வி. ஆர். கிருஷ்ணன் எழுத்தச்சன்

இந்திய எழுத்தாளர்

வி. ஆர். கிருஷ்ணன் எழுத்தச்சன் (V.R.Krishnan Ezhuthachan) (1909-2004) ஓர் இந்திய விடுதலை வீரரும், காந்தியவாதியும், பத்திரிகையாளரும், தொழிற்சங்கவாதியும், தென்னிந்திய மாநிலமான கேரளாவிலுள்ள திருச்சூர் நகரத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசுக் கட்சித் தலைவரும் ஆவார்.[1] எழுத்துச்சன் 26 ஜனவரி 1941 இல் நிறுவப்பட்ட கொச்சி ராஜ்ய பிரஜாமண்டலம் என்ற அரசியல் கட்சியின் நிறுவனர் பொதுச் செயலாளராக இருந்தார். திருச்சூரிலிருந்து வெளியிடப்பட்ட தீனபந்து நாளிதழையும் நிறுவி நடத்தி வந்தார்.[2][3][4][5][6]

வி. ஆர். கிருஷ்ணன் எழுத்தச்சன்
கொச்சி சட்டமன்றம்
பதவியில்
1945–1948
திருவிதாங்கூர்-கொச்சி சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1952–1954
இராஜபிரமுகர் சித்திரைத் திருநாள் பலராம வர்மன்
முன்னவர் பதவி உருவாக்கப்பட்டது
பின்வந்தவர் சிவராம பாரதி
தொகுதி நெம்மரா கிராமம்
தனிநபர் தகவல்
பிறப்பு 25 ஏப்ரல் 1909
அவிணிச்சேரி, திருச்சூர், கொச்சி இராச்சியம், பிரித்தானிய இந்தியா
இறப்பு 13 மே 2004(2004-05-13) (அகவை 95)
திருச்சூர், கேரளம், இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) பி. கே. இலட்சிமி பாய்
பிள்ளைகள் மூன்று மகள்களும், நான்கு மகன்களும்
இருப்பிடம் திருச்சூர்
படித்த கல்வி நிறுவனங்கள் அரசு சட்டக் கல்லூரி, திருவனந்தபுரம்

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

எழுத்தச்சன் 25 ஏப்ரல் 1909 அன்று திருச்சூரில் அவிணிசேரியில் வடக்கூட்டு நெல்லிபரம்பில் ராமன் எழுத்தச்சன் - ஞரசேரி வளப்பில் இலட்சுமி அம்மா ஆகியோரின் பத்தாவது மகனாகப் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை திண்ணைப்பள்ளியில் (பழைய பாரம்பரிய கிராமப் பள்ளி) முடித்தார்.[7]

 
திருச்சூர் அவிணிசேரியிலுள்ள, வி. ஆர். கிருஷ்ணன் எழுத்தச்சனின் வீடு

10-ம் வகுப்பில் தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்ற பிறகு, இவர் பொருளாதாரம் , இளங்கலை சட்டம் பட்டம் பெற்றார். 1925இல் காந்திஜி திருச்சூர் வந்தபோது, எழுத்தச்சன் அவரைச் சந்தித்து, பின்னர் சுதந்திரப் போராட்டத்தில் இறங்கினார். கொச்சி மாநில காங்கிரசு கட்சியின் தீவிர உறுப்பினரான பி.குமாரன் எழுத்தச்சன் அரசியலில் இவருக்கு வழிகாட்டியாக இருந்தார்.[8][9][6]

 
தனது மனைவி இலட்சுமி பாயுடன் வி. ஆர். கிருஷ்ணன் எழுத்தச்சன்

இலக்கியப் பணி தொகு

எழுத்தச்சன் இலக்கியத் துறையிலும் பங்களிப்பைக் கொண்டுள்ளார். இவர் ஒரு கவிஞரும் கூட. 2000 ஆம் ஆண்டில் இவர் தனது வி.ஆர்.கிருஷ்ணன் எழுத்தச்சன் என்ற சுயசரிதைக்கு கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.[10][11]

அங்கீகாரம் தொகு

இந்திய சுதந்திர இயக்கத்தில் சிறந்த சேவை செய்ததற்காக எழுத்தச்சனுக்கு நாடு தாமிரப்பட்டயம் வழங்கி கௌரவித்தது. 1931ஆம் ஆண்டு "கிராமோதாரணம்" என்ற ஆய்வுக்காக சென்னைப் பல்கலைக்கழகம் விருது வழங்கியது. சதானந்தன் விருது, இந்தியாவின் கூட்டுறவு இயக்கத் துறையில் செய்த பங்களிப்புக்கான பேராசிரியர். கீழ்க்காயல் மத்தாய் சாண்டி விருது, கேரள பத்திரிகை அறக்கட்டளையின் "சுயாதீன கனகோபகாரம்", சமூக மற்றும் இலக்கியத் துறைகளில் சிறந்த சேவைக்காக "ராமாஸ்ரம" விருது. திருச்சூர் "சஹ்ருதயா வேதி" விருது, "தோமியாஸ்" விருது போன்றவற்றையும் பெற்றுள்ளார்.[7]

மேற்கோள்கள் தொகு

 1. "സ്വാതന്ത്ര്യം @ 70". 10 October 2017. https://www.madhyamam.com/local-news/thrissur/2017/aug/10/310592. பார்த்த நாள்: 4 August 2018. 
 2. "Gandhian remembered". தி இந்து. 2011-05-27 இம் மூலத்தில் இருந்து 2013-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125082249/http://www.hindu.com/2011/05/27/stories/2011052757720500.htm. 
 3. "THRISSUR - HISTORY". Govt of Thrissur இம் மூலத்தில் இருந்து 11 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180111165018/http://thrissur.gov.in/history.asp. 
 4. "Fall in poll percentage due to middle class indifference: Ravi". Zee News. http://zeenews.india.com/election09/story.aspx?aid=531408. [தொடர்பிழந்த இணைப்பு]
 5. "VR Krishnan Ezhuthachan remembrance meet on Sunday". City Journal. http://www.cityjournal.in/Newspaper/20120510/Metro/Metro_20.html. 
 6. 6.0 6.1 "വി.ആര്‍. കൃഷ്ണനെഴുത്തച്ഛന്‍ അന്തരിച്ചു". One India Malayalam. 13 May 2004 இம் மூலத்தில் இருந்து 13 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180213094826/https://malayalam.oneindia.com/news/2004/05/13/ker-krishnan-ezhuthachan.html. 
 7. 7.0 7.1 "വി. ആർ. കൃഷ്ണൻ എഴുത്തച്ഛൻ". ഗുരുവിഷൻ: ചരിത്ര, സംസ്കാരിക, മാസിക(വി. ആർ. കൃഷ്ണൻ എഴുത്തച്ഛൻ സ്പെഷ്യൽ പതിപ്പ്). Thrissur: K. Sasidharan. 31 March 2018.
 8. "vrkrishnanezhuthachanlawcollege". vrkrishnanezhuthachanlawcollege இம் மூலத்தில் இருந்து 21 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170721132459/http://www.vrkrishnanezhuthachanlawcollege.com/aboutus.php. 
 9. "FORMATION OF KOCHI RAJYA PRAJAMANDALAM". Shodhganga:a reservoir of Indian theses. http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/79618/9/09_chapter%202.pdf. 
 10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-08-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120809050721/http://www.mathrubhumi.com/books/awards.php?award=13. 
 11. [http://www.keralasahityaakademi.org/ml_aw6.htm Works that won Kerala Sahitya Akademi award for Biography/Autobiography.

மேலும் படிக்க தொகு

 • Formation of Kochi Rajya Prajamandalam
 • V.R Krishnanezhuthachan aathmakadha
 • guruviṣan: caritra, sanskārika, māsika(vi. ār. kr̥ṣṇan eḻuttacchan speṣyal patipp) ഗുരുവിഷൻ: ചരിത്ര, സംസ്കാരിക, മാസിക(വി. ആർ. കൃഷ്ണൻ എഴുത്തച്ഛൻ സ്പെഷ്യൽ പതിപ്പ്), Thrissur: K. Sasidharan. 31 March 2018.