வில்சன் கிரேட்பாட்ச்
வில்சன் கிரேட்பாட்ச் (Wilson Greatbatch, செப்டம்பர் 6, 1919 – செப்டம்பர் 27, 2011) என்பவர் செயற்கையாக உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கியைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியாளர்[1]. இவர் 350 இற்கும் மேற்பட்ட காப்புரிமங்களை பெற்றிருக்கிறார். இவர் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தினால் நிருவகிக்கப்படும் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்களுக்கு வழங்கப்படும் லெமெல்சன்-எம்ஐடி விருதினைப் பெற்றவர்[1][2].
ஆரம்ப வாழ்க்கை
தொகுநியூயார்க்கின் பஃபல்லோ நகரில் பிறந்த கிரேட்பாட்ச் இராணுவ சேவையில் இணைந்து 1945 ஆம் ஆண்டு வரையில் இரண்டாம் உலகப் போரில் பங்குபற்றியவர்[2]. கோர்னெல் பல்கலைக்கழகத்தில் மின்பொறியியல் படித்து 1950 இல் பட்டம் பெற்றார். பஃபல்லோ பல்கலைக்கழகத்தில் 1957 ஆம் ஆண்டில் முதுமாணிப் பட்டம் பெற்றார்[2].
சார்டாக்-கிரேட்பாட்ச் இதயமுடுக்கி
தொகுபெருமளவிலான விலங்கியல் சோதனைக்குப்பின் வில்சன் கிரேட்பாட்ச் மூலமாக உருவாக்கப்பட்ட உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கிகள் 1960 ஏப்ரல் மாதம் முதல் முறையாக மனிதர்களில் பயன்படுத்தப்பட தொடங்கின. கிரேட்பாட்ச் கண்டுபிடிப்பு முந்தைய சுவீடன் நாட்டு கருவிகளிலும் வேறுபட்டதாயிருந்தது. அவை ஆற்றல் மூலமாக முதனிலை மின்கலங்களைப் (பாதரச மின்கலம்) பயன்படுத்தின. முதல் சிகிச்சை பெற்றவர் மேலும் 18 மாதங்கள் வாழ்ந்தார். காப்புரிமம் பெறப்பட்ட இக்கண்டுபிடிப்பை அடுத்து மினியாப்பொலிசைச் சேர்ந்த மெட்ரோனிக் நிறுவனம் இதயமுடுக்கிகளில் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு புதிய கருவிகளை தயாரித்தது[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Implantable pacemaker inventor Wilson Greatbatch dies". பிபிசி. 27 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-28.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 2.0 2.1 2.2 "Wilson Greatbatch". Inventor profile. National Inventors Hall of Fame. Archived from the original on 2011-10-15. பார்க்கப்பட்ட நாள் 2011-09-28.
- ↑ "National High Magnetic Field Laboratory". Archived from the original on 2014-10-11. பார்க்கப்பட்ட நாள் 2011-09-28.
- Biography of Greatbatch at MIT website பரணிடப்பட்டது 2003-03-18 at the வந்தவழி இயந்திரம்
- Adam, John (February 5, 1999). "Making Hearts Beat". Innovative Lives - The Smithsonian's Lemelson Center for the Study of Invention and Innovation. Smithsonian Institution. Archived from the original on 2008-04-21. பார்க்கப்பட்ட நாள் 2008-04-19.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - "Wilson Greatbatch Makes Hearts Beat". Prototype Online: Inventive Voices podcast - The Smithsonian's Lemelson Center for the Study of Invention and Innovation. Smithsonian Institution. Audio recording of Wilson Greatbatch from October 8, 1996.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - Greatbatch.com Company Website
வெளி இணைப்புகள்
தொகு
- US patent 3057356, Wilson Greatbatch, "Medical cardiac pacemaker", published 1962-10-09
- A video interview with Wilson Greatbatch from vega.org.uk