விக்கிப்பீடியா பேச்சு:Tamil Wikipedia: A Case Study

Nats Notes

தொகு

Tamil is an Indian classical and modern language, with more than 77 million speakers throughout the world. It is an official language in India, Sri Lanka, and Singapore. It is an educational language in Malaysia. Significant Tamil populations reside in South Africa, Mauritius, Middle East, Europe, USA, and Canada.

Tamil grammar references, and literature dates back more than 2000 years old. There is rich and continuous literary tradition. Although, Tamil is rich language its first major multi subject encyclopedia was published from 1954-68 as 10 volume set. It was a remarkable collaborative work by scholar, philanthropists, and Tamilnadu and Indian governments. It was the first such encyclopedia in an India language. --Natkeeran 16:27, 28 மார்ச் 2009 (UTC)

பதிவேற்றம்

தொகு

இன்று கடைசி நாளாதலால், இங்கு உள்ளபடியே பதிவேற்றியுள்ளேன். இருந்தாலும் இதை இன்னும் முன்னேற்றலாம். -- சுந்தர் \பேச்சு 21:55, 15 ஏப்ரல் 2009 (UTC)

கருத்து வேண்டல்

தொகு

நான் சில பயனர் படங்களை உரையினூடே இணைத்துள்ளேன். மற்ற பல சீரிய பங்களிப்பாளர்களின் பெயரையோ படத்தையோ சேர்க்காமலிருக்கையில் இவ்வாறு செய்வது சரிதானா? மற்ற பங்களிப்பாளர்கள் அனைவரும் ஒரு பொதுவான பக்கத்தில் படம் (விரும்பினால்), பெயர், விக்கியில் முதன்மைப் பணி போன்ற தகவல்களை இட்டால் இங்கிருந்து அப்பக்கத்துக்கு இணைப்பு தரலாமல்லவா? -- சுந்தர் \பேச்சு 11:49, 16 ஏப்ரல் 2009 (UTC)

இப்பொழுதிருக்கும் படங்கள் பொருத்தமாக உள்ளன என நான் நினைக்கிறேன். என் விருப்பம் என்னவென்றால் இந்த விக்கிபீடியாவின் ஆணிவேராகத் திகழ்பவர் மயூரநாதன். அவருடைய படம் கட்டாயம் இருக்கவேண்டும். அடுத்ததாக நற்கீரன், கனகு (சிறீதரன்) இவர்கள் படங்களும் இருக்க வேண்டும். நானறிய இடைவிடாது அயராது கட்டுரையாக்கம் செய்து தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உழைப்பு நல்கியவர்கள் இம்மூவரே. ஆனால் வேறு பலரும் பல வகைகளில் தனித்தன்மையுடன் ஆக்கம் தந்துள்ளனர். குறிப்பாக பேரா.வி.கே அவர்களைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். தனக்குப் போதிய அளவு தமிழ் தெரியாது என்று கூறியிருந்தாலும் அரும்பணி ஆற்றினார் வெர்க்லோரும் (Werklorum) என்னும் பயனர். அண்மையில் வந்தவர்களில் தானியல் பாண்டியன், செல்வம் தமிழ் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் மிக அருமையாக பணியாற்றி தமிழ் விக்கிப்பீடியாவை வளர்த்துள்ளனர். நீங்கள் இப்படி அருமையாக இந்த ஆவணப் பதிப்பை ஆங்கிலத்தில் எழுதுவதை மிகவும் பாராட்டுகிறேன். --செல்வா 17:50, 16 ஏப்ரல் 2009 (UTC)
செல்வா, உண்மைதான். மயூரநாதனுக்கு தன் படத்தைப் பொதுவில் இடுவது உவப்பானதென்றால் உடனடியாகச் சேர்க்கக் கடமைப்பட்டுள்ளேன். அதே போல் தன் கனகுவும், நற்கீரனும். சிவா, கோபி, தெரன்சு, உமாபதி போன்றோரும் நீங்கள் மேலே சொல்லியுள்ளோரும் இன்னும் கார்த்தி போன்ற பலரும் அரும்பணி ஆற்றியுள்ளனர் என்பதை மறுக்க முடியாது. அதனால்தான் இதற்கெனத் தனியானதொரு பக்கத்தைக்கூட உருவாக்கலாம் என்று பரிந்துரைத்தேன். இந்த ஆவணப்பதிப்பின் சுருக்கத்தை எழுதி Signpost இதழிலும் வெளியிடலாம். -- சுந்தர் \பேச்சு 06:55, 17 ஏப்ரல் 2009 (UTC)
இந்த வரிசையில் செல்வா என்ற முக்கிய பங்களிப்பாளரை விட்டுட்டீங்களே. :-) -- சுந்தர் \பேச்சு 07:00, 17 ஏப்ரல் 2009 (UTC)

அருமையான ஆய்வுக்கட்டுரைக்கு நன்றி, சுந்தர். நற்கீரன், மயூரனாதன், கனகு ஆகியோர் தங்கள் படங்கள் பொதுவெளியில் எங்கேயும் வெளியிட்டுக் கண்டதில்லை. அவர்களுக்கு விருப்பமானால், அவர்களின் முன் அனுமதி பெற்று படங்களை வெளியிடலாம். தங்கள் படங்களைப் பகிர விரும்புவோரிடம் படம் பெற்று எல்லாருக்குமாக சேர்த்து ஒரு படக்காட்சிப் பக்கம் வைப்பது நல்ல வழி.

இயன்றால், தரக்கண்காணிப்புப் பக்கத்தில் இருந்து இந்திய விக்கிகளுடன் தமிழை ஒப்பிடும் ஒரு அட்டவணையை ஆங்கிலமாக்கி கட்டுரையில் இணைக்கலாம்--ரவி 23:50, 16 ஏப்ரல் 2009 (UTC)

முழுவதும் உடன்படுகிறேன், ரவி. தனிப்பக்கத்தில் பங்களிப்பு நல்கியவர்களுக்கான ஒரு சிறு அறிமுகமாவது தர ஏற்பாடு செய்ய வேண்டும். தரக்கண்காணிப்புப் பக்கத்திலிருந்தும் அட்டவணையை ஏற்ற வேண்டும். கார்த்தியும் தொலைபேசியில் அழைத்து இதையே சொன்னார். இப்போது கட்டுரைகளை ஒப்படைப்பதற்கு ஏப்பிரல் 30 வரை தரப்பட்டுதால் செய்ய முடியும். -- சுந்தர் \பேச்சு 06:55, 17 ஏப்ரல் 2009 (UTC)


சுந்தர், தமிழின் வயது பற்றி இரண்டு ஒரே மாதிரி வசனங்களைத் தவிர்க்கலாம் (ஒன்று போதும்). Evangalism என்பதை விட Outreach என்பது நல்ல சொல்.--Natkeeran 03:20, 18 ஏப்ரல் 2009 (UTC)

மாற்றியுள்ளேன், சரி பார்க்கவும். -- சுந்தர் \பேச்சு 11:26, 18 ஏப்ரல் 2009 (UTC)
என்னுடைய நிழற்படங்களை வெளியிடாமைக்குச் சிறப்பான காரணங்கள் எதுவும் கிடையாது. தேவையானால் தருகிறேன். மயூரநாதன் 12:51, 18 ஏப்ரல் 2009 (UTC)
மயூரநாதன், உங்கள் ஒளிப்படம் ஒன்றிரண்டையும், உங்களைப் பற்றிய தன்வரலாறு ஒன்றையும் எனக்கு அனுப்பி வையுங்கள். உங்களைப் பற்றி ஒரு கட்டுரை தமிழ்விக்கிப்பீடியாவில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று எண்ணி முன்னரும் உங்களுக்குத் தனி மடலில் தெரிவித்திருந்தேன். அருள்கூர்ந்து எனக்கோ, பிறர் யாருக்கோ இத் தகவல்களைத் தாருங்கள் இங்கு இடுவோம். --செல்வா 15:02, 19 ஏப்ரல் 2009 (UTC)
ஆம், முதற்கண் நிழற்படத்தைப் பதிவேற்றுங்கள். இக்கட்டுரையில் இணைத்து விடலாம். -- சுந்தர் \பேச்சு 17:21, 19 ஏப்ரல் 2009 (UTC)

இளைய பங்களிப்பாளர்

தொகு

2005 ஆண்டு வாக்கில் மூலிகைகள் குறித்து 200 குறுங்கட்டுரைகளை ஒருவர் எழுதியது நினைவிருக்கலாம். அவர் சிங்கப்பூரில் உள்ள பள்ளி மாணவர். 15 வயதுக்குள் இருக்கலாம். நிரோசனைக் காட்டிலும் இளையவராக இருக்கக்கூடும். ஒரு குறிப்புக்காகச் சொல்கிறேன். நிரோசன் அளவுக்கு தொடர் பங்களிப்பு நல்கிய இளையவர் வேறு யாருமில்லை.--ரவி 23:52, 16 ஏப்ரல் 2009 (UTC)

நினைவூட்டியதற்கு நன்றி ரவி. இளைய பயனரின் வயதை மாற்றி இவரைப் பற்றிய அடிக்குறிப்பு ஒன்றை இடலாம். நிரோவின் படம் உள்ளபடியே இருக்கட்டும். -- சுந்தர் \பேச்சு 06:58, 17 ஏப்ரல் 2009 (UTC)

அவர் பெயர் கார்த்திகேயன். அவரின் பேச்சுப் பக்கம்--ரவி 12:17, 18 ஏப்ரல் 2009 (UTC)

முதன்மை + பொதுவான நோக்கம்

தொகு

தமிழ் போன்ற மொழிகளில் பயனர்கள் ஏன் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கிறார்கள், ஏன் விக்கி திட்டங்கள் முக்கிய தேவையாக உள்ளன என்பதனைக் குறிப்பிட வேண்டும்.

ஆங்கில விக்கிப்பீடியாவில் பங்களிப்போருக்கு உள்ள முதன்மை + பொதுவான நோக்கம் என்று "அனைவருக்கும் கட்டற்ற அறிவு வழங்கல்", "தங்களுடைய துறை சார் அறிவைப் பகிர்தல்" என்பதனைக் கருதலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் இந்நோக்கங்களுடன் "விக்கிப்பீடியா மூலம் தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பங்களித்தல்" என்ற நோக்கமும் பெருமளவு இருக்கிறது. அதாவது ஆங்கில விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்போர் யாரும் ஆங்கிலத்தை வளர்ப்பதற்காகப் பங்களிக்கவில்லை. ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவில் இந்நோக்கம் உண்டு. இந்த நோக்கம் சுட்டிக்காட்டத்தக்கது.

ஆங்கிலத்தில் தகவல் பரிமாற்றம், சேமிப்புக்கு பல்வேறு திட்டங்கள் இருந்தாலும் தமிழில் தமிழ் விக்கி திட்டங்கள் அளவுக்கு வேறு திட்டங்கள் கிடையா. எனவே, விக்கி திட்டங்களின் இருப்பு தமிழ் மொழிக்கு மிகுந்து முக்கியத்துவம் வாய்ந்தது. --ரவி

ரவி, நல்ல கருத்து. இதைக் கட்டுரையில் சேக்க வேண்டும். --Natkeeran 03:19, 18 ஏப்ரல் 2009 (UTC)
ஆம், சேர்த்து விடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 05:51, 18 ஏப்ரல் 2009 (UTC)

இதையும் சேர்க்கலாம்

தொகு
  • மொத்த பங்களிப்புகள் நாடுகள் வாரியாக, மேலும் இந்தியாவில் இருந்து மாநிலங்கள் வாரியாக
  • தமிழை தாய்மொழியாக கொள்ளாவதவர்களின் பங்களிப்புகள்
  • வேறு எந்த மொழிகளிலும் இல்லாத கட்டுரை தமிழல் மட்டும் எத்துணை உள்ளது, அதன் முக்கியத்துவம் (திரைப்படங்கள் தவிர்த்து)
  • தமிழ் வீக்கிப்பீடியாளர்களுக்கிடையே உள்ள தொடர்பு

இதையும் பார்க்கவும் en:Tell_us_about_your_Wikipedia --கார்த்திக் 07:25, 18 ஏப்ரல் 2009 (UTC)

ஒரு நிப்பானியர் சில நாட்கள் பங்களித்தார். அவரது பெயர் எவருக்காவது நினைவிருக்கிறதா? மூன்றாம் பிறை தொடர்பாகப் பங்களித்தாரோ? கார்த்திக், இவற்றில் சிலவற்றையாவது கட்டுரையில் சேர்க்க முயல்வேன்.
நற்கீரன், தமிழில் முந்தைய கலைக்களஞ்சிய முயற்சிகளைப் பட்டியலிட்டுத் தாருங்கள். -- சுந்தர் \பேச்சு 11:31, 18 ஏப்ரல் 2009 (UTC)

சுந்தர், உங்கள் கட்டுரையை எங்காவது பதிவேற்றியுள்ளீர்களா? மயூரநாதன் 12:41, 18 ஏப்ரல் 2009 (UTC)

கட்டுரையின் முந்தைய வரைவை விக்கிமேனியா மாநாட்டுக் குழுவினரிடம் ஒப்படைத்துள்ளேன். திருந்திய வரைவை அவர்கட்கு அணுப்ப வேண்டும். -- சுந்தர் \பேச்சு 17:26, 19 ஏப்ரல் 2009 (UTC)
அபிதானகோசம், அபிதான சிந்தாமணி ஆகியவை இலக்கிய கலைக்களஞ்சியங்கள் ஆகும். இவற்றை தற்கால்ல கலைக்களஞ்சிய வடிவத்துக்கு ஒத்தவை. இதற்கு முந்திய நிகண்டுக்கள், பெரும்பாலும் அகராதியை ஒத்தவை;. இங்குள்ள பொது நூலகத்தில் சிறுவர் கலைக்களஞ்சியம் என்று 12 வரையான தொகுதிகள் கொண்ட ஒன்று உண்டு. ஆனால் ஒப்பீட்டளவின் அதன் உள்ளடக்க விச்சு மட்டுப்படுத்தப்பட்டது. ஒரு எழுத்தாளரின் முயற்சியாக தெரிகிறது. இவை தவிரவும் பகுப்பு:தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் வேறு சில வெளிவந்தாக அறிய முடிகிறது. ஆனால் துல்லியமான தகவல் என்னிடம் இல்லை. --Natkeeran 15:28, 18 ஏப்ரல் 2009 (UTC)
தகவலுக்கு நன்றி, நற்கீரன். -- சுந்தர் \பேச்சு 17:26, 19 ஏப்ரல் 2009 (UTC)
தொல்காப்பியம் தமிழுக்கான இலக்கண நூல் என்பதையும் படத்தோடு குறிப்பிடலாம். --Natkeeran 15:33, 18 ஏப்ரல் 2009 (UTC)
குறிப்பிடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 17:26, 19 ஏப்ரல் 2009 (UTC)

சுந்தர், உங்கள் வரைபடம் எனது கணினியில் அழகாக தெரியவில்லை. எளிய excel வரைபடம் சிறப்பகா இருக்குமோ என்று பாக்கவும். எ.கா விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு.--Natkeeran 15:41, 18 ஏப்ரல் 2009 (UTC)

இங்குள்ள படமும் ஓப்பன் ஆபீசின் எக்சல் செயலியைக் கொண்டு உருவாக்கியதே. மைக்குரோசாஃவ்ட்டு எக்சல் கொண்டு முயன்று பார்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 17:23, 19 ஏப்ரல் 2009 (UTC)

படங்கள்

தொகு

மயூரநாதனி்ன் படத்தைக் கட்டுரையில் சேர்த்துள்ளேன். நற்கீரனதையும் கனகுவினதையும் இயன்றால் சேர்க்க வேண்டும். இன்னும் ஓரிரு நாட்களில் தனிப்பக்கமொன்றில் பங்களிப்பு நல்கிய பயனர்கள் அனைவரைப் பற்றிய குறிப்புகளுடன் படங்களையும் சேர்த்தால் இக்கட்டுரையிலிருந்து இணைப்பு தரலாம். மற்ற பரிந்துரைகளையும் செயல்படுத்திவிட்டு இறுதி வரைவை ஒப்படைக்கவுள்ளேன். (ஏற்பார்கள் என நம்புகிறேன்.) -- சுந்தர் \பேச்சு 03:04, 21 ஏப்ரல் 2009 (UTC)

மேலே பரிந்துரைத்துள்ள மாற்றங்களில் பலவற்றைச் செய்து விட்டு இன்றிரவு (இந்திய நேரத்தில்) திருத்திய வரைவை விக்கிமேனியா கட்டுரைத் தொகுப்பாளர்களிடம் ஒப்படைக்கவுள்ளேன். அதற்குள்ளாக பங்களிப்பு நல்கியோருக்கான (அதாவது அனைத்து பயனர்களுக்கும் இடமுள்ள) ஒரு தனிப்பக்கத்தை எவரேனும் உருவாக்கினால் இக்கட்டுரையிலிருந்து இணைத்து விடுகிறேன். பங்களிப்பாளர் படம், விக்கியில் செலவளித்த ஆண்டுகள், முதன்மை விக்கி பணி, போன்ற தகவல்களை அதில் இடலாம். இவ்வகையில் நற்கீரன், கனகு, கோபி, சிவா, செல்வா போன்றோரது தகவல்களும் மற்ற அனைத்து பங்களிப்பாளர்களது தகவல்களும் ஓரிடத்தில் ஆவணப்படுத்தப்படும். -- சுந்தர் \பேச்சு 08:09, 24 ஏப்ரல் 2009 (UTC)

த.வி. வரலாறு

தொகு

த.வி யின் வரலாறு செப்டம்பர் 30, 2003 அன்று துவங்குகின்றது. ஆனால் நவம்பர் 7, 2003 அன்றுதான் தமிழ் எழுத்துகளில் ஒரு பக்கம் உருவாகுகின்றது. முதலில் துவங்கியவர் பயனர்:அமல்சிங் அல்லது அமலாசிங் என்பவர் என்று நினைக்கிறேன் (இங்கிலாந்தில் வாழ்பவர்,எறும்புகள் என்னும் யாஃகூ குழுமத்தினர்), ஆனால் நவம்பர் 7 ஆம் நாள் Architect என்னும் பெயரில் மயூராநாதன் எழுதத் தொடங்கிய பின்னரே வளர்ச்சி அடையத்தொடங்கியது என்று நினைக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவான முதல் தொடரே, மனித மேம்பாடு !! மிகவும் மகிழ்ச்சியூட்டும் தொடர்!!   ஆலமரத்தின் இப்பக்கத்தில் பயனுடய பல இணைப்புகள் உள்ளன. முதல் விக்கிப்பீடியா பதிவும், ஒருங்குறி தமிழ் எழுத்துகள் பதிவாகாமல் பல முயற்சிகள் செய்ததையும் பார்க்கலாம். இவ்வாண்டு (2009) செப்டம்பர் 30இல் த.விக்கு ஆறு ஆண்டுகள் நிறைவு பெறும். சராசரியாக ஆண்டொன்றுக்கு 3,000 கட்டுரைகள் எழுதியுள்ளோம்.

ஒரு மிகச்சிறந்த தமிழராகிய மயூரநாதன் அவர்களுடைய ஒளிப்படத்தைப் பார்க்கும் நற்பேறு இன்று பெற்றேன். ஒளிப்படம் தந்து உதவிய மயூரநாதனுக்கு நன்றிகள் பல. தமிழ் விக்கி செல்ல வேண்டிய தொலைவு இன்னும் மிகவுள்ளது. நாம் அனைவரும் முன்பினும் ஊக்கத்துடன் உழைக்க வேண்டும். --செல்வா 13:16, 24 ஏப்ரல் 2009 (UTC)

அருமை, மனித மேம்பாடு, அருமையான தொடக்கம்!! இவ்வரலாற்றைக் கட்டாயம் சேர்த்து விடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 13:30, 24 ஏப்ரல் 2009 (UTC)
வரலாற்றைச் சேர்த்துள்ளேன். மற்ற பரிந்துரைகளை இன்னும் செயற்படுத்தவில்லை. நாளையாவது முடியும்மென நம்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 18:01, 24 ஏப்ரல் 2009 (UTC)

கேள்விகள்

தொகு

சில கேள்விகள்:

1) கீழ்க்கண்ட புள்ளி தேவைதானா?

  • In English Wikipedia, the primary and nearly the singular motivation for editors, is to document and spread knowledge. English as a medium is incidental. However, in the case of Tamil Wikipedia, most of the editors view this as a way to spread knowledge in Tamil. Many editors are motivated for being able to enrich the modern Tamil corpus, by adding quality content in Tamil. This is because, Tamils have strong feelings towards the Tamil language, which is often venerated in literature as "Tamil̲an̲n̲ai", "the Tamil mother".[11] It has historically been, and to large extent still is, central to the Tamil identity.[12]

Esp.
"strong feelings towards the Tamil language, which is often venerated in literature as "Tamil̲an̲n̲ai", "the Tamil mother".[11] It has historically been, and to large extent still is, central to the Tamil identity" இவற்றைத் தவிர்ப்பது நல்லது. இது தேவை இல்லாதது.

2) Ab initio என்னும் உங்கள் கூற்று தவறான கோணத்தில் பிறர் எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. The point is - as is customary, especially in agglutinative languages, suitable terminologies were coined as needed from existing words. Tamil development is not the goal, though it may happen indirectly. The primary goal is to offer quality descriptions and explanations as in an encyclopedia -good tamil narrative. Several topics are being covered for the first time in Tamil. We are trying to attain currency of knowledge, by writing articles on topics thta are emerging in science, technology, politics etc. தமிழ் வளர்ச்சி முதலான கருத்துகளை அடக்கி வாசிப்பதே சரியாக இருக்கும். பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் மாணவர்களுக்குக் கூடுதலான தகவல்கள், அதுவும் தரமான தகவல்கள், கலைக்களஞ்சிய கட்டுரைகளாக கிடைக்கும் இடமாக த.வி. திகழ வேண்டும் என்பது ஒரு குறிக்கோள்.

3)We are trying to provide professional, quality content in diverse topics in Tamil, for which there is some paucity. There are not too many authentic source-books in Tamil, in many areas, though some extensive reviews and introductory books are being written. Also Tamil Wiki is not the only source. Tamil has many encyclopedias (some specialised, some general). While you mention Vikatan's Concise Brit. Ency., which is good, you could also mention Tanjore Encyclopedia in Tamil on Science and Medcine etc.

The above are some random thoughts at this point in time.--செல்வா 18:27, 24 ஏப்ரல் 2009 (UTC)


*In English Wikipedia, the primary and nearly the singular motivation for editors, is to document and spread knowledge. English as a medium is incidental. However, in the case of Tamil Wikipedia, most of the editors view this as a way to spread knowledge in Tamil. Many editors are motivated for being able to enrich the modern Tamil corpus, by adding quality content in Tamil.

An important point. Even Wikipedia Foundation acknowledges this. They know that in some languagues Wikipedia will be the first Encylopedia. However, the point about Tamil mother should be left out.--Natkeeran 22:43, 24 ஏப்ரல் 2009 (UTC)

செல்வா, நேரமின்மையினால் ஆங்கில விக்கி கட்டரையிலிருந்து பெற்று இங்கு ஒட்டியிருந்தேன். நீக்கவும் மாற்றவும் செய்து விடுகிறேன். நற்கீரனின் கருத்தையும் எண்ணத்தில் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 02:43, 25 ஏப்ரல் 2009 (UTC)

--Natkeeran 22:50, 24 ஏப்ரல் 2009 (UTC)

Minor Notes

தொகு
  • Sundar, Tamil Wikipedia did organize the three workshops. But, we participated and delivered talks/presentations in other workshops.
  • Engineer, Scientists..etc perhaps should not be capitalized. --Natkeeran 23:05, 24 ஏப்ரல் 2009 (UTC)

Glossaries

தொகு

Are they? They can be considered enclopedias. Some entries are pages long. Also, you may want to specify the date. --Natkeeran 19:51, 25 ஏப்ரல் 2009 (UTC)

ஓ, அப்படியா. மாற்றி விடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 05:16, 26 ஏப்ரல் 2009 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா தொடக்கம் பற்றிய சில மேலதிகத் தகவல்கள்

தொகு

2003 செப்டெம்பர் 30 ஆம் தேதி,

- Join http://groups.yahoo.com/group/erumbugal - மனித மேம்பாடு

என்னும் உள்ளடக்கத்தோடு இருந்த தமிழ் விக்கிப்பீடியாப் பக்கம், அக்காலத்தில் புதிதாகத் தொடங்கும் மொழிகளின் விக்கிப்பீடியாக்களுக்கு வழங்கப்படும் ஒரு எளிமையான ஆங்கில இடை முகத்தைக் கொண்ட ஒரு பக்கமாகும். 2003 நவம்பர் 3 ஆம் திகதி அகத்தியர் மடற்குழுவில் முகுந்தராஜின் தமிழ் விக்கிப்பீடியாவைத் தொடக்கவேண்டும் என்ற வேண்டுகோள் வந்தது. அதில் அவர் ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு இணைப்புக் கொடுத்திருந்தார். அந்நாட்களில் ஆங்கில விக்கியின் முதற் பக்கத்திலேயே புதிய மொழிகளில் விக்கிப்பீடியா தொடங்கிவதற்கான இணைப்பு இருந்தது. அந்த இணைப்பைப் பயன்படுத்தி http://meta.wikipedia.org/wiki/LanguageTa.php என்னும் பக்கத்தில் இருந்து தமிழில் இடைமுகத்தை உருவாக்குவதற்காக மொழிபெயர்க்க வேண்டிய கோப்பைப் பதிவிறக்கம் செய்துகொண்டேன். 2003 நவம்பர் 4 ஆம் தேதி முதல் ஏறத்தாழ அம்மாத இறுதிவரை அக் கோப்பைத் தமிழாக்கம் செய்தேன் 2003 நவம்பர் 22 ஆம் தேதியளவில் 95% மொழிபெயர்ப்பு வேலைகள் நிறைவேறியபின் இது குறித்த அறிவிப்புக் குறிப்பொன்றையும் 2003 நவம்பர் 22 அன்று அகத்தியர் மடற் குழுவிலேயே இட்டிருக்கிறேன்.

 
பிரையன் விபரின் வேண்டுகோள் பக்கத்தின் படம். தமிழ் விக்கியின் சின்னத்தைப் பதிவேற்றுமாறு விடுத்த வேண்டுகோள்.

பின்னணியில் மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்து கொண்டிருந்தபோது அப்போது மீட்டா விக்கியில் இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவரான Brion Vibber என்பவரோடு அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தேன். அப்போது நான் விக்கிப்பீடியாவில் பதிவு செய்திராததால் இது குறித்த பதிவுகளைப் பெறுவது கடினமாக உள்ளது. நவம்பர் 22 ஆம் தேதி அவரது பயனர் பக்கத்தில் நான் உருவாக்கிய தமிழ் விக்கிப்பீடியா சின்னத்தை பதிவேற்றுமாறு கேட்டுக்கொண்ட குறிப்பே இப்போது கிடைக்கக் கூடியதாக இருக்கும் இத் தொடர்புகள் குறித்த மிக முந்திய குறிப்பு (படத்தைப் பார்க்கவும்.). 2003 நவம்பர் 22 ஆம் தேதிக்குப் பின்னரே தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தமிழ் இடைமுகம் உருவானது என எண்ணுகிறேன்.

Architecture என்னும் பயனர் பெயரில் பங்களிப்புக்களைத் தொடங்குமுன்னர் பதிவு செய்யப்படாத நிலையிலேயே பங்களிப்புக்களைச் செய்துள்ளேன். முதல் பக்க வரலாற்றில் காணப்படும் தொடக்க ID முகவரிகளில் சிலவும் என்னுடையவையே. இடைமுக மொழி பெயர்ப்புக்களைச் செய்து கொண்டிருந்தபோதே முதற்பக்கத்தை வடிவமைத்து உருவாக்குவதிலும் ஈடுபட்டிருந்தேன். அப்போது, முதல் உள்ளடக்கமான "எறும்புகள்" பற்றிய குறிப்பையும், "மனித மேம்பாடு" என்னும் சொற்றொடரையும் முதற் பக்கத்தின் கடைசியில் விட்டு வைத்திருந்தேன். 2003 டிசம்பர் 2 ஆம் தேதி ஒரு பயனர் அவற்றைக் குறிப்பிட்ட குழுவின் விளம்பரம் எனக்கூறி நீக்கிவிட்டார். உண்மையில் "மனித மேம்பாடு" என்னும் தொடர் "எறும்புகள் குழு"வின் Motto என எண்ணுகிறேன்.

2003 நவம்பர் 12 ஆம் தேதி முதற் பக்கத்தில் இணைப்புக்கொடுத்து முதலாவது தமிழ்க் கட்டுரை ஆங்கிலத் தலைப்புடன் பயனர் அமல்சிங்கினால் எழுதப்பட்டது.

மயூரநாதன் 20:39, 25 ஏப்ரல் 2009 (UTC)

தகவல்களுக்கு நன்றி, மயூரநாதன். இவற்றை உள்வாங்கிக் கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்கிறேன். -- சுந்தர் \பேச்சு 05:18, 26 ஏப்ரல் 2009 (UTC)
மயூரநாதன், இச்செய்திகளை நீங்கள் இங்க்கே பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாற்றுக்கு இவை பயனுடையாவை. --செல்வா 17:08, 26 ஏப்ரல் 2009 (UTC)
மயூரநாதன், செல்வா, இவ்வரலாற்றைக் கட்டுரையில் நான் சேர்ர்த்துள்ளது சரியா என ஒருமுறை பார்த்துவிடுங்கள். -- சுந்தர் \பேச்சு 17:48, 26 ஏப்ரல் 2009 (UTC)
சுந்தர், சரியாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். சில சிறு உரை திருத்தங்கள் செய்யலாமா? இரண்டொரு சொற்கள் சேர்த்தல், கழித்தல், சொற்றொடர் மாற்றம் முதலியன. --செல்வா 18:14, 26 ஏப்ரல் 2009 (UTC)
சுந்தர், நீங்கள் புதிதாகச் சேர்த்த பகுதிகளும் சரியாகவே உள்ளன என்பது எனது கருத்து. மயூரநாதன் 18:23, 26 ஏப்ரல் 2009 (UTC)
கட்டாயம் செய்யுங்கள், செல்வா. கருத்துக்கு நன்றி மயூரநாதன். --சுந்தர் \பேச்சு 03:01, 27 ஏப்ரல் 2009 (UTC)

Nirojans caption

தொகு
  • "several" -> "hundards of articles" would probably be better. (its more than 2000)
  • perhas you could ask him to supply a more clear picture.

--Natkeeran 15:00, 26 ஏப்ரல் 2009 (UTC)

மாற்றியுள்ளேன். அவரது மின்னஞ்சல் சுட்டி என்னிடம் இல்லை. சிறப்பு:EmailUser/நிரோஜன்_சக்திவேல் வசதியைப் பயன்படுத்தினால் அவர் முகவரி இல்லை என்று காட்டுகிறது. உங்களிடம் அவரது மின்னஞ்சல் முகவரி உள்ளதா? -- சுந்தர் \பேச்சு 15:11, 26 ஏப்ரல் 2009 (UTC)
  • "nirojan sakthivel" <nirojansakthivel@hotmail.com>,
  • Sundar, the First English article redirect has not been deleted. See above.--Natkeeran 15:17, 26 ஏப்ரல் 2009 (UTC)


ProVK wrote 188 articles (so far). Not just several. Please change the caption. Thanks. --Natkeeran 01:26, 27 ஏப்ரல் 2009 (UTC)

Editorial comments

தொகு

Sundar, please check the editorial "corrections" and "modifications" I've made. In one place I've left a comment within brackets (to be read by you and then deleted). Please read the changes I've made carefully. Many of your comments and observations are interesting and your suggestion that such an exercise done with other Wikis in a similar stage to identify common features is indeed a very useful one. I don't know, personally, the validity of some of your comments about English Wiki (being different in editorial team make up etc.), but they are not important perhaps. On the whole your paper is a short good study, given the time taken to do the study. Wishing you all the best.--செல்வா 21:49, 29 ஏப்ரல் 2009 (UTC)

Thank you very much, Selva. I looked into each of your changes carefully and agree with them. I agree that the earlier version was a quick and dirty job to meet the original April 15 deadline. Even now, it's not a thorough paper, but, for the casual track, this should suffice. I now feel that the English Wiki comparison is not supported by facts as well as not warranted. Will remove that. -- சுந்தர் \பேச்சு 04:12, 30 ஏப்ரல் 2009 (UTC)

Graph is bit outdated, we already passed 18000...

தொகு

--Natkeeran 00:59, 30 ஏப்ரல் 2009 (UTC)

Yes, but, we need data for the intervening months here.-- சுந்தர் \பேச்சு 04:14, 30 ஏப்ரல் 2009 (UTC)

Myooranathan's contributions todate (May 1, 2009)

தொகு

Mayooranathan has written more than 2760. In fact 2763 as of today. He will soon attain the unique status of having written 3000 articles (he will become மூவாயிரவர்!)and continue towards 5000, which is only the next of many further goals. His contributions in breadth and depth, and relevance and importance are unparalleled in Tamil Wiki in my view. --செல்வா 14:08, 1 மே 2009 (UTC)Reply

அருமையான செய்தி. வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் ஏப்பிரல் 29-ம் நாளே அணுப்பிவிட்டேன். கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டால் பதிப்புக்கு முன்னர் இம்மாற்றத்தைச் செயலுபடுத்தி விடுகிறேன். மேலும், தரவுகள் தெளிவாகக் காட்டும் 10,000 தொகுப்புகள் செய்த நால்வர் நற்கீரன், மயூரநாதன், கனகு, கோபி ஆகியோரைப் பற்றிய குறிப்பு ஒன்றை இட்டு தொடர்புடைய வரியிலிருந்து இணைக்க வேண்டுமென்று நினைக்கிறேன். தவிர தரவுகள் மார்ச்சு வரை இற்றைப்படுத்தப்பட்டுள்ளன. இயன்றால் அவற்றையும் இணைக்க முயல்வேன். -- சுந்தர் \பேச்சு 03:27, 3 மே 2009 (UTC)Reply
அது பழைய தகவல். இன்றைய (மே 4, 2009) தகவல் நற்கீரன் 36,400+, சீறீதரன் கனகு 19,400+, மயூரநாதன் 17,800+, கோபி 13,600+, செல்வா 11,700+ தெரன்சு (Trengarasu) 10,658, சிவக்குமார் 9,979 ஆகவே ஏறத்தாழ 7 பேர் 10,000 ஐத் தாண்டுவர் (விரைவில் தாண்ட இருக்கும் சிவக்குமாரையும் சேர்த்து). --செல்வா 13:09, 4 மே 2009 (UTC)Reply
அருமையான தகவல், செல்வா! பதிப்புக்கு முன்னதாக இற்றைப்படுத்தி விடலாம். அதற்கு முன்னதாக சிவாவும் 10,000 தொகுப்புகளை எட்டி விட்டால் நன்றாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 13:23, 4 மே 2009 (UTC)Reply
நாளைக்குள் எட்டப்பார்க்கிறேன். :)--சிவக்குமார் \பேச்சு 19:33, 4 மே 2009 (UTC)Reply

நானும் பத்தாயிரம் தொகுப்புகள் தாண்டிட்டேன். என்னையும் சேர்த்துக்குங்க. நானும் விக்கிப்பீடியன் தான். நானும் விக்கிப்பீடியன் தான். நானும் விக்கிப்பீடியன் தான் :)--ரவி 13:01, 24 ஜூன் 2009 (UTC)

அய்யய்யோ, அப்ப நான் விக்கிப்பீடியன் இல்லையே. ;) -- சுந்தர் \பேச்சு 15:26, 24 ஜூன் 2009 (UTC)

கட்டுரை தேர்வாகியுள்ளது

தொகு

இந்தக் கட்டுரை விக்கிமேனியா மாநாட்டுக்குத் தேர்வாகியுள்ளது. எனக்கு பயண உதவித்தொகையும் கிடைத்துள்ளது. தங்கும் செலவுக்கான உதவிக்கு இந்திய விக்கி நிறுவனத்தை (இன்னும் பதிவு செய்யவில்லை) அணுகியுள்ளேன். கிடைக்காவிட்டாலும் சமாளித்துப் போய்விடலாம் என்றிருக்கிறேன். கட்டுரையை மேம்படுத்த உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி.

இனி செய்ய வேண்டியது: கடைசியாகக் கிடைத்த நிலவரத்தைப் பதிவு செய்ய வேண்டும். இம்மாத இறுதியில் செய்யவுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 11:32, 24 ஜூன் 2009 (UTC)

கட்டுரையை மதிப்பீடு செய்தவர்கள் ஒருபுறம் பாராட்டியிருந்தாலும் வருத்தம் தெரிவித்துக் கொண்டே "This is an interesting viewpoint on how to support a "minority" (please excuse the term ;-)) language." என்பது போலக் கருத்துத் தெரிவித்துள்ளனர். தாய்மொழியாகக் கொண்டவர்கள் எண்ணிக்கையின்படி கிட்டத்தட்ட 18-ஆவது இடத்தில் உள்ள தமிழ் இவ்வாறு உள்ளது வருத்தமளிக்கிறது. போலந்தில் நடைபெறும் அடுத்த மாநாட்டில் நம்மில் எவர் சென்றாலும் தலைநிமிர்ந்து செல்லும் நிலை வர வேண்டும். (இப்போது நான் தலை குனிந்து செல்லப்போவதில்லை. இருந்தும் ...) -- சுந்தர் \பேச்சு 11:37, 24 ஜூன் 2009 (UTC)
மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள் சுந்தர். --சிவக்குமார் \பேச்சு 12:15, 24 ஜூன் 2009 (UTC)

வாழ்த்துகள் சுந்தர்--ரவி 13:00, 24 ஜூன் 2009 (UTC)

நல்ல செய்தி சுந்தர். பாராட்டுக்கள் மாநாட்டில் தமிழ் விக்கிப்பீடியாவின் கொடியை உயரப் பறக்கவிடுங்கள். உங்கள் பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். மயூரநாதன் 16:14, 24 ஜூன் 2009 (UTC)

உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள், சுந்தர். எந்தக் கட்டுரை என்று அறிந்து கொள்ள முடியுமா? -- பரிதிமதி 16:22, 24 ஜூன் 2009 (UTC)

அனைவருக்கும் நன்றி. பரிதிமதி, கட்டுரை இங்கே (இந்தப் பேச்சுப்பக்கத்துக்கான கட்டுரைப் பக்கம்) -- சுந்தர் \பேச்சு 17:03, 24 ஜூன் 2009 (UTC)

சுந்தர், நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! செய்தி அறிந்து மிக மகிழ்ந்தேன். பயணம், கட்டுரையளிப்பு எல்லாம் அருமையாகவும் வெற்றியுடனும் அமைய நல்வாழ்த்துகள்! சுருக்கமாகவேனும் உங்கள் உளப்பதிவுகளை இங்கும் பகிர்ந்துகொள்ளுங்கள். --செல்வா 18:01, 24 ஜூன் 2009 (UTC)

ரெம்ப மகிழ்ச்சி சுந்தர். வாழ்த்துக்கள். உங்களின் முனைவாக்கத்துக்கு நல்ல பலன். சுந்தர், கட்டுரை பற்றிய அவர்களின் கருத்துக்களை எங்கே படிக்கலாம்? --Natkeeran 20:54, 24 ஜூன் 2009 (UTC)
வாழ்த்துக்கள் சுந்தர். மிக்க மகிழ்ச்சி. உங்கள் பயணம் இனிதே அமையட்டும். --Daniel pandian 21:59, 24 ஜூன் 2009 (UTC)
சுந்தர், உங்கள் பயணம் வெற்றிபெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.--Kanags \பேச்சு 23:20, 24 ஜூன் 2009 (UTC)
அனைவருக்கும் நன்றி. செல்வா, இங்கு கட்டாயம் பதிவேன். நற்கீரன், உங்கள் அனைவரது ஒத்துழைப்பும் ஊக்கமும் இல்லாமல் இதைச் செய்திருக்கவே முடியாது. மதிப்பீட்டாளர்களின் கருத்துக்களைக் கீழே இட்டுள்ளேன். முதலில் இதைப் பொதுவில் இடுவது முறையா என்று தயங்கினேன், ஆனால் இதில் ஒன்றும் தவறு இல்லை என்றே தோன்றுவதால் இப்போது இட்டுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 04:59, 25 ஜூன் 2009 (UTC)

இற்றைப்படுத்தம்

தொகு

விக்கிமேனியா பயணத்திட்டத்தை உறுதி செய்துள்ளேன். பங்கேற்பாளர்கள் முன்னிலையில் ஆகத்து 27-ம் நாள் (மாநாட்டின் இரண்டாம் நாள்) முதல் நபராக கட்டுரை தொடர்பான தகவல்களைச் சுவடியாகத் தர வேண்டும். அதற்கு வெள்ளோட்டமாக ஆகத்துப் பதினாறாம் நாள் (வரும் ஞாயிறு) பெங்களூரில் பேச உள்ளேன். இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தரவுகளை இற்றைப் படுத்தவும் பிரசண்டேசனை ஏற்பாடு செய்யவும் வேண்டும். கருத்துக்களையும் ஊட்டங்களையும் வரவேற்கிறேன். -- சுந்தர் \பேச்சு 14:12, 13 ஆகஸ்ட் 2009 (UTC)

அருமை, அருமை!! உங்கள் ஆய்வுரையாற்று நல்லபடியாக நடந்தேற நல்வாழ்த்துகள்!--செல்வா 14:16, 13 ஆகஸ்ட் 2009 (UTC)
நன்றி செல்வா. -- சுந்தர் \பேச்சு 14:21, 13 ஆகஸ்ட் 2009 (UTC)
சுந்தர், உங்கள் பயணமும், ஆய்வுரையும் வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துக்கள். மயூரநாதன் 18:42, 13 ஆகஸ்ட் 2009 (UTC)
நன்றி மயூரநாதன். -- சுந்தர் \பேச்சு 16:38, 15 ஆகஸ்ட் 2009 (UTC)

தமிழாக்கம்

தொகு

இக்கட்டுரை விக்கிமேனியாவில் முன்வைக்கப்படுவதை முன்னிட்டு, தற்போது தலைப்பகுதியில் இருந்து தளம் முழுக்க தொடுப்பு தந்திருக்கிறோம். இப்போது தான் ஒன்று உறைத்தது: கட்டுரையைத் தமிழாக்க வேண்டும் !--ரவி 19:02, 15 ஆகஸ்ட் 2009 (UTC)

விக்கிமேனியா மாநாடு

தொகு

ஆய்வுரை படித்து முடித்து விட்டேன். ஓரளவு நல்ல வரவேற்பு இருந்தது. கட்டுரை வாசிப்பைத் தவிரவும் விக்கிமீடியா நிறுவன அலுவலர்கள் பலரைச் சந்தித்துப் பேசினேன். விக்கிமீடியா நிறுவனத்தின் ஐந்தாண்டுத் திட்டமிடல் குழுவில் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுள்ளனர். ஏதாவது நடக்கிறதா பார்ப்போம். பீடீயாப்பிரசு (Pediapress) நிறுவன நுட்பியலாளரைச் சந்தித்து தமிழ் மின்னூல் வடிப்பதில் உள்ள சிக்கலைப் பற்றி எடுத்துக் கூறினேன். மேற்கொண்டு அவரிடம் தொடர்ந்து பேசிச் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அவர்களிடம் தமிழுக்கான எழுத்துருக்கள் இல்லாததால் இவ்வாறு நடைபெறுவதாகக் கூறினார். அனுப்பி வைக்க வேண்டும். மற்றபடி சில ஆய்வுரைகள் பயனுள்ளதாக இருந்தன. ஊருக்குத் திரும்பியதும் சில நாட்களில் விரிவாக எழுதுகிறேன். இப்போது http://translatewiki.org/ நிறுவனர் சீபிராண்டிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். இடைமுகத் தமிழாக்கம் பற்றி அறிந்து கொள்ள முற்படுகிறேன். -- சுந்தர் \பேச்சு 18:20, 27 ஆகஸ்ட் 2009 (UTC)

ஆய்வுரை நிகழ்த்துதல் நன்றாக அமைந்தது. பலர் ஆர்வத்துடன் கவனித்தனர். சிம்மி, சூ போன்ற விக்கிமீடியா அலுவலர்களும் நம் திட்டத்தைப் பற்றி அறிந்து கொண்டனர் (பிற உரைகளின் போது நான் தெரிவித்த தகவல்களின் வாயிலாக.) இணைய பங்களிப்பாளர்கள் எண்ணிக்கைக்கேற்ப கட்டுரைகளின் விகிதத்தை சிம்மியின் உரையில் பார்த்ததில், தமிழ் பின்தங்கியிருந்தாலும், பிற இந்திய மொழிகளைக் காட்டிலும் சற்று உயர்ந்திருந்தது.

  • பீடியாப்பிரசு - ஈக்கோ (Heiko) என்பவரைக் கண்டு பேசினேன். மின்னஞ்சலில் எழுத்துருவை அனுப்பினால் தமிழுக்கும் வேலை செய்யும்.
  • குல் வாதுவா - இவர் விக்கிமீடியா வளர்ச்சி அலுவலர், தேவையான உதவிகளுக்கு அணுகலாம்.
  • சீபிராண்டு - translatewiki-ஐ விளக்கினார், தொடர்ந்து வழு அறிக்கைகளில் நமக்கு ஆதரவு அளித்தவர். நேரில் நன்றி சொன்னேன். உதவிகளுக்கு அணுகலாம்.
  • செரார்டு எம் - இவரும் சீபிராண்டுடன் உள்ளவர். தமிழ் விக்கியில் மிகுதியாகப் பார்க்கப்படும் முதல் 100 பக்கங்களின் பகுப்புகளைக் கேட்டிருக்கிறார், வலைப்பதிவில் ஒப்பு நோக்கும் பொருட்டு
  • பெலாயத்து - வங்காள நாட்டினர், வங்க மொழி விக்கியில் பெரும் பங்களிப்பாளர், தகவல்களைப் பறிமாறிக் கொள்ளலாம்
  • Lodewik (நெதர்லாந்து) - விக்கி நாட்டுப்பிரிவுக் குழுவில் உள்ளார்
  • Liam - ஆத்திரேலியா விக்கிமீடியாப் பிரிவு அலுவலர்
  • Jonathan - StrategyWiki-ல் திட்டங்களைச் சேர்க்கும்படி ஊக்குவித்தார்
  • en:WP:1 திட்ட நெறியாளருடன் பேசினேன். அச்சிலும் வட்டிலும் கொண்டு வருவது தொடர்பில் அவரது துய்ப்பின்வழி தகவல்களைப் பெற்று குறிப்பெடுத்துள்ளேன். விரிவாக எழுதுகிறேன்.
  • இடாயிச்சு விக்கியிலும் உயிரியியல் திட்டமே கோலோச்சுவதை அறிந்தேன். அவர்கள் கட்டுரைகளைத் தரம்பிரிக்கும் முறைகளைக் கேட்டறிந்தேன்.
  • செஞ்சிலுவைக்குழுவிலிருந்து கற்க வேண்டியது, விக்கி மென்பொருள் பயன்பாடு போன்ற தலைப்புகளில் நடந்த பேச்சுக்களையும் கேட்டு வந்தேன்.

மொத்தத்தில் பல தகவல்கள், நட்புகள் கிடைத்தன. அவர்களைத் தொடர்பு கொண்டு ஆவன செய்ய வேண்டும். தமிழ் விக்கியைப் பற்றிய அறிமுகத்தையும் தர முடிந்தது. படங்களைப் பதிவேற்றுகிறேன். தென் அமெரிக்க விலங்குகளைப் பற்றி கட்டுரைகளும் எழுதுவேன். -- சுந்தர் \பேச்சு 17:06, 15 செப்டெம்பர் 2009 (UTC)Reply

நல்ல கருத்துப் பரிமாற்றச் சுருக்கம், சுந்தர்! மிக்க நன்றி. தென்னமெரிக்க விலங்குகளைப் பற்றி கட்டுரை எழுத இருப்பது அறிந்து மகிழ்ச்சி. கூடிய உதவிகள் செய்கிறேன். என்னிடம் உள்ள படங்களும் திரட்டிய கருத்துகளையும் கொண்டு எழுதப்படாமல் உள்ளன (தென்னமெரிக்க, குறிப்பாக பெரு நாட்டு விலங்குகள், இடங்கள், மக்கள் வரலாறுகள் பற்றியவை) --செல்வா 20:41, 15 செப்டெம்பர் 2009 (UTC)Reply

சுந்தர் படங்கள் எங்கே?

தொகு

--Natkeeran 16:37, 10 அக்டோபர் 2009 (UTC)Reply

இப்போதைக்குச் சில படங்கள்.

ஆய்வுரை நிகழ்த்தல் -- சுந்தர் \பேச்சு 04:03, 11 அக்டோபர் 2009 (UTC)Reply

நல்ல உரை சுந்தர். பகிர்ந்ததற்கு நன்றி. நிகழ்வின் இறுதியில் எழும் கேள்வியில், "கடந்த நானூறு ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து வெளியேறி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் வாழும் தமிழர்.." என்று ஒரு பகுதி வருகிறது. இது போன்ற கேள்விகள் வரும் இடங்களில், குறிப்பாக உலக அரங்குகளில், "தமிழ் ஒரு இந்திய மொழி மட்டுமல்ல, ஈழத்தமிழர் பல நூற்றாண்டு வரலாறு கொண்ட தொல்குடிகள்" என்ற விளக்கத்தையும் தருவது நன்று--ரவி 10:26, 11 அக்டோபர் 2009 (UTC)Reply


இப்போது பாத்து முடிந்தேன். நன்றாக செய்திருந்தீர்கள். நீங்கள் ah நிறையப் போடுகிறீர்கள். அவற்றை முடிந்தால் தவிர்க்கலாம். --Natkeeran 16:02, 11 அக்டோபர் 2009 (UTC)Reply
ஆம், ரவி. இப்போதுதான் கவனித்தேன். என்னுடைய உரையில் ஈழத்தமிழரையும் இந்தியத்தமிழரையும் தொல்குடிகளாகவும் பிற பகுதிகளில் வாழும் தமிழர்களைக் குடியேறியவர்களாகவும் வேறுபடுத்தியிருந்தாலும், கலந்து கொண்ட (தமிழ்) நபர் ஒருவரின் கருத்தில் இருந்த இம்மாபெரும் தகவல் பிழையைத் திருத்தத் தவறிவிட்டேன்.
கருத்துக்கு நன்றி, நற்கீரன். இப்போதுதான் முதல் முறை அப்பதிவைக் கேட்டேன். ஆ மட்டுமல்ல "so on" என்பதையும் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளதை அறிகிறேன். இவ்வுரையின் எசுப்பானிய மொழிபெயர்ப்பையும் தேடிப்பிடித்து ஆவணப்படுத்த வேண்டும். நிகழ்ச்சியின் போதே உடனடி மொழிபெயர்ப்பை எசுப்பானியத்தில் செவி ஒலி பெருக்கி வழியாக நேர்த்தியாகத் தந்திருந்தது சிறப்பு. -- சுந்தர் \பேச்சு 16:49, 11 அக்டோபர் 2009 (UTC)Reply

č

Return to the project page "Tamil Wikipedia: A Case Study".