விரைச்சிரைப் புற்றுநோய்

விரைப் புற்றுநோய் (Testicular cancer) அல்லது விந்தகப் புற்றுநோய் என்பது ஆண் இனப்பெருக்க விந்தகத்தைப் பாதிக்கக்கூடிய ஒருவகை புற்று நோய் ஆகும்.[2] விந்தகத்தில் கட்டி அல்லது விதைப்பையில் வலி அல்லது வீக்கம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.[2] சிகிச்சைகளினால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது.[2]

விந்தகப் புற்றுநோய்
ஒத்தசொற்கள்விதைப்பைப் புற்றுநோய்[1]
7.4 × 5.5-cm முனைவான விதைநீக்கத்தின்விந்துக்கழலை.
சிறப்புபுற்றுநோயியல்
அறிகுறிகள்விதைப்பையில் கட்டி, வீக்கம் அல்லது வலி[2]
வழமையான தொடக்கம்20 முதல் 3லகவை ஆண்கள்[3]
வகைகள்முகிழ்கலப் புற்று (விந்துக்கழலையுடன், விந்துக்கழலையின்றி), பால்-தண்டு சுரப்புக் கழலைகள், நிணநீர்ப்புற்று[4][5]
சூழிடர் காரணிகள்மறை விந்தகம், குடும்ப நோய் வரலாறு, முந்தைய விதைப்பைப் புற்று வரலாறு[5]
நோயறிதல்நேரடி உறுப்புஆய்வு, புறவொலி அலகீடு, குருதி ஓர்வுகள், விதைநீக்க அறுவை[2]
ஒத்த நிலைமைகள்விந்துக் கட்டி, விந்துக்குழல் முடிச்சழற்சி, கவட்டுக்குழல் பிதுக்கம், குடல்வால் விரை[1]
சிகிச்சைஅறுவை, கதிர்வீச்சு மருத்துவம், வேதியியல் மருத்துவம், க்ருமுகிழ்கல மாற்றீடு[2]
முன்கணிப்புஐந்தாண்டு உயிர்தரிப்பு வீதங்கள் ~ 95% (அமெரிக்கா)[3]
நிகழும் வீதம்686,000 (2015)[6]
இறப்புகள்9,400 (2015)[7]

வயிற்றில் விரை தேங்கிவிட்ட நிலை, புற்ருநோய்கள் மரபு வழியாக உள்ள குடும்பங்கள் ஆகியன பாதிப்புக் காரணகிளாகும்.[5] இது பொதுவாக கருச்செல் கட்டி என வகைப்படுத்தப்படுகிறது. கருச்செல் கட்டியானது விரைப்புற்றுக்கட்டி மற்றும் விரைப்புற்றுக்கட்டி இல்லாதது ஆகிய இருவகைப்படும். பாலின உறுப்புக் கட்டிகள் மற்றும் நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் போன்றனவும் இதில் அடங்கும்.[5] உடற்கூறு சோதனை, கேளா ஒலி அலகீடு மற்றும் குருதிப் பரிசோதனை போன்றவற்றின் மூலம் இதனைக் கண்டறியலாம்.[2]

விரைச்சிரைப் புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடியது ஆகும்.[5]அறுவைச் சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை, வேதிச்சிகிச்சை அல்லது முதல்நிலை உயிரணு மாற்றம் போன்ற பல முறைகளில் சிகிச்சைகள் உள்ளன.[2] மேலும் இந்தப் புற்றுநோயானது பரவினாலும் வேதிச்சிகிச்சை மூலமாக 80 விழுக்காடு மேலாக இதனைக் குணப்படுத்த இயலும்.[4]

2015 ஆம் ஆண்டின் நிலவரப்படி 686,000 மக்கள் இந்த வகைப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.[6] 1990 இல் 7,000 பேரும் 2015 இல் 9,400 பேரும் இதனால் இறந்தனர்.[8][9] வளர்ந்த நாடுகளில் இதன் இறப்பு வீதம் மற்ற நாடுகளை விட குறைவாகவே உள்ளது.[10] பொதுவாக இந்த புற்நோயானது 20 முதல் 34 வயது வரையிலான ஆண்களையே பெரும்பான்மையாகப் பாதிக்கின்றது.[3][11] 15 வயதிற்கு குறைவான ஆண் குழந்தைகளை அரிதாகப் பாதிக்கின்றது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் 95 விழுக்காடு பேர் ஐந்து வருட உயிர் வாழ்தல் விகிதத்தில் உள்ளனர்.[3]

அறிகுறிகள்

தொகு

விந்தகத்தில் கட்டி அல்லது விதைப்பையில் வலி அல்லது வீக்கம் ஆகியவை இதன் முதன்மையான அறிகுறிகளாகும். மரபுவழியாக புற்றுநோய் உள்ள குடும்பங்களில் உள்ள ஆண்கள் மாதந்தோறும் விந்தகப் பரிசோதனை செய்வதாக அமெரிக்கப் புற்றுநோய் சங்கமானது கூறியுள்ளது. மேலும் அமெரிக்க சிறுநீரகவியல் சங்கமானது அனைத்து இளம் வயதினரும் மாதந்தோறும் விந்தகப் பரிசோதனை செய்யப் பரிந்துரை செய்கின்றது.[12][13]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Ferri, Fred F. (2017). Ferri's Clinical Advisor 2018 E-Book: 5 Books in 1 (in ஆங்கிலம்). Elsevier Health Sciences. p. 1253. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780323529570.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "Testicular Cancer Treatment". National Cancer Institute (in ஆங்கிலம்). 7 July 2016.
  3. 3.0 3.1 3.2 3.3 "Cancer of the Testis - Cancer Stat Facts". SEER (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 December 2017.
  4. 4.0 4.1 Feldman DR; Bosl GJ; Sheinfeld J; Motzer RJ (13 February 2008). "Medical treatment of advanced testicular cancer". JAMA 299 (6): 672–684. doi:10.1001/jama.299.6.672. பப்மெட்:18270356. http://jama.ama-assn.org/cgi/content/full/299/6/672. பார்த்த நாள்: 24 June 2011. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "Testicular Cancer Treatment". National Cancer Institute (in ஆங்கிலம்). 26 January 2017. பார்க்கப்பட்ட நாள் 19 December 2017.
  6. 6.0 6.1 GBD 2015 Disease and Injury Incidence and Prevalence, Collaborators. (8 October 2016). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1545–1602. doi:10.1016/S0140-6736(16)31678-6. பப்மெட்:27733282. 
  7. GBD 2015 Mortality and Causes of Death, Collaborators. (8 October 2016). "Global, regional, and national life expectancy, all-cause mortality, and cause-specific mortality for 249 causes of death, 1980-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1459–1544. doi:10.1016/s0140-6736(16)31012-1. பப்மெட்:27733281. 
  8. GBD 2015 Mortality and Causes of Death, Collaborators. (8 October 2016). "Global, regional, and national life expectancy, all-cause mortality, and cause-specific mortality for 249 causes of death, 1980-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1459–1544. doi:10.1016/s0140-6736(16)31012-1. பப்மெட்:27733281. 
  9. GBD 2013 Mortality and Causes of Death, Collaborators (17 December 2014). "Global, regional, and national age-sex specific all-cause and cause-specific mortality for 240 causes of death, 1990-2013: a systematic analysis for the Global Burden of Disease Study 2013". Lancet 385 (9963): 117–171. doi:10.1016/S0140-6736(14)61682-2. பப்மெட்:25530442. 
  10. "Testicular cancer incidence statistics". Cancer Research UK (in ஆங்கிலம்). 15 May 2015. பார்க்கப்பட்ட நாள் 19 December 2017.
  11. Hayes-Lattin, Brandon; Nichols, Craig R. (October 2009). "Testicular Cancer: A Prototypic Tumor of Young Adults". Seminars in oncology 36 (5): 432–438. doi:10.1053/j.seminoncol.2009.07.006. பப்மெட்:19835738. 
  12. "Can testicular cancer be found early?". Testicular Cancer: Early Detection, Diagnosis, and Staging. American Cancer Society. 19 January 2011. பார்க்கப்பட்ட நாள் 4 December 2011.
  13. "Testicular Self-Examination (TSE)". American Urological Association. Archived from the original on 17 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு