விழிஞ்ஞம் கலங்கரை விளக்கம்

கேரளத்தில் உள்ள கலங்கரை விளக்கம்

விழிஞ்ஞம் கலங்கரை விளக்கம் (மலையாளம் : വിഴിഞ്ഞം വിളക്കുമാടം) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், கோவளம் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கமாகும். இது 30 சூன் 1972-இல் செயல்படத் தொடங்கியது. விழிஞ்ஞம் பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பரபரப்பான துறைமுகமாக இருந்தது. தற்போதைய கலங்கரை விளக்கம் நிறுவப்படுவதற்கு முன்பு, இந்த இடத்தில் கலங்கரை விளக்கங்கள் எதுவும் இருக்கவில்லை. ஒரு காலத்தில் தொலை அடையாளக் குறி (கொடிக் கம்பம்) 18-ஆம் நூற்றாண்டில் இருந்திருக்க வேண்டும். 19-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, இந்த துறைமுகம் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தது. அருகிலுள்ள குளச்சலில் 1925-இல் ஒரு கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. பின்னர், 1960-ஆம் ஆண்டில் விழிஞ்ஞத்தில் ஒரு தொலை அடையாளக் குறி அமைக்கபட்டது. [2]

விழிஞ்ஞம் கலங்கரை விளக்கம்
Kovalam Lighthouse
விழிஞ்ஞம் கலங்கரை விளக்கம் Kovalam Lighthouse is located in கேரளம்
விழிஞ்ஞம் கலங்கரை விளக்கம் Kovalam Lighthouse
விழிஞ்ஞம் கலங்கரை விளக்கம்
Kovalam Lighthouse
கேரளம்
அமைவிடம்கேரளம், கோவளம்
ஆள்கூற்று8°22′59″N 76°58′47″E / 8.383072°N 76.979742°E / 8.383072; 76.979742
கட்டப்பட்டது1972
கட்டுமானம்கற்காரை கோபுரம்
கோபுர வடிவம்மாடமும், விளக்கும் கொண்ட உருளை கோபுரம்
குறியீடுகள்/அமைப்புவெள்ளை மற்றும் சிவப்பு கிடைமட்ட பட்டைகள், சிவப்பு விளக்கு குவிமாடம்
உயரம்36 மீட்டர்கள் (118 அடி)
குவிய உயரம்57 மீட்டர்கள் (187 அடி)
சிறப்பியல்புகள்Fl W 15s.
Admiralty எண்F0718
NGA எண்27492
ARLHS எண்IND-121[1]

தொழில்நுட்ப விவரங்கள்

தொகு

இந்த கலங்கர விளக்க கோபுரம் உருளை வடிவில் 36 மீட்டர் உயரத்துடன் உள்ளது. இதன்மேல் வண்ணப்பூச்சு அடையாளங்களாக சிவப்பு மற்றும் வெள்ளை பட்டைகள் வரையபட்டுள்ளன. கலங்கரை விளக்கத்தில் உலோக உப்பீனிய விளக்கு மற்றும் நர்திசை ஒட்டி பொறிமுறை பொருத்தப்பட்டுள்ளது. [3] 30 ஏப்ரல் 2003 இல் ஒளியூற்று மாற்றப்பட்டது.

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Rowlett, Russ. "Lighthouses of India: Kerala and Karnataka". The Lighthouse Directory. வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்). பார்க்கப்பட்ட நாள் 7 February 2016. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "Indian Lighthouses: An Overview" (PDF). DGLL. Archived from the original (PDF) on 18 December 2014. பார்க்கப்பட்ட நாள் 21 September 2014.
  3. "Lighthouses in Kerala". Archived from the original on 19 March 2015. பார்க்கப்பட்ட நாள் 21 September 2014.