விக்கிப்பீடியா பேச்சு:2005 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2005 Tamil Wikipedia Annual Review

ரவியின் கருத்துக்கள்

தொகு

natkeeran, thank u very much for coming up with this review. will add my comments to the review in two three days time--ரவி 20:34, 24 நவம்பர் 2005 (UTC)Reply

நற்கீரன், கட்டுரைப்பக்கத்தில் கருத்துக்கள் பதிய ஏதுவாக இல்லாததால் இங்கு பதிகிறேன். அனைவரும் கருத்துக்களையும் இப்பக்கத்தில் பதிந்து பிறகு அதைத் தொகுத்து ஆண்டு அறிக்கையை திருத்தி எழுதுவதே சரியெனப் படுகிறது. முதலில், கட்டுரைகளுக்கு பங்களிப்பது போக இம்மாதிரி comprehensive பார்வை கொண்ட மீளாய்வுகளை தொடங்கி வைப்பதற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இம்மாதிரியான ஆய்வறிக்கைகள் பிற்காலத்தில் தமிழ் விக்கபீடியா எவ்வாறு வளர்ச்சி கண்டது என்ற அறிய உதவும்.

2005ஆம் ஆண்டில் நிகழ்ந்த பிறக்குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள்:

  • முதற்பக்க மறுவடிவமைப்பு
  • உதவிப்பக்கங்கள், ஒத்தாசைப் பக்கம், ஆலமரத்தடி உருவாக்கம்
  • மீடியாவிக்கி தகவல்கள் மேம்பாடு மற்றும் தமிழாக்கம்
  • நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க சனநாயக நடைமுறை
  • சிறப்புக் கட்டுரைகள், கூட்டு முயற்சிக் கட்டுரைகள் உருவாக்கம் மற்றும் தேர்ந்தெடுப்பு
  • விக்கிபீடியா குறித்த பல தளங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள்
  • பிற ஊடகங்களில் விக்கிபீடியா பற்றிய கவனிப்பு
    • நடப்பு நிகழ்வுகள் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி. இதன் விளைவாக புவியில் உள்ள பல்வேறு நாடுகள் மற்றும் ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள் உருவாகியுள்ளன. மேலும், அண்மையில் நன்பர் ஒருவர் ஒரு ஆண்டறிக்கை போன்று தயாரிக்க எண்ணினார். அவருக்குத் தேவையான சில தகவல்கள் இங்கிருந்து கிடைத்தன. -- Sundar \பேச்சு 12:33, 20 டிசம்பர் 2005 (UTC)

2006ஆம் ஆண்டில் பின்வரும் தலைப்புகள் குறித்த குறுங்கட்டுரைகளையாவது உருவாக்குவது தமிழ் விக்கிபீடியாவை ஒரு அடிப்படை கலைக்களஞ்சியம் ஆக்குவதற்கான முதல் அடியாக அமையும் எனக் கருதுகிறேன்.

  • அனைத்து நாடுகள் குறித்த கட்டுரைகள்
  • அனைத்து தேசிய மொழிகள் குறித்த கட்டுரைகள்
  • அனைத்து இனங்கள் குறித்த கட்டுரைகள்
  • அனைத்து நாட்டு நாணயங்கள் குறித்த கட்டுரைகள்
  • அனைத்து நாட்டு தேசியத் தந்தைகள் குறித்த கட்டுரைகள்
  • அனைத்து தனிமங்கள் குறித்த கட்டுரைகள்
  • அடிப்படை அறிவியல் அலகுகள், கொள்கைகள் குறித்த கட்டுரைகள்

நிர்வாக ரீதியாக செய்யப்பட வேண்டியன:

  • உதவிப்பக்கங்கள் மேம்படுத்தல், தமிழாக்கம் மற்றும் விரிவுபடுத்தல்
  • மேம்படுத்தப்பட்ட முழுமையான பக்கவகைப்படுத்தல்
  • அனைத்து பக்க விக்கியாக்கம்
  • விக்கி நடைக் கையேடு விரிவாக்கம்

தொழில்நுட்ப ரீதியாக செய்யப்பட வேண்டியன:

  • தொகுப்பு பக்கங்களில் சுரதா எழுதிகள் போன்றவற்றை பொருத்துவது
  • தானியங்கி எழுத்துருக்களைப் பயன்படுத்துவது

மேலும் யோசனைகள் தோன்றும் பொழுது இங்கு தெரிவிக்கிறேன்--ரவி 20:16, 14 டிசம்பர் 2005 (UTC)


நன்றி ரவி. விரைவில் எனது பார்வையையும், பதிற்குறிகளையும் விரிவாக தருவதாக எண்ணம். --Natkeeran 13:26, 15 டிசம்பர் 2005 (UTC)

மயூரநாதனின் ஒரு பார்வை: (யூன்/யூலை 2005)

தொகு
  • தமிழ் விக்கியின் எதிகால திட்டங்கள் எவை?
  • தமிழ் விக்கிபீடியா எப்படி பரிமானிக்கவேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

தமிழ் விக்கிபீடியாவின் எதிர்காலம் பற்றித் தீர்மானிப்பது இங்கே பங்களிப்பவர்கள் அனைவரதும் கூட்டு முயற்சிதான். தனிப்பட்ட எவரும் இதைத் தீர்மானிக்கமுடியாது. எனினும் இதன் ஆரோக்கியமான வளர்ச்சியில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு என்னும் வகையில் எப்படியான திட்டங்களைச் செயற்படுத்தினால் நல்லது என்பதில் எனக்கும் சில கருத்துக்கள் உண்டு.

தமிழ் விக்கிபீடியாவின் எதிர்காலத் திட்டங்கள் பற்றிச் சிந்திக்கும் போது தமிழ் சமுதாயத்தின் தனியான தேவைகள் பற்றியும் அவற்றை நிறைவேற்றுவதில் எமக்குள்ள வசதி வாய்ப்புகள், சாதக பாதக நிலைமைகள் என்பன பற்றியும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. முக்கியமாக நவீன அறிவுத்துறைகள் சம்பந்தப்பட்ட விடயங்களைத் தமிழில் கொண்டுவருவது தொடர்பாக இருக்கக் கூடிய பிரச்சினைகள் பற்றிய தெளிவான நோக்கு இருந்தால்தான் தமிழ் விக்கிபீடியாவைப் பயனுள்ள முறையில் வளர்த்தெடுக்க முடியும். ஆங்கிலம் போன்ற மொழிகளிலுள்ள விக்கிபீடியாக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளைவிடத் தமிழ் விக்கிபீடியாவின் பிரச்சினை வேறானது. ஆங்கிலம் ஒரு உலகத் தொடர்பு மொழி. உலகம் தழுவிய கல்விக்கான மொழியாகவும் அது உள்ளது. ஆங்கிலேயர் மட்டுமன்றிப் பல்வேறு நாட்டவரும் ஆங்கிலத்தைக் கல்வி மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆங்கிலத்தில் அறிவுத்துறைகளின் வளர்ச்சிக்கு உதவும் ஆங்கிலேயர் அல்லாதவர்கள் ஏராளம். இந்தியர்களே கோடிக்கணக்கில் உள்ளார்கள். இதன் காரணமாக ஆங்கிலத்தில் உயர் அறிவுத்துறைத் தகவல்களுக்கான தேவையும், அத் தகவல்களுக்கான வழங்கலும் மிக அதிகம்.

தமிழ்ச் சமுதாயத்தைப் பொறுத்தவரை உயர் அறிவுத் துறைகளுக்கான கல்விமொழியாகத் தமிழை நாங்கள் பயன்படுத்துவதில்லை. இந்தியா, இலங்கை முதலான ஆசிய நாடுகள் பலவற்றில் மக்கள், ஆங்கில மொழிமூலக் கல்வி மட்டுமே தங்களுடைய தகுதிகளை உயர்த்திக்கொள்ள அவசியம் என்பதில் உறுதியாக உள்ளார்கள். இவ்வாறு ஆங்கிலத்தில் கல்வி கற்கும்போது ஆங்கிலத்திலேயே சிந்திக்க முடியும். நானும் இதற்கு விதி விலக்கல்ல. சாதாரண அஞ்சல் தொடர்புகளிலேகூடத் தமிழைப் பயன்படுத்துவதில் நாங்கள் சிரமப்பட வேண்டியிருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் Split Personality உள்ளவர்களாகத்தான் இன்று உலவுகிறோம். கல்வி, அறிவியல் என்று வரும்போது ஆங்கிலேயராகவும், சமயம், கலை போன்ற விடயங்களுக்கு வரும்போது தமிழர்களாகவும் ஆகிவிடுகிறோம். இந்தநிலையில் தமிழில் உயர் அறிவுத் துறைகள் பற்றிய தகவல்கள் யாருக்குத் தேவை என்பது விடை காணப்படவேண்டிய ஒரு முக்கியமான கேள்வி. ஐன்ஸ்டீனின் சார்புத்தத்துவம் பற்றித் தமிழில் ஆழமாக எழுதப்படும் கட்டுரையொன்றை யார் வாசிப்பார்கள் என்று சிந்தித்ததுண்டா? நவீன அறிவுத்துறைகள் சம்பந்தமான ஆக்கங்களைத் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் வாசித்துப் புரிந்துகொள்ளக்கூடிய அளவோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமா? அல்லது சமயம், தமிழ், சினிமா போன்ற விடயங்களுக்குமேல் செல்லாமல் விட்டுவிடலாமா?

அவ்வளவு சுலபமாக விட்டுக் கொடுத்துவிட முடியாதென்பதே எனது கருத்து. இன்றைய நிலையை மாற்றித் தமிழை அனைத்து உயர் அறிவுத்துறைகளையும் தழுவிய மொழியாக வளர்த்து எடுக்கவேண்டும். இந்த நோக்கத்தை அடைவதற்கு முக்கியமாக நாங்கள் செய்யக்கூடியது நமது தாய்மொழி மீது நம்மவர்களுக்கே உள்ள நம்பிக்கையின்மையை இல்லாமலாக்க உதவுவதுதான். இதனால்தான் தமிழ் விக்கிபீடியாவை ஒரு சாதாரண கலைக்களஞ்சியமாக மட்டுமன்றித் தமிழ் மொழி மீதுள்ள நம்பிக்கையின் சின்னமாகவும் வளர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த இலக்கை அடைவதற்கு நீண்ட தூரம் செல்லவேண்டும். இதேபோன்ற சிந்தனைப் போக்குக் கொண்டவர்களுடன் கைகோர்த்துக் கொள்ளவேண்டும், இவ்வாறான இலக்குகளைக் கொண்ட திட்டங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும்.

தமிழில் உயர் அறிவுத்துறைகளைக் கொண்டுவருவதில் உள்ள முக்கிய இடர்ப்பாடுகளில் ஒன்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுக் கலைச் சொற்கள் இல்லாமையாகும். இந்தத் துறையிலே விக்சனரியுடன் இணைந்து விக்கிபீடியா பெரும் பணியாற்ற முடியும். இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் ஆரம்பத்தில் விக்சனரியில் கலைச்சொல் அகராதியைத் தொடங்கினேன். பலர் சேர்ந்தால் இதைச் சிறப்பாக வளர்த்து எடுக்க முடியும். ஒரு முழுமையான கலைச்சொல் அகராதி தமிழ் மொழியில் அறிவுத்துறை விடயங்களைக் கொண்டுவருவதில் முக்கியமான ஒரு தேவையாகும். இது விடயத்தில் இலங்கை, இந்தியக் கலைச் சொற்களிடையே காணப்படும் வேறுபாடுகளைக் களைந்து ஒரே கலைச்சொற் பயன்பாட்டைச் செயற்படுத்த உதவுவது அல்லது ஒவ்வொரு பகுதியினருடைய கலைச்சொற்களையும் மற்றவர்களும் புரிந்துகொள்ள உதவுதல் விக்கிபீடியாவின் எதிர்காலத் திட்டங்களுள் ஒன்றாக இருக்கலாம்.

உயர் கல்வித்துறை சம்பந்தப்படாத சாதாரண மக்களுக்கே தமிழ் விக்கிபீடியாவில் கூடுதல் ஆர்வம் இருக்கக்கூடும் என்பதனால் அவர்களுடைய தேவைகளுக்குப் பொருத்தமாக இலகுவாகப் புரிந்து கொள்ளத்தக்க வகையிலும், அதே நேரம் ஆய்வுத்தேவைகளுக்கு உதவக்கூடிய சிக்கலான விடயங்களை ஆழமான ஆய்வுகளுடன் அணுகும் வகையிலும் விடயங்களை வெவ்வேறு மட்டங்களில் முன்வைப்பதற்கு வழி காணப்பட வேண்டும்.

சாதாரண பொதுமக்களுக்கு ஆர்வம் தரக்கூடிய விடயங்களையும், நேரடியாகப் பயன்படக்கூடிய விடயங்களையும் தெரிவு செய்து அவற்றைக் கட்டுரைகளாக்க முயற்சி எடுக்கவேண்டும். கல்வி மற்றும் ஆய்வு முயற்சிகள் தவிர சாதாரண மக்கள் அறிய வேண்டிய ஏராளமான விடயங்கள் உள்ளன. அவற்றை அடையாளம் காணபதும் திட்டமிட்ட முறையில் அவற்றைக் கட்டுரைகள் ஆக்குவதும் உசிதமானவை. இதன்மூலம் வாசிப்பதற்காக விக்கிபீடியாவுக்கு வருவோரின் தொகையை அதிகரிக்க முயலலாம்.

விக்கிபீடியாவில் தமிழில் நேரடியாக உள்ளீடு செய்யக்கூடிய வசதிகளை ஏற்படுத்துவது பயனுள்ளது. பலர் விக்கிபீடியாவில் பங்களிப்புச் செய்வதற்குத் தமிழைக் கணனியில் பயன்படுத்துவதிலுள்ள இடர்பாடுகளும் ஒரு காரணம். விக்கிபீடியாவின் ஏனைய மொழிப் பிரிவுகளிலுள்ளோரின் நிபுணத்துவத்தை இதற்குப் பயன்படுத்திக்கொள்ள முயலலாம். தவிர ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயப்புச் செய்வதை இலகுவாக்க மென்பொருள்களைப் பயன்படுத்துவது விடயத்திலும் நடவடிக்கைகள் எடுக்கமுயலலாம்.

சிறந்த கட்டுரைகளை எழுதக்கூடிய பலருக்குக் கண்னி வசதிகள் இல்லாமல் இருக்கக்கூடும் அல்லது தமிழில் உள்ளீடு செய்ய முடியாமல் இருக்கலாம் அப்படிப்பட்டவர்களிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று வசதிகள் உள்ளவர்கள் மூலம் உள்ளீடு செய்யக்கூடிய நிரந்தர ஒழுங்கொன்றைத் தமிழ் விக்கிபீடியாவில் அறிமுகப்படுத்தலாம்.

தமிழ் விக்கிபீடியாவுக்குப் பங்களிப்புச் செய்பவர்கள் மேலும் பயனுள்ளமுறையில் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். அதற்கான வழிமுறைகள் பற்றியும் கவனம் செலுத்தவேண்டும். வசதியுள்ளவர்கள் நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடுவதை ஊக்குவிக்க ஆண்டுக்கு ஒருமுறையாவது ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். விக்கிபீடியாவுக்கு வெளியே உள்ளவர்களில் சிலரையும் அழைத்து அவர்களுடைய கருத்துக்களையும் அறிந்துகொள்ளலாம். இதன்மூலம் பல்வேறு துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்களையும், சாதாரண மக்களையும் விக்கிபீடியா பக்கம் கவர முடியும்.

மேலே குறிப்பிட்டவை அவ்வப்போது எனது சிந்தனையோட்டத்தில் வெளிப்பட்ட விடயங்களே. இது ஒரு முழுமையான திட்டம் அல்ல. ஆனால் இங்கே குறிப்பிடப்பட்ட அம்சங்கள் அப்படியான ஒரு திட்டத்தின் பகுதியாக விளங்கக்கூடியவை என்பது எனது கருத்து.

மயூரநாதன் அவர்களின் இவ் விடயங்கள் நோக்கிய சற்று முன்னைய பார்வையும் இங்கு பொருந்தும் என்பதால் அதையும் மேலே இட்டுள்ளேன். - --Natkeeran 13:31, 15 டிசம்பர் 2005 (UTC)


நற்கீரன்: தமிழ் விக்கிபீடியா - என் ஈடுபாடு, கேள்விகள், பரிந்துரைகள்

தொகு

அண்மைக் காலமாக விக்கிபீடியா சார்ந்து எனக்கு தோன்றிய சில கருத்துக்களை இங்கு பதிகின்றேன். இவை அனைத்தும் இங்கு பொருந்துமா என்பது எனக்கு தெரியவில்லை.

தமிழ் விக்கிபீடியாவில் என் ஈடுபாடு

தொகு

ஈழத்தில் ஆரம்ப கல்வியை தனி தமிழில் கற்றதால், எல்லாம் தமிழில் இருக்கும் என்றே கருதி வந்தேன். தீடீர் புலம் பெயர்வு, பின்னர் தனி ஆங்கில கல்வி. தமிழில் வெளிப்படுதலில் இருக்கும் சிக்கல் புரிய ஆரம்பித்தது. நுட்பிய உலகில் தமிழின் எல்லைகள் மிகவும் அருகாமையில் இருப்பதை உணரக்கூடியதாக இருந்தது. ஆயிரக் கணக்கில் பழம்தமிழில் பாட்டுக்கள் புனைந்து வைத்திருந்தாலும், தற்கால தேவைகளுக்கு தமிழ் அன்னியப்பட்டு நிற்பதாகவே தென்பட்டது. என் சிந்தனைகளை எனது மொழியில் வெளிப்படுத்த முடியாமல் இருந்தது கவலை தந்தது. அச் சமயத்தில்தான் இணையம், வலைப்பதிவுகள் சற்று உற்சாகம் தந்தன. வலைப்பதிவுகள் தனிமனித வெளிப்பாட்டுக்கு நல்ல தளம். ஆனால், ஒரு குறிக்கோளுடன், அதாவது "அனைத்த அறிவும் தமிழில்" என்ற குறிக்கோளுக்கு தமிழ் விக்கிபீடியா நல்ல ஆயுதமாக வாய்த்தது. இக் குறிக்கோளை நான் தனியே சொல்லியிருந்தால் பைத்தியகாரன் என்று சொல்லியிருப்பார்கள், ஆனால் நீங்களும் சேர்ந்திருப்பதால், சற்று நிம்மதியே. தமிழ், குறிக்கோள் உள்ள செயல்பாடுகள், தமிழ் விக்கிபீடியா சமூக உணர்வு இவைதான் எனது ஈடுபாட்டுக்கு காரணம் எனலாம். திறந்த கட்டமைப்பு, கட்டாயங்கள் இல்லாத போக்கு, சுதந்திர மனப்பான்மை, நடுவண் இல்லாத நடுநிலமை போன்ற பண்புகளும் என்னை கவர்ந்தன.


நான் தமிழ் விக்கிபீடியாவை அதன் ஆரம்பத்தில் இருந்து தெரிந்து வைத்திருந்தாலும், அது ஆங்கில விக்கிபீடியாவின் ஒரு அம்சம்தான் என்பது அதை பற்றி சற்று வேறுணர்வு தோற்றுவித்தது. இதைப்பற்றி மயூரநாதனுடன் ஆரம்பத்தில் உரையாடியாதகவும் நினைவு. பின்னர் தமிழில் தனியாக இப்படி ஒன்றை எப்படி ஆரம்பிக்கலாம் என்று சற்று சிந்தித்ததின் விளைவு, அதற்க்கு தேவைப்படும் தொழில் நுட்ப தேவைகளை எனக்கு உணர்த்தியது. அச் சமயத்தில் ஆங்கில விக்கிபீடியாவின் வெற்றியும் பலராலும் நன்கு உணரப்பட்டது. சிறு காலத்தின் பின் (யூன் 2005) தமிழ் விக்கிபீடியாவை நோக்கிய போது தமிழ் விக்கிபீடியாவும் சிறப்பாக வளர்ந்து நின்றது. எனது கேள்விகளையும், சந்தேகங்களையும் வலைப்பதிவு ஒன்றிற்க்காக மயூரநாதனுக்கு எழுதி அனுப்பினேன். அவரும் பொறுமையாக விரிந்த பதிலை அனுப்பினார். மேலும், ரவி விபரங்களையும் உதவிகளையும் நல்கி உற்சாகம் அளித்தார். சுந்தர் மற்றும் பிற பயனர்கள் எனது கேள்விகளுக்கு விளக்கம் தந்து, மற்றும் எனது எழுத்தை திருத்தி உற்சாகம் தந்தனர். இவற்றின் விளைவுதான் எனது தொடர் தமிழ் விக்கிபீடியா ஈடுபாடு.

எந்த துறையிலும் முன்னோடி சிந்தனையாளர்களை சமூகம் சிறிது காலம் தள்ளித் தான் புரிந்து கொள்ளும். தற்பொழுது இங்கு பங்களிப்பவர்கள் அனைவரும் தம் துறை சார் ஆர்வம் தாண்டி விக்கிபீடியாவின் தொலைவீச்சு குறித்த தெளிவுடன் சிந்திக்க வல்லவர்களாய் இருப்பது ஒரு விதத்தில் கொடுப்பினை தான். நிச்சயம் அறிவத் தாகம் உடைய தமிழர்களை தமிழால் இணைக்கும் தளமாக விரைவில் தமிழ் விக்கிபீடியா வளரும் என்று நம்புகிறேன். இதில் உறுதியும் தெளிவும் அதை அடவைதற்குரிய நிதானமும் பொறுமையும் மட்டுமே தற்பொழுதைய தேவை. கூடிய விரைவில் விக்கிபீடியா பயனர்கள், பங்களிப்பாளர்கள் exponential விகிதத்தில் பெருகும் போது இம்மாற்றத்தை காணலாம்--ரவி 15:47, 17 டிசம்பர் 2005 (UTC)

தமிழ் விக்கிபீடியாவின் கடந்த காலம்

தொகு

கடந்த வருடங்களில், குறிப்பாக 2005 இல் தமிழ் விக்கிபீடியாவின் அடிப்படை கட்டமைப்புகள் நன்றாக கட்டமைகப்பட்டதாகி விட்டது என்றே நினைக்கின்றேன். அவற்றின் விபரம் பின்வருமாறு.

நுட்ப கட்டமைப்பு

தொகு

விக்கி மென்பொருள் மற்றும் தொழில் நுட்பம். இது ஆங்கில விக்கிபீடியாவை சார்ந்து உள்ளது. ஆனால், எமக்கு ஏற்ற மாதிரி தேவையான மாற்றங்கள் மற்றும் செயலிகள் செய்ய முடியும். பொதுவாக, நுட்ப கட்டமைப்பு தமிழ் விக்கிபீடியாவின் தேவைகளை நிவர்த்தி செய்கின்றது எனலாம். ஆங்கில விக்கிபீடியா நுட்ப உருவாக்கம், வன்பொருள் செலவு, மென்பொருள் பராமரிப்பு ஆகியவற்றில் இருந்து எம்மை விடுவித்து, ஆக்க உருவாக்கங்களில் கவனம் செலுத்து உதவுகின்றது. தமிழ் விக்கிபீடியா தமிழ் கணிமையின் ஒரு முக்கிய முனை இல்லை. இதுவரை இடைமுக மொழிபெயர்ப்பே நிகழ்ந்தது. (இடைமுக மொழிபெயர்ப்பே தமிழ் கணிமையின் எல்லையாக சில காலங்களுக்கு முன்பு இருந்தது, ஆனால், தற்சமயம் இயற்கை மொழி கணினியியலே தமிழ் கணிமையின் முக்கிய முனை.) எனினும், தமிழ் விக்கிபீடியாவின் அனுபவம், தேவைகள் தமிழ் கணிமைக்கு உதவி அல்லது வேண்டி நிற்கலாம்.

தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்/நிர்வாக தத்துவம்

தொகு

யாரும் மாற்றங்கள் மேற்கொள்ளலாம், நடுநிலமை , கட்டற்ற படைப்புகள் போன்ற கொள்கைகள் விக்கிபீடியா செயல்பாட்டுக்கு முக்கியம். இக் கொள்கைகள்/வழிமுறைகள் பற்றிய தெளிவு தமிழ் விக்கிபீடியாவின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு முக்கிய அம்சம் எனலாம்.

குமுகாய கட்டமைப்பு/ஆரோக்கிய பயனர் சூழல்

தொகு
  • இயன்றவரை ஜனநாயக் பண்புகளை பேணுவது.
  • புதுபயனர்களை வரவேற்று, உள்வாங்கி, ஒத்தாசை செய்வது.

ஆக்க உருவாக்க உதவி கட்டமைப்புகள்

தொகு
  • உதவி, கையேடுகள்
  • ஒத்தாசை பக்க உதவிகள்
  • வடிவமைப்பு உதவிகள்

தமிழ் விக்கிபீடியாவை நோக்கி சில கேள்விகள்

தொகு
  • இயன்றவரை பயனர்களை உள்வாங்குவது, தமிழ் விக்கிபீடியாவை பலரும் அறிய செய்வது தமிழ் விக்கிபீடியாவின் தற்போதைய ஒரு முக்கிய குறிக்கோளா?
நிச்சயமாக. தற்பொழுதைய உடனடித் தேவை தமிழ் விக்கிபீடியாவை பலரும் அறியச்செய்வது, அதன் மூலம் பங்களிப்புகளை அதிகரிப்பது. இம்மாதிரி திட்டங்களுக்கு பங்களிக்கும் ஆர்வம் உடைய பலர் விக்கிபீடியாவை பற்றி அறியாமல் இருப்பது விக்கிபீடியாவின் வளர்ச்சியை மெதுவாக்கும் மிகப்பெரிய குறை--ரவி 15:57, 17 டிசம்பர் 2005 (UTC)
  • ஒரு விடயத்தை நோக்கி ஆழமாக சிந்தித்து, ஆய்ந்து, ஒன்றுக்கு பல முறை வசனங்களை சீரமைத்து, பந்திகளாக கோத்து கட்டுரை எழுதுவதை விட்டுவிட்டு, எமக்கு அரை குறையாக தெரிந்த விடயங்களை பற்றி கூட அலட்சியமாக எதையோ எழுதி பதிந்து விட்டு செல்ல தமிழ் விக்கிபீடியா உந்துகின்றதா?
எந்த அளவில் இருந்தாலும், எவ்வளவு நேர்த்தி குறைந்ததுமாக இருந்தாலும் பங்களிப்புகளை வரவேற்றாக வேண்டும். விக்கி conceptன் அடிப்படை விளைவு இது. இதை தவிர்க்க இயலாது. தவிர்க்கவும் கூடாது. தொடக்கத்தில் இவ்வாறு வரும் பயனர்கள் பிறர் கட்டுரை எழுதும் நற்பாணியை பின்பற்றி விரைவில் அதை பின்பற்றுவர் என்பது தான் என் நம்பிக்கையும். அந்த முனைப்பு இல்லாதவர்கள் விரைவிலேயே இத்தளத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். அவர்கள் விட்டுச் சென்றதை செம்மைப்படுத்துவது நிர்வாகிகளுக்கு கொஞ்சம் கூடுதல் வேலை தான். எனினும், தற்பொழுதுள்ள வளர்ச்சிக் கட்டத்தில் யாரையும் discourage செய்யக் கூடாது என்று கருதுகிறேன்--ரவி 15:57, 17 டிசம்பர் 2005 (UTC)
  • சில முக்கிய தலைப்பில் உள்ள கட்டுரைகள் தரத்தில் படு மந்தம். அவற்றை மேன்படுத்துவதை விட்டு விட்டு, முற்றிலும் மாற்றி எழுதுவதே இலகு. ஆனால், அக்கட்டுரையை ஆரம்பத்தில் இட்டவர்களை நோகவைக்க கூடாது என்பதற்காக அவ்வாறு செய்வதில் சங்கடம். இவ் சந்தர்ப்பங்களில் என்ன செய்வது?
நிச்சயம் முற்றிலும் மாற்றி எழுதலாம். இதில் யாரையும் மனம் நோகடிப்பது என்பதே கிடையாது. விக்கியில் செய்யப்படும் அனைத்துப் பங்களிப்புகளும் நல்லெண்ணத்தில் அடிப்படையில் செய்யபடுவதே. பக்கங்களை முற்றிலும் மாற்றுவதற்கு முன்பு பேச்சுப் பக்கங்களில் ஓர் அறிவிப்பு வெளியிட்டு ஒரு வாரம் கழித்து மாற்றங்களை செயல்படுத்துங்கள்--ரவி 15:57, 17 டிசம்பர் 2005 (UTC)

தமிழ் விக்கிபீடியாவின் எதிர் காலம்

தொகு

தொலைநோக்கு பார்வை

தொகு

தமிழ் விக்கிபீடியாவை ஒரு தொலை நோக்கு திட்டமாக நோக்குதல் அவசியம். குறுகிய பார்வையில் நோக்கினால், அதன் முழு வீச்சையும், பயனையும் நாம் பெறமுடியாமல் போகலாம். பொறுமையும், நீண்ட கால ஈடுபாடும் இதற்கு நிச்சியம் தேவைப்படும். எதிர் காலத்தில் தமிழகத்திலும், ஈழத்திலும் அனைவருக்கும் கணினிகள் வசதி அமையும் என்று கணித்து, அவர்களின் பரந்த பங்களிப்பை உள்வாங்க தக்கவாறு அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்துவது அவசியம். தற்சமயம், இப்பேச்சு சற்று அதிக பிரசங்கிதனமாகவோ, அல்லது தேவையற்ற முக்கியதுவத்தையோ இத்திட்டத்துக்கு தருவதாக தென்பட்டாலும், உண்மையில் தமிழ் விக்கிபீடியாவிற்க்கு அப்படிப்பட்ட ஒரு சாத்தியம் இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

நிச்சயம் அதிகப் பிரசங்கித்தனம் கிடையாது. நம் அனைவரின் நோக்கமும் கனவும் அது தான். தற்பொழுது உள்ள தமிழ்த் தளங்களில் விக்கிபீடியாவுக்கு மட்டும் தான் அந்த சாத்தியம் இருக்கிறது. ஆங்கில விக்கிபீடியின் வெற்றி நமக்கு ஒரு முன்மாதிரி ஆகும்.--ரவி 16:16, 17 டிசம்பர் 2005 (UTC)

ஆக்க உருவாக்க வளர்ச்சி

தொகு

தமிழ் விக்கிபீடியாவை ஒரு அறிவு பரிமாற்ற கருவியாக கருதல் வேண்டும். அதாவது, ஆங்கில மற்றும் பிற மொழிகளில் உள்ள தகவல்களை புரிந்து, மொழிபெயர்த்து ஒரு நிலையான, கட்டற்ற நிலையில் தருவதற்க்கு தமிழ் விக்கிபீடியா ஒரு கருவி. எந்த ஒரு விடயமும் தமிழில் என்ற சாத்தியகூறு நிறுவப்பட தமிழ் விக்கிபீடியா உதவ வேண்டும்.(அதன் பின்னர் மிதிவண்டியின் பாகங்களை யாரும் தமிழில் கேட்டால், தமிழ் விக்கிபீடியாவில் போய் பாருங்கள் என்று சொல்ல வேண்டும்.)

தொடக்க கால மொழிமாற்றங்கள் தமிழில் கலைச்சொல் உருவாக்கத்திற்கும், அடுத்தக்கட்டத்தில் தமிழ் வழி சிந்தனைக்கும் எண்ணப்பரிமாற்றத்திற்கும் வழிவகுக்க வேண்டும்.--ரவி 16:16, 17 டிசம்பர் 2005 (UTC)

துறைசார் பின்புல உருவாக்கம்

தொகு

எந்த ஒரு விடயமும் ஒரு பின்புலத்தில்தான் புரிந்து கொள்ள முடியும். பல அறிவர்கள் தமிழில் தகவல்களை பரிமாற தயங்குவதற்கு காரணம், தமிழ் சூழலில் துறைசார் பின்புலம் இல்லை என்பதுதான். அப்படி இருந்தாலும், அவை பாடதிட்டங்களிலும் அரும் நூற்களில் சிக்கி கிடக்கின்றன. கணிதத்தில், நுட்பியலில், அறிவியலில், சமூக விஞ்ஞானத்தில் ஒரு பரந்த துறைசார் பின்புலம் உருவாக தமிழ் விக்கிபீடியா கருவியாக செயலபடமுடியும். குறிப்பாக, உள்ளக இணைப்புகள், வெளி இணைப்புகள் மற்றும் பிற விக்கி தொடர்புகள் இவ்பின்புல உருவாக்கத்துக்கு மிகவும் உதவும். கலைச் சொற்கள் தற்போது பரவலாக கிடைக்கின்றன, அதை பயன்படுத்தி பின்புல உருவாக்கத்தை முன்னெடுப்பதே தற்போதைய செயல் தேவையாகும்.

//பின்புல உருவாக்கத்தை முன்னெடுப்பதே தற்போதைய செயல் தேவையாகும்//. நிச்சயமாக--ரவி 16:16, 17 டிசம்பர் 2005 (UTC)

தமிழ் அறிவின் காப்பு

தொகு

தமிழ், தமிழ் இலக்கணம், தமிழர், தமிழ் கலைகள், தமிழ்ர் பண்பாடு என தமிழ் சார் அறிவு ஒரு சேர குவியப்பட தமிழ் விக்கிபீடியா உதவ வேண்டும்.

ஆம்--ரவி 16:16, 17 டிசம்பர் 2005 (UTC)

தமிழ் விக்கிபீடியா உலக தமிழர் அறிவின் ஒரு இணைப்பு பாலம்

தொகு

உலகின் பல நாடுகளிலும் சிதறி வாழும் தமிழர்களை இணைக்கு ஒரே பாலம் தமிழ்தான். அத்தமிழ் கொண்டு தமிழ் விக்கிபீடியா ஒரு அறிவு பரிமாற்றத்துக்கு பாலமாக செயல்பட முடியும். பிற இந்திய மொழிகளை விடவும் தமிழ் பரந்து வேரூன்றி நிற்கின்றது. அது தமிழின் பலம். பல நாடுகளில் உள்ளவர்கள் அவ் நாடுகளை பற்றியும், சூழல்களை பற்றியும், செய்திகளையும், பிற தகவல்களையும் பகிர தமிழ் விக்கிபீடியா ஒரு சிறந்த தளம்.

ஆம். இத்தனை இலங்கைத் தமிழர்களையும் பிற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களையும் இணையம் மூலம் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது தமிழ் விக்கிபீடியாவினால் தான். -- Sundar \பேச்சு 05:53, 20 டிசம்பர் 2005 (UTC)

தமிழ் விக்கிபீடியாவும் ஆங்கில விக்கிபீடியாவும்

தொகு

தமிழ் விக்கிபீடியா ஆங்கில விக்கிப்பீடியாவை அனுசரித்து, அதன் சிறப்பான அம்சங்களை ஏற்று செயல்படுத்த வேண்டும். அதேவேளை, தமிழ் விக்கிபீடியாவின் தனித்துவத்தை, தமிழ் சூழலின் வேறுபாடுகளை உணர்ந்து செயல்படுதல் வேண்டும். உதாரணமாக, ஆங்கில விக்கிபீடியாவில் ஒரு விடயத்தை பற்றி எழுதும் பொழுது அதற்குரிய சொற்கள் பற்றிய ஆராச்சி செய்வது அவசியமற்றது. ஆனால், தமிழில் பல கட்டுரைகளுக்கு சொற்கள் தெரிவு ஒரு முக்கிய அம்சம் ஆகின்றது. ஆங்கிலத்தில பல விடயங்களுக்கு பல பிற துணை படைப்புக்கள் கிடைக்கும், ஆனால் தமிழில் பல துறைகளுக்கு அப்படி இலகுவில் கிடைக்காது. ஆங்கிலத்தில் ஒரு கருத்தின் பின்புலத்தை எடுத்துயம்ப வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தமிழில் பல துறைகளுக்கு பின் புலத்தையே விக்கிபீடியாவில் இட்டுத்தான் சிக்கலான விடயங்களை இயம்ப வேண்டும்.

எனினும் விளக்கங்கள் அளவில் நீளாமல் பார்த்துக் கொள்வது கலைக்களஞ்சிய நடையை காக்க அவசியமாகிறது. தெளிவான பாடப்புத்தக நடையுடைய கட்டுரைகளை விக்கி நூல்கள் தமிழ்த் தளத்தில் சேர்க்கலாம்--ரவி 16:16, 17 டிசம்பர் 2005 (UTC)

தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் நோக்கி சில குறிப்புகள்

தொகு
  • இயன்றவரை அனைத்து கட்டுரைகளுக்கும் துணை நூல்கள், மற்றும் ஆதாரங்கள் தருவதை முன்நிறுத்த வேண்டும்.
  • தமிழில் உள்ள கட்டுரை விடயத்தை நோக்கிய பிற தரமான வெளி இணைப்புகளை இணைப்பதை வழக்கத்தில் கொண்டு வரவேண்டும்.
  • ஒவ்வொரு கட்டுரைக்கும் இடை விக்கி இணைப்புக்களை தருவதை வழக்கத்தில் கொண்டு வருதல் வேண்டும்.
  • இயன்ற வரை ஒரு கட்டுரைக்கு ஒரு படம் ஆவது இணைத்தல் நன்று.
இது கட்டயாத் தேவை ஆக்க அவசியமில்லை. பொருத்தமான இடங்களில் மட்டும் இணைத்தல் நன்று--ரவி 16:16, 17 டிசம்பர் 2005 (UTC)
  • கட்டுரைக்கு ஏற்றவாறு அட்டவணை, பட்டியல்கள், காலக் கோடு போன்ற அம்சம்களை இணைத்து கட்டுரையை செழுமையாக்குவதை வரவேற்றல் வேண்டும். இயன்றவரை தகவல் செறிவாக கட்டுரை அமைதல் நன்று.
  • ஒரு கட்டுரை பூர்த்தி என்று பிரதான ஆக்கர் அல்லது ஆக்கர்கள் கருதும் இடத்து, அக் கட்டுரையை விமர்சனத்துக்கு விடுதல் நன்று. விமர்சனத்தின் போது பிற பயனர்கள் சற்று கடுமையாக பகுத்தாய்து அலோசனை வழங்குதல் நன்று. நடுநிலமை, மொழியாக்கம் (இலக்கணம் உட்பட), தகவல் செறிவு, வடிவமைப்பு, அதாரங்கள் போன்ற அம்சங்களை வைத்து விமர்சனம் மேற்கொள்ளலாம். இப்படிப்பட்ட விமர்சனங்கள் கட்டுரை எழுதப்படும் போதும் தரப்பட்டாலும், சில முக்கிய கட்டுரைகளை இப்படியான ஒரு செயல்பாட்டுக்கு உட்படுத்துவது அவற்றின் தரத்தையும், நம்பிக்கையையும் உறிதிப்படுத்தும்.
இத்தேவையை தற்பொழுது உள்ள சிறப்புக்கட்டுரை நியமன நடைமுறைகள் உறுதி செய்கின்றன.--ரவி 16:16, 17 டிசம்பர் 2005 (UTC)
ஆம். சிறப்புக் கட்டுரைகள் நியமனத்தில் நாம் கூடுதல் ஆர்வம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆங்கில விக்கியில் இந்தியக் கூட்டுமுயற்சிக் கட்டுரை ஒன்றை ஒவ்வொரு வாரமும் தெரிவு செய்து அதைச் சிறப்புக் கட்டுரையாக்க முயல்கின்றனர். நாம், ஏற்கெனவே நல்ல நிலையில் உள்ள பல கட்டுரைகள் மீது சிறிது அக்கறை செலுத்தினால் அவற்றை சிறப்புக் கட்டுரைகளாக்கலாம். -- Sundar \பேச்சு 06:19, 20 டிசம்பர் 2005 (UTC)

கட்டுரை தலைப்புகள்

தொகு
  • நோய்கள்
  • இயல்கள்
  • இசம்கள்
  • மனிதர்கள்
  • தமிழர் சார்

விக்கிநடை கையேடு விரிவாக்கம்

தொகு

தமிழ் விக்கிநடை கையேட்டின் விளக்கங்கள் விரிவாக்கப்பட்டு மேன்படுத்தல் அவசியம்.

வகைப்படுத்தல் கையேடு

தொகு

வகைப்படுத்தல் அறிதலின் அடிப்படை செயல்பாடுகளில் ஒன்று. தமிழ் விக்கிபீடியாவில் வகைப்படுத்தல் தொடர் கலந்துரைடால்களுக்கு உட்பட்டு நிற்பது நன்று. வகைப்படுத்தல் தொடர்பார்க எமது புரிதலை மேலும் விரிவாக்க வேண்டும். இதற்கு துறைசார் நூலகவியலாளர்கள் உதவி நல்கினால் நன்று. மேலும், வகைப்படுத்தல் தொடர்பார்க ஒரு கையேடு உருவாதலும் தேவை.

முற்றிலும் சரி. விக்கிபீடியா:கட்டுரை வகைப்படுத்தல் கையேடு உருவாக்கப்பட வேண்டும். -- Sundar \பேச்சு 05:56, 20 டிசம்பர் 2005 (UTC)

எனது அனுபவங்களை பகிர்ந்து இதற்கான தேவையை முன்வைப்பதே இப்பிரிவின் நோக்கம்.

தமிழ் நடை (விக்கி நடை கையேடு இதற்கு உதவும்)
தமிழ் விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்த பொழுது நான் தன்னிலையிலோ, முன்னிலையிலோ எழுதியது உண்டு. இன்று இயன்றவரை விடயநோக்க நடையிலேயே (Objective Style) எழுத முனைகின்றேன். எனினும், எக்கட்டுரைக்கும் ஒரு பார்வை இருக்கத்தான் செய்யும், அது தவிர்க்க முடியாதது, ஆனால் அதை அறிந்து பிற பார்வைகளுக்கும் தகுந்த அலசல் குடுத்து எழுத முனைகின்றேன். மேலும், தனிப்பட்ட ரீதியில் உணர்ச்சிபூர்வமான தலைப்புகளை தவிர்த்து வருகின்றேன். (வேண்டுமானால், வலைப்பதிவுகள் அவைக்கு களமாக அமையலாம்.)

சமஸ்கிரதம்
எனது எழுத்தில் பல சமஸ்கிர சொற்கள் இருப்பதை இப்பொழுது நன்கு உணரகூடியதாக உள்ளது. ஆனால், அதைப்பற்றி அதிகம் அலட்டி கொள்வது இல்லை. நல்ல தமிழ் சொற்கள் அல்லது பொது தமிழ் சொற்கள் பரிந்துரை இல்லாத இடத்து பரிச்சியமான சமஸ்கிரத சொற்கள் பயன்படுத்துவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. சமஸ்கிரதத்தால் தமிழுக்கு ஆபத்து என்பது நேற்றைய சண்டை, அதை மேற்கொள்ளுவதில் எனக்கு எந்த ஈடுபாடும் இல்லை.

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கலாம்.

கிரந்த எழுத்துக்கள்
கிரந்த எழுத்துக்கள் இன்னும் சற்று வேற்றுணர்வை தூண்டினாலும், அவற்றை முற்றிலும் ஏற்பதா, தவிற்பதா என்று புரியவில்லை. சனநாயகத்தை விட ஜனநாயகம் பொருத்தமாக படுகின்றது, பரிச்சியம் காரணமாக. தனிப்பட்ட ரீதியில் உச்சரிப்புக்கு தேவைப்பட்டல் பயன்படுத்துகின்றேன், அப்படித்தான் அவை பயன்படுதபடுவதற்காக சேர்த்து கொள்ளப்பட்டன என்று எண்ணுகின்றேன்.

இலக்கணம்
தமிழ் இலக்கணம் பல இடங்களில் சறுக்குகின்றது. பிற பயனர்கள் இதை தொடர்ந்து சுட்டுவதால், முன்னேற்றம் அடைகின்றேன் எனலாம். சந்தி பிரச்சினைகள்(!) (உ+ம்: இவ் வழக்கம் -> இவ்வழக்கம்), வெளி இணைப்புக்கள் எதிர் வெளி இணைப்புகள் போன்ற இணைப்பு பிரச்சினைகள் போன்ற பல பிரச்சினகள் இருக்கின்றன. பிற பயனர்கள் திருத்தும் போது, குறித்து கொள்கின்றேன். மேலும், இலக்கண குறிப்புக்களை படிப்பதாக எண்ணம்.

சொற் தேர்வு - பொது சொற்கள்
பரவலாக பயன்படுத்தப்படும் பல பொது சொற்களை கூட நான் அறிய வாய்புகள் குறைவாகவே உள்ளன, எனவே எனக்கு எது சரியென்று தெரிகின்றதோ, அதை பயன்படுத்துகின்றேன். பிற பயனர்கள் சுட்டும் பொழுது மாற்றி கொள்கின்றேன்.

இயன்ற வரை தமிழ் - அளவுச் சொற்கள்
தற்சமயம் விக்கிபீடியாவில் மில்லி, மைக்ரோ போன்ற சொற்களே பயன்படுத்துகின்றோம். இராம்.கி அவர்களின் பரிந்துரைகள் மிகவும் பொருத்தம் என்பது என் கருத்து. அவற்றை கோர்க்க முனைகின்றேன். அவற்றை இனி பயன்படுத்துவது நோக்கி கலந்துரையாட உத்தேசம். அளவுகளை அவதானமாக வேறுப்படுத்தி காட்ட வேண்டும் என்ற இராம்.கி அவர்களின் கருத்தையும் நான் பின்மொழிகின்றேன்.

இராம்.கி அவர்களின் பரிந்துரைகளுக்கு இணைப்பு தர இயலுமா?--ரவி 09:04, 20 டிசம்பர் 2005 (UTC)
இராம.கி அவர்களின் வலைப்பதிவு முகவரி [1]. -- சிவகுமார் 10:48, 20 டிசம்பர் 2005 (UTC)

தமிழ் - உச்சரிப்பு வேறுபாடுகள்
ரொறன்ரோ, றொரன்ரோ ... என உச்சரிப்புகள் வேறுபடும். சீநிவாசன் கூறியபடி, யார் முதலில் பதிகின்றார்களோ அச்சொல்லை பிறரும் பாவித்தல் பொருத்தம் என்று நானும் கருதிகின்றேன். இவ்வழக்கம் எல்லா சொற்கள் பற்றியும் உரையாடிகொடிருப்பதை தவிர்க்கும். குறிப்பாக இடங்கள் பற்றிய சொற் தெரிவுகள். முக்கிய சொற்களுக்கு மட்டும் கலைந்துரையாடி, வாக்கெடுக்கலாம்.

இப்படி பல விடயங்களை தமிழ் கையேட்டில் கலந்துரையாடி சில பரிந்துரைகள் செய்யலாம். அப்படி ஒரு கையேடு ஏற்கனவே உள்ளதா?

இவ் விடயங்களை விக்கி நடை கையேட்டுடனும் இணைத்து கொள்ளலாம்.

சிறப்பு கட்டுரை வடிவமைப்பு தொடர்பாக ஒரு கையேடு இருந்தால் நன்று.

தொகு
  • பந்திகளுக்கு இடையே எத்தனை வரிகள் விடுவது?
  • புள்ளிகளை இடம் விட்டு நட்சத்திரம் போட்டுதல் நன்றா அல்லது நட்சத்திரமே தேவையில்லையா?
  • துணை நூலகள் என்று கூறுவதா அல்லது உசாத்துணைகள் நன்றா?
  • வெளி இணைப்புகள் நன்றா அல்லது வெளியிணைப்புகள் நன்றா?
இவை குறித்து விரைவில் நடைக்கையேடு உரையாடல் பக்கங்களில் முடிவு செய்யலாம்.--ரவி 16:16, 17 டிசம்பர் 2005 (UTC)

தமிழ் விக்கிபீடியாவை பிறர் அறிய செய்ய சில பரிந்துரைகள்

தொகு
தமிழ் விக்கிபீடியா அறிமுக கட்டுரை
தொகு

தமிழ் விக்கிபீடியாவை பற்றி ஒரு தரமான விபரமான அறிமுக கட்டுரை ஒன்றை கூட்டாக, சீராக எழுதி திட்ட பக்கம் ஒன்றில் இட்டு வைத்து சஞ்சிககைகள் அவற்றை பிரசுரிக்க ஊக்கப்படுத்தலாம். இங்கு சிறு பத்திரிகைகளுக்கு இப்படியான கட்டுரைகளை அனுப்பி வைத்தால் நிச்சியம் பதிப்பித்து உதவுவார்கள்.

தமிழ் விக்கிபீடியா என்று ஒரு கட்டுரையை கட்டுரை பெயர்வெளியிலேயே ஆரம்பிக்கலாம். நீங்கள் குறிப்பிட்டுள்ளது முக்கியமான தேவை தான்--ரவி 16:16, 17 டிசம்பர் 2005 (UTC)
தமிழ் விக்கிபீடியா அறிமுக பிரசுரம்
தொகு

சுருக்கமான வெளிப்படுதலுடன் ஒன்று இருக்கின்றது. அது இங்கே.

தமிழ் விக்கிபீடியா கூட்டு வலைப்பதிவு
தொகு

அறிவுறுத்தல்கள் (இவ் வார கட்டுரை), த.வி. சுட்டிகள் தொகுப்பு, விக்கிபீடியா திட்ட தகவல்கள் போன்ற தகவல்களை பகிர வலைப்பதிவு உதவ கூடும். த.வி. பயனர்கள் பலர் வலைப்பதிபவர்களாக இருப்பதாலும், புது பயனர்களுக்கு த.வி. அறிமுகம் செய்ய ஒரு உத்தியாகவும் இப் பதிவை மேற்கொள்ளலாம். கூட்டாக எழுதினால் சோர விடாமல் எழுதலாம்.

இந்த யோசனை எப்படி செயல்படுத்துவது என்று விரிவாக உரையாடலாம். எனினும் இது தற்பொழுது எந்த அளவு பயன் தரும் எனத் தெரியவில்லை. பங்களிப்பாளர்களும் கடுமையான நேரமின்மைக்கு இடையில் இங்கு வருகிறார்கள். ஒரு காலாண்டு அறிக்கை போல் ஒன்றை தயார் செய்து வலைப்பதிவுகளில் போடலாம். அதில் அக்காலக் கட்டத்தில் உருவான நல்ல கட்டுரைகளுக்கு இணைப்பு கொடுக்கலாம். முனைப்புடன் செயல்படும் விக்கிபீடியர்களை புகைப்படத்துடன் அறிமுகப்படுத்தலாம்.--ரவி 16:16, 17 டிசம்பர் 2005 (UTC)

தொழில் நுட்ப முன்னேற்றங்கள்

தொகு
  • யுனிக்கோட் எழுத்து பிரித்தெழுதல் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் நன்று. அதுதான், தற்போதைக்கு பெரிய இம்சையாக தெரிகின்றது.
  • சுரதா போன்ற எழுத்து செயலிகளை இணைக்க முடியாது என்று நினைக்கின்றேன், காரணம் விக்கிபீடியா ஜாவா சிகிரிப்ற் செயல்பட விடுவதில்லை என்று நினைக்கின்றேன். முடிந்தால், எனக்கும் என்னை போன்ற பிறருக்கும் இந்த வெட்டு ஒட்டு வேலை இருக்காது.
  • Firefox பக்கங்கள் சரியாக தெரிந்தாலும், தொகுக்கும் பொழுது குழம்பியடிக்கின்றது. (இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்று நினைக்கின்றேன்.)
  • காட்சிபடுத்தும் முறைகள்: (How to create Portals?)
  • வரைபடம்/ஓவியம் உருவாக்கல், தகுந்த மாதிரி பாவித்தல். (Creation and Use of unique, consistant graphics.)

ஆங்கில விக்கிபிடியா திட்ட சுட்டிகள்

தொகு

10 000ம் கட்டுரைகள்

தொகு

10 000 கட்டுரைகள் என்ற குறிக்கோளை சுந்தர் முதலில் முன்வைத்த போது, சுமார் 4 - 5 வருடங்களாக எடுக்கும் என்று எண்ணினேன். இப்பொழுது, அவ் குறியை அதைவிட விரைவில் எட்டுவோம் என்று நினைக்கின்றேன். 2006 ம் ஆண்டு, குறைந்தது 2000 புதுக் கட்டுரைகள் உருவாக்கினால் நன்று.

எந்தத் திட்டத்தின் தொடக்கத்திலும் ஒரு சுணக்கம் இருக்கும். உயிரியிலில் இதை adaptation period / lag period என்பார்கள். அதற்கடுத்து log period வரும். இதல் exponential விகிதத்தில் வளர்ச்சி பெருகம். அதற்கடுத்து steady state வரும். என் கணிப்பு சரியானால், விக்கிபீடியா lag காலத்தை தாண்டி log காலத்தில் 2006ல் அடியெடுத்து வைக்கும் என்று கணிக்கிறேன். ஏற்கனவே தனியொரு பயனரை சார்ந்திராது ஓரளவு தன் பாட்டில் விக்கிபீடியா இயங்கத்ததொடங்கியிருக்கிறது. நிச்சயம் 4000 கட்டுரை இலக்கை 2006ல் தாண்டுவோம். அதே வேளை ஏற்கனவே உள்ள கட்டுரைகளின் தரம் மற்றும் அளவையும் நாம் உயர்த்த வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது. மிக மெனக்கெட்டு இப்பக்கத்தை உருவாக்கி கருத்துக்களை பகிராவிட்டால் அனைவரும் ஒரே இலக்குடன் பணியாற்றுவது இயலாமல் போய் விடும். வருங்காலத்தில் மிதிவண்டியின் பாகத்திற்கு மட்டுமல்லாமல் வானூர்தியின் பாகங்களை கூட தமிழில் அனைவரும் சொல்லும் நிலை வர வேண்டும் என்பது என் விருப்பம், கனவு, இலக்கு. நிச்சயம் அதை அடைவதற்கு விக்கிபீடியா ஒரு களமாகவும் கருவியாகவும் இருக்கும்--ரவி 16:16, 17 டிசம்பர் 2005 (UTC)
ஆம். எனக்கும் மிகத்துரித வளர்ச்சிப் பருவத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது.
தற்போதைய பதிவு செய்யப்பட்ட பயனர் கணக்குகள் 311. இந்த எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு பயனர்கள் முனைப்புடன் பங்களிக்க வாய்ப்புள்ளது. மேலும், சந்தோஷ்குருவின் சில மாதங்களுக்கு முந்தைய வலைப்பதிவும், தினமலர் நாளிதழில் வந்த செய்தியும், விக்கிபீடியர்கள் பலரின் வலைப்பதிவுகளும் சேர்ந்து ஓரளவு நல்ல பரவலான அறிமுகம் தந்திருக்கிறது.
தற்பொழுது விக்கிபீடியா.ஆர்க் தவிர பிற வலைத்தளங்களிலிருந்து 35,620 இணைப்புகள் உள்வருகின்றன. சில மாதங்கள் முன்பு இவ்வெண்ணிக்கை 5,000 ஆக இருந்தது என்று நினைக்கிறேன். இதன் மூலம் பல பயனர்களும் வாசிப்பாளர்களும் நம் தளத்திற்கு வரவும், நம் கட்டுரைகளுள் சிலவற்றை மேற்கோள் காட்டுவதும் வழக்கமாகலாம். தவிர பயனர்களின் ஆர்வமும் இனிப் பல துறைகளில் இருக்கும். இது கண்டிப்பாக மிகத்துரித வளர்ச்சிப் பருவத்தின் அறிகுறியாகத்தான் தோன்றுகிறது.
முதல் ஆயிரம் பக்கங்கள் உருவானதை விட, பல மடங்கு விரைவாக அடுத்த ஆயிரம் கட்டுரைகள் உருவாக்கத்தை நெருங்கி விட்டோம். இதைப் பார்க்கும்போது, கட்டுரைகளின் சராசரி நீளமும், தரமும் கூடியுள்ளது தெரிகிறது. இதில் இன்னமும் முன்னேற்றம் தேவை. மேலும், கொள்கைகளும் உருவாக்கப்படத் துவங்கியுள்ளன.
மென்பொருள் மட்டத்திலும் பல வழுக்கள் பதியப்பட்டு, சில சரி செய்யப்பட்டுள்ளன. மேலும் ஒரு வழுவிற்கு, சந்தோஷ் எழுத்துருவைப் பதிவேற்றியதும் வாசிப்பவர்களிடம் யுனிகோடு எழுத்துரு இல்லாமலேயே நம் தளத்தை பயன்படுத்த ஏதுவாகௌம். -- Sundar \பேச்சு 10:09, 20 டிசம்பர் 2005 (UTC)

எனது பதிற்குறிகள்

தொகு
ரவி, கருத்துக்களுக்கு நன்றி. பதிற்குறிகள் பின்னர். --Natkeeran 20:06, 17 டிசம்பர் 2005 (UTC)
சுந்தர், சிவகுமார், கருத்துகளுக்கு நன்றி. பதிற்குறிகள் பின்னர். --Natkeeran 17:31, 20 டிசம்பர் 2005 (UTC)

--Natkeeran 23:17, 16 டிசம்பர் 2005 (UTC)

நற்கீரன் கவனிக்க

தொகு

நற்கீரன், அனைவரின் கருத்துக்களின் சாரத்தையும் எடுத்து திட்டப்பக்க அறிக்கையை மேம்படுத்தித் தர இயலுமா? இதை தமிழ் விக்கிபீடியா வலைப்பிதிவில் போடலாம்.--Ravidreams 17:08, 12 பெப்ரவரி 2007 (UTC)

Return to the project page "2005 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2005 Tamil Wikipedia Annual Review".