வி. டி. கிருஷ்ணசாமி
வி. டி. கிருஷ்ணசாமி (V. D. Krishnaswami) (பிறப்பு:18 சனவரி 1905 – இறப்பு: 15 சூலை 1970) சென்னையில் பிறந்த கிருஷ்ணசாமி சென்னை மாநிலக் கல்லூரியில் நிலவியல் படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை நிலவியல் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் சுரகம் மற்றும் உலோகவியல் துறைப் பேராசிரியராக 1929-ஆம் ஆண்டு வரை பணி செய்தார். பின்னர்1930-ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் தொல்லியல் அகழாய்வுப் பயிற்சி பெற்றார்.
பின்னர் ஐதராபாத்தில் உள்ள சலார் ஜங் அருங்காட்சியகம் மற்றும் கொல்கத்தா இந்திய அருங்காட்சியகத்தின் இயக்குநராக பணியாற்றினார். பின்னர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் துணை தலைமை இயக்குநரானார். இவர் 1940 மற்றும் 1950களில் தென்னிந்தியாவில் குறிப்பாக சென்னையைச் சுற்றியுள்ள கற்காலம் மற்றும் பெருங்கற்காலத்திய தொல்லியல் களங்களை மோர்டிமர் வீலருடன் இணைந்து அகழாய்வுப் பணிகள் செய்தார்.[1]
ஆய்வு அறிக்கைகள்தொகு
- Environmental and Cultural Changes of Prehistoric man near Madras, 1938
- Stone Age in India, 1947
மேற்கோள்கள்தொகு
- V. D. Krishnaswami (18-1-1905/15-7-1970). Archaeological Survey of India. 1971.