வி. எம். கிரிஜா

வி. எம். கிரிஜா (V. M. Girija பிறப்பு: ஜூலை 27, 1961) மலையாள மொழியில் எழுதும் ஓர் இந்தியக் கவிஞர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். பிரேம் - ஏக் ஆல்பம், இந்தியில் இருந்து மொழிபெயர்த்த கவிதைத் தொகுப்பான பிரணயம் ஓரல்பம் உள்ளிட்ட பல நூல்களை வெளியிட்டுள்ளார். கேரள சாகித்ய அகாதமி இவருக்கு 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த கவிஞர் விருதை வழங்கியது மேலும் 'இலக்கியத்துக்கான சங்கம்புழா விருது' மற்றும் 'பஷீர் அம்மா மலையாள புரசுகாரம்' ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

வி. எம். கிரிஜா
பிறப்பு27 சூலை 1961 (1961-07-27) (அகவை 62)
பருத்திப்ரா, பாலக்காடு, கேரளம், இந்தியா
பணிகவிஞர், கட்டுரையாளர்
வாழ்க்கைத்
துணை
சி. ஆர் . நீலகண்டன்
பிள்ளைகள்இரு மகள்கள்
உறவினர்கள்
  • வாசுதேவன் பட்டத்திரிப்பாடு (தந்தைr)
  • கௌரி (தாயார்)
விருதுகள்
  • 2018 கேரள சாகித்திய அகாதமி விருது
  • சங்கம்புழா விருது

சுயசரிதை தொகு

வி. எம். கிரிஜா ஜூலை 27, 1961 இல் வடக்கேப்பட்டு வாசுதேவன் பட்டத்திரிப்பாட் மற்றும் கௌரி தம்பதியினருக்கு, கேரளா, பாலக்காடு மாவட்டத்தில் ஷொர்னூருக்கு அருகிலுள்ள பருத்திப்ரா என்ற கிராமத்தில் பிறந்தார்.[1][2] பட்டாம்பியில் உள்ள சமஸ்கிருதக் கல்லூரியில் மலையாளத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.இவர் சிறுவயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவரது கவிதைகள் மாத்ருபூமியின் பாலபங்க்தியில் வெளிவந்தன. 1983 ஆம் ஆண்டு அனைத்திந்திய வானொலியில் அறிவிப்பாளராகச் சேர்ந்ததன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கொச்சி பண்பலையில் சேர்ந்தார்.[3][4] 38 வருட சேவைக்குப் பிறகு 2021 இல் கொச்சி பண்பலையில் இருந்து ஓய்வு பெற்றார்.[5][6]

கிரிஜா பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரான சி. ஆர். நீலகண்டனை மணந்தார். இந்த தம்பதியருக்கு ஆர்த்ரா மற்றும் அர்ச்சா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கொச்சியில் உள்ள காக்கநாடு பகுதியில் வசிக்கின்றனர்.

விருதுகளும் கௌரவங்களும் தொகு

கிரிஜா 2018 ஆம் ஆண்டில் புத்த பூர்ணிமா எனும் கவிதைத் தொகுப்பிற்காக கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்ற்றார்.[7][8] மேலும் 'இலக்கியத்துக்கான சங்ம்புழா விருது' மற்றும் 'பஷீர் அம்மா மலையாள புரசுகாரம்' ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.[9]

சான்றுகள் தொகு

  1. "വി എം ഗിരിജ". Sayahna. 2018-11-06. பார்க்கப்பட்ட நாள் 2018-11-06.
  2. "V M Girija". Mathrubhumi. January 23, 2018. Archived from the original on 2018-07-21. பார்க்கப்பட்ட நாள் 2018-11-06.
  3. "Kochi News : When a poet goes on the air". தி இந்து. 2005-08-14. பார்க்கப்பட்ட நாள் 2018-11-06.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. http://www.universityofcalicut.info/syl/Malayalam_Sylla_16.pdf பரணிடப்பட்டது 2013-02-27 at the வந்தவழி இயந்திரம் page 59
  5. "വി എം ഗിരിജ ആകാശവാണിയിൽനിന്ന്‌ പടിയിറങ്ങുന്നു" (in ml). https://www.deshabhimani.com/news/kerala/news-kerala-31-07-2021/960240. 
  6. "മൂന്നര പതിറ്റാണ്ടിന്‍റെ സേവനം; ആകാശവാണിയുടെ അകത്തളം വിട്ട് വി.എം.ഗിരിജ | V M Girija | All India Radio". www.youtube.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  7. "Kerala Sahitya Akademi Awards: K. V. Mohan Kumar's 'Ushnarashi' best novel" (in en) இம் மூலத்தில் இருந்து 2019-12-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191221050858/https://english.mathrubhumi.com/books/books-news/kerala-sahitya-akademi-awards-k-v-mohan-kumar-s-ushnarashi-best-novel-1.4378500. 
  8. "K G Sankara Pillai and M Mukundan selected for akademi fellowships". https://www.newindianexpress.com/states/kerala/2019/dec/21/k-g-sankara-pillai-and-m-mukundan-selected-for-akademi-fellowships-2078951.html. 
  9. "ബഷീർ ബാല്യകാലസഖി പുരസ്കാരം ബി.എം. സുഹറയ്ക്കും ബഷീർ അമ്മ മലയാളം പുരസ്കാരം വി.എം.ഗിരിജയ്ക്കും". Asianet News Network Pvt Ltd (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-29.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எம்._கிரிஜா&oldid=3935042" இலிருந்து மீள்விக்கப்பட்டது