விமலா கல்லூரி

 

விமலா கல்லூரி
குறிக்கோளுரைஉண்மை மற்றும் அன்பு
உருவாக்கம்1967; 57 ஆண்டுகளுக்கு முன்னர் (1967)
சார்புகோழிக்கோடு பல்கலைக்கழகம்
தரநிர்ணயம்தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
முதல்வர்முனைவர். பீனா ஜோஸ்
மாணவர்கள்2,047
அமைவிடம்
ராமவர்மபுரம் சாலை
, , ,
680009
,
10°33′11″N 76°13′37″E / 10.553106°N 76.226875°E / 10.553106; 76.226875
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்கல்லூரி இணையதளம்
விமலா கல்லூரி is located in கேரளம்
விமலா கல்லூரி
Location in கேரளம்
விமலா கல்லூரி is located in இந்தியா
விமலா கல்லூரி
விமலா கல்லூரி (இந்தியா)

விமலா கல்லூரி, என்பது இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். [1] [2] 1967 ஆம் ஆண்டு திருச்சூர் புனித மரியன்னை கல்லூரியை இரண்டாகப் பிரித்து நிறுவப்பட்ட இக்கல்லூரியானது, சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையில் உள்ள கர்மேல் அன்னை சபையின் திருச்சூர் நிர்மலா மாகாணத்தின் நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

இக்கல்லூரி திருச்சூர் சீரோ-மலபார் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தின் மத அதிகார வரம்பிற்கு உட்பட்டதும் தேவாலய அமைப்புகளுடன் தொடர்புடைய அல்லது நடத்தப்படும் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றுமாகும். [3] கேரளாவில் பிரத்தியேகமாக இளங்கலை பட்டதாரி மற்றும் முதுகலை பட்டங்களை வழங்கிய ஒரே பெண்கள் கல்லூரியான இந்த விமலா கல்லூரி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)வினால் தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள இக்கல்லூரிக்கு 2009, 2014 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் நான்கு சுழற்சியிலும் 'ஏ' தரத்தில் மதிப்பிடப்பட்டுள்ளது. 3.45 சி.ஜி.பி.ஏ மதிப்பெண்களுடன் இத்தரநிலையை அடைந்துள்ளது.

துறைகள்

தொகு

அறிவியல் பிரிவு

தொகு
  • தாவரவியல்
  • வேதியியல்
  • கணிணி அறிவியல்
  • வீட்டு அறிவியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • உளவியல்
  • விலங்கியல்

கலைப்பிரிவு

தொகு
  • புள்ளிவிபரப்படிப்பு
  • ஆங்கிலம்
  • இந்தி
  • மலையாளம்
  • சமூகப்பணி
  • சமூகவியல்
  • வரலாறு
  • உடற்கல்வி
  • அரசியல் அறிவியல்
  • சமஸ்கிருதம்

வணிகப்பிரிவு

தொகு
  • வர்த்தகம்
  • பொருளாதாரம்

இதரப்பிரிவு

தொகு
  • உணவு பதப்படுத்துதல்
  • கணிணி வலை தொழில்நுட்பம்

புகைப்படத்தொகுப்பு

தொகு
 
விமலா கல்லூரியின் பிரதான வளாகம்
 
திருச்சூர் நகரத்தின் விமலா கல்லூரியின் பிரதான கட்டிடத்தின் பனோரமா புகைப்படம்.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

தொகு

மேலும் பார்க்கவும்

தொகு
  • புனித ஜோசப் கல்லூரி, இரிஞ்சாலக்குடா
  • கிறிஸ்ட் கல்லூரி, இரிஞ்சாலக்குடா
  • செயின்ட் தாமஸ் கல்லூரி, திருச்சூர்
  • காலிகட் பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்

தொகு
  1. "St. Thomas, Vimala the best" இம் மூலத்தில் இருந்து 2012-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107121218/http://www.hindu.com/2008/12/06/stories/2008120657351800.htm. 
  2. "Home". Vimala College. பார்க்கப்பட்ட நாள் 2010-08-04.
  3. Jacob, Mani. Directory of Church-related Colleges in India கூகுள் புத்தகங்களில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விமலா_கல்லூரி&oldid=4108425" இலிருந்து மீள்விக்கப்பட்டது