விநாயக்புவா உத்தர்கர்

மறைந்த பண்டிட். விநாயக்புவா உத்தர்கர் (Vinayakbuva Utturkar) (1914 - 1989) இவர் ஓர் பாரம்பரிய இந்துஸ்தானி இசையில் குரலிசைக் கலைஞராக இருந்தார். தார்வாடு அனைத்திந்திய வானொலியின் 'ஏ' தர கலைஞராக இருந்த இவர், தில்லி, மும்பை, ஐதராபாத்து, புனே ஆகிய இடங்களிலும் நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவர் மீரஜ்ஜில் பண்டிட் விஷ்ணு கேசவ் உத்தர்கர் (ஜோசி), திருமதி. இலட்சுமி என்பவருக்கும் 1914 இல் ஐந்து சகோதரிகளுக்கிடையே ஒரே சகோதரராக பிறந்தார். இவர் ஆரம்பக் கல்வியை முடித்தப் பின்னர் இந்திய பாரம்பரிய இசையில் கவனம் செலுத்தினார். பின்னர் பெல்காமுக்குச் சென்று வனிதா வித்யாலயாவில் இசை பயிற்றுநராகவும் ஆசிரியராகவும் கற்பிக்கத் தொடங்கினார். இவர் திருமதி. பாகேசுரி என்பவரை (1924-2015) திருமணம் செய்து கொண்டார். இவர் செப்டம்பர் 1989 இல் இறந்தார். இவருக்கு இரவீந்திரன், விகாசு, அருண், உதய் என்ற நான்கு மகன்கள் இருந்தனர்.

விருதுகள் தொகு

இவர் குவாலியர் கரானாவைச் சேர்ந்தவர் (மறைந்த பண்டிட் பாலகிருஷ்ணபுவா இச்சல்கரஞ்சிகர் பாரம்பரியம்). குரல் இசையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு வழங்கப்பட்ட பல விருதுகளில், 1979 ஆம் ஆண்டிற்கான கர்நாடக மாநில இசை நிருத்ய அகாதமியின் விருதும் அடங்கும். 1980 மார்ச் 30 அன்று கருநாடக மாநில ஆளுநர் மறைந்த திரு கோவிந்த் நரேன் கையால் இவ்விருது வழங்கப்பட்டது. [1]

 
விநாயக்புவ உத்தர்கருக்கு வழங்கப்பட்ட விருது - சான்றிதழ்

மேற்கோள்கள் தொகு

  1. Deccan Herald Bangalore 31 March 1980

வெளி இணைப்புகள் தொகு

குறிப்புகள் தொகு

  • Bulletin of International News (Royal Institute of International Affairs), vol. 8 (1931-1932), p. 86.
  • Y.D. Phadke, Senapati Bapat: Portrait of a Revolutionary (Bombay: Senapati Bapat Centenary Celebration Samiti, 1981), p. 48.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விநாயக்புவா_உத்தர்கர்&oldid=3100218" இலிருந்து மீள்விக்கப்பட்டது