விமலா சூட் (Vimla Sood)(1922 - 1 ஆகஸ்ட் 2021) என்பவர் இந்தியாவின் முதல் பெண் பல் மருத்துவர் ஆவார். இவர் 1944-ல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

கல்வி

தொகு

விமலா சூட் லாகூரில் உள்ள திமான்ட்மோரன்சி பல் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் பயின்றார். இவருடைய வகுப்பில் படித்த 30 மாணவர்களில் சூட் மட்டுமே பெண் மாணவி ஆவார்.[1] இவர் 1944-ல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[1] இவரது குடும்பத்தினர் அனைவரும் மருத்துவர்களாக இருந்தனர். எனவே இவர்களை விமலா சூடினை பல் மருத்துவராக பணியாற்ற ஊக்கப்படுத்தினர். இவர் உள்ளகப் பயிற்சிக்காக நியூயார்க்கிற்குச் சென்றார். இவர் அமெரிக்காவிற்கும் பயணம் செய்துள்ளார். மின்னசொட்டா பல்கலைக்கழகத்தில் 1955-ல் குழந்தை பல் மருத்துவத்தில் முதுகலைப் பட்டத்தை முடித்தார்.[2] இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, சூட் சண்டிகருக்குச் சென்றார்.[2]

தொழில் மற்றும் பிற்கால வாழ்க்கை

தொகு

சூட் வெலிங்டன் மருத்துவமனையில் (இப்போது ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, தில்லி) பணிபுரிந்தார். இங்கு இவர் மருத்துவ ஊர்தியில் கிராமங்களுக்கு மருத்துவச் சேவையாற்றச் செல்வார்.[2] சிறிது கால கிராமச் சேவைப் பணிக்குப் பின் புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார்.[2]

நவம்பர் 2016-ல் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் தொழில்முறை உறுதிமொழியைச் சத்தியம் செய்யும் வெள்ளை உடை விழாவை ஏற்பாடு செய்தார்[3]

சூட் 1 ஆகத்து 2021-ல் தனது 99 வயதில் இறந்தார்.[4]

அங்கீகாரம் மற்றும் விருதுகள்

தொகு

இந்தியப் பல் மருத்துவ சங்கத்தால் மூத்த மரியாதைக்குரிய ஆசிரியர் என சூட் அங்கீகரிக்கப்பட்டார். இந்தியப் பல் மருத்துவக் கழகம் சண்டிகரில் கொண்டாடிய 2020ஆம் ஆண்டு ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று சூட் கௌரவிக்கப்பட்டார்.[5] முனைவர் ஹர்வன்ஷ் சிங் நீதிபதி பல் அறிவியல் கல்லூரி & மருத்துவமனையின் முதல் பெண் பல் மருத்துவராகவும் அங்கீகரிக்கப்பட்டார். இதனை இவரது வாழ்க்கை வரலாற்றுக் காணொலி ஒன்றுடன் இந்நிகழ்வில் கொண்டாடினர்.[6][2][1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "India's Ist woman dentist shares journey". Tribune India. பார்க்கப்பட்ட நாள் 2018-03-06.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Nostalgic 90s: When India's 1st woman dentist visited alma mater". https://www.hindustantimes.com/punjab/nostalgic-90s-when-india-s-1st-woman-dentist-visited-alma-mater/story-eRZm013ytnelQhaT62HYhJ.html. 
  3. "1st Lady Dentist of the country to hand over White Coats to BDS/MDS 1st Year students at PU | City Air News". cityairnews.com. Archived from the original on 2018-06-22. பார்க்கப்பட்ட நாள் 2018-03-06.
  4. "100 years old first female dentist of Undivided India passed away". Royal Patiala. பார்க்கப்பட்ட நாள் 11 November 2021.
  5. "IDA Faculty Recognition".
  6. "Dr. Vimla Sood - India's First Lady Dentist".
"https://ta.wikipedia.org/w/index.php?title=விமலா_சூட்&oldid=3772731" இலிருந்து மீள்விக்கப்பட்டது