விக்தர் பியூசெயூக்சு
விக்தர் அலெக்சாந்திரே பியூசெயூக்சு (Victor Alexandre Puiseux) (பிரெஞ்சு மொழி: [pɥizø]; 16 ஏப்பிரல் 1820 - 9 செப்டம்பர் 1883) ஒரு பிரெஞ்சு வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். பியூசெயூக்சு தொடர் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது. பெர்ட்ரேண்ட் – டிக்குவெட் – பியூசெயூக்சு தேற்றமும் இவரது பெயராலும் வழங்குகிறது. இவர் மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டவர். இவர் 1848 இல் ஏறிச் சாதனைபடைத்த பிரெஞ்சு ஆல்ப்சு மலையின் ஒரு கொடுமுடி இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
விக்தர் பியூசெயூக்சு | |
---|---|
பிறப்பு | 16 ஏப்பிரல் 1820 அர்ஜென்டைல் |
இறப்பு | 9 செப்டெம்பர் 1883 (அகவை 63) Frontenay |
படித்த இடங்கள் | École Normale Supérieure |
பணி | கணிதவியலாளர், மலையேறுநர் |
குழந்தைகள் | பியேர் என்றி பியூசெயூக்சு |
விருதுகள் | Officer of the Legion of Honour |
அறிவியல் வாழ்க்கைப் போக்கு | |
துறைகள் | கணிதம், வானியல் |
முனைவர் பட்ட மாணவர்கள் | Spiru Haret, Camille Jordan |
இசுரவேலின் ஓர் ஜெக்கோ உயிரினமொன்றும் (டையோடாக்டைலசு பியூசெயூக்சு (Ptyodactylus puiseuxi)) இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது .[1]
வாழ்க்கை
தொகுஇவர் 1820 இல் வால்டாயிசேவில் உள்ள அர்ஜெண்டியூவில் பிறந்தார். இவர் சோர்பான் பல்கலைக்கழகத்தின் வான்கோள இயக்கவியல் கட்டில் பேராசிரிராக விளங்கினார். இவர் கணிதப் பகுப்பாய்வில் வல்லவரான இவர் இயற்கணிதச் சார்புகளில் பல புதிய முறைகளை அறிமுகப்படுத்தினார். வான்கோள இயக்கவியலுக்கான இவரது பங்களிப்புகள் அத்துறையை மிக உயர்நிலை அறிவுக்குக் கொண்டுசென்றது. இவர் 1871 இல் பிரெஞ்சு கல்விக்கழகத்துக்குப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
இவரது மகன்களில் ஒருவராகிய பியேர் என்றி பியூசியூக்சு பெயர்பெற்ற வானியலாளர் ஆவார்.
இவர் 1883 இல் பிரான்சில் உள்ள பிராண்டெனேவில் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. ("Puiseux", p. 212).
வெளியிணைப்புகள்
தொகு- O'Connor, John J.; Robertson, Edmund F., "Victor Alexandre Puiseux", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- கணித மரபியல் திட்டத்தில் விக்தர் பியூசெயூக்சு