விசாகப்பட்டினம் அரணை

ஊர்வன இனம்
விசாகப்பட்டினம் அரணை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பா. மெலனோசிடிக்டா
இருசொற் பெயரீடு
பார்குதியா மெலனோசிடிக்டா
செனீதர், 1801
வேறு பெயர்கள் [2]
  • அங்கியசு மெலனோசிடிக்கசு
    செனீதர், 1801
  • பார்குதியா மெலனோசிடிக்டா
    தாசு, 1999

பார்குதியா மெலனோசிடிக்டா என்பது பொதுவாக விசாகப்பட்டினம் அரணை அல்லது ரசல்சு காலில்லா அரணை என்று அழைக்கப்படுகிறது. இது தென்கிழக்கு இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சர்கார் கடற்கரையின் விசாகப்பட்டினம் பகுதியில் காணப்படும் அரணை ஆகும். இது ஒரு அகணிய உயிரி. 1790களில் பேட்ரிக் ரசல் காலத்தில் சேகரிக்கப்பட்ட இந்திய ஊர்வனவற்றில் முதன்மையானது. இந்த சிறினத்தின் மாதிரி சிற்றினம் அற்றுவிட்டதாகக் கருதப்பட்டது. பின்னர் இதன் வகைப்பாட்டியல் 1950-80களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஆந்திரப் பல்கலைக்கழக பேராசிரியர்களால் விசாகப்பட்டினத்தில் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து சமீபத்திய சேகரிப்புகளை மீண்டும் ஆய்வு செய்ததன் மூலம் சரி செய்யப்பட்டது. மேலும் இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வகத்தில் இதன் மாதிரி இனம் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

புவியியல் வரம்பு

தொகு

பா. மெலனோசிடிக்டா தன் வகை வட்டாரமான இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்திலிருந்து மட்டுமே அறியப்படுகிறது.[3]

விளக்கம்

தொகு

புதைந்து வாழக்கூடிய பா. மெலனோசுடிக்டா கால்கள் இல்லாத, நீளமான உடலைக் கொண்டுள்ளது. கண்கள் எச்ச உறுப்பாக உள்ளது. கீழ் இமைகள் மட்டுமே உள்ளன. காது திறப்புகள் பிளவுபட்டவை. இது 16.5 cm (6.5 அங்) மூக்கு-க்கு-குத நீளம் வரை வளரக்கூடியது. மேலும் வாலின் நீளம் 6.8 cm (2.7 அங்) ஆகும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Srinivasulu, C.; Srinivasulu, B.; Das, I. (2013). "Barkudia melanosticta". IUCN Red List of Threatened Species 2013: e.T174129A1413063. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T174129A1413063.en. https://www.iucnredlist.org/species/174129/1413063. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. "Barkudia melanosticta ". The Reptile Database. www.reptile-database.org.
  3. 3.0 3.1 Das I (1999).

மேலும் படிக்க

தொகு
  • Günther ACLG (1864). The Reptiles of British India. London: The Ray Society. (Taylor and Francis, printers). xxvii + 452 pp. + Plates I-XXVI. ("Anguis melanosticta [sic]", p. 95).
  • Schneider JG (1801). Historiae Amphibiorum naturalis et literariae. Fasciculus secundus continens Crocodilos, Scincos, Chamaesauras, Boas, Pseudoboas, Elapes, Angues, Amphisbaenas et Caecilias. Jena: F. Fromman. vi + 364 pp. + Plates I-II. (Anguis melanostictus, new species, pp. 323-324). (in Latin).
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசாகப்பட்டினம்_அரணை&oldid=3754303" இலிருந்து மீள்விக்கப்பட்டது