு

@Shriheeran:இது தொடர்பான நல்கை விண்ணப்பத்துக்கான நிதி உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், இங்கு உரையாடல் முடிவுபெறாமல் தெளிவான திட்ட வரைவை முன்வைத்து ஆலமரத்தடியில் சமூக ஒப்புதல் பெறாமல் இப்படி நிதி வேண்டல் நோக்கி நகர்வது தகுந்த முன்மாதிரியன்று. திட்டத்தை இங்கு உறுதி செய்த பிறகு, பிற ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 04:28, 17 பெப்ரவரி 2017 (UTC)

@Ravidreams:, தங்கள் வேண்டுதலுக்கு நன்றி. திட்ட வரையறை குறித்து நான் இட்ட கருத்துகளுக்கு எவ்வித பதில்களும் கிடைக்காமையினால் யாமே கருத்திட்டு 10 நாட்களின் பின்னர் திட்டத்தைப் பரிந்துரைத்து நல்கை பெறுவதற்கு உரையாடி நல்கை பெற்றுக்கொண்டேன். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி கருதி எடுக்கப்பட்ட இந்நல்கை தொடர்பில் தங்களுக்கு ஆட்சேபனை இருப்பின் கூறவும். இங்கு வடிவமைத்துள்ளேன். மேலும் பரிசு விபரம் பின்வருமாறு இங்கு உள்ள பட்ட்டியலில் நாம் முன்னேறுவதற்காக பல குறுங்கட்டுரைகளை 30000 பைட்டு எனும்வி வரையறையை தாண்டும் அளவிற்கு விரிவாக்குவதுடன் 10000 கட்டுரைகளை உருவாக்கி இங்கும் பட்டியலில் முன்னேறுவதே இலக்கு. (போட்டிக்காலம்-9மாதங்கள் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை மற்றும் பரிசுத்தொகை 30000) இவ்விலக்கை தொடர்பங்களிப்பாளர்கள் மூலம் நிறைவேற்றுவோம், தொடர் கட்டுரைப்போட்டியைப் போன்று ஓர் போட்டியை புதுப்பயனர்களை ஈர்ப்பதற்காகவும் நடாத்துவோம். மேலும் இப்போட்டியில் புதுப்பயனர்கள் பங்குபற்ற முன் பயிற்சிப்பட்டறைகளை யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ளோம். அத்துடன் இந்தியாவில் நடாத்த விரும்பும் அனைவரும் எமக்குத் தெரிவித்து பட்டறையை முன்னெடுக்கலாம். அதற்கான நல்கை வழங்கப்படும்.

பரிசு விபரம் = தொடர்பங்களிப்பாளர் போட்டி

 • 1ம் பரிசு-10000/=
 • 2-7000/=
 • 3-5000/=
 • 4-3000/=
 • 5-2000/=
 • 6தொடக்கம்10ம் பரிசு-600/=
 • மொத்தம் = 30000/=

புதுப்பயனர் போட்டிக்கான பரிசு மற்றும் விதிகள் 2013 ஆம் ஆண்டுப் போட்டி போலவே அமையும் மேலும் போட்டியை மே தொடக்கம் ஒக்டோபர் வரையென 6 மாதங்கள் மாதாந்த ரீதியில் நடாத்த்லாம். எஞ்சும் பணம் சிறந்த பெண் பங்களிப்பாளர்களுக்கு வழங்கப்படும்.

தொடர்பங்களிப்பாளர் போட்டிக்கான விதிகள்

 • 1-5 வரை பரிசு பெற 35 கட்டுரைகளை 30000 பைட்டை தாண்டி விரிவாக்கல், 1500 கட்டுரைகள் 50 சொற்களுக்குக் குறையாது எழுதுதல்.
 • 6-10 வரை பரிசு பெற 20 கட்டுரைகளை 30000 பைட்டை தாண்டி விரிவாக்கல், 500 கட்டுரைகள் 50 சொற்களுக்குக் குறையாது எழுதுதல்.

மேலும் இத்திட்டத்தை நடாத்துதல் தொடர்பில் அதிகாரிகள், நிர்வாகிகளிடையே அறிவிப்பு வடிவமைப்பு, சுவரொட்டி வடிவமைப்பு, சான்றிதழ் வடிவமைப்பு மேலும் சமூக வலைத்தள பரப்புரை, பயிற்சிப்பட்டறை நடாத்தல் தொடர்பிலான உதவிகள் தேவைப்படுகின்றன. அத்துடன் இவ்வருட இப்போட்டிகள் விக்கிப்பீடியாவின் 15 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டிய போட்டிகள் எனும் சுலோகத்துடன் 15 ஆண்டுகள் முன்னோக்கிய மாபெரும் பயணமாக அமையும் என நம்புவதுடன் இத்திட்டம் வெற்றி பெற்றால், மேலும் இத்திட்டத்தை 2018 ஆம் ஆண்டில் போட்டிகளாக நடாத்துவது தொடர்பில் பின்னர் கலந்தாலோசிப்போம். தமிழ் விக்கியில் தற்போது நிர்வாகிகள், அதிகாரிகள் செயற்படுகின்ற எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அதனாலேயே இங்கு நான் இடும் கருத்துகளிற்கு பதிலை விரைவில் விளக்கமாக ஆலமரத்தடியில் இட்ட போதும் அளிப்பதில்லை என்பது என் கருத்து. தங்கள் கருத்துகள் மற்றும் போட்டி பற்றிய திருத்தங்களை எதிர்பார்க்கின்றேன். பெப்ரவரி 25இற்கு முன் செய்யவேண்டிய அனைத்து திருத்தங்களையும் செய்து ஒரு மாதகாலத்தின் முன்னரேயே திட்டத்தை வரையறுப்போம். தற்போது வரையறுத்துள்ள திட்டம் சரியாயின் உடனடியாக இற்றைப்படுத்திவிடுவேன். தங்கள் கருத்துகளை எதிர்பாக்கும் சிறியோனின் நன்றிகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:30, 17 பெப்ரவரி 2017 (UTC)

@Shriheeran:, கட்டுரையாக்கம், முதற்பக்க ஒருங்கிணைப்பு போன்ற பணிகளில் கருத்திட்டுக் காத்திருந்து அடுத்த கட்ட நடவடிக்கையைத் துணிந்து மேற்கொள்வது நன்று. இது விக்கிப்பீடியா வலியுறுத்தும் ஐந்து அடிப்படைப் பண்புகளில் ஒன்றும் கூட. அதே வேளை, நிதி வேண்டல் போன்ற முக்கிய பணிகளில் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியதும் மிகவும் அவசியம். எனவே தான், சென்ற முறை பின்வருமாறு கருத்திட்டிருந்தேன்:

//தமிழ் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகள், நல்கை மேலாண்மை குறித்து பொதுவாக இயக்க அளவில் நல்லெண்ணம் உள்ளது. அதனைப் பேணும் வகையில், கருத்துகள், நல்கை விண்ணப்பத்தை நன்கு செப்பனிட்டு ஆலமரத்தடியில் இட்டு வாக்குகள் பெற்று அதன் பிறகு மேல்-விக்கிக்குச் செல்வது நன்று. //

தமிழ் விக்கிப்பீடியா திட்டத்தின் சார்பாக நிதி வேண்டும் போது பின்வரும் படிநிலைகளைப் பின்பற்றுவது நன்று. தனிப்பட்ட பங்களிப்புக்கு நிதி வேண்டும் போது சில படிநிலைகள் மாறுபடும்:

 1. விக்கிச்சமூகத்தில் யோசனையை முன்வைத்து கருத்துகளைக் கோரல், உரையாடல்.
 2. திட்ட முன்வரைவை தயார் செய்தல்.
 3. விக்கிச் சமூக ஒப்புதல் பெறுதல். ஆலமரத்தடியில் அறிவிப்பு இட வேண்டும்.
 4. மேல் விக்கி நல்கைப் பக்கத்தில் நல்கை வேண்டல். அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்குச் விக்கிச் சமூகத்தைக் கலந்து பேசு மறுமொழிகளைத் தருதல்.
 5. நல்கையை உறுதி செய்து கொண்டு திட்டத்தினை உறுதி செய்தல்.
 6. திட்டத்தினைச் செயற்படுத்துதல்
 7. கணக்கு வழக்குகளை முன்வைத்து, திட்டத்தின் விளைவுகள் குறித்த அறிக்கையை மேல் விக்கிக்கு அளித்தல். இச்சுழற்சியின் நிறைவை விக்கிச்சமூகத்துக்கு அறியத்தருதல்.

ஆனால், தற்போதோ படிநிலை ஒன்றில் இருக்கும் போதே நிதி வேண்டும் நான்காம் படிநிலைக்குச் சென்று மீண்டும் திட்டமிடும் இரண்டாம் படிநிலைக்குத் திரும்பியுள்ளோம். பயனர்கள் போதுமான அளவு உரையாடலில் பங்கேற்கவில்லை என்றால், நினைவூட்டல்கள் இடலாம். அடுத்த சில நாட்களில் இத்தகைய அடுத்த கட்ட பணியைச்செய்ய உள்ளதாக அறிவிப்பு இடலாம். இதன் மூலம் பங்கேற்பார்களின் தொடர் கவனத்தையும் பங்கேற்பையும் பெறலாம்.

நாம் இது வரை பெற்ற இரு நல்கைகளிலும் இவற்றைச் செம்மையாகப் பின்பற்றியமையால் நல்கைக் குழுவின் நன்மதிப்பைப் பெற்றுள்ளோம். அதே வேளை, வேறு சில இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் இவற்றைச் செய்யத் தவறியதால், தொடர்ந்து நல்கைகள் பெறுவதில் சிக்கல் உள்ளன.

திட்டமிடலைப் பொருத்த வரை, நாம் செய்ய வேண்டும் என்று விரும்புவது வேறு, நடைமுறைச் சாத்தியங்களுக்கும் விக்கி நடைமுறைகளுக்கும் உட்பட்டு இலக்குகளை முன்வைத்தல் வேறு. எடுத்துக்காட்டுக்கு, 25,000 கட்டுரைகள் உருவாக்குவோம் என்று முன்வைத்துள்ள இலக்கு நடைமுறைச் சாத்தியமுள்ளதா என்பது ஐயமே. கூடுதலான இலக்கைத் தெரிவித்து விட்டு குறைவாக அடைந்தால், திட்டம் தோல்வியாகவே பார்க்கப்படும். திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் தேவையில்லாத உளைச்சல் ஏற்படும். உலக மொழி விக்கிப்பீடியாக்களில் நாம் முந்த வேண்டும் என்பது அனைத்துத் தமிழ் விக்கிப்பீடியர்களுக்குமான கனவே. ஆனால், அது தொலைநோக்குப் பணி. 1,00,000 கட்டுரைகளை அடைவதற்கே நாம் 14 ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ள நிலையில் ஓராண்டுப் போட்டியில் 25,000 கட்டுரைகள் என்பது ஏற்புடையது அன்று.

அதே போல் ஒரு பயனர் முதல் 5 பரிசுகளைப் பெற 1500 கட்டுரைகள் 50 சொற்களுக்குக் குறையாது எழுதுதல் போன்ற விதிகளும் ஏற்புடையன அல்ல. விக்கிப்பீடியா போட்டிகளில் குறைந்தபட்ச தகுதி என்பது ஒரு இலகுவான அடையாளமாக இருக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் 5 கட்டுரைகள் எழுதினால் அஞ்சல் அட்டை கிடைக்கும் என்பது போல்.

அதே போல், பின்வரும் கருத்துகளைத் தெரிவித்துள்ளீர்கள்:

//இத்திட்டத்தில் பங்கு பெறும் பயனர்களின் பங்களிப்பைப் பொறுத்து அவர்களுக்கும் சிறிய ஊக்குவிப்புப் பரிசுகள் வழக்கலாம். உதாரணமாக ஒருவர் திருத்தும் ஒரு கூகுள் கட்டுரைக்கு 10 இந்திய ரூபாய். இவ்வாறு ஆயிரம் கட்டுரைகளுக்கும் 10000 இந்திய ரூபாய் தேவைப்படும். இது எனது சிறு எண்ணம். இது போலவே 100 சிறப்புக்கட்டுரைகளுக்கு 1000 இந்திய ரூபாய். அத்துடன் விக்கியாக்கம் செய்யும் 400 கட்டுரைகளுக்குத் தலா 05 ரூபாய்ப்படி 2000 இந்திய ரூபாய். மொத்தமாக 13000-15000 இந்திய ரூபாய் செலவாகும். அண்ணளவாக 200 அமெரிக்க டொலர்கள். இது மிகவும் எளிதாகவும், நேரத்தைச் செலவிட்டு முனைப்போடு பங்களிக்கும் பயனர்களுக்கு உந்துதலாகவும், உதவியாகவும் அமையும். //

விக்கிப்பீடியாவிலும் போட்டிகளிலும் பங்கேற்கும் பலருக்கும் பரிசுப் பணம் என்பது முதன்மை உந்துதல் அன்று. கடந்த போட்டியில் கூட சிலர் தங்கள் பரிசுப் பணத்தை நன்கொடையாக அளிக்க முடியுமான என்று வினவினர் ஒரு கட்டுரைக்கு 10 இந்திய ரூபாய் என்ற வகையில் சிந்திப்பது கட்டணத் தொகுப்பாகவும் பார்க்கப்படலாம். தங்களின் இவ்வாறான யோசனைகள் தாங்கள் இத்தகைய திட்டங்களை நிறைவேற்றும் போது இன்னும் பலரின் பங்கேற்பு, ஒருங்கிணைப்பு, வழிகாட்டலுடன் செயற்பட வேண்டிய தேவையை உணர்த்துகிறது.

நல்கை வேண்டல் பேச்சுப் பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக நாம் தந்துள்ள பதில்களும் இன்னும் முறையாகவும் முதிர்ச்சியுடனும் வெளிப்பட்டிருக்க வேண்டும்.

துடிப்பான உங்கள் செயற்பாடுகளைப் பல முறை பாராட்டியுள்ளேன். அதே உரிமையில், இப்போது இங்கே சுட்டியுள்ள கருத்துகளையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். அடுத்து பின்வருமாறு செய்ய வேண்டுகிறேன்:

 • தமிழ் விக்கிப்பீடியா சமூகத்தில் போட்டி திட்டமிடலில் சில மாறுதல்களைக் கோரியுள்ளதால், அவற்றைச் செயற்படுத்தி விட்டுப் பிறகு நல்கைப் பணத்தைப் பெற்றுக் கொள்வதாக நல்கை வேண்டல் பேச்சுப் பக்கத்தில் தெரிவியுங்கள். இதனை உடனடியாகச் செய்ய வேண்டியது அவசியம்.
 • நல்கைப் பணம் பெறுதல், செலவுகளைக் கையாளுதல், உரிய கட்டண இரசீதுகளைச் சேகரித்து அறிக்கை அளித்தல் ஆகியவற்றில் உங்களுடன் இணைந்து பொறுப்பாகச் செயற்பட இலங்கையில் இருந்து இன்னும் ஒன்று அல்லது இரண்டு வயதிலும் அனுபவத்திலும் மூத்த பங்களிப்பாளர்களைப் பொறுப்பேற்றுக் கொள்ளக் கோருங்கள்.
 • விக்கிப்பீடியா சமூகத்தின் கருத்தை உள்வாங்கி திட்டத்தை முழுமையாக இயற்றி ஆலமரத்தடியில் வைத்து ஒப்புதல் பெறுங்கள்.

நன்றி. --இரவி (பேச்சு) 12:03, 24 பெப்ரவரி 2017 (UTC)


இரவி அவர்களே, சிறியோனாகிய என்னிடம் மிகவும் அன்புடன் உரையாடுவதையிட்டு வியக்கின்றேன். இங்கு தாங்கள் கூறியதை இற்றை செய்த்துள்ளேன். சிவகோசரன் ஐயா அவர்களுடன் உரையாடினேன், எனது அண்ணனும் உதவி செய்வார். மேலும் ஆலமரத்தடியில் திட்டம் பற்றி இற்றை செய்வேன்! ஆலமரத்தடியில் தொடர்ந்து உரையாடுவோம் நன்றி.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:52, 25 பெப்ரவரி 2017 (UTC)

சிறியோன் என்பது போன்ற சொற்பயன்பாடுகள் வேண்டாம். நாம் அனைவரும் உடன் பங்களிப்பவர்களே. தேவைப்படும் இடங்களில் ஒருவர் மற்றொருவருடன் கருத்துகளைப் பகிர்கிறோம். அவ்வளவே. மேல் விக்கியில் நல்கை விண்ணப்பப் பேச்சுப் பக்கத்தில் சமூக உரையாடல் குறித்து அறிவித்தமைக்கும் ஆலமரத்தடியில் சமூக ஒப்புதல் கோரியமைக்கும் நன்றி. இலங்கையில் தனியாக வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு குறைந்தபட்ச வயது என்ன? வெளிநாட்டில் இருந்து பணம் வரும் போது, அதனை முறைப்படி பெற்றுக் கொள்வதற்கான தேவைகள் என்ன? இதற்காக வருமான வரி, வெளிநாட்டு நிதி தொடர்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்க வேண்டும். முன்பு இலங்கையில் இது தொடர்பாக இறுக்கமான விதிகள் இருந்தன என்று அறிகிறேன். இதன் பொருட்டே தங்களுடன் இணைந்து சிவகோசரன், வயதிலும் அனுபவத்திலும் மூத்த இன்னும் ஓரிரு இலங்கைப் பயனர்கள் பொறுப்பாளர்களாகப் பணியாற்றுவது மிகவும் இன்றியமையாதது என்று கருதுகிறேன். அவர்கள் இங்கு முறைப்படி உறுதிப்படுத்தினால் நலம். கவனிக்க: @Mayooranathan, சஞ்சீவி சிவகுமார், உமாபதி, ஜெ.மயூரேசன், and Sivakosaran:--இரவி (பேச்சு) 10:21, 28 பெப்ரவரி 2017 (UTC)
இரவி அவர்களின் பதிலுக்கு நன்றி! வங்கி தொடர்பான விடயங்களில் என் தந்தை உதவி செய்வார். மேலும் இப்போது திட்ட வெளிக்கொணர்விற்க்கு (Outreach) வேண்டியது 15 ஆண்டுகள் நிறைவுவிழா லோகோ ஆகும். இதனை வடிவமைத்துத்தர முடியுமா? அன்ரன் ஐயாவிடம் கேட்டுக்கொள்ளுங்களேன். மேலும் நல்கை ஒப்ப்ந்தம் கைச்சத்திட்டு நல்கை பெறப்படும் செயற்பாடு நடைபெறுகிறது. வங்கியில் நாளை சென்று வரிகள் தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளவுள்ளேன். மேலும் பணம் பெறப்பட்டதையும் உறுதிசெய்யவுள்ளேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:56, 28 பெப்ரவரி 2017 (UTC)
வணக்கம் ஸ்ரீஹீரன். யாதாயினுமொரு விக்கிபீடியரின்/ விக்கிப்பீடியர்களின் பெயரில்/பெயர்களில் கணக்கு தொடங்குவதுவே சரியானது. எனவே தங்களது வயது பிரச்சினையாயின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ளவர் என்பதால் சிவகோசரனோடு இணைந்து செயலாற்றுவதே இலகு என எண்ணுகின்றேன். திட்டத்தின் ஏனைய செயற்பாடுகள் சிலவற்றில் நான் உதவ முடியும். @Mayooranathan, உமாபதி, ஜெ.மயூரேசன், Sivakosaran, Ravidreams, and AntanO:--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:15, 1 மார்ச் 2017 (UTC)
சஞ்சீவி சிவகுமாரின் கருத்து எனக்கும் ஏற்புடையதே. நான் இப்போது யாழ்ப்பாணத்துக்கே நிரந்தரமாக வந்துவிட்டதால், இலங்கையில் இடம்பெறக்கூடிய செயற்பாடுகளில் இணைந்து இயங்க முடியும். நேரில் சந்தித்து இது தொடர்பாகக் கலந்துரையாட வேண்டுமானாலும் எனக்குப் பிரச்சினையில்லை. @உமாபதி, ஜெ.மயூரேசன், Sivakosaran, Ravidreams, AntanO, and Shriheeran:---மயூரநாதன் (பேச்சு) 13:13, 1 மார்ச் 2017 (UTC)
தங்கள் பதில்களுக்கு நன்றி. வங்கிக் கணக்கு ஒன்றை உருவாக்குவது பற்றி ஆலோசிப்போம். மேலும் நல்கைக்கான பணம் வங்கிக்கணக்கில் இடப்பட்டதா என நாளை வங்கி செண்ரு அறிவேன். அத்துடன் பயிற்சிப்பட்டறைகளில் மயூரநாதன் ஐயாவும் கலந்துகொள்ளலாம் என நினைக்கின்றேன். அப்படியாயின் பயிற்சிப்பட்டறையை நடாத்தும் விடயம் தொடர்பில் எனக்கிருந்த கவலைகள் நீங்கின. மயூரநாதன் ஐயாவின் உதவியுடன் நடாத்தலாம். நன்றி. மேலும் மயூரநாதன் ஐயாவினை போட்டி தொடர்பாகவும் கருத்திட வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:27, 1 மார்ச் 2017 (UTC)
ஸ்ரீஹீரன், இரவி குறிப்பிட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தைச் சரியாக முன்னெடுப்போம். அவசரம் வேண்டாம். இலக்குகள் சிறிதானால் அவற்றைச் செம்மையாக அடைய முடியும். என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன். மேலே குறிப்பிட்டது போல் ஏனைய பயனர்களின் கருத்துக்களைப் பெற்றுத் தொடர்வோம். மயூரநாதன், நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்துவிட்டது மிக்க மகிழ்ச்சி. உங்களின் உதவியுடன் ஸ்ரீஹீரனின் இத்திட்டத்தை சிறப்பாக நடாத்த முடியும் என நம்புகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 14:40, 2 மார்ச் 2017 (UTC)
இரவி, சிவகோசரன், சஞ்சீவி சிவகுமார், மயூரநாதன் ஆகிய அனைவரது கருத்துகளையும் உள்வாங்கினேன். நல்கை கிடைத்துவிட்டது. மேல்விக்கியில் தமிழ் விக்கிப்பீடிய குழுமம், திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காவிடினும், அந்நல்கையினை ஒன்றுகூடல்களுக்கென பயன்படுத்தலாம் எனக் கூறினர். அந்தவகையில் போட்டி என நடாத்தும் பொழுது புதுப்பயனர்களுக்கு 15 ஆம் ஆண்டை ஒட்டி நடாத்தும் போதே நன்றாக இருக்கும். அந்த வகையில் தற்போது இவ்வருடம் புதுப்பயனர் போட்டியை நடாத்தாமல் வரும் வருடம் நடாத்த விருப்பம். மயூரநாதன் ஐயாவின் விருப்பும் இதுவே ஆகும். மேலும் தற்போது தொடர்பங்களிப்பாளர் போட்டியை மட்டுமே நடாததலாம். இரவி ஐயா, தாங்கள் இது பற்றி என்ன எண்ணுகின்றீர்கள். மேலும் 15ஆம் ஆண்டை ஒட்டி பயிற்சிப்பட்டறைகளையும் மறுவருடம் நடாத்தலாம். ஆகவே எனது எண்ணம் 2018இல் மட்டும் புதுப்பயனர் போட்டி, பயிற்சிப்பட்டறைகள், 15ஆம் ஆண்டு நிறைவு ஒன்றுகூடல் என மூன்றையும் நடாத்தலாம். அவற்றை நடாத்துவதற்கு தற்போது கிடைத்துள்ள நல்கையில் எஞ்சுகின்ற நல்கையை பயன்படுத்தி மேலதிக தேவைப்படும் நல்கையையும் வேண்டிக்கொள்ளல்லாம். 30,000 இந்திய ரூபாயான தொடர்பங்களிப்பாளர் போட்டிப்பரிசைத் தவிர்த்து எஞ்சும் நல்கை 79,000 இந்திய ரூபாய் ஆகும். இதனையே சேமித்து அடுத்த வருட திட்டத்தில் பயன்படுத்துவோமா. இப்பணத்தை இரவிக்கு அனுப்பினால் அவரினால் எஞ்சும் பணம் இந்தியாவில் பயன்படுத்தப்படும். மேலும் இவ்வெண்ணமே சிறந்தது எனவும் கருதுகிறேன். இதற்கு மாற்றுக்கருத்துகள் எதுவும் இல்லையாயின் இதனையே செயற்படுத்திவிடலாம். தங்கள் கருத்துகளை எதிர்பார்க்கின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:50, 2 மார்ச் 2017 (UTC)
//ஆகவே எனது எண்ணம் 2018இல் மட்டும் புதுப்பயனர் போட்டி, பயிற்சிப்பட்டறைகள், 15ஆம் ஆண்டு நிறைவு ஒன்றுகூடல் என மூன்றையும் நடாத்தலாம். அவற்றை நடாத்துவதற்கு தற்போது கிடைத்துள்ள நல்கையில் எஞ்சுகின்ற நல்கையை பயன்படுத்தி மேலதிக தேவைப்படும் நல்கையையும் வேண்டிக்கொள்ளல்லாம். // நல்ல முடிவு. வரவேற்கிறேன். 15 ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்துக்கான களம் இலங்கையாக அமைவதே என் விருப்பம். அதனைத் திட்டமிட்டு முறையாகச் செயற்படுத்த இன்னும் காலம் உள்ளது. அத்திட்டமிடலில் இலங்கையில் உள்ள இன்னும் பலரும் இணைந்து கூட்டாகச் செயற்படுவதே தகும். இந்தியாவில் ஏதேனும் நிகழ்வுகளுக்கு நிதி தேவை என்றால் தனியாகப் பெற்றுக் கொள்ள முடியும். நாடு விட்டு நாடு முறையாகப் பணத்தை அனுப்புவதில் பல சிக்கல்கள் உள்ளன. தற்போது தாங்கள் பெற்றுள்ள நல்கைப் பணத்தைச் செலவழிக்காமல் இலங்கையில் உள்ள மற்ற விக்கிப்பீடியர்களுடன் இணைந்து ஒரு கூட்டு வங்கிக் கணக்கு உருவாக்கி அதற்கு மாற்றுங்கள். இது தாங்கள் உடனடியாகச் செய்ய வேண்டியது. ஒரு இயக்கத்தின் சார்பாக செயற்படும் போது, தனியாகவோ நம் உறவினர்கள் மூலமாக நிதியைக் கையாள்வது முறையன்று. ஒரு வேளை அவ்வங்கிக் கணக்கில் உங்கள் பெயரை இணைப்பதில் சிக்கல் என்றால், அவ்வங்கிக் கணக்கின் வரவு செலவுகளை நல்கை வேண்டியவர் என்று முறையில் தாங்கள் கவனித்து வரலாம். நன்றி. --இரவி (பேச்சு) 13:34, 5 மார்ச் 2017 (UTC)
தங்கள் கருத்து மனமகிழ்வைத் தருகிறது. அந்தவகையில்
 • 2017 ஆம் ஆண்டில் தொடர்பங்களிப்பாளர் போட்டியும்
 • 2018 இல் ஆண்டுநிறைவு விழா மற்றும் அதையொட்டிய போட்டிகள் அனைத்தும் இடம்பெறலாம்
 • சிவகோசரன் ஐயா அவர்களுடன் வங்கிக்கணக்குப் பணப்பரிமார்றம் தொடர்பில் உரையாடி, பணப்பரிமார்றம் இடம்பெறும். இது பற்றி கவலை வேண்டாம்!

தற்போது போட்டி பற்றிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளன அந்த வகையில் ஏப்ரல் 1 இற்கு முன்னர் ஏதேனும் உரையாடப்பட வேண்டுமானால் கூறுங்கள்! அத்துடன் மேல் விக்கியில் நான் சமர்ப்பிக்க வேண்டிய ஆங்கிலத்தில் அமைந்த விடயத்தை முற்கூட்டியே விரைவில் இங்கு பதிவு செய்து மாற்றங்கள் இருப்பின் செய்யலாம். மேலும் இங்கு உஅரையாட வேண்டியது 2018 ஆம் ஆண்டு ஒன்றுகூடல்&போட்டிகல் தொடர்பிலேயே ஆகும். நன்றி! தங்கள் கருத்துக்களுக்கு மேலும் நன்றிகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:23, 5 மார்ச் 2017 (UTC) )

@Mayooranathan, சஞ்சீவி சிவகுமார், உமாபதி, ஜெ.மயூரேசன், Sivakosaran, and மதனாஹரன்:, புதிய வங்கிக் கணக்கு உருவாக்கி ஒன்றுக்கு மேற்பட்ட விக்கிப்பீடியா பயனர்கள் கூட்டாகப் பொறுப்பேற்றுக் கொண்டு இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். அதன் பிறகு, தொடர் பங்களிப்பாளர்களுக்கான போட்டிகள் தவிர எஞ்சிய திட்டத்தை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைப்பதாகக் கூறி மேல்விக்கி நல்கைப் பக்கத்தில் இற்றைப்படுத்தலாம். நன்றி. --இரவி (பேச்சு) 15:46, 5 மார்ச் 2017 (UTC)

மகிழ்ச்சி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:54, 6 மார்ச் 2017 (UTC)

மேலே இரவி குறிப்பிட்ட கருத்துகளுக்கு அமைவாக ஸ்ரீஹீரன் என்னைத் தொலைபேசியிலும் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டதற்கிணங்க மயூரநாதனுடன் இணைந்து ஒரு கணக்கு ஆரம்பித்து நல்கை பெற்ற தொகையை அக்கணக்கிற்கு மாற்ற வரும் வாரத்தில் முயற்சிக்கிறேன். --சிவகோசரன் (பேச்சு) 16:10, 17 மார்ச் 2017 (UTC)

  விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:38, 18 மார்ச் 2017 (UTC)

ஆலமரத்தடி உரையாடல்கள் தொகு


விக்கித்திட்டம்:15

தமிழ் விக்கிப்பீடியாவின் 15 ஆண்டு நிறைவை நோக்கிய மாபெரும் திட்டம் இதுவாகும். இத்திட்டம் மூலம் 2017 ஆம் ஆண்டில் 2 போட்டிகள் தொடர்பங்களிப்பாளர்களுக்கும், புதுப்பயனர்களுக்குமிடையே நடாத்தப்படவுள்ளது. இப்போட்டிகளின் விதிகள், இலக்குகள், பரிசுத்தொகை பற்றிய உங்களது கருத்துகள் இங்கு எதிர்பார்க்கப்படுகின்றன.

 • போட்டி 1 : தொடர்பங்களிப்பாளர் போட்டி: ஏப்ரல் 2017 தொடக்கம் டிசம்பர் 2017 வரை தொடர்ச்சியானது: 30,000/= இந்திய ரூபாய் பணப்பரிசு: முக்கிய இலக்கு இப்பட்டியலில் தமிழ் விக்கியை முன்னேற்றல்.
 • போட்டி 2 : புதுப்பயனர் போட்டி: மே தொடக்கம் ஒக்டோபர் வரை மாதாந்தப் போட்டி: 20,000/= இந்திய ரூபாய் பணப்பரிசு: இலக்கு தமிழ் விக்கியுள் தொடர்ந்தும் பங்காற்றக்கூடிய பல புதிய பயனர்களை உள்ளீர்த்தல்: போட்டிவிதிகளும், பணப்பரிசுகளும், 2013 தொடர்கட்டுரைப்போட்டிக்கமைய இடம்பெறும்.

போட்டி 1 இன் விதிகளாக அனைத்து விக்கிப்பீடியாக்களிலும் இருக்க வேண்டிய 1000 கட்டுரைப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை கட்டுரைத்தரத்திற்கு உயர்த்த்தும் பொருட்டு (25000 பட்டு அளவிற்கு) விரிவாக்க வேண்டும். மேலும் கட்டுரைகள் சிலவற்றை உருவாக்கல். அந்த வகையில்

 • 1ம் பரிசு-10000/=
 • 2 - 7000/=
 • 3 - 5000/=
 • 4 - 3000/=
 • 5 - 2000/=
 • 6 தொடக்கம் 10ம் பரிசு-600/=
 • மொத்தம் = 30000/=

தொடர்பங்களிப்பாளர் போட்டிக்கான விதிகள்

 • 1-5 வரை பரிசு பெற 35 கட்டுரைகளை 30000 பைட்டை தாண்டி விரிவாக்கல், 1500 கட்டுரைகள் 50 சொற்களுக்குக் குறையாது எழுதுதல்.
 • 6-10 வரை பரிசு பெற 20 கட்டுரைகளை 30000 பைட்டை தாண்டி விரிவாக்கல், 500 கட்டுரைகள் 50 சொற்களுக்குக் குறையாது எழுதுதல்.

இதுபற்றிய உங்கள் கருத்துகள், ஆதரவு/நடுநிலைமை/எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்பார்க்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:42, 25 பெப்ரவரி 2017 (UTC)

https://ta.wikipedia.org/s/1li - அனைத்து விக்கிப்பீடியாக்களிலும் இருக்க வேண்டிய 1000 கட்டுரைகள் ஓரளவுக்கு இந்த இணைப்பில் மொழி மாற்றப்பட்டுள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:55, 25 பெப்ரவரி 2017 (UTC)

விதிகளில் கூடுதல் நடைமுறைகள் சேர்க்க வேண்டும் தொகு

 1. அனைத்து விக்கிப்பீடியாக்களிலும் தேவைப்படும் 1000 கட்டுரைகளில் ஏற்கனவே பல 25,000 பைட்டுகள் தாண்டிவிட்டது. 10001 முதல் 24999 பைட்டுகள் வரையும் கூட பல கட்டுரைகள் உள்ளன. அதனால் 10,001க்கும் அதிகமான பைட்டுகளில் உள்ள கட்டுரைகளை அவை இலட்சம் பைட்டுகளாக இருந்தாலும் சரி மேலதிக 15000 பைட்டுகள் சேர்க்கப்படும் கட்டுரைகள் அனைத்துமே தகுதிக்கட்டுரையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
 1. நாலாவது பரிசு முதல் பதினோறாம் பரிசு வரை தலா ஆயிரம்னு கொடுத்தால் கூடுதலாக ஒருவருக்கு பரிவு கிடைக்கும். அதை மாற்றினால் நல்லது. அதாவது கீழுள்ள மாதிரி இருக்கனும்.
 • 1ம் பரிசு-10000/=
 • 2 - 7000/=
 • 3 - 5000/=
 • நாலாவது பரிசாக 8 பேருக்கு தலா - 1000/=
 • மொத்தம் = 30000/=

--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:11, 25 பெப்ரவரி 2017 (UTC)


தென்காசி சுப்பிரமணியன் அவர்களே, தாங்கள் குறிப்பிட்ட பட்டியல் இங்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பதில் யான் குறிப்பிட்ட பட்டியலே. அந்த வகையில் இங்கு 49 ஆவது இடத்தில் இருக்கும் தமிழ் விக்கியில் 690 குறுங்கட்டுரைகள் இருக்கின்றன. குறுங்கட்டுரைகள் எனும் போது 10000 characters இலும் குறைவாக உள்ளவை. அக்கறுங்கட்டுரைகளின் பட்டியலைத் தயாரித்து அவற்றை கட்டுரைகள்வி எனும் தரத்திற்கு விரிவாக்குவதே நோக்கம். கட்டுரைகள் 10000 தொடக்கம் 30,000 characters வரை கொண்ட கட்டுரைகள் அனைத்தும் கட்டுரைகளாகக் கொள்ளப்படும். 10000 கரக்டர்கள் 25,000 பட்டுக்களுக்குச் சமனாக அமைகின்றது. உறுதிசெய்ய. அவ்வாறு போட்டிக்காக விரிவாக்கும் போது 200க்கும் அதிகமான கட்டுரைகள் விரிவாக்க எதிர்பார்க்கப்படுகின்றன. அப்படியாயின் இங்கு நாம் முதற் தரவரிசை விக்கியாக முன்னேறலாம். மேலும் தாங்கள் குறிப்பிட்ட பரிசு வழங்கும் விதம் நன்று. தங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன். மேலும் விரைவில் நல்ல கருத்துக்களை உடனடியாக இட்டமைக்கு நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:12, 26 பெப்ரவரி 2017 (UTC)

//அக்குறுங்கட்டுரைகளின் பட்டியலைத் தயாரித்து அவற்றை கட்டுரைகள்வி எனும் தரத்திற்கு விரிவாக்குவதே நோக்கம்.//

எனில் அந்த குறுங்கட்டுரைகளை எல்லாம் தனியாக ஒரு பட்டியல் போடுவது சிறந்தது. போட்டிக்கு முன்னரே குறுங்கட்டுரை பட்டியல் வேண்டும். எந்த குறுங்கட்டுரையானாலும் குறிப்பிட்ட பைட்டுகளை சேர்த்தே ஆக வேண்டும் என்ற கட்டாய விதி வேண்டும். இல்லையெனில் 23,000 பைட்டுகள் இருக்கும் 50 கட்டுரைகளை கண்டுபிடித்து வெறும் 2000 பைட்டுகளை இணைத்து குறுக்கு வழியில் வெற்றி பெற வாய்ப்பாய் அமைந்துவிடும். 24,999 பைட்டுகள் இருந்தாலும் அதில் 15,000 பைட்டுகள் சேர்த்தாலே அந்த கட்டுரையை போட்டியின் ஒரு கட்டுரையாக சேர்த்துக்கொள்ளும் தகுதிக்கு கொண்டு வரனும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:58, 27 பெப்ரவரி 2017 (UTC)

//அந்த வகையில் இங்கு 49 ஆவது இடத்தில் இருக்கும் தமிழ் விக்கியில் 690 குறுங்கட்டுரைகள் இருக்கின்றன.//

இந்த 690 கட்டுரைகளும் அனைத்து விக்கியிலும் இருக்க வேண்டிய 1000 கட்டுரைகள் பட்டியலில் வருமா? இல்லை இரண்டுக்கும் தொடர்பில்லையா? தொடர்பில்லை என்றால் இது எப்டி விக்கி தரத்தை உயர்ந்த்தும்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:07, 27 பெப்ரவரி 2017 (UTC)


தென்காசி சுப்பிரமணியன் அவர்களே, //எனில் அந்த குறுங்கட்டுரைகளை எல்லாம் தனியாக ஒரு பட்டியல் போடுவது சிறந்தது.//

இதற்கான வேலைகளை இங்கு செய்து வருகின்றேன்.

//இந்த 690 கட்டுரைகளும் அனைத்து விக்கியிலும் இருக்க வேண்டிய 1000 கட்டுரைகள் பட்டியலில் வருமா? //

ஆம், 1000 கட்டுரைகளில் 690 கட்டுரைகள் குறுங்கட்டுரைகள் எனும் தரத்தில் நிற்கின்றன. நிச்சயமாக விக்கியின் மேம்பாட்டில் தொடர்பு உண்டு. 2013 தொடர் கட்டுரைப்போட்டியிலும் அப்பட்டியலே கவனத்தில் கொள்ளப்பட்டது. மேலும் இப்பட்டியல் மூலம் ஏனைய விக்கிகளுடன் எமது விக்கியையும் ஒப்பிடலாம். மேல் விக்கியில் இப்பட்டியலுக்கே முக்கிய இடம் வழங்கப்படுவதை பல உரையாடல்களிலும் யான் வாசித்து அறிந்துள்ளேன் ஐயா! நன்றி! மேலும் குறுக்குவழியில் வெற்றி பெறாதவாறு அனைத்துக்கட்டுரைகளிலும் குறிப்பிட்ட அளவு பைட்டுக்கள் சேர்த்தல் நல்லெண்ணம். மேலும் அவ்வாறு குறுக்கு வழியில் வெல்லக்கூடிய கட்டுரைகளை வேறாக பட்டியல் படுத்தி அவற்றையும் விரிவாக்க வைத்துவிடலாம். அதற்கான சோதனை நடந்துகொண்டிருக்கிறது. நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:44, 27 பெப்ரவரி 2017 (UTC)

கருத்துகள் தொகு

இங்கு உரையாடட்ப்படும் விடயங்கள் மார்ச் மாத முற்பகுதியினுள் வரையறை செய்யப்பட்டு ஓர் முடிவு எட்டப்படும்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:33, 28 பெப்ரவரி 2017 (UTC)

@Shriheeran:, உங்கள் ஆர்வம், முயற்சி பாராட்டத்தக்கது, வரவேற்கத்தக்கது. என்றாலும் உங்கள் அவசரம் எனக்கு புரியவில்லை. தாங்கள் சிறிது பொறுமையாகப் பணிகளைச் செய்யலாம் என எதிர்பார்க்கின்றேன். நம் விக்கியில் பல வருடங்கள் அனுபவம் பெற்ற, இலங்கை பயனர்களையும் இணைத்துக் கொண்டு, அவர்களின் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு, ஒரு குழுவாகச் செயற்படுவது நன்று எனக் கருதுகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 10:04, 26 பெப்ரவரி 2017 (UTC)

விருப்பம்.தங்கள் முயற்சியில் கலந்துகொள்கிறேன். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:57, 26 பெப்ரவரி 2017 (UTC)

  விருப்பம், தென்காசியார் குறிப்பிட்ட பரிசு வழங்கும் விதம் நன்று. இதற்காக தனி விக்கிப்பக்கத்தை உருவாக்கி அதில் கலந்துரையாடலாம். 35,000 பைட்டுகள் ஒரு கட்டுரையில் இருந்தாலும் மேலதிகமாக 30,000 பைட்டுக்கு அதிகமாக சேர்த்தால் அதை 1-5 பட்டியலில் சேர்க்கலாம். அதாவது GT 65,000 பைட்டுகள். புதுப்பயனர் போட்டி பரிசை முதல் பரிசு 10,000, இரண்டாம் பரிசு 5,000 மூன்றாம் பரிசு (ஐவருக்கு) 1,000 (வேறு எப்படி தரலாம்?)--குறும்பன் (பேச்சு) 18:43, 26 பெப்ரவரி 2017 (UTC)

@Nan:, அவசரத்திற்கான காரணம் நல்கை பெறப்படுகின்றமையினால். மேல் விக்கியில் இது பற்றி விண்ணப்பத்து நல்கை பெறும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. விண்ணப்பத்தில் திட்டம் ஏப்ரலில் ஆரம்பிப்பதாக குறிப்பிட்டுள்ளதாலேயே இந்த அவசரம் ஐயா! மேலும் ஏப்ரலில் ஆரம்பிப்பதே உணமையான இலக்கும் கூட. எமக்குள் நடக்கும் போட்டி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை நாமே திட்டமிட்டுக் கலந்துரையாடுவது சாலச் சிறந்தது அன்று எனது சிறியோனின் சிந்தனை. ஆனால் உரையாடுவது மிகச் சிறப்பு. தாராளமாக உரையாடலாம். ஆனால் காலம் போதிய அளவாக இல்லை என எண்கிறேன். மேலும் மார்ச் 5 ஆம் திகதியின் முன்பாக அனைத்து முடிவுகளை எட்டினாலேயே போட்டிப்பக்கத்தில் இற்றைசெய்து முகநூலில் பரப்புரைசெய்து அனைத்துத் தொடர்பங்களிப்பாளர்களையும் உள்ளீர்க்கலாம். அனுபவம் வாய்ந்த இலங்கைப்பயனர்களின் பேச்சுப்பக்கங்களில் கருத்திட வேண்டுகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:44, 27 பெப்ரவரி 2017 (UTC)
ஸ்ரீஹீரன் இந்த ஆண்டு என்னால் முடியாது.--குறும்பன் (பேச்சு) 22:42, 28 பெப்ரவரி 2017 (UTC)
உலோ.செந்தமிழ்க்கோதை அவர்களே, தங்கள் ஆர்வம் வரவேற்கப்படுகின்றது. போட்டியில் கலந்துகொள்வதுடன் மேலும் சில எண்ணங்களையும் இட்டு திட்டத்தை வளர்க்க உதவலாம்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:44, 27 பெப்ரவரி 2017 (UTC)
குறும்பன் அவர்களே புதுப்பயனர் போட்டி மாதாந்தப்போட்டியாக நடைபெறுவதற்கு விருப்பம். மேலும் அதிக பைட்டுக்கள் என்பது புதிய பயனர்களுக்கு மிகவும் கடினம். //35,000 பைட்டுகள் ஒரு கட்டுரையில் இருந்தாலும் மேலதிகமாக 30,000 பைட்டுக்கு அதிகமாக சேர்த்தால் அதை 1-5 பட்டியலில் சேர்க்கலாம்.// இதனை விளக்கிக்கூறுங்களேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:44, 27 பெப்ரவரி 2017 (UTC)

ஸ்ரீஹீரன் புது பயனுருக்கான விதிகள் சொல்லப்படவில்லை. தொடர் பங்களிப்பாருக்கான விதிகள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. நான் கூறிய பைட் அளவு தொடர் பங்களிப்பாருக்கானது. காட்டுக்கு ஹைட்ரோகார்பன் எனப்படும் நீரகக்கரிமம் கட்டுரையை எடுத்துக்கொள்வோம் இது 32,086 பைட்டுகள் அளவுள்ளது. இதை 62,086 பைட்டுகள் (32,086 +35,000) அளவுக்கு விரிவாக்கினால் 1-5 பயனர்களின் பட்டியலில் சேர்க்கலாம். புதுப்பயனருக்கு 15,000இக்கு மேல் சொல்லலாம் பரிசுத்தொகையையும் மாற்றிவிடலாம், 5000, 4000, 3000, 1000(8)-குறும்பன் (பேச்சு) 22:11, 27 பெப்ரவரி 2017 (UTC)

@குறும்பன் ஐயா, தாங்கள் கூறுவதும் வரவேற்கத்தக்க விடயம். மேலும் பரிசுவிபரம் தொடர்பில் தாங்கள் கூறுவதை யான் எண்ணவில்லை. என் எண்ணப்படி புதுப்பயனர்களுக்கு 2013 தொடர்கட்டுரைப்போட்டிவிதிகள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கலாம். மேலும் அமெரிக்காவில் தங்களால் பயிற்சிப்பட்டறை ஒன்றை அமெரிக்கத் தமிழர்கள் மத்தியில் நடாத்த முடியுமா? அதற்கான நிதியுதவிகளை யான் நிச்சயம் செய்வேன். தங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:30, 28 பெப்ரவரி 2017 (UTC)
தென்காசி சுப்பிரமணியன் ஐயாவினால் ஓர் பயிற்சிப்பட்டறையை சக இந்தியப் பயனர்களுடன்ப் இணைந்து நடாத்த முடியுமா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:33, 28 பெப்ரவரி 2017 (UTC)

ஆயிரம் கட்டுரைகளில் இதுவரை எழுதப்படாத ஒரு கட்டுரை உள்ளது. அதை முதலில் எழுதி முடிக்கலாம். பின்னர் பத்தாயிரம் எழுத்துருவுக்கும் (உருவுக்கும்) குறைந்த 690 கட்டுரைகலைப் பட்டியலிட்டு அவற்றை முப்பதினாயிரம் உருவுக்கு மேல் அமையும்படி விரிவாக்கலாம்.இப்போது அவ்வகையில் 69 கட்டுரைகளே உள்ளன. முதலில் இவ்வெண்ணிக்கையை 500 அளவுக்காவது கொண்டு செல்லலாம். பரிசுகள் பற்றித் தென்காசியார் கூறியதை ஏற்கலாம். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:10, 28 பெப்ரவரி 2017 (UTC)

@Shriheeran: குழுவாக செயற்படுங்கள். ஏனெனில், ஏதாவது ஒரு நுட்பம், விக்கிநடைமுறை நமக்குத் தெரியாமல் இருக்கும் வாய்ப்பு அதிகமுண்டு. அனைத்து விக்கியிலும் இருக்க வேண்டியவைகள் என்பதில் தமிழகம், தமிழர் சார்ந்த கட்டுரைகள் மிகக்குறைவாக உள்ளன. நான் தமிழக மூலிகைகள் குறித்த கட்டுரைகளை எழுத எண்ணுகிறேன். தற்போதுள்ள சில கருவிகளின் இடைமுகங்களை மாற்றுதல், பொதுவகம், விக்கித்தரவு பயன்பாடு, விக்கியினங்கள், விக்சனரி என பிற திட்டங்களை இணைத்து செயற்பட்டால் கூடுதல் புள்ளிகள் என்பதும் சிறப்பாகவும், விக்கிக்குறித்த பரந்த அறிமுகத்தை பலருக்கும் அறிமுகப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு. நாம் சிறப்பாக செயற்படுவோம். --உழவன் (உரை) 12:34, 28 பெப்ரவரி 2017 (UTC)

உலோ.செந்தமிழ்க்கோதை அவர்கள் கூறுவது மிகவும் சரியானதும் எனது எதிர்பார்ப்பும் கூட. அதற்காகவே இத்திட்டம் அனைத்தும். மேலும் தகவலுழவன் ஐயா கூறுவதற்கிணங்க செயற்படுவதற்கு பாரிய நேரம், உழைப்பு தேவைப்படுவதால் வேறொருவிதமான பிற திட்டம் மூலமாகவே நடாத்த வேண்டும். அனைவருடைய கருத்துகளையும் உள்வாங்கி நல்லதோர் முடிவினை நாளை, அல்லது நாளை மறுதினம் பதிவிடவுள்ளேன். உங்கள் எண்ணங்களை முற்கூட்டியே தெரிவித்தால் உதவியாக அமையும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:25, 28 பெப்ரவரி 2017 (UTC)

இங்கு ஆலமரத்தடி அறிவிப்பிற்கும், திட்டப்பக்கத்திற்கும், நல்கை விண்ணப்பத்திற்கும் வேறுபாடுகள் உள்ளனவே. எ.கா

 • திட்டத்தின் நோக்கம் - We will focus on writing 25,000 articles and improve through this project
 • செயற்பாடுகள் - We are targeting to bring our Tamil Wikipedia from 59 to the top 40 wikipedias. - 40 வது இடத்திலுள்ள எபிரேய விக்கிப்பீடியாவில் 202,627 கட்டுரைகள் உள்ளன.
 • விளைவு - Number of participants: 30, Number of obtained new users: 25, Number of articles created and improved: 25,000 - சராசரியாக ஒருவர் 455 கட்டுரைகளை 30,000 பைட்டுக்கு உருவாக்க/விரிவாக்க வேண்டும்.

மேலும், அவசர அவசரமாக இத்திட்டத்தை செயற்படுத்த முனைவது ஏற்றதாகப்படவில்லை. முதலில் ஆலமரத்தடியில் கருத்திட்டு, திட்டப்பக்கம் உருவாக்கி பின்பு விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதில் குறிப்பிடப்பட்டிருக்கும் செலவு தொடர்பான விடயங்களிலும் மாற்றுக் கருத்துகள் உள்ளன. இதனை முறையாக, தாமதித்துக் கொண்டு செல்லலாம் அல்லது திட்டத்தைக் கைவிடலாம். --AntanO 14:56, 28 பெப்ரவரி 2017 (UTC)

பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால் சம்மதம் தெரிவித்துள்ளனரா? இதை முறையாக கொண்டு செல்வது அவசியம். --AntanO 15:01, 28 பெப்ரவரி 2017 (UTC)
@AntanO:, தாங்கள் குறிப்பிட்டுக்காட்டிய திட்டப்பக்கம் வேறு விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15 இதுவே திட்டப்பக்கம். மேலும் மேல் விக்கியில் விண்ணப்பிக்கும் போது அவ்வாறு விண்ணப்பித்தாலும் பீன்னர் பேச்சுப்பக்கத்தினை பாருங்கள். அங்கு அனைத்தும் விரிவாக குறிப்பிட்டு நோக்க , இல்க்கில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பிலும் அறிவித்துள்ளேன். மேலும் காலம் தாமதமாக்குவது தொடர்பில் சிந்தித்தேன். இதில் தாமதப்படுத்துவதற்கான காரணம் யாது எனக் குறிப்பிடுக.ஏனெனில் இலக்கு மாற்றம், நோக்க மாற்றம் சரியாகிவிட்டது. மேலும் ஆலமரத்தடியில் விண்ணப்பம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டதுடன் கருத்துகள் கோரப்பட்டும் எவரும் கருத்திடாததே இப்போது பிரச்சினையாக உள்ளது ஐயா. மேலும் கலந்துரையாடுவது எது எனக் குறிப்பிட்டீர்களானால் உரையாடலாம். அத்துடன் சம்மதம் என்பது தானாஅகக் கூறுவதிலிருந்து கணிகத்தேவையில்லை. பயனர்களின் கருத்துக்களினை வைத்தே கணிகலாம் எனப்து சிறியோன் எண்ண. அந்தவகையில் இங்கு கருத்திட்ட, உழவன் ஐயா, தென்காசியார், கோதை அம்மையார், குறும்பன் ஐயா, நந்தகுமார் ஐயா ஆகியோரின் கருத்துகளை ஆய்வு செய்த போது அனைவரும் ஆதரவு தெரிவிப்பதாகவே அமைகின்றது. இப்பதிலில் உங்களிடம் கேட்க முனைவது ஒன்று மட்டுமே? இத்திட்டம் தொடர்பாக மேலும் எது பற்றி உரையாட வேண்டும்? மற்றும் உங்களுக்கு திட்டம் பற்றியுள்ள கேள்விகளையும் கேட்கலாம்? !தமிழ் விக்கிப்பீடியாவின் 15 ஆன்டு நிறைவு அடையாளச்சின்னம் ஒன்றை வடிவமைத்துத்தர வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:54, 28 பெப்ரவரி 2017 (UTC)
ஐயா போன்ற சொற்களைத் தவிர்க்கலாம். பெயரைக் குறிப்பிட தயக்கமாயின் பயனர் பெயரை குறிப்பிட்டு அழைக்கலாம். //ஆலமரத்தடியில் விண்ணப்பம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டதுடன் கருத்துகள் கோரப்பட்டும் எவரும் கருத்திடாததே இப்போது பிரச்சினையாக உள்ளது// உண்மையில் இதுதான் சிக்கலான விடயம். ஏன் கருத்திடவில்லை என்றால் ஒன்று ஆதரிக்கவில்லை அல்லது ஆர்வமில்லை என்று கருத்துக் கொள்ள இடமுண்டு. நீங்கள் குறிப்பிட்டபடி, ஆதரவு தெரிவித்தவர்கள் 5 பேர். ஆனால், முனைப்பான பங்களிப்பவர்களில் இந்த எண்ணிக்கை விகிதம் குறைவானதே. இந்தச் சிக்கலே திட்டம் போதிய ஆதரவினைப் பெறவில்லை என்ற கருத்திற்குள் தள்ளப்படலாம் அல்லவா? உங்கள் முயற்சி பிழையானது என்பது என் கருத்தல்ல. ஒரு திட்டத்தை ஆரம்பித்து அதனால் பின்னடைவுகள் ஏற்படுத்தினால் வரும் தாக்கங்கள் உங்களைப் பாதித்துவிடக்கூடாது என்ற காரணத்தினாலேயே இதனைத் தெரிவிக்கிறேன். உங்கள் பேச்சுப்பக்கத்தில் திட்டம் தொடர்பில் நக்கீரன் குறிப்பிட்ட விடயங்களையும் கருத்திற்கொள்ளுங்கள். --AntanO 17:34, 28 பெப்ரவரி 2017 (UTC)

திட்டத்தினைப் பற்றிய தங்கள் கருத்துகளுக்கு நன்றி அன்ரன் ஐயா! மேலும் இவ்வாரம் முடிவதற்குள் திட்டம் தொடர்பான அனைத்து விடயங்களையும் இற்றைசெய்வேன் நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:56, 1 மார்ச் 2017 (UTC)


இங்கு உரையாடப்பட்ட விடயங்களை உள்வாங்கி தீர்மானங்கள்/முடிவுகள் எட்டப்பட்டு இங்கு இற்றை செய்யப்பட்டுள்ளது. நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:08, 5 மார்ச் 2017 (UTC)


@Shriheeran:, நல்கை பெற்ற விதம், போட்டி வடிவமைப்பு குறித்து மாற்றுக் கருத்துகள் இருக்கும் போது, ஒரே வாரத்துக்குள் அவசரம் அவரசமாக போட்டி அறிவிப்பை வெளியிட வேண்டிய தேவை புரியவில்லை. நல்கைக் காலம் ஏப்ரல் 1 தொடங்குகிறது என்றாலும் அன்றே போட்டியைத் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே, மாற்றங்களைச் செய்வதைக் குறித்து நல்கைப் பக்கத்தில் தெரிவித்து ஒப்புதலும் பெற்று இருக்கிறோம். அன்டன் குறிப்பிட்டுள்ள கருத்துகளைக் கவனியுங்கள். விக்கிப்பீடியாவில் இணக்க முடிவை எட்டுவது குறித்த வழிகாட்டலை இங்கு காணலாம்.

போட்டி வடிமைப்பு குறித்த கருத்துகள்:

 • ஒவ்வொரு விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய 1000 முக்கியக் கட்டுரைகளின் தரம் உயர்த்தும் முயற்சி நன்று.
 • போட்டிக் காலம் 9 மாதம் என்பது சலிப்பையும் தொய்வான பங்களிப்புகளையும் தர நேரிடலாம். இது 2013 போட்டியில் இருந்து பெற்ற பாடம். 3 அல்லது அதிகபட்சம் 5 மாதம் நடத்தலாம்.
 • ஒருவர் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதே பரிசை, போட்டியை, பதக்கத்தை எதிர்பார்த்துத் தான் என்ற நிலையைத் தூண்டுவது போல் அடிக்கடியோ நீண்ட காலமோ போட்டிகள், தொடர் தொகுப்பு முயற்சிகள் அமையக்கூடாது. இவ்வாறு செயற்பட்ட பல விக்கிச் சமூகங்கள் இயல்பான விக்கி பங்களிப்பு உணர்வை இழந்திருக்கின்றன. இதன் காரணமாகவே, தமிழ் விக்கிப்பீடியாவில் எப்போதாவது மட்டுமே போட்டிகள் நடத்துவது, அதுவும் குறுகிய காலம் மட்டுமே நடத்துவது என்பதைத் தமிழ் விக்கிப்பீடியாவின் வலுக்களில் ஒன்றாகப் பார்க்கிறேன்.
 • புதுப்பயனருக்கான போட்டியும் தொடர் பங்களிப்பாளருக்கான போட்டியும் ஒரு சில மாதங்களில் ஒன்றாக நடப்பது குழப்பத்தைத் தரலாம். தனித்தனியாக நடத்துவது நன்று.
 • முடிந்த அளவு இணையம் வழி பரப்புரையே உதவும். நேரடிப் பயிற்சிகள், பட்டறைகள் என்பது போட்டியில் பெரிய தாக்கத்தைத் தராமல் போகலாம்.
 • போட்டி ஒருங்கிணைப்புக்கு இன்னும் பல பங்களிப்பாளர்களை இணைந்து கொள்ள வேண்டுங்கள். குறிப்பாக, தமிழ் விக்கிப்பீடியாவின் பெயரால் தொடங்கப்பட்டுள்ள மின்மடல் முகவரியின் அணுக்கம் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் பங்கேற்பில் இருப்பதும் அங்கு பெறப்படும் மின்மடல்களுக்குத் தக்க அகவுரிமைக் கொள்கைகள் பின்பற்றுவதும் முக்கியம்.

இக்கருத்துகளில் தக்கவற்றை உள்வாங்கிச் செயற்பட அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். முயற்சிக்கு வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 13:22, 5 மார்ச் 2017 (UTC)

இரவி உங்கள் கருத்துகளுக்கு நன்றி! மற்றைய பேச்சுப்பக்கத்தில் கருத்திட ஆவல். முகநூலில் உரையாடுவோமா? மேலும்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:35, 5 மார்ச் 2017 (UTC)
விக்கிப்பீடியா குறித்த உரையாடல்களை விக்கிப்பீடியாவிலேயே மேற்கொள்ள விரும்புகிறேன். நீண்ட உரையாடல் எனில் அனைவருக்கும் அழைப்பு விடுத்து முறையாக Google Hangoutல் பேசலாம். --இரவி (பேச்சு) 13:37, 5 மார்ச் 2017 (UTC)
இரவி, மற்றும் ஏனையோர் அனைவருக்கும் தருகின்ற செவ்வி! மேலும் இதோ நான் உளவாங்கி வெளிவிடும் சில கருத்துகள்!
 • தாங்கள் கூறுவதற்கு இணங்க போட்டிக்காலத்தை 6 மாதங்களாக்கி மே தொடக்கம் ஒக்டோபர் வரை நடாத்தலாம்!
 • போட்டியில் அவசரம் காட்டவில்லை யானும் பொறுமையாக இருக்கின்றேன் என அண்ணுகின்றேன்.
 • புதுப்பயனர் போட்டியை தங்கள் கருத்திற்கிணங்க அடுத்த வருடம் நடாத்த விருப்பம்! இதுவே மயூரநாதன் ஐயா முதற் கூறிய விடயம்!
 • மின்னஞ்சலைப் பார்வையிடுவதற்கான கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் செய்வேன்
 • மேலும் பலர் ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் போது போட்டியில் பங்குபற்றுவோர் எண்ணிக்கை குறைந்துவிடக்கூடும் என்ற ஒரு பயம் என்னுள் இருக்கின்ரது!
 • தற்போது போட்டி தொடர்பாக இற்றை செய்யப்பட்டுள்ள விடயங்களில் மாற்றுக்கருத்துகள் இருப்பின் குறிப்பிடவும். நன்றி!

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:02, 5 மார்ச் 2017 (UTC)

புதுப்பயனர் போட்டி உள்ளிட்ட பிற செயற்பாடுகளை அடுத்த ஆண்டு மேற்கொள்வது, தொடர் பங்களிப்பாளர் போட்டியின் காலத்தைக் குறைப்பதை வரவேற்கிறேன். போட்டியின் விதிகள் வெளிப்படையாக இருக்கும் போது ஒருங்கிணைப்பாளர்களும் போட்டியாளர்களாக இருப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஒரு ஒருங்கிணைப்பாளர் ஈடுபட்டுள்ள விசயத்தில் முரண் இருந்தால் அவர் விலகி நிற்க மற்ற ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு எடுத்தால் போதுமானது. கடவுச் சொல்லை எனக்கு அனுப்ப வேண்டாம் :) பொதுவாக, இன்னும் பலர் ஒருங்கிணைப்பாளராக இணைந்து செயற்பட முன்வருகிறார்களா என்று பாருங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 14:23, 5 மார்ச் 2017 (UTC)
அப்பட்டியே ஆகட்டும் இரவி ஐயா!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:25, 5 மார்ச் 2017 (UTC)

வங்கிப் பணப்பரிமாற்றம் தொகு

@Sivakosaran, Mayooranathan, and Ravidreams:, நல்கைப்பணமான 247,819 ரூபாய் 35 சதம், விக்கிப்பீடியர்களின் கூட்டு வங்கிக்கணக்கிற்கு 05.04.2017 அன்று 14:34 மணியளவில் மாற்றம் செய்யப்பட்டது. அக்கணக்கினை விக்கிப்பீடியாவின் தேவைக்காகப் பயன்படுத்தும் போது பயன்படுத்தியதற்கான அத்தாட்சிகளான பற்றுச்சீட்டு போன்ரவற்றினை Scan செய்து எனது மின்னஞ்சலான shriheeran@gmail.com இற்கு அனுப்பிவைக்குமாறு வேண்டுகின்றேன். காரணம் நல்கை பெற்றவர் அறிக்கை சமர்ப்பிக்கும் போது இவ்விடயங்கள் மிகவும் முக்கியம். நன்றி, தங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு)

தகவலுக்கு நன்றி. இவற்றை அனைவரும் பார்க்கும் வண்ணம் பொதுவான ஒரு Google Drive folderல் இட்டு வைத்தாலும் தகும். --இரவி (பேச்சு) 07:23, 6 ஏப்ரல் 2017 (UTC)
இங்கு அந்த Folder
மேற்படி தொகை கூட்டுக்கணக்கில் வைப்பிலிடப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளேன். கணக்கை ஆரம்பிக்கும்போது ஆரம்ப வைப்பாக நானும் மயூரநாதனும் தலா ஆயிரம் ரூபா வைப்பிலிட்டோம். போட்டிகள் முடிவுற்ற பின்னர் கணக்கிலிருந்து பணம் மீளப்பெறும்போது இத்தொகையை நாம் மீளப்பெற்றுக்கொள்ளலாம். --சிவகோசரன் (பேச்சு) 16:08, 13 ஏப்ரல் 2017 (UTC)
பயிற்சிப்பட்டறைகலின் போது பயன்படுத்துவதற்கு ஏற்ப ஒரு Dongle தேவைப்படுகின்ரது. கூடவே ஒரு Sim தமிழ் விக்கிப்பீடியா குழுவுக்கெனத் தேவை. எனவே அதற்காக நல்கைப்பணத்தைப் பயன்படுத்த முடியும். மேலும், எந்த நிறுவனத்தைப் பயன்படுத்துவது? அதன் இனைய வேகம் சிறப்பானதா? எனவும் அறிய ஆவல். யான் பயன்படுத்தும் Dongle, 3G ஆகும். எமக்கு வேண்டியது 4G. கருத்துத்தெரிவிக்க வேண்டுகின்றேன். கவனிக்க வார்ப்புரு:Ping:Ravidreams --ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:06, 14 ஏப்ரல் 2017 (UTC)

படிப்பினைகள் நினைவூட்டல் தொகு

இரவி இங்கு முன்வைத்த கற்றுக்கொண்ட படிப்பினைகளினைக் கருத்திற்கொண்டு செயற்படுவோம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:07, 6 ஏப்ரல் 2017 (UTC)

Google Formஇனூடு கருத்துக்கணிப்பு தொகு

இன்று தான் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகள் ஒன்றுக்குடலுக்கான விமர்சனங்களை (கருத்துகள்) வாசித்தேன். வாசிக்கவே தலை வெடிக்கின்றது. தங்கள் பணிக்கு அளவே இல்லையா இரவி, வாழ்க வளமுடன். மேலும் அங்கு சுட்டிக்காட்டப்பட்ட படிப்பினைகள், குறைகளினைக் கருத்திற்கொண்டு 15 ஆண்டு நிறைவை நடாத்தலாம். அத்துடன் பயனர்கள் பந்தி பந்தியாகத் தட்டச்சு செய்யும் கருத்துக்களை சுருக்கமாக உள்வாங்கி ஒரு Google for ஐ நாமே உருவாக்கிவிட்டால் என்ன?, ஆம் எனின் அப்படிவத்தில் உள்ளடக்கப்படக்கூடிய விடயங்களைத் தாருங்கள். அவ்வாறு ஒரு படிவம் உருவாக்குவதன் மூலம் எங்கு கூடல் இடம்பெற வேண்டும். எங்கு இடம்பெறுவதை பயனர்கள் அதிகமாக ஆதரிக்கின்றார்கள், ஆகிய ஒவ்வொரு முடிவுகளையும் பை வரைபு மூலமாகவும், புள்ளிவிபர அடிப்படையிலும் Google form தருவதனால், அதிகம் ஆதரிக்கப்படும் கருத்துக்களை முன்னிறுத்தி விழாவை முன்னெடுக்கலாம் என்பது அடியேன் கருத்து, மேலும் Google form மட்டுமல்லாது விரிவான உரையாடல்களையும் மேற்கொள்ளலாம். எனினும் ஜனநாயக அடிப்படையில் அதிக ஆதரவு கிடைக்கும் எண்ணங்களை செயற்படுத்தலாம். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:18, 6 ஏப்ரல் 2017 (UTC)

Form இல் கொடுக்கப்படக்கூடிய ஒரு சில கேள்விகள்
 • தமிழ் விக்கிப்பீடியாவின் 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் இடம்பெறக்கூடிய நாடு எது? (இந்தியா/இலங்கை)
 • இந்தியாவெனின் எந்நகரில் இடம்பெறலாம் (சென்னை/மதுரை/வேறு)
 • இலங்கையெனின் எந்நகரில் இடம்பெறலாம் (யாழ்ப்பாணம்/கொழும்பு/வேறு)

இது போன்ற இதர கேள்விகளையும் தொகுத்து படிவம் ஒன்றைத் தயாரிக்கலாமே!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:07, 6 ஏப்ரல் 2017 (UTC)

தொழில்நுட்ப பங்களிப்பாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் தொகு

வார்ப்புருக்கள், மாடூல்கள், விக்கித்தரவுகள் போன்றவற்றில் பங்களிக்கும் பயனர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு பரிசுகளை வழங்கலாம். த.வியின் தரவுகள் மேம்படுத்தலுக்கும், பராமரிப்பிற்கும் மிக்க உதவியாயிருக்கும். --Mdmahir (பேச்சு) 07:11, 11 மார்ச் 2017 (UTC)

தங்கள் ஆலோசனைக்கு நன்றி Mdmahir, இப்போட்டியினுள் இதனை உள்ளடக்காது பிறிதாக ஓர் போட்டி ஒன்றை அல்லது திட்டம் ஒன்றை உள்ளடக்கலாம். எனினும் பிற பயனர்களின் கருத்துகளை உள்வாங்கி 2018 இல் குறுந்திட்டமாக முன்னெடுக்கலாம். தங்கள் ஆலோசனைக்கு மீண்டும் எனது நன்றிகள்! தமிழ் விக்கியில் தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

நாட்குறிப்பு & தினக்குறிப்பு தொகு

விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்/காலக்கோடுகள் எனும் பக்கத்தில் எமது 15 ஆண்டுகள் நிறைவினையொட்டி நடந்த, நடக்கவுள்ள விடயங்களைக் காணலாம். இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வோம். அத்துடன் அந்நாட்குறிப்பில் நடைபெறவுள்ள விடயங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்களை தயங்காமல் கேளுங்கள், கேட்காமல் முதலில் மார்றுங்கள்! மேலும் இவ்வளவு விடயங்களையும் 15 ஆண்டு நிறைவுக்குச் செய்வதா எனும் கேள்வி எனக்குள் எழுகிறது. 15ஆம் ஆன்டு நிறைவைப் 10 ஆண்டு நிறைவு போல் கொண்டாடாமல் வேறு விதமாகக் கொண்டாட முயல்வோமா? அத்தோடு இவற்றை 20 ஆம் ஆண்டு நிறைவுக்குச் செய்தால்த்தான் என்ன?, பதில் வேண்டும் @Ravidreams:--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:37, 7 ஏப்ரல் 2017 (UTC)

கொண்டாடுவோம், அதை எவ்வாறு என்பதில் தான் சந்தேகம், புதுப்பயனர் போட்டி, பயிற்சிப்பட்டறைகள் 100% Sure. மேலே குறிப்பிட்டவற்றை ஞாபகமூட்ட்டுகின்றேன்-@Ravidreams:--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:53, 9 ஏப்ரல் 2017 (UTC)
பல விசயங்களைச் செய்து முடிக்கத் தோன்றுவது இயல்பு. ஆனால், நடைமுறைப்படுத்துவதற்குப் போதிய ஆள் பலம் இன்றி இறங்கினால் பெரும் அயர்ச்சியில் முடியும். நாம் சிறிய விசயம் என்று நினைக்கும் சில விசயங்கள் கூட எதிர்பாராத அளவு வேலைப்பளுவைக் கூட்டும். எனவே, புதுப்பயனர் போட்டி, ஓரிரு கல்லூரி, பள்ளிகளில் பயிற்சிப் பட்டறைகள், ஓரிரு நாள் நேரடிச் சந்திப்புடன் கூடிய கொண்டாட்டம் என்று ஒரு சில விசயங்களை மட்டும் நேர்த்தியாகச் செய்வது நன்று.--இரவி (பேச்சு) 03:00, 30 ஏப்ரல் 2017 (UTC)
  விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 03:41, 30 ஏப்ரல் 2017 (UTC)

பதினைந்தாம் ஆண்டுக் கொண்டாட்ட இறுதி நிகழ்வுகள் வடிவமைப்பும் ஒருங்கிணைப்பும் தொகு

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் அனைவரும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:22, 18 பெப்ரவரி 2018 (UTC)

  விருப்பம்--கலை (பேச்சு) 09:32, 18 பெப்ரவரி 2018 (UTC)
  விருப்பம், என்னாலான உதவிகளைச் செய்ய முடியும். நான் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதை மின்னஞ்சலில் தெளிவுபடுத்துங்கள். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:08, 21 பெப்ரவரி 2018 (UTC)
நன்றி. உங்கள் இருவரையும் ஒருங்கிணைப்பாளர்களாக இணைத்து விடுகிறேன். மேலதிக விபரங்கள் பின்னர் உரையாடுகிறேன். நல்கை விண்ணப்பத்தை இன்னும் 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும். --சிவகோசரன் (பேச்சு) 15:52, 21 பெப்ரவரி 2018 (UTC)
Return to the project page "விக்கித்திட்டம்:15".