வினோத் சாகர்

இந்திய நடிகர் மற்றும் பின்னணி குரல் கலைஞர்

வினோத் சாகர் (Vinod Sagar) ஓர் இந்திய நடிகர் ஆவார். பின்னணி குரல் கலைஞரான இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் பெரும்பாலும் துணை நடிகராக பணியாற்றுகிறார். இதயம் திரையரங்கம் மூலம் அறிமுகமான இவர், 2016 ஆம் ஆண்டில் பிச்சைக்காரன் படத்தில் கவனம் பெறுவதற்கு முன்பு கிட்டத்தட்ட 30 சிறிய வேடங்களில் நடித்தார், பின்னர் உளவியல் திகில் படமான ராட்சசன் (2018) படத்தில் ஒரு பயங்கரமான உளநலம் பிறழ்ந்தவர் பாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிலும் சாகர் அதே பாத்திரத்தில் நடித்தார்.

வினோத் சாகர்
Vinod Sagar
பிறப்புசென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், பின்னணி குரல் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2012–முதல்
அறியப்படுவதுராட்சசன்
ஜன கன மன

தொழில்

தொகு

பெருநிறுவன செயலர் படிப்பில் இளநிலை பட்டதாரியான வினோத் சாகர், 2005 ஆம் ஆண்டில் துபாயிலுள்ள ரேடியோ ஆசியா நிறுவனத்தில் [1] ஒரு வானொலி ஆளுமையாகவும் பணியாற்றியுள்ளார், பின்னர் இதயம் திரையரங்கம் மற்றும் நான் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் தோன்றுவதற்கு முன்பு நாடகக் குழுவான 'தியேட்டர் லேப்' என்ற நிறுவனத்தில் சேர்ந்தார்.[2] சாம்பியன் (2019 திரைப்படம்) (தமிழ்),[3] நயட்டு (2021 திரைப்படம்) மற்றும் ஜன கண மன (2022 திரைப்படம்) ஆகிய மலையாள வெற்றிப்பட்டங்களிலும் சாகர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.[4][5]

பகுதி படத்தொகுப்பு

தொகு

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு தலைப்பு பங்கு
2012 இதயம் திரையரங்கம்
நான்
2013 ஹரிதாஸ் (2013 திரைப்படம்)
கிருமி
2014 கத்தி
மெட்ராஸ் (திரைப்படம்)
2016 பிச்சைக்காரன்
2017 மாநகரம்
குலேபகாவலி
2018 செக்க சிவந்த வானம்
காலா (2018 திரைப்படம்)
2019 சாகா
ஐரா
2021 நயாட்டு (2021 திரைப்படம்)
2022 சல்யூட் (2022 திரைப்படம்)
ஜன கன மன (2022 திரைப்படம்)

வலைத் தொடர்

தொகு
ஆண்டு தலைப்பு பங்கு நடைமேடை
2022 தமிழ் ராக்கர்ஸ் SonyLIV

மேற்கோள்கள்

தொகு
  1. Vijayan, Lakshmi (20 November 2018). "ഇമ്പരാജ്: പേടിച്ചുവിറപ്പിച്ച ആ ‘രാക്ഷസൻ’, മലയാളി" (in ml). Manoramaonline.com. https://www.manoramaonline.com/movies/interview/2018/11/22/ratsasan-actor-vinod-sagar-malayalali-about-his-experience.html#. 
  2. Vijayan, Lekshmi (24 November 2018). "The loathsome Imbaraj from Raatchasan; is a Mallu". Manoramaonline.com. https://www.onmanorama.com/entertainment/interviews/2018/11/24/raatchasan-tamil-movie-imbaraj-actor-vinod.html. Vijayan, Lekshmi (24 November 2018). "The loathsome Imbaraj from Raatchasan; is a Mallu". Manoramaonline.com. Retrieved 18 August 2022.
  3. "Lack of releases since Ratsasan affected my career: Vinod Sagar". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 12 December 2019. https://www.newindianexpress.com/entertainment/tamil/2019/dec/12/lack-of-releases-since-ratsasan-affected-my-career-vinod-sagar-2074778.html. 
  4. "சவால் மிகுந்த கதாபாத்திரங்களுக்காகக் காத்திருக்கிறேன்: வினோத் சாகர்" (in ta). The Hindu Tamil. 13 October 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/590412-vinod-sagar-interview-1.html. 
  5. "ആ തെറിവിളിയും ആക്രോശവും ചോദിച്ചുവാങ്ങിയത് ; വെറുപ്പും കോപവും അവാര്‍ഡ് ; 'രാക്ഷസ'നായ 'അധ്യാപകന്‍' പറയുന്നു" (in ml). Samakalika Malayalam Vaarika. 26 November 2018. https://www.samakalikamalayalam.com/chalachithram-film/2018/nov/26/%E0%B4%86-%E0%B4%A4%E0%B5%86%E0%B4%B1%E0%B4%BF%E0%B4%B5%E0%B4%BF%E0%B4%B3%E0%B4%BF%E0%B4%AF%E0%B5%81%E0%B4%82-%E0%B4%86%E0%B4%95%E0%B5%8D%E0%B4%B0%E0%B5%87%E0%B4%BE%E0%B4%B6%E0%B4%B5%E0%B5%81%E0%B4%82-%E0%B4%9A%E0%B5%8B%E0%B4%A6%E0%B4%BF%E0%B4%9A%E0%B5%8D%E0%B4%9A%E0%B5%81%E0%B4%B5%E0%B4%BE%E0%B4%99%E0%B5%8D%E0%B4%99%E0%B4%BF%E0%B4%AF%E0%B4%A4%E0%B5%8D--%E0%B4%B5%E0%B5%86%E0%B4%B1%E0%B5%81%E0%B4%AA%E0%B5%8D%E0%B4%AA%E0%B5%81%E0%B4%82-%E0%B4%95%E0%B5%8B%E0%B4%AA%E0%B4%B5%E0%B5%81%E0%B4%82-%E0%B4%85%E0%B4%B5%E0%B4%BE%E0%B4%B0%E0%B5%8D%E0%B4%A1%E0%B5%8D--%E0%B4%B0%E0%B4%BE%E0%B4%95%E0%B5%8D%E0%B4%B7%E0%B4%B8%E0%B4%A8%E0%B4%BE%E0%B4%AF-%E0%B4%85%E0%B4%A7%E0%B5%8D%E0%B4%AF%E0%B4%BE%E0%B4%AA%E0%B4%95%E0%B4%A8%E0%B5%8D-%E0%B4%AA%E0%B4%B1-39919.html. 

புற இணைப்புகள்

தொகு
  • Vinod Sagar at IMDb
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத்_சாகர்&oldid=3760876" இலிருந்து மீள்விக்கப்பட்டது