விஜய் கே. நம்பியார்
சென்னிச்சேரி விஜய் நம்பியார் (Chenicheri Vijay Nambiar, பிறப்பு ஆகத்து 1943) என்பவர் ஒரு ஓய்வு பெற்ற இந்திய தூதர் மற்றும் மியான்மரில் ஐ.நா பொதுச்செயலாளரின் சிறப்பு ஆலோசகராக பணியாற்றியவர். இவர் 2007 சனவரி முதல் நாள் முதல் 2012 பெப்ரவரி வரை ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனின் கீழ் செஃப் டி கேபினட் (தலைமைப் பணியாளர்) ஆக இருந்தார். இவர் ஐ.நா துணைப் பொதுச்செயலாளர் பதவி வகித்தார் மேலும் பொதுச்செயலாளரின் மூத்த நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.[1]நம்பியார் முன்பு இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும், தேசிய பாதுகாப்பு அவை செயலகத்தின் தலைவராகவும் பணியாற்றினார். இவர் முன்பு நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக (மே 2002-ஜூன் 2004) பணியாற்றினார். முன்னதாக இந்தியாவின் தூதராக, பாக்கித்தான் (2000-2001), சீனா (1996-2000), மலேசியா (1993-1996), ஆப்கானித்தான் (1990-1992) ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து பணியாற்றினார். முன்னதாக அல்ஜீரியாவில் இந்திய தூதராக (1985-1988) இருந்தார்.
விஜய் கே. நம்பியார் | |
---|---|
ஐக்கிய நாடுகள் அவையின் செஃப் டி கேபினட் | |
பதவியில் 1 சனவரி 2007 – பெப்ரவரி 2012 | |
முன்னையவர் | மார்க் மல்லோக் பிரவுன் |
பின்னவர் | சுசானா மல்கோரா |
ஐ.நா பொதுச் செயலாளரின் சிறப்பு ஆலோசகர் | |
பதவியில் 4 சனரவரி 2006 – 31 திசம்பர் 2006 | |
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் | |
பதவியில் மே 2002 – சூன் 2004 | |
பாக்கித்தானுக்கான இந்திய தூதர் | |
பதவியில் ஆகத்து 2000 – திசம்பர் 2001 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆகத்து 1943 புனே, பிரித்தானிய இந்தியா |
தேசியம் | இந்தியர் |
உறவினர் | சதீஷ் நம்பியார் (சகோததர்) |
முன்னாள் கல்லூரி | மும்பை பல்கலைக்கழகம் |
இந்திய வெளியுறவுச் சேவையில் தனது தொழில் வாழ்க்கையின் போது, 1970 கள் மற்றும் 1980 களில் பெய்ஜிங், பெல்கிரேட், நியூயார்க் போன்ற இடங்களில் பலதரப்பு பதவிகளில் பணியாற்றியுள்ளார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் வரலாற்று சிறப்புமிக்க சீனப் பயணத்தின் போது 1988 இல் கிழக்கு ஆசியாவைக் கையாளும் இணைச் செயலாளராக (டைரக்டர் ஜெனரல்) இருந்தார். 1980 களின் முற்பகுதியில் புது தில்லியில் உள்ள தலைமையகத்தில் பலதரப்பு விவகாரங்களையும் கையாண்டார். 1979 முதல் ஐ.நா, அணிசேரா நாடுகள் உச்சிமாநாடு, அமைச்சர்களின் மாநாடுகள் போன்ற பல மாநாடுகளில் இவர் தூதுக்குழு மட்டத்தில் பணியாற்றியுள்ளார்.
துவக்ககால வாழ்க்கையும், தொழிலும்
தொகுவிஜய் நம்பியார் இந்தியாவின், கேரளத்தை பீர்வீகமாக கொண்டவர். இவர் செனிச்சேரி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் 1943ஆம் ஆண்டு ஆகத்து மாதம் பூனாவில் பிறந்தார்.[2] இவர் லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் நம்பியாரின் தம்பி ஆவார். பம்பாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்ற இவர், 1965 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தின் வேந்தரின் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
நம்பியார் 1967 இல் இந்திய வெளியுறவுச் சேவையில் சேர்ந்தார். சீன மொழியில் நிபுணத்துவம் பெற்ற நம்பியார் தன் ஆரம்ப ஆண்டுகளின் இராஜதந்திர சேவையில் ஹாங்காங், பெய்ஜிங்கில் பணியாற்றினார். 1970 களின் நடுப்பகுதியில் யூகோஸ்லாவியாவின் பெல்கிரேடிலும் பணியாற்றினார்.
இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Official Biography of Vijay Nambiar". The United Nations. 13 April 2011 இம் மூலத்தில் இருந்து 12 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110712060920/http://www.un.org/News/ossg/sg/stories/nambia_bio.asp.
- ↑ "Kerala Center Honors Seven At Banquet Gala". Lokvani.com. 27 November 2006 இம் மூலத்தில் இருந்து 28 September 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110928073154/http://www.lokvani.com/lokvani/article.php?article_id=3700.