விஜயா முலே
விஜயா முலே (Vijaya Mulay 16 மே 1921 - 19 மே 2019) என்பவர் ஒரு ஆவணப்படப் படைப்பாளி, திரைப்பட வரலாற்றாசிரியர், எழுத்தாளர், கல்வியாளர், ஆராய்ச்சியாளர் ஆவார்.
விஜயா முலே | |
---|---|
2010 இல் விஜயா முலே | |
பிறப்பு | மும்பை | 16 மே 1921
இறப்பு | 19 மே 2019 தில்லி | (அகவை 98)
பணி | ஆவணப்பட படைப்பாளி, திரைப்பட வரலாற்றாசிரியர் |
உறவினர்கள் | சுகாசினி முலே (மகள்), அதுல் குர்து (மருமகன்) |
இவர் திரையலக வட்டாரத்தில் அக்கா என்று அன்புடன் அழைக்கப்பட்டார். [1] சத்யஜித் ரே, லூயிஸ் மல்லே, மிருணாள் சென் மற்றும் பிற திரையுலகப் பிரமுகர்களுடனான இவரது நெருங்கிய நட்பு இவருக்கு இந்திய திரைப்படத் துறை குறித்த ஒரு தனித்துவமான பார்வையை அளித்தது. அது இவரது பணியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய மற்றும் வெளிநாட்டு திரைப்படப் படைப்பாளிகளால் இந்தியா எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதை இவரது பணி ஆராய்ந்துள்ளது. இவர் தேசிய விருது பெற்ற நடிகை சுகாசினி முலேயின் தாயார் ஆவார். மேலும் துகள் இயற்பியல் இயற்பியலறிஞர் அதுல் குர்து இவரது மருமகன் ஆவார். சிறந்த கல்வித் திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்ற ஏக் அனேக் அவுர் ஏக்தா என்ற அசைபடத்தை இயக்கியதற்காக விஜயா முலே நினைவுகூரப்படுகிறார். [2]
வாழ்க்கையும் தொழிலும்
தொகுவிஜயா முலே இந்தியாவின் பம்பாயில் பிறந்தார்.
பம்பாய், பாட்னா, பீகார்
தொகு1940 ஆம் ஆண்டில், விஜயாவின் கணவர் பீகாரில் உள்ள பட்னாவுக்கு பணி மாறுதல் பெற்றபோது அவருடன் அங்கு சென்றார். பெருநகரமான பம்பாயுடன் ஒப்பிடும்போது விடுதலைக்கு முந்தைய பாட்னா இவருக்கு வேறொரு பிரபஞ்சத்திலிருந்து வந்த இடமாகத் தோன்றியது. ஆனால் பாட்னா பல்கலைக்கழகம் மகளிரை தனிப்பட்ட முறையில் படிக்க அனுமதித்தது. இதனால் விஜயா இளங்கலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தார்.
பயாஸ்கோப் எனப்படும் நகரத் திரையரங்குகளில் ஞாயிற்றுக்கிழமை காலைக் காட்சியில் ஆங்கிலப் படங்கள் பாதி விலையில் காட்டப்பட்டன. விஜயா ஊடகத்தை விரும்பத் தொடங்கினார், மேலும் திரை மொழியைப் பற்றிக்கொள்ளத் தொடங்கினார்.
பாட்னா இருந்து ஐக்கிய இரச்சியத்திற்கு
தொகு1946 இல் இவர் கல்வியில் முதுகலைப் பட்டத்திற்காக ஐக்கிய இராச்சியத்தின், லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் படிக்க அரசின் உதவித்தொகை பெற்றார்.
அங்கே இருந்தபோது, சாதாரண ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்த ஆங்கிலேய துரைமார்கள் போல் இல்லை என்பதை விஜயா உணர்ந்தார்.
இங்கிலாந்தில் இருந்த நாட்கள் குறித்து விஜயா முலே ஒரு நேர்காணலில் - பிரித்தானிய மக்கள் மீதான காலனித்துவ எதிர்ப்பு வெறுப்புடனும், பட்டப்படிப்பு படிக்கும் ஒரே நோக்கத்துடனும் நான் பிரிட்டன் சென்றிருந்தேன். அங்கு யாராவது என்னையோ, இந்தியாவையோ இழிவுபடுத்தி, அல்லது சிறிதளவு அவமதித்தாலோ அவர்களை புண்படுத்த தயாராக முனைப்புடன் இருந்தேன். ஆனால், சாதாரண ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பார்த்த துரைமார்களைப் போல் இல்லை என்பதை நான் விரைவில் அறிந்தேன்.
இங்கிலாந்தில் போருக்குப் பிந்தைய திரைப்படங்கள் ஒர்க்கர்ஸ் யூனிட்டி தியேட்டரில் முழுக்க முழுக்க திரையிடப்பட்டன. சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த படங்கள் அவ்வப்போது திரையிடப்பட்டன. நான் கிளாசிக் திரைப்படங்கள், சோதனை படங்கள், சோசலிச படங்களைப் பார்த்தேன். பல்கலைக்கழகத் திரைப்படச் சங்கத்தில் சேர்ந்ததன் மூலம் திரைப்படக் கலையைப் பற்றிய நல்ல கண்ணோட்டத்தையும் புரிதலையும் பெற்றேன். ஒரு காலத்தில் திரைப்படம் பார்ப்பது என்பது சாதாரண பொழுதுபோக்காக இருந்த நிலை மாறி அது தீவிர ஆர்வமானதாக மாறியது.
1959: சத்யஜித் ரே மற்றும் இந்தியாவின் முதல் திரைப்பட சங்கம்
தொகுவிஜயா 1949 இல் பாட்னா திரும்பினார் மேலும் உள்ளூர் திரைப்பட சங்கத்தில் தீவிரமாக இயங்கினார். 1954 இல், இந்திய அரசு இவரை கல்வி அதிகாரியாக நியமித்தபிறகு இவர் புது தில்லிக்கு குடிபெயர்ந்தார். அங்கு விஜயா தில்லி திரைப்பட சங்கத்தைத் திறக்கவும் சூழல் வாய்த்தது. 1959 ஆம் ஆண்டில், சத்யஜித் ராய் நிறுவனத் தலைவராகவும், விஜயா முலேவும், சித்தானந்த் தாஸ் குப்தாவும் இணைச் செயலர்களாகவும் இருந்து, எட்டு திரைப்பட சங்கங்கள் ஒன்றிணைந்து இந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு [3] உருவாக்கப்பட்டது.
சத்யஜித் ரேயின் மறைவுக்குப் பிறகு, விஜயா இந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்திய திரைப்பட தணிக்கை வாரியம், லூயிஸ் மல்லே மற்றும் தி டைடல் போர்
தொகு1962 இல் விஜயா இந்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தில் பணிபுரிய பம்பாய்க்கு அனுப்பப்பட்டார்.
விஜயா முலே ஒரு நேர்காணலில் - இந்திய மற்றும் வெளிநாட்டு திரைப்படங்களை மதிப்பிட அங்கீகரிக்கப்பட்ட குழுவின் மற்ற நான்கு உறுப்பினர்களுடன் ஐந்து ஆண்டுகள் நான் தலைமை அதிகாரியாக இருந்தேன். ஒரு திரைப்படம் பொதுப் பார்வைக்கு ஏற்றது என்ற அவர்களின் முடிவை, சார்புகள் பற்றிய நுண்ணறிவை இது எனக்கு அளித்தது. திரைப்பட தணிக்கை வாரியத்துடனான எனது பணி ஒரு கலவையான பணியாக இருந்தது. நான் சாதாரணமாக சலிப்புடன் படங்களைப் பார்த்து வர வேண்டியிருந்தது.
சத்யஜித் ரே, லூயிஸ் மல்லே ஆகிய இருவரும் விஜயாவின் முதல் படமான 'தி டைடல் போர்' படத்தை தயாரிக்க உதவினார்கள்.
மேன்ஹெய்ம் திரைப்பட விழாவில் திரையிட அதிகாரப்பூர்வமாக 'தி டைடல் போரை' இந்திய அரசாங்கம் தேர்ந்தெடுத்தது. பின்னர் பிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் படத்தை திரையிட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Akka Vijaya Mulay - Mother, Activist, Filmmaker, Author (1921-2019)". Archived from the original on 2021-11-21. பார்க்கப்பட்ட நாள் 2024-02-25.
- ↑ "National Award for Best Educational/Motivational/Instructional Film".
- ↑ "Official Website of FFSI". Archived from the original on 1 February 2011. பார்க்கப்பட்ட நாள் 14 July 2010. FFSI website