விலங்குரிமை தேசிய மாநாடு

விலங்குரிமை தேசிய மாநாடு (Animal Rights National Conference) என்பது ஐக்கிய அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் விலங்குரிமை மாநாடு ஆகும். 1981-ல் வேறு பெயரில் தொடங்கப்பட்ட இம்மாநாடு, 2000-ம் ஆண்டு முதல் பண்ணை விலங்கு உரிமைகள் இயக்கம் (Farm Animal Rights Movement அல்லது FARM) என்ற அமைப்பால் நடத்தப்பட்டு வருகிறது.

விலங்குரிமை தேசிய மாநாடு
காலப்பகுதிஆண்டுதோறும்
அமைவிடம்(கள்)ஐக்கிய அமெரிக்காவின் பல இடங்களில்
Established2000; 24 ஆண்டுகளுக்கு முன்னர் (2000)
அமைப்பாளர்பண்ணை விலங்கு உரிமைகள் இயக்கம்
வலைத்தளம்
arconference.org

வரலாறு

தொகு

1970-களில் அலெக்ஸ் ஹெர்ஷாப்ட் தனது சைவ மாநாடுகளில் விலங்குரிமை ஆர்வலர்கள் கலந்துகொள்வதை கவனிக்கத் தொடங்கினார். அவ்வார்வலர்களோடு மேலும் கலந்துரையாடியதன் விளைவாக விலங்குரிமை பற்றி மேலும் படிக்கத் துவங்கினார். அதன் பின்னர் 1981-ம் ஆண்டில் சைவ மற்றும் விலங்குரிமை இயக்கங்களை இணைக்கும் வகையில் "ஆக்‌ஷன் ஃபார் லைஃப்" (Action for Life) என்ற நிகழ்வை ஏற்பாடு செய்து தொடர்ச்சியாக வருடாந்திர மாநாடுகளை நடத்தத் தொடங்கினார். இந்த மாநாடுகள் அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு (1981–1987) தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டன. இம்மாநாடுகளில் பொதுவாக ஆர்வலர்களுக்கான பயிற்சி அமர்வுகள், கலந்துரையாடல்கள், சம்பிரதாய நடவடிக்கைகள், ஒளிப்படக் காட்சிப்படுத்தல்கள், திறந்த விவாதங்கள் ஆகியவை இடம்பெறும். இம்மாநாடுகளின் விளைவாக பண்ணை விலங்கு உரிமைகள் இயக்கம் (ஹெர்ஷாப்ட்டின் சொந்த அமைப்பு), பீட்டா, டிரான்ஸ்-ஸ்பீசீஸ் அன்லிமிடெட், விலங்குகளுக்கான அணிதிரட்டல், மற்றும் விலங்குரிமைகள் நெட்வொர்க் உள்ளிட்ட பல விலங்குரிமை இயக்கங்கள் தோன்றின.[1][2]:75-76[3]:190, 222, 223

விலங்குகளுக்கான தேசியக் கூட்டணி (National Alliance for Animals) என்னும் அமைப்பைச் சேர்ந்த பீட்டர் லிங்க் (Peter Linck) என்பவரும் 1980-களில் பல மாநாடுகளை நடத்தி வந்தார். இவை 1988 முதல் 1996 வரையிலான ஆக்‌ஷன் ஃபார் லைஃப் மாநாடுகளின் தொடர்ச்சியாக அமைந்தன.[3]:249-250

1997-ல், FARM மீண்டும் தேசிய மாநாடுகளை ஒழுங்கமைக்கத் துவங்கியது. தொடர்ச்சியாக இம்மாநாடுகள் அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரை நகரங்களில் மாறி மாறி நடத்தப்பட்டன.[3]:274

2004-ம் ஆண்டு சில விலங்குரிமை ஆர்வலர்கள் மீது பயங்கரவாத வழக்குத் தொடுக்கப்பட, அமெரிக்காவின் மனிதநேய சங்கம் (Humane Society of the United States) உள்ளிட்ட சில விலங்குப் பாதுகாப்புக் குழுக்கள் வன்முறையைக் காரணம் காட்டி இம்மாநாடுகளிலிருந்து விலகிக் கொண்டன. இவ்வமைப்புகள் "விலங்குகளுக்கு நடவடிக்கை எடுப்பது" (Taking Action for Animals) என்ற பெயரில் சொந்தமாக வருடாந்திர மாநாடுகளை நடத்தத் துவங்கின.[3]:274-276 இதுபோலவே, "டைரக்ட் ஆக்ஷன் எவிரிவேர்" எனப்படும் நேரடி நடவடிக்கை எங்கெங்கும் என்ற அமைப்பு ஆண்டுதோறும் விலங்கு விடுதலை மாநாட்டை நடத்துகிறது.[3]:296[4]

2018-ல், அலெக்ஸ் ஹெர்ஷாப்ட் தனது மாநாட்டுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். 2019-ம் ஆண்டு ஜென் ரிலே மாநாட்டுத் தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் திட்ட மேலாளரான ஈதன் எல்ட்ரெத்துடனும் புதிதாக உருவாக்கப்பட்ட திட்ட ஆலோசனைக் குழுவுடனும் இணைந்து ரிலே மாநாடுகளை நடத்தி வருகிறார்.[5]

மாநாடுகள்

தொகு

2021-ம் ஆண்டு முதல் பெரும்பாலும் இம்மாநாட்டில் 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் 90-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2,000 நபர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் 80-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் 100-க்கும் மேற்பட்டோர் தங்களது செயற்பாடுகளைக் காட்சிப்படுத்துவதும் சுமார் 170 பேச்சாளர்கள் உரையாற்றுவதும் வழக்கமாக உள்ளது.[6]

விலங்குரிமை புகழ்க்கூடம்

தொகு

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் விலங்குரிமைக்காக சிறப்பாகப் பணியாற்றிய நபர்கள் அவ்வாண்டின் மாநாட்டுப் பேச்சாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களது பெயர்கள் அமெரிக்க "விலங்குரிமை புகழ்க்கூடத்தில்" (Animal Rights Hall of Fame) சேர்க்கப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இதோ:[7]

  • 2000: க்ளீவ்லாந்து அமோரி, ஹோவார்டு லைமேன், இங்க்ரிட் நியூகர்க், பீட்டர் சிங்கர், ஹென்றி ஸ்பைரா
  • 2001: ஜீனி பார், லாரி ஹூஸ்டன், அலெக்ஸ் ஹெர்ஷாப்ட், ஜிம் மேசன், அலெக்ஸ் பச்சேகோ
  • 2002: கரென் டேவிஸ், ஷிர்லீ மெக்கிரீல், பால் வாட்சன்
  • 2003: ரோட்னி கொரோனாடோ, எல்லியாட் காட்ஸ்
  • 2004: புரூஸ் ப்ரெட்ரிச், லாரா மோரெட்டி
  • 2005: மாட் பால், ஜாக் நாரிஸ், க்ரெட்சென் வைலர்
  • 2006: ஸ்டீவ் ஹிந்தி, பென் வயிட்
  • 2007: கெவின் ஜோனாஸ், ஜேம்ஸ் லாவெக், ஜென்னி ஸ்டீன்
  • 2008: பால் ஷாபிரோ
  • 2009: நேதன் ரங்கல்
  • 2010: ஜோ வீல்
  • 2011: காரல் ஜே. ஆடம்ஸ்
  • 2012: ஜோ கானல்லி மற்றும் கோலீன் ஹாலாண்டு
  • 2013: எரிக்கா மீயர்
  • 2014: ஜோன் காம்ப்
  • 2015: ஜோஷ் பாக்
  • 2016: டாம் ரீகன்

தரவுகள்

தொகு
  1. "24 Carrot Vegetarian Award - Alex Hershaft". Vegetarians in Paradise. November 2002.
  2. Finsen, Lawrence; Finsen, Susan (1994). The Animal Rights Movement in America. Twayne Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0805738843.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Phelps, Norm (2007). The Longest Struggle. Lantern Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781590561065.
  4. "About Us - Direct Action Everywhere". Direct Action Everywhere.
  5. "Program Team". Animal Rights National Conference. Archived from the original on July 9, 2019.
  6. "Animal Rights National Conference". Farm Animal Rights Movement. January 12, 2021.
  7. "U.S. Animal Rights Hall Of Fame". Animal Rights National Conference. Archived from the original on January 13, 2019.

வெளியிணைப்புகள்

தொகு