விளார், தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

விளார் (Vilar), இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விளார் ஊராட்சியில் அமைந்த கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இது ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதிக்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

விளார்
ஊராட்சி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
தாலுகாதஞ்சாவூர்
அரசு
 • வகைஉள்ளாட்சி
 • நிர்வாகம்விளார் கிராம ஊராட்சி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்9,028
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
613006

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2,170 குடியிருப்புகள் கொண்ட விளார் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 9,028 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 4,247 மற்றும் பெண்கள் 4,781 உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1126 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 925 (10.25%) ஆகும். இதன் சராசரி எழுத்தறிவு 86.61% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 80.64%, இசுலாமியர்கள் 4.47% மற்றும் கிறித்துவர்கள் 14.89% ஆக உள்ளனர்.[1]

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

தொகு
 
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்புவிழா கல்வெட்டு

தமிழீழத்துக்காக உயிர் விட்ட போராளிகள், தியாகிகள் மற்றும் மக்களை நினைவு கூறும் ஒரு முற்றம் ஆகும்.[2][3] இதில் தமிழ் மொழிக்கு தொண்டு செய்தவர்கள் மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் விவரங்கள் உள்ளன. இதனை 06-11-2013 அன்று தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் திறந்து வைத்தார்.[4][5] முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்பது தமிழீழத்தில் கொல்லப்பட்ட, தமிழீழத்துக்காக உயிர் விட்ட போராளிகள், தியாகிகள் மற்றும் மக்களை நினைவு கூரும் ஒரு முற்றம் ஆகும். இதில் தமிழ் மொழிக்கு தொண்டு செய்தவர்கள் மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் விவரங்கள் உள்ளன. இதனை 06-11-2013 அன்று தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் திறந்து வைத்தார்.

இந்த நினைவு முற்றம் கட்டும் பணி 15 நவம்பர் நவம்பர் 2010 அன்று தொடங்கப்பட்டது. வைகோ மற்றும் இரா. நல்லகண்ணு ஆகியவர்களால் இதன் அடிக்கல் நாட்டப்பட்டது. முதலில் ஒரு நினைவுத்தூணாக மட்டுமே அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் தமிழர் நினைவிடங்களுக்கு நிகழ்ந்த அவலங்களால், தமிழர்கள் அதிகளவில் அழிக்கப்பட்ட இலங்கையின் உள்நாட்டுப் போரின் நினைவுச் சின்னமாக இது உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டது. உலகத் தமிழர் பேரவையால் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டப்பணி, உலகத் தமிழர் பேரவை மற்றும் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ நெடுமாறனின் மேற்பார்வையில் நடந்தது. கட்டுமானத்திற்கான நிதி பல இடங்களிலிருந்து திரட்டப்பட்டது. தமிழ் செயற்பாட்டாளர் ம. நடராசன் நினைவு முற்றத்திற்குத் தேவையான 1.77 ஏக்கர் நிலத்தை வழங்கினார்.

அமைவிடம்

தொகு

தஞ்சாவூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள விளார் கிராமத்தில் 1.75 ஏக்கர் பரப்பளவில் தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையோரம் அமைந்துள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து விளார் செல்லும் பேருந்துகள் மூலம் இவ்விடத்தை அடையலாம். தஞ்சாவூரின் அண்ணாநகர் சந்தையிலிருந்தும் இந்நினைவு முற்றத்திற்கு எளிதாகச் செல்லலாம்.

மேற்கோள்கள்

தொகு


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளார்,_தஞ்சாவூர்&oldid=3442296" இலிருந்து மீள்விக்கப்பட்டது