விஷ்வம்பரி

விஷ்வம்பரி கருநாடக இசையின் 54 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 54 வது இராகத்திற்கு வம்சவதி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்

தொகு
 
விஷ்வம்பரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி132 ப த3 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி33 ப ம23 ரி1
  • பிரம்ம என்றழைக்கப்படும் 9வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6வது மேளம்.
  • இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் ஹாடகாம்பரி (18) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் காந்தார, நிஷாத சுரங்கள் முறையே சியாமளாங்கி (55), கானமூர்த்தி (03) மேளங்கள் தோற்றுவிக்கிறது (மூர்ச்சனாகாரக மேளம்).

உருப்படிகள்

தொகு
வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி வம்சவதி சிவயுவதி முத்துசாமி தீட்சிதர் ஆதி
கிருதி பக்தவத்சலம் முத்துசாமி தீட்சிதர் ஆதி
கிருதி போஷம்போ தவகுன மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா‎ ஆதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்வம்பரி&oldid=1554414" இலிருந்து மீள்விக்கப்பட்டது