விடத்தல்தீவு சமர்

ஈழப்போரின் ஒரு பகுதி

விடத்தல்தீவு சமர் (Battle of Vidattaltivu) என்பது இலங்கையின் விடத்தல்தீவு நகரத்தின் மீது இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த ஒரு சமாரகும். இலங்கை உள்நாட்டுப் போரின் போது நான்காம் ஈழப் போரின் வடக்கு போரின் ஒரு பகுதியாக 2008 சூலை 16 அன்று இந்த சமர் நடந்தது. இந்தச் சமரில் 58 வது படைப்பிரிவின் வெற்றி பெற்றதன் மூலமாக 21 ஆண்டுகள் கழித்து இந்த நகரம் முதன்முதலாக இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.[1] இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, இந்த நகரம் புலிகளின் கடல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட முதன்மை தளமாக இருந்தது. மேலும் அவர்களின் தளவாட மையமாகவும் செயல்பட்டது, இராணுவத்தால் இந்த நகரம் கைப்பற்றப்பட்டது என்பது புலிகளுக்கு ஒரு "மோசமான அடி" எனப்பட்டது.[2]

விடத்தல்தீவு சமர்
ஈழப் போர்,
2008-2009 இலங்கையின் வடக்கு தாக்குதல் பகுதி
நாள் சூலை 16, 2008
இடம் மன்னாரில் இருந்து 20 கி.மீ வடக்கில்
அரச படைகளின் வெற்றி
பிரிவினர்
இலங்கை ஆயுதப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா:
பிரிக். சவேந்திர சில்வா
வேலுப்பிள்ளை பிரபாகரன்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடத்தல்தீவு_சமர்&oldid=3953960" இலிருந்து மீள்விக்கப்பட்டது