விக்கி கல்வி அறக்கட்டளை
விக்கி கல்வி அறக்கட்டளை (Wiki Education Foundation) அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவின் சான் பிரான்சிசுகோவை தளமாகக் கொண்ட ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.[1] சில சமயங்களில் சுருக்கமாக விக்கி கல்வி என்றும் அழைக்கின்றனர். விக்கிபீடியாவின் கல்வித் திட்டத்தை இவ்வமைப்பு நடத்துகிறது. கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள கல்வியாளர்கள் விக்கிபீடியாவை பாடநெறிமுறைகளுடன் ஒருங்கிணைப்பதை இத்திட்டம் ஊக்குவிக்கிறது.[2][3]
வரலாறு
தொகுவிக்கி கல்வி அறக்கட்டளை 2013 ஆம் ஆண்டு விக்கிமீடியா நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. கல்வித் திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி சிறப்பு ஆதரவை வழங்குவதற்காகவும் விக்கிபீடியாவுடன் ஈடுபடும் கல்வி ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதற்காக கூடுதல் திட்டங்களை உருவாக்குவதற்காகவும் விக்கிமீடியா அறக்கட்டளை 2012 ஆம் ஆண்டில் இத்திட்டத்தை தொடங்கியது.[3] இலாப நோக்கமற்ற நிறுவனங்களை அங்கீகரித்து வழங்கப்படும் அமெரிக்க்க் குறியீட்டு எண் 501 (சி) (3) தொண்டு என்ற தொண்டு தகுதிநிலை விக்கி கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது.[3][4]
விக்கிமீடியா அறக்கட்டளையின் மூத்த திட்ட இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்த பிராங்க் சூலன்பர்க்கை 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை மற்றும் விக்கி கல்வி அறக்கட்டளை நிறுவனம் ஆகியவற்றுக்கான முதலாவது நிர்வாக இயக்குநராக பணியமர்த்துவதாக அறிவிக்கப்பட்டது.[3] இதே ஆண்டு ஏப்ரல் மாதம் ஆக்சுபோர்டில் நடந்த உலக எழுத்தறிவு உச்சி மாநாட்டில் சூலன்பர்க் விக்கி கல்வி அறக்கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தினார். கல்வியறிவுக்கு உலகளாவிய மேம்பாடுகளைச் செய்வதை இந்த மாநாடு அப்போது தனது நோக்கமாகக் கொண்டிருந்தது.[5]
தலைமை
தொகு2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சூலன்பர்க் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார். டயானா சிட்ராசுமேன் அறக்கட்டளையின் இயக்குநர்கள் குழுவிற்கு தலைமை தாங்கினார்.[6][7]. எழுத்து மற்றும் சொல்லாட்சிக் கலை மையத்தின் இயக்குநரும், மிசிசிப்பி பல்கலைக்கழகத்தின் ஆங்கில இணை பேராசிரியருமான ராபர்ட் கம்மிங்சும் இயக்குநர்கள் குழுவில் பணியாற்றினார்.[8] 1977 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலம் வரை வாழ்ந்த விக்கிபீடியரான அட்ரியான் வாதெவிட்சும் இக்குழுவில் பணியாற்றினார்.[9][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "QA Frank Schulenburg announcement February 2014". San Francisco, California: Wikimedia Foundation. February 12, 2014. Archived from the original on பிப்ரவரி 26, 2014. பார்க்கப்பட்ட நாள் February 19, 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Monterrey, Carlos (February 12, 2014). "Frank Schulenburg named executive director of Wiki Education Foundation". San Francisco, California: Wikimedia Foundation. பார்க்கப்பட்ட நாள் February 19, 2014.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Press releases/Frank Schulenburg named executive director of new WEF". San Francisco, California: Wikimedia Foundation. February 12, 2014. பார்க்கப்பட்ட நாள் February 19, 2014.
- ↑ "Exempt Organizations Select Check: Wiki Education Foundation". Internal Revenue Service. பார்க்கப்பட்ட நாள் January 11, 2016.
- ↑ "Press Release: £80 Billion Wasted Every Year On Global Education Initiatives". World Literacy Summit. March 3, 2014. Archived from the original on ஏப்ரல் 23, 2014. பார்க்கப்பட்ட நாள் April 21, 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "People, papers and presentations". Rice News (Houston, Texas: Rice University). November 8, 2013 இம் மூலத்தில் இருந்து மார்ச் 7, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140307174623/http://news.rice.edu/2013/11/08/people-papers-and-presentations-179/.
- ↑ "Diana Strassmann". University of Chicago Law School. பார்க்கப்பட்ட நாள் April 21, 2014.
- ↑ "Visiting Research Fellows: Associate Professor Robert Cummings". University of Sydney. பார்க்கப்பட்ட நாள் April 21, 2014.
- ↑ Garrison, Lynsea (April 7, 2014). "How can Wikipedia woo women editors?". பிபிசி. https://www.bbc.com/news/magazine-26828726.
- ↑ Dunican, Rod (April 10, 2014). "Remembering Adrianne Wadewitz". Wikimedia Foundation. பார்க்கப்பட்ட நாள் April 21, 2014.
புற இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Wiki Education Foundation at Meta-Wiki
- Wikipedia Education Program, Diversifying Economic Quality: A Wiki for Instructors and Departments
- Experiences and Perspectives of Wikipedia Use in Higher Education பரணிடப்பட்டது 2014-04-22 at the வந்தவழி இயந்திரம் (PDF), Universitat Oberta de Catalunya (UOC)
- "Editing Wikipedia Entries Is Becoming A Class Assignment In Colleges Across The U.S." பரணிடப்பட்டது 2019-01-29 at the வந்தவழி இயந்திரம்
- "Wikis and Wikipedia as a teaching tool: Five years later" பரணிடப்பட்டது 2021-01-12 at the வந்தவழி இயந்திரம், by Piotr Konieczny, (user:Piotrus), First Monday, September 3, 2012