வி. அனந்த நாகேசுவரன்

வி. அனந்த நாகேசுவரன் (V. Anantha Nageswaran) இந்தியப் பொருளாதார நிபுணராகவும் இந்திய அரசின் 18 ஆவது தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும் இருந்தார். [1] 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பொருளாதார ஆலோசனைக் குழுவின் பகுதி நேர உறுப்பினராக இவர் பணியாற்றினார். சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனம் பெங்களூர் & இந்தூர் இந்திய மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றில் பட்டதாரி மாணவர்களுக்கான பேராசிரியராகவும் பணியாற்றினார்.[2]

வி. அனந்த நாகேசுவரன்
18 ஆவது இந்திய அரசின் முதன்மைப் பொருளியல் ஆய்வுரைஞர்
பதவியில் உள்ளார்
பதவியில்
28 சனவரி 2022
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்நிர்மலா சீதாராமன்
முன்னையவர்கே. வி. சுப்பிரமணியன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1962
தேசியம்இந்தியர்
முன்னாள் கல்லூரிஅமெரிக்கன் கல்லூரி, மதுரை
இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்
மாசாசூவெட்சு பல்கலைக்கழகம் (முனைவர்)
தொழில்பொருளாதார நிபுணர்
வி. அனந்த நாகேசுவரன்

நிதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்லூரி தலைவராக இவர் பணியாற்றினார். கிரியா பல்கலைக்கழகத்தில் வருகைதரும் பொருளாதாரப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.[3]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

1983 ஆம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்ற நாகேசுவரன், 1986 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் முதுகலை பட்டயப் படிப்பை முடித்தார். பின்னர் மாசசூசெட்சு ஆம்கெர்சுட்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[4]

தொழில் தொகு

சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூரில் கிரெடிட்டு சூசி குழுமம் மற்றும் யூலியசு பேயர் குழும வங்கிகளில் நாகேசுவரன் பணிபுரிந்தார். தக்சசீலா நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டார். 2001 ஆம் ஆண்டு ஆவிசுகார் குழுமத்தை தொடங்கினார்.

2021 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். முன்னதாக கிருட்டிணமூர்த்தி சுப்பிரமணியன் இப்பதவியில் மூன்று வருட காலம் பணிபுரிந்து முடித்தார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Govt appoints Dr V Anantha Nageswaran as Chief Economic Advisor". The Indian Express (in ஆங்கிலம்). 2022-01-29. பார்க்கப்பட்ட நாள் 2022-01-29.
  2. https://carnegieindia.org/2016/11/16/can-india-grow-challenges-opportunities-and-way-forward-pub-65088
  3. https://www.ndtv.com/india-news/who-is-dr-v-anantha-nageswaran-the-new-chief-economic-advisor-5-facts-2735609
  4. Roychoudhury, Arup (2022-01-28). "Govt appoints V Anantha Nageswaran as new Chief Economic Advisor". Business Standard India. https://www.business-standard.com/article/economy-policy/govt-appoints-v-anantha-nageswaran-as-the-chief-economic-advisor-122012801507_1.html. 
  5. Reuters (2022-01-28). "India says V Anantha Nageswaran named chief economic adviser" (in en). Reuters. https://www.reuters.com/world/india/india-says-v-anantha-nageswaran-named-chief-economic-adviser-2022-01-28/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._அனந்த_நாகேசுவரன்&oldid=3431062" இலிருந்து மீள்விக்கப்பட்டது