தமிழ் விக்கிப்பீடியா
விக்கிப்பீடியாவின் தமிழ் மொழிப் பதிப்பு
(தமிழ் விக்கிபீடியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ் விக்கிப்பீடியா (Tamil Wikipedia, சுருக்கமாக தமிழ் விக்கி), விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் தமிழ் மொழி பதிப்பு ஆகும்[1]. செப்டம்பர் 2003இல் இது தொடங்கப்பட்டது. 22 நவம்பர் 2024 அன்று, ஏனைய மொழி விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 60-ஆம் இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது.[2] 1,69,547 கட்டுரைகள் உள்ளன. பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் 2,38,280 ஆவர்.
தமிழ் விக்கிபீடியாவின் இலட்சினை | |
வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | தமிழ் |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | திறந்த படிப்பு அணுகல். பொது திருத்தத்திற்கு பதிவு தேவையில்லை, ஆனால்
|
பயனர்கள் | 2,38,280 |
உள்ளடக்க உரிமம் | படைப்பாக்கப் பொதுமங்களின் பண்புக்கூறு/ பகிர்வுரிமை 3.0 (பெரும்பாலான உரை கு.த.ஆ. உ. இன் கீழ் இரட்டை உரிமம் பெற்றது) ஊடக உரிமம் மாறுபடும் |
வெளியீடு | செப்டம்பர் 2003 |
உரலி | ta |
இந்தியாவில் பேசப்படும் மொழிகளுக்கான விக்கிகளில் இரண்டாவது இடத்திலும், தென்னிந்திய மொழி விக்கிகளில் முதல் இடத்திலும், தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. விக்கிப்பீடியா வகுத்துள்ள 'கட்டுரை ஆழம்' எனும் அளவுகோலின்படி, 26-நவம்பர்-2023 அன்று 64 ஆவது இடத்தில் இருந்தது.[3]
வளர்ச்சி
- 2009, நவம்பர் மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டியது[4].
- மே 2017 அன்று 100,000 கட்டுரைகளைத் தாண்டியது.[5]
- 2019 நவம்பர் மாதக் கணக்கின்படி, 59ஆவது இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா இருந்தது. வரலாற்று நோக்கில், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை, இந்திய மொழி விக்கிகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்க, இந்திய மொழிகள் விக்கி ஒப்பீடு என்னும் பக்கத்தைக் காணவும்.
- 2022 - திராவிட மொழிகளில் முதன்முதலில் 1,50,000 கட்டுரைகளைக் கடந்த விக்கிப்பீடியா ஆகும்.
தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்
எண்ணிக்கை | |
---|---|
பக்கங்கள் | 5,82,667 |
கட்டுரைகள் | 1,69,547 |
கோப்புகள் | 8,929 |
தொகுப்புகள் | 41,36,682 |
பயனர்கள் | 2,38,280 |
சிறப்புப் பங்களிப்பாளர்கள் | 260 |
தானியங்கிகள் | 192 |
நிருவாகிகள் | 32 |
அலுவலர்கள் | 3 |
மொழி[6] | கட்டுரைகளின் எண்ணிக்கை[7] |
---|---|
உருது விக்கிப்பீடியா (ur) | 2,14,709
|
தமிழ் விக்கிப்பீடியா (ta) | 1,69,547
|
இந்தி விக்கிப்பீடியா (hi) | 1,63,636
|
வங்காள விக்கிப்பீடியா (bn) | 1,60,127
|
மராத்தி விக்கிப்பீடியா (mr) | 98,506
|
தெலுங்கு விக்கிப்பீடியா (te) | 1,01,478
|
மலையாள விக்கிப்பீடியா (ml) | 86,210
|
நேபால் பாசா விக்கிப்பீடியா (new) | 72,463
|
நேபாளி மொழி விக்கிப்பீடியா (ne) | 32,948
|
கன்னட விக்கிப்பீடியா (kn) | 32,948
|
குசராத்தி விக்கிப்பீடியா (gu) | 30,474
|
பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழி விக்கிப்பீடியா (bpy) | 25,087
|
ஒடியா மொழி விக்கிப்பீடியா (or) | 18,802
|
சிந்தி மொழி விக்கிப்பீடியா* (sd) | 18,456
|
அசாமிய மொழி விக்கிப்பீடியா (as) | 14,162
|
வடமொழி விக்கிப்பீடியா (sa) | 12,219
|
போச்புரி விக்கிப்பீடியா (bh) | 8,740
|
காசுமீரி மொழி விக்கிப்பீடியா* (ks) | 5,913
|
பாளி விக்கிப்பீடியா* (pi) | 2,558
|
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-05-28. பார்க்கப்பட்ட நாள் 2010-08-03.
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles
- ↑ https://meta.wikimedia.org/wiki/Wikipedia_article_depth
- ↑ http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#November_2009
- ↑ of Wikipedias
- ↑ List of Indian language wiki projects
- ↑ Wikipedia Statistics