விலங்கு வழக்கு விசாரணை
சட்ட வரலாற்றில், விலங்கு வழக்கு விசாரணை (animal trial) என்பது ஒரு மனிதரல்லா விலங்கின் மீது நடத்தப்பட்ட குற்றவியல் விசாரணையைக் குறிப்பதாகும். இத்தகைய வழக்கு விசாரணைகள் பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் ஐரோப்பாவில் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் மிகவும் ஆவணப்படுத்தப்பட்டவை பிரான்சில் நடந்தவை என்றாலும் இவை இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின் மற்றும் பிற நாடுகளிலும் நிகழ்ந்தன.[1]
ஐக்கிய அமெரிக்காவில் நீதிமன்ற வழக்கு விசாரணையின்றி விலங்குகளின் உரிமையாளர்களே தங்கள் விலங்குகளைக் குற்றப்படுத்தித் தீர்ப்பு வழங்கிய நிகழ்வுகள் 20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நீடித்தன. இவ்விசாரணைகள் பெரும்பாலும் அவ்விலங்கிற்கு மரணதண்டனை வழங்குவதில் முடிந்தன. ஏறத்தாழ 1850 முதல் 1950 வரையிலான கார்னிவல்-சர்க்கஸ் சகாப்தத்தின் போது யானைகளுக்கு மரணதண்டனை வழங்குவது ஐக்கிய அமெரிக்காவில் அடிக்கடி நிகழ்ந்தது; 1880கள் மற்றும் 1920களுக்கு இடையில் குறைந்தது 36 யானைகள் தூக்கிலிடப்பட்டன.[2] இந்த சகாப்தத்தில், யானைகளின் நடத்தை பெரும்பாலும் மானுடவியல் ரீதியாக விளக்கப்பட்டு அதன் விளைவாக அவற்றின் செயல்களுக்கு "நல்லது" அல்லது "கெட்டது" என்ற தார்மீக பரிமாணத்தை வழங்கும் செயல் வழக்கில் இருந்தது.[3]
நவீன காலங்களில், மனிதரல்லா விலங்குகளுக்கு தார்மீக மன அமைப்பு (moral agency) இல்லை என்பதை உணர்ந்தவையாக உலகின் பெரும்பாலான குற்றவியல் நீதி அமைப்புகள் விலங்குகளை எந்த ஒரு குற்றச்செயலுக்கும் பொறுப்பாளியாகக் கருத முடியாது என்பதை ஏற்றுக்கொண்டு விட்டன.
மேலும் காண்க
தொகுதரவுகள்
தொகு- ↑ "The Criminal Prosecution and Capital Punishment of Animals, by E. P. Evans—A Project Gutenberg eBook". www.gutenberg.org. பார்க்கப்பட்ட நாள் 2024-04-20.
- ↑ Wood (2012), ப. 407.
- ↑ Nance (2013), ப. 108.
மேற்கோள் தரவுகள்
தொகு- Cohen, Esther (1986), "Law, Folklore and Animal Lore", Past and Present, Oxford University Press, 110: 6–37, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/past/110.1.6
- Evans, E. P. (1987) [1906], The Criminal Prosecution and Capital Punishment of Animals, Faber and Faber, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-571-14893-6
- Nance, Susan (2013). Entertaining Elephants: Animal Agency and the Business of the American Circus (in ஆங்கிலம்). Johns Hopkins University Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1353/book.21987. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0873-6. வார்ப்புரு:Project MUSE.
- Wood, Amy Louise (2012). ""Killing the Elephant": Murderous Beasts and the Thrill of Retribution, 1885–1930". The Journal of the Gilded Age and Progressive Era 11 (3): 405–444. doi:10.1017/S1537781412000266. பன்னாட்டுத் தர தொடர் எண்:1537-7814. https://www.jstor.org/stable/23249163.
வெளியிணைப்புகள்
தொகு- The Criminal Prosecution and Capital Punishment of Animals (1906) at the Internet Archive
- ""The Law is an Ass: Reading E. P. Evans' The Criminal Prosecution and Capital Punishment of Animals"" (PDF). Archived from the original (PDF) on 2011-07-27. (1.18 MB), Society and Animals, Volume 2, Number 1 (1994)
- ""The Historical and Contemporary Prosecution and Punishment of Animals"" (PDF). (178 KB) (2003)
- Nicholas Humphrey, ""Bugs and Beasts Before the Law"" (PDF). Archived from the original (PDF) on 2007-06-29. (120 KB), Chapter 18 of The Mind Made Flesh, pp. 235–254, Oxford University Press (2002)
- Animals on Trial (MP3), BBC World Service documentary podcast, broadcast on 15 March 2011
- Bugs and Beast Before the Law in The Public Domain Review