விமலா தேவி சக்தி பீடக் கோவில்

அன்னை சக்தியின் உடற்கூறுகளில் நாபி (தொப்புள் கொடி) அல்லது வயிற்றின் மூன்றாவது மடிப்பு விழுந்த இடமாக பூரி ஜகந்நாதர் கோவில் வளாகத்திலுள்ள விமலா தேவி (பிமலா தேவி) சன்னதி கருதப்படுகிறது. சக்தி பீடங்களில் மிகவும் முக்கியமான நான்கு ஆதி சக்தி பீடங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது. ஆதி சக்தி பீடங்களில் இது தேவியின் பாதங்கள் விழுந்த இடமென்று காளிகா புராணம் கூறுகிறது. ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள சக்தி பீடத்தில், அன்னை விமலை என்ற பெயரில் எழுந்தருளியிருக்கிறாள். ஜகந்நாதபுரியின் முக்கிய தேவதையாக விமலாதேவி கருதப் பெறுகிறாள். பக்தர்கள் இந்த பீடத்தை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

விமலா தேவி சன்னதி

தொகு

ஒடிசாவின் பூரி ஜகந்நாதர் கோவில் வளாகத்தில் தென்மேற்கு மூலையில் ரோஹிணி குண்ட் அருகே விமலா தேவியின் சன்னதி அமைந்துள்ளது.[1] இந்தப் புகழ் பெற்ற பூரி தலத்தில் முதன்முதலில் குடியேறியவள் அன்னை விமலை. அவளுக்கு அங்கே சக்தி பீடம் அமைந்திருந்தது. இந்தத் தலத்தில் குடி கொள்ள எண்ணினார் ஸ்ரீ ஜகந்நாதர். அப்போது இந்தத் தலத்தினுள் ஜகந்நாதர் வர வேண்டுமானால், ஒரு நிபந்தனைக்கு உட்பட வேண்டும் என்றாள் விமலை. அதன்படி, எந்த நிவேதனப் பொருளானாலும் முதலில் விமலைக்கே வழங்கப்பட வேண்டும் என்பது வழக்கமாயிற்று. மேலும், துர்க்காஷ்டமி அன்று, ஜகந்நாதர் நள்ளிரவில் திருப்பள்ளி கண்ட பிறகு, இந்த பீடத்தில் ஆடு பலியிடப்படுவதும், அதன் பின்னர் ரத்தக் கறை உடனே கழுவப்பட்டு வெட்டுண்ட ஆட்டின் மிச்சங்கள் பின் வாசல் கதவு வழியாக வெளியேற்றப்படுவதும், பின்னர் கோயில் சுத்தம் செய்யப்படுவதும் இங்கே வழக்கமானது.

இந்தத் தலத்தில் வரலாற்று அதிசயங்கள் பல நிகழ்த்திக் காட்டினாள் அன்னை விமலை. இன்றும் பூரி தலத்துக்கு வரும் பக்தர்கள், அன்னை விமலையை வணங்கி, தங்கள் மனதிலுள்ள குறைகள் அகன்று, மன பாரம் அனைத்தும் நீங்கப் பெறுகின்றனர்.

அடுத்து, விஜயா என்னும் சன்னதி. இதே அம்மன் மாதிரியே தான் விமலாவும் எனக்கூறுகின்றனர். லலிதா சஹஸ்ரநாமத்தில் இருப்பது போலவே விஜயாவும் விமலாவும் பக்கத்து பக்கத்தில் இருந்து அருளை வழங்கும் அருமையான திருவிடம்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
  1. காமாக்யா கோவில்
  2. காளிகாட் காளி கோயில்
  3. ஆதி சக்தி பீடங்கள்
  4. சக்தி பீடங்கள்
  5. தாராதாரிணி சக்தி பீடக் கோவில்

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு