விட்ருவியன் மனிதன்

விட்ருவியன் மனிதன் (Vitruvian Man) என்பது உலகப் புகழ் பெற்ற ஓவியர் லியொனார்டோ டா வின்சியின் ஓவியங்களில் ஒன்றாகும். இதற்கு உரோமானிய கட்டிடக் கலைஞர் மார்கஸ் என்பவர் விட்ருவியன் மேன் எனப்பெயரிட்டார்.லியொனார்டோ டா வின்சியின் இப்படைப்பு மனித உடற்கூறியல் விகிதாச்சாரத்தை சித்தரிப்பதற்காக மிகவும் பிரபலமானது.[2] இது தற்போது இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரத்தின் அகாதமியா கலைக்கூடத்தில் உள்ளது.

விட்ருவியன் மனிதன்[1]
இத்தாலிய மொழி: L'uomo vitruviano
ஓவியர்லியொனார்டோ டா வின்சி
ஆண்டு1490
வகைஎழுதுகோல், பழுப்பு மை மற்றும் நீர்வர்ணம் மற்றும் காகிதம் மீது உலோக முனைகள்
பரிமானங்கள்34.4 cm × 24.5 cm (13.5 அங் × 9.6 அங்)
இடம்அகாதமி கலைக்கூடம், வெனிஸ், இத்தாலி

விட்ருவியன் மனிதனின் கைகள் மற்றும் கால்கள் ஒரு சதுரம் மற்றும் வட்டம் ஆகிய இரண்டின் சுற்றளவைத் தொடும் வகையில், நிர்வாண ஆண் உருவத்தை இது சித்தரிக்கிறது.

விளக்கம்

தொகு

விட்ருவியன் மனித ஓவியத்தின் வரைபடம், ஒரு நிர்வாண மனிதன் தனது கைகளையும் கால்களையும் ஒரு சரியான சதுரம் மற்றும் வட்டத்தில் விரித்து நிற்கிறான். இது மனித உடலின் கட்டமைப்பின் பரிமாணங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

  • ஒரு மனிதனின் நீட்டப்பட்ட கைகளின் நீளம் (இடமிருந்து வலமாக) அவனது உயரத்திற்கு சமம்.
  • தலையின் உச்சியிலிருந்து கன்னம் வரையிலான நீளம் மொத்த உயரத்தில் எட்டில் ஒரு பங்குக்கு சமம்.
  • மார்பின் உச்சியில் இருந்து தலையின் மேல் பகுதி மொத்த உயரத்தில் ஆறில் ஒரு பங்குக்கு சமம்.
  • மார்பின் உச்சியில் இருந்து முடி வரை மொத்த உயரத்தில் ஏழில் ஒரு பங்குக்கு சமம்.
  • தோள்பட்டை அகலம் மொத்த உயரத்தின் கால் பகுதிக்கு சமமாக இருக்க வேண்டும்.
  • மார்பிலிருந்து தலையின் மேல் பகுதி மொத்த உயரத்தின் கால் பகுதிக்கு சமம்.
  • முழங்கையிலிருந்து விரல் நுனி வரை உள்ள தூரம் மொத்த உயரத்தின் கால் பகுதிக்கு சமம்.
  • தோள்பட்டை முதல் முழங்கை வரை உள்ள தூரம் மொத்த உயரத்தில் எட்டில் ஒரு பங்குக்கு சமம்.
  • உள்ளங்கையின் நீளம் மொத்த உயரத்தில் பத்தில் ஒரு பங்கிற்கு சமம்.
  • ஒரு நபரின் ஆண்குறி அவரது உயரத்தில் சரியாக பாதி அமைந்துள்ளது.
  • ஒருவருடைய பாதத்தின் நீளம் ஒருவருடைய உயரத்தில் ஏழில் ஒரு பங்கிற்கு சமம்.
  • ஒரு நபரின் பாதத்தின் அடிப்பகுதியிலிருந்து முழங்காலின் அடிப்பகுதி வரையிலான நீளம் அவரது மொத்த உயரத்தில் நான்கில் ஒரு பங்காகும்.
  • ஒரு நபரின் முழங்காலுக்குக் கீழே இருந்து ஆண்குறி வரையிலான நீளம் அவரது மொத்த உயரத்தில் நான்கில் ஒரு பங்காகும்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்ருவியன்_மனிதன்&oldid=4105574" இலிருந்து மீள்விக்கப்பட்டது