விக்கிப்பீடியா பேச்சு:Request for Comment/India Community Consultation 2014

நோக்கம் ;எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் இந்திய விக்கிமீடியா சமூகங்களின் கலந்தாய்வுக்கு கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. நாம் நமது சார்பாளர்களாக பரிந்துரைத்த சுந்தர், சோடாபாட்டில் உட்பட என்னையும் நிகழ்வுக்கு முறைப்படி அழைத்துள்ளனர் (சிரீக்காந்த் தனிப்பட்ட காரணங்களை முன்னிட்டு கலந்து கொள்ள இயலாது என்று தெரிவித்து இருக்கிறார்). இவர்கள் நமது சார்பாக கருத்துகளை முன்வைக்கும் அதே வேளை, அலுவல் முறையாகவும் தமிழ் விக்கிமீடியா சமூகத்தின் பரிந்துரைகளைத் தருவது நன்று.

காலம்: 26 செப்டம்பருக்குள் உரையாடி ஒரு நிலைப்பாட்டுக்கு வந்தால், அடுத்த ஒரு வாரத்தை வாக்கெடுப்புக்கு ஒதுக்கி முறையான அறிக்கையை அக்டோபர் 4 அன்று வழங்க இயலும்.

தொடக்கம்; இது தொடர்பாக விக்கிமீடியா அறக்கட்டளையின் எதிர்பார்ப்புகளாக கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதாவது:

Overall, the agenda for the meeting is likely to cover these issues:

  • Introductions, expectations, ground rules
  • SWOT (Strengths, Weaknesses, Opportunities, Threats) analysis and sharing stories of individual contributors, diverse language communities and projects
  • SWOT for India and Indic languages across South Asia
  • Visioning for the movement in India
  • Strategies and action plans for the movement going forward (next six months, next year, next two years)
  • Roles, responsibilities and rules of engagement between the different actors in India

எண்ணங்கள்

தொகு

இரவி

தொகு
  • இதன் அடிப்படையில் பின்வரும் கேள்விகளை / குறிப்புகளை முன்வைத்து இவ்வுரையாடலைத் தொடங்க விரும்புகிறேன். விக்கிப்பீடியா மட்டுமல்லாது விக்சனரி, விக்கிமூலம், விக்கி செய்திகள் முதலிய உறவுத் திட்டங்களை முன்வைத்தும் நாம் இதனை உரையாடுதல் நலம்.
  1. தமிழ் விக்கிமீடியாவின் வளர்ச்சி நிலைகள், நமது வெற்றிகரமான அணுகுமுறைகள், நாம் தடுமாறிய / தடையாக உள்ள இடங்கள் குறித்த சிறு அறிமுகம்
  2. தமிழ் விக்கிமீடியா திட்டங்களின் தற்போதைய நிலை (வளர்ச்சி / தளர்ச்சி / தேக்கம் ?)
  3. சுவோட் பகுப்பாய்வின் (SWOT Analysis) அடிப்படையில் தமிழ் விக்கிமீடியா திட்டங்களின் வலு, குறைகள், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள் முதலியவற்றை அலசவேண்டும். இந்த ஆய்வானது தமிழின் தொன்மை, தமிழ் மொழிக்கான அரசு, கல்வி வாய்ப்புகள் / தேக்கங்கள், சமூக அரசியல் பொருளாதார காரணிகள், உலகத் தமிழர், இந்தியா / தமிழ்நாடு / இலங்கை / மலேசியா / சிங்கப்பூர் ஆகிய ஐந்து நாட்டு அரச ஆதரவு / ஆதரவின்மை, விக்கிப்பீடியாவை ஒத்த பிற அறிவியக்கங்கள் கூடிய சூழல் முதலியவற்றைக் கணக்கில் எடுக்க வேண்டும்.
  4. நாம் எத்தகைய நிலையை நோக்கி முன்னேற விரும்புகிறோம்? அதற்கு என்ன தேவை? என்ன தடையாக உள்ளது? அந்நிலையை அடைய என்ன செய்ய வேண்டும்? யார், எப்படி செய்ய வேண்டும்?
    எடுத்துக்காட்டுக்கு,
    தமிழ் மொழி நுட்பத்துக்கான கூடிய ஆதரவை விக்கிமீடியா அறக்கட்டளை வழங்குவது உதவுமா?
    ஆங்கில விக்கிமீடியா திட்டங்களில் இருந்து இன்னும் சிறப்பாக தமிழுக்குப் பயனர்களை மடை மாற்றி விட முடியுமா?
    தனிப்பட்ட பயனர்கள், விக்கிச் சமூக முனைப்புகளுக்கு இன்னும் தாராளமான நல்கைகள் கிடைப்பது உதவுமா?
    அரசுகள் மட்டத்தில் கொள்கை சார் முன்னெடுப்புகள் உதவுமா? (எடுத்துக்காட்டுக்கு, தாய் மொழி வழி கல்வி, கணினியில் தமிழ் தட்டச்சு அறிவு, இந்திய அரசின் அலுவல் மொழிகள் நிலைப்பாடு)
    விக்கிமூலம், விக்சனரி முதலியவற்றுக்கு விக்கிமீடியா அறக்கட்டளை, பிற நிறுவனங்கள் உதவினால் நன்றாக இருக்குமா? (எடுத்துக்காட்டுக்கு, பல்வேறு பல்கலைகள், அரசு நிறுவனங்களிடம் குவிந்துள்ள, மறைந்துள்ள ஆக்கங்கள்)
    விக்கிமூலத்தில் ஆக்கங்களைச் சேர்ப்பதற்கு ஆட்களைப் பணிக்கமர்த்த விக்கிமீடியா அறக்கட்டளை உதவலாமா?
    இந்திய அளவிலான விக்கிமீடியா கிளையாக அல்லாமல் தமிழ் மொழி சார்ந்த விக்கிமீடியா அமைப்பு உதவுமா? (இதில் பயன் இடர்களும் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு, இவ்வாறு அமைப்பினை உருவாக்குவது இணையத்துக்கு வெளியே கடுமையான உழைப்பைக் கோரும். இது நம்மைப் போன்ற சிறிய சமூகத்துக்கு கவனச் சிதறலாக இருக்கலாம். தலைவர், செயலாளர் போன்ற அடுக்குகள் வருவது அரசியல் புகுந்து தற்போது இருக்கும் தோழமை உணர்வு கெடவும் வாய்ப்பாக அமையலாம்.)
    பல நாடுகளில் பரந்துள்ள தமிழர்கள் போன்ற சமூகங்களை எப்படி ஒருங்கிணைத்து விக்கியில் பங்களிக்க வைப்பது?
    மேலே உள்ளவை எனக்குத் தோன்றிய எடுத்துக்காட்டுகளே.. இது போல் உங்களுக்குத் தோன்றும் புள்ளிகளில் இருந்து உரையாடலைத் தொடரலாம்.
    இந்திய அளவில் தமிழ் விக்கிமீடியர்கள் ஒரு முதிர்ச்சியுள்ள சமூகம் என்பதால் ஒட்டு மொத்த இந்தியாவுக்கான விக்கிமீடியாவின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பான கருத்துகளையும் முன்வைக்கலாம்.
    நன்றி. --இரவி (பேச்சு) 21:34, 18 செப்டம்பர் 2014 (UTC)

முதலாவதாக நாம் எடுக்க வேண்டிய முயற்சி, தமிழ் விக்கிப்பீடியா என்று ஓர் இணையத்தளம் உள்ளது என்பதனை தமிழ் படிக்க தெரிந்தவர்களுக்கு தெரிவிக்கவேண்டும். இதற்க்கு விக்கிமீடியா அமைப்பு தகுந்த முயற்சிகள் எடுக்க வேண்டும். தமிழ் மட்டுமல்ல, இந்தியாவின் அத்துணை மொழிகளையும் , அம்மொழி பேசுபவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்க்கு, அவர்கள் "விக்கிமீடியா நிரலில்" இடத்தை பொருத்து அருகில் இருக்கும் மொழிகளில் இருந்த கட்டுரை இணைப்பை கட்டுரையின் மேலே இணைப்பாக கொடுக்க வேண்டும். உதாரணமாக, சென்னையில் நான் ஆங்கில விக்கி கட்டுரையை படிக்கும்ப்போழுது ,கட்டுரையின் ஆரம்பத்தில் "Your location shows that you are from Chennai. There is Tamizh version of this article here" இவ்வாறு ஒரு வரி போதுமே. இது இடத்தை சார்ந்த மொழிவாரியான விக்கிபீடியாக்களை நன்றாக வளர்க்கும். இதனை, நீங்கள் விக்கிமீடியாவிடம் முன்வைக்கலாம்.மேலும் யோசனைகள் தோன்றினால் இங்கே பதிவிடுகிறேன்.-Vatsan34 (பேச்சு) 16:41, 22 செப்டம்பர் 2014 (UTC)

தகவலுழவன்

தொகு

விக்கிமீடியாதிட்டங்களில் ஒன்றான விக்சனரி குறித்தத் திட்டங்களில் ஒரு சிலவற்றை கூற விரும்புகிறேன். மொழியியல் ஆய்வுக்குரிய சிறந்த களங்களுள் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் ஒற்றுமை அதன் மொழிகளிடைய பின்னிப்பிணைய வேண்டும். ஒரு சொல் இந்திய மொழியில் கொடுத்தால், அது பிற இந்திய மொழியில் ஒலிக்கோப்புடனும், பொருளுடனும், தொடர்புடைய சில சொற்களுடனும், பிற ஊடகங்களுடனும் வரவேண்டும்.

  • அத்தகைய பன்மொழி மின்னகரமுதலிக்கான அடித்தளங்கள் நம் விக்கியில் இருந்தாலும், மேலும் தேவைப்படும் தொழில்நுட்பங்களை பற்றியும், தடைகளும்,விடைகளும் சிந்திக்கப்பட வேண்டும். பல இந்திய பல்கலைக் கழகங்களில் உள்ள மொழியியல் பேராசிரியர்கள் முன்வர, அவர்களின் படைப்புகளைப் பேண, விக்கிமீடியா என்ன செய்யப்போகிறது? நமது எல்லைக்குள் அவ்வறிஞர்களை அழைத்து வர, வந்தவரை நாம் அனைத்துச்செல்ல நாம் கடைபிடிக்க வேண்டியவைகள் குறித்து சிந்திக்கலாம். சிந்தனை தொடக்கமே. தொடக்கம் குறித்தவைகள் மட்டுமே பலன் தராது என்ற வகையில், கீழ்கண்ட இலக்குகளை அடைந்துள்ளோம். மேலும் வளர்த்தெடுக்க உள்ளோம்.
  • அனைத்து மொழி விக்சனரிகளுக்கும் பயன்படவல்ல விக்சனரி தொகுப்பானை, எனக்குள்ள சூழ்நிலைகளைக் கொண்டு, விக்சனரிக்குத் தேவைப்படும் தனித்துவத்துடன் விரிவாக்கி வருகிறேன்.
  • நீச்சல்காரன் திறனால் உருவாக்கப்பட்ட, எங்கிருந்தும் செயற்படவல்ல கூகுள் ஆவணப்பதிவேற்றி.
  • தமிழ்ப்பேரகரமுதலியின் (DDSA) தரவுகளை, பைத்தான்மொழி நிரலாக்கம் மூ்லம், விக்சனரிக்கு பதிவேற்ற, எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவு, இந்திய மொழி அனைத்துக்கும் பயன்படும். காலம் கருதி சுருக்க முடிக்கிறேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 04:36, 23 செப்டம்பர் 2014 (UTC)

பொதுவன்

தொகு

கனடாவில் உள்ளேன். 17 10 2014 சென்னை மீள்வேன். செயல்வீரர்களுக்கு வாழ்த்துக்கள். --Sengai Podhuvan (பேச்சு) 09:36, 25 செப்டம்பர் 2014 (UTC)

சஞ்சீவி சிவகுமார்

தொகு

அறிவியல் துறை சார்ந்த பல விடயங்கள் தமிழ் விக்கிக் கட்டுரைகளில் வராமல் இருக்கின்றன. இவற்றில் நிறைய ஆங்கில விக்கியில் உள்ளன. இவை குறித்து பலரது ஒத்துழைப்பையும் ஒன்று திரட்ட யாதேனும் திட்டங்களை வகுக்க முடியுமா? என ஆராயலாம். "வதிவிடப் பங்களிப்புப் பட்டறைகளை" கட்டுரை இலக்குகளை நிருணயித்து நடத்தலாம். குடும்ப மற்றும் பணிச்சுமை காரணமாக குறைவாகப் பங்களிப்பவர்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் முழுமையாக இதற்கேன ஒதுக்கிப் பங்களிப்பது இதன் மூலம் சாத்தியமாகும். ஆயினும் தடையற்ற இணைய இணைப்பைக் கொண்ட வசதிகள் தேவைப்படும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:32, 25 செப்டம்பர் 2014 (UTC)


சுந்தர்

தொகு

அவசர பயணத்தில் உள்ளதால் 2011-இல் இந்திய விக்கிமீடிய கிளை தொடங்குவதை முன்னிட்டு நான் செய்த அலசல் ஆவணங்களை மட்டும் இணைத்துள்ளேன். அவற்றில் சில கருத்துக்களாவது இன்றும், குறிப்பாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் பொருந்துமென நம்புகிறேன்.

-- சுந்தர் \பேச்சு 07:20, 1 அக்டோபர் 2014 (UTC)Reply

Return to the project page "Request for Comment/India Community Consultation 2014".