வித்யாசாகர் (எழுத்தாளர்)

தமிழ் எழுத்தாளா்

வித்யாசாகர் புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் எழுத்தாளர் மற்றும் தமிழ்க் கவிஞர். வெங்கடாசலம் எனும் இயற்பெயருடைய இவர் முதுகலை இயந்திரப் பொறியாளர். குவைத்தில் எண்ணெய் சார்ந்த நிறுவனத்தில் தர மேலாண்மை மற்றும் ஆய்வுத் துறையில் மேலாளராகப் பணி புரிந்து வருகிறார். தரமேலாண்மைத் துறையில் சர்வதேச தலைமை தணிக்கையாளராகவும் உள்ளார். இவர் 1998 ஆம் ஆண்டு முதல் சமூக அக்கறையும் எழுத்தார்வமும் கொண்டு அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் சிறுகதை, கவிதை, புதினம், பாடல் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

வித்யாசாகர்
பிறப்புவெங்கடாசலம்.
நவம்பர் 25, 1976 (1976-11-25) (அகவை 48)
சென்னை,
தமிழ்நாடு,
 இந்தியா
இருப்பிடம்குவைத்
தேசியம்இந்தியர்
கல்விமுதுகலை பொறியியல் பட்டம்
(இயந்திரவியல்)
பணிதர மேலாண்மைத் துறை மேலாளர்.
பணியகம்எண்ணெய் மற்றும் வாயுசார் நிறுவனம்,
குவைத்
பெற்றோர்கோவிந்தன்,
கெம்பீஸ்வரி
வாழ்க்கைத்
துணை
செல்லம்மாள்
பிள்ளைகள்முகில்வண்ணன்,
வித்யா பொற்குழலி,
கவின் செழியன்
உறவினர்கள்கோ. குமரேசன்,
கோ. பாலாஜி,
கோ. விஸ்வநாதன்
வலைத்தளம்
www.vithyasagar.com

பல குழந்தைப் பாடல்கள் மற்றும் சமுதாய விழிப்புணர்வு பாடல்களை எழுதி முகில் படைப்பகம் வழியே வெளியீடு செய்கிறார். பிறந்தநாளிற்கென முதன்முதலில் தமிழில் பாடலை எழுதி இசையோடு வெளியிட்டது முக்கிய சிறப்பு.

எழுதியுள்ள நூல்கள்

தொகு

சிறுகதைத் தொகுப்புகள்

தொகு
  • சிறகுகள் இருந்தும் சிறை கைதிகளாய்
  • விற்கப் படும் நிலாக்கள்
  • திறக்கப் பட்ட கதவு
  • வாயிருந்தும் ஊமை நான்
  • சாமி வணக்கமுங்க
  • ஓட்டைக் குடிசை

புதினங்கள்

தொகு
  • கனவுத் தொட்டில் (நாவல்)
  • Dreams Cradle (கனவு தொட்டிலின் ஆங்கில மொழிபெயர்பு நாவல்)
  • கொழும்பு வழியே ஒரு பயணம் (ஈழவிடுதலை பற்றிய நாவல்)
  • காற்றின் ஓசை (சமூக இலக்கிய நாவல்)

கட்டுரைத் தொகுப்புகள்

தொகு
  • வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்
  • திரைமொழி (திரை விமர்சனம்)
  • மீனும் மீனும் பேசிக்கொண்டன..
  • கொஞ்சம் நில்லுங்கள் (நேர்க்காணல்கள்)
  • வாழ்வை செதுக்கும் ஒரு நிமிடம்

கவிதை நூல்கள்

தொகு
  • வீழ்ந்தது போதும்; வாழ்ந்து காட்டு
  • இதோ என் வீர முழக்கம்
  • பிரிவுக்குப் பின்
  • எத்தனையோ பொய்கள்
  • அவளின்றி நான் இறந்தேனேன்று அர்த்தம் கொள்
  • விடுதலையின் சப்தம் (ஈழக் கவிதைகள்)
  • கண்ணடிக்கும் கைதட்டும்; ஆனால் கவிதையல்ல
  • சில்லறை சப்தங்கள்
  • உடைந்த கடவுள்
  • வலிக்கும் சொர்கமிந்த வாழ்க்கை
  • அரைகுடத்தின் நீரலைகள்
  • ஞானமடா நீயெனக்கு
  • பறக்க ஒரு சிறகு கொடு
  • கண்ணீர் வற்றாத காயங்கள்.. (ஈழவிடுதலைக் கவிதைகள்)
  • நீயே முதலெழுத்து
  • அம்மாயெனும் தூரிகையே..
  • உன்மீது மட்டும் பெய்யும் மழை..
  • கல்லும் கடவுள்
  • காற்றாடி விட்ட காலம்
  • பறந்துப் போ வெள்ளைப்புறா
  • தூண்டுகோல் (சிறுவர் மற்றும் சீர்திருத்தப் பாடல்கள்)
  • வாழ்த்துச்சரம்
  • நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்
  • ஒரு கண்ணாடி இரவில்
  • பிஞ்சுப் பூ கண்ணழகே

சிறப்புகள்

தொகு

பாடல்கள்

தொகு

பரிசுகளும் விருதுகளும்

தொகு
  1. குவைத் நீதியின் குரல் மாத இதழ் வழங்கிய வெண்மனச் செம்மல் விருது.[சான்று தேவை]
  2. கலைமகள் இதழ் நடத்திய அமரர் ராமரத்னம் குறும் புதினம் போட்டியில் முதல்பரிசு.[சான்று தேவை]
  3. உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை வழங்கிய கவிதைக்கான "கவிமாமணி" விருது.[சான்று தேவை]
  4. உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை வழங்கிய எழுத்தாளர்களுக்கான "இலக்கியச் செம்மல் விருது" (மூன்று பிரிவுகளில்).[சான்று தேவை]
  5. உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை வழங்கிய கட்டுரைக்கான "தமிழ்மாமணி" விருது[சான்று தேவை]
  6. குவைத் தமிழோசைக் கவிஞர் மன்றம் வழங்கிய "பன்னூற் பாவலர்" விருது[சான்று தேவை]
  7. தமிழ்த்தாய் அறக்கட்டளை நிறுவனம் வழங்கிய 2015-ற்கான "சிறந்த படைப்பாளி" விருது[சான்று தேவை]
  8. தமிழ்நாடு பொறியாளர் குழுமம், குவைத் வழங்கிய 'நட்சத்திர பொறியாளர் விருது"
  9. குவைத் மக்கள்நல மன்றம் 2017-இல் வழங்கிய “எழுத்தோவியச் சித்தர்” விருது.
  10. ஓட்டைக்குடிசை சிறுகதை தொகுப்பிற்கு கிடைத்த “முத்துமீரான் விருது” பரணிடப்பட்டது 2019-04-16 at the வந்தவழி இயந்திரம்
  11. ஈழத்தில் வழங்கிய "தமிழ்த்தென்றல் பரணிடப்பட்டது 2019-04-16 at the வந்தவழி இயந்திரம்" விருது (2018)
  12. மலேயா பல்கலைக் கழகத்தில் பினாங்கு முதல்வர் வழங்கிய "தமிழ் படைப்பிலக்கியச் செம்மல்"
  13. இலங்கை, சம்மாந்துறையில் நடந்த விசேட கவியரங்கில் வழங்கிய கவி வேந்தர் விருது (2019) பரணிடப்பட்டது 2019-04-16 at the வந்தவழி இயந்திரம்
  14. குவைத், தாய்மண் கலை இலக்கியப் பேரவை வழங்கிய "அம்பேத்கர் சுடர் விருது"[தொடர்பிழந்த இணைப்பு] (14.04.2019
  15. இலண்டன் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட "இலக்கியச் சிகரம்" எனும் சாதனையாளர் விருது (09.09.2019)
  16. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவையும் சேர்ந்து வழங்கிய "ஆய்வுச் செம்மல் விருது"
  17. ஈரோடு தமிழ்ச் சங்கம் வழங்கிய "ஒளவையார்" விருது
  18. குவைத் கோல்டன் ஸ்டார் வழங்கிய "செந்தமிழ்ச் செல்வர்" விருது

அடிக்குறிப்புகள்

தொகு
  1. தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடப்பகுதி
  2. மாவீரர் தினப்பாடல்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யாசாகர்_(எழுத்தாளர்)&oldid=3228697" இலிருந்து மீள்விக்கப்பட்டது