விருடாகன் அல்லது விருட்சகன் பௌத்தத்தில் ஒரு முக்கிய தெய்வம். அவர் நான்கு பரலோக மன்னர்களில் ஒருவர் மற்றும் ஒரு தர்மபாலர் . விருடாகன் தெற்கு திசையின் காவலர் மற்றும் வளர்ச்சியின் புரவலர். அவர் சுமேரு வின் தெற்குப் பகுதியில் வசிக்கிறார். இவர் கும்பாண்டர் மற்றும் பிரேதங்களின் தலைவர்.

பெயர்கள் தொகு

விருடாகன் என்ற பெயர் ஒரே மாதிரியான சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது, இது தானியத்தை முளைப்பதைக் குறிக்கிறது. எனவே, அவரது பெயர் "அதிகரிப்பு" அல்லது "வளர்ச்சி" என்று பொருள்படும்.[1] இவருடைய மற்ற பெயர்கள் பின்வருமாறு:

  • பாரம்பரிய சீனம் : 增長天; எளிமைப்படுத்தப்பட்ட சீனம் : 増長天; பின்யின்: ஸிங் ஜாங் திங்வாங் ; சப்பானிய மொழி:ஸ்ஓஜோட்டன் அல்லது ஸ்வ்சொட்டேன்; கொரியன் மொழி : 증장천왕 ஜியுங்ஜாங் சியோன்வாங் ; தகலாகு மொழி: பிருதகா; வியட்நாமிய மொழி : Tăng Trưởng Thiên, சமஸ்கிருத விருட்சகாவின் கல்கு
  • பாரம்பரிய சீனம் : 毘楼勒叉; பின்யின் : பிருரோகுஷா ; சப்பானிய மொழி: பிருரோகுஷா ; கொரியன் மொழி: 비루늑차 பிலுநீயூகிச்சி; வியட்நாமிய மொழி: டீ லாவ் லேக் ஸோயா. இது அசல் சமஸ்கிருதப் பெயரின் ஒலிபெயர்ப்பு.
  • திபெத்திய மொழி : འཕ གས་སྐྱེས་པོ, வைலி: 'ஃபாக்ஸ் ஸ்கைஸ் போ, THL: பாக் கியேபோ, "உன்னத பிறப்பு"
  • தாய் மொழி : ท้าววิรุฬหก தாவோ விருன்ஹோக் என்பது பாளி ததரதத்தின் நவீன உச்சரிப்பு ஆகும்

சிறப்பியல்புகள் தொகு

விருடாகன் தெற்கு திசையின் காவலர். அவர் சுமேரு வின் தெற்குப் பகுதியில் வசிக்கிறார். இவர் கும்பாண்டர் மற்றும் பிரேதங்களின் தலைவர். இவர் வளர்ச்சியின் புரவலர். இவருடைய நிறம் நீலம். இவருடைய சின்னம் வாள்.

தேரவாதம் தொகு

தேரவாத பௌத்தத்தின் நியதியில், விருடாகன் விருலா அல்லது விருலாகா என்று அழைக்கப்படுகிறார். விருட்சகா என்பது சதுர்மகாராசனோ அல்லது "நான்கு பெரிய அரசர்களில்" ஒருவர், அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட திசையில் ஆட்சி செய்கிறார்கள்.[2]

சீனா தொகு

சீனாவில், விருடாகாவின் பெயர் ஸிங் ஜாங் திங்வாங் (增長天 lit. வளர்ச்சி மன்னன்) என்பது உணர்வுள்ள மனிதர்களுக்கு இரக்கத்தில் வளரக் கற்றுக்கொடுக்கும் திறனைக் குறிக்கிறது. அவர் இருபது தேவர்கள் அல்லது இருபத்தி-நான்கு தேவர்கள் அல்லது பௌத்த தர்மபாலர்களைப் பாதுகாக்கும் ஒரு குழுவாகவும் கருதப்படுகிறார். சீனக் கோயில்களில், மற்ற மூன்று பரலோக அரசர்களுடன் அவர் பெரும்பாலும் நான்கு பரலோக அரசர்களின் மண்டபத்தில் வைக்கப்படுகிறார்.[3]

சப்பான் தொகு

சப்பானில், ஸ்வ்சொட்டேன் (増長天) பொதுவாக கடுமையான வெளிப்பாட்டுடன் சித்தரிக்கப்படுகிறது. அவர் கவசம் அணிந்திருப்பார், அடிக்கடி வாள் அல்லது திரிசூல ஈட்டியைக் கொண்டிருப்பர்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Virūḍhaka". Wisdom Library. பார்க்கப்பட்ட நாள் 2019-02-20.
  2. "Virūlha". Buddhist Dictionary of Pali Proper Names. பார்க்கப்பட்ட நாள் 2019-02-20.
  3. A dictionary of Chinese Buddhist terms : with Sanskrit and English equivalents and a Sanskrit-Pali index. Lewis Hodous, William Edward Soothill. London: RoutledgeCurzon. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-203-64186-8. இணையக் கணினி நூலக மையம்:275253538. https://www.worldcat.org/oclc/275253538. 
  4. "Zouchouten 増長天". JAANUS. பார்க்கப்பட்ட நாள் 2019-02-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விருடாகன்&oldid=3894468" இலிருந்து மீள்விக்கப்பட்டது