வி. வி. சி. ஆர். முருகேசர்

என்பவர் ஓர் இந்தியக் கல்வியாளரும், ஆன்மீகவாதியும் , மக்கள் சேவகரும் ஆவார்

வி.வி.சி.ஆர். முருகேச முதலியார் (V. V. C. R. Murugesa Mudaliar, 22 ஏப்ரல், 1903 - 30 மார்ச், 1968)[1] என்பவர் ஓர் இந்தியக் கல்வியாளரும், ஆன்மீகவாதியும் , மக்கள் சேவகரும் ஆவார். இவர் நூற்றுக்கணக்கான கோவில்களை புனரமைத்தவர். பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டவர். ஈரோடு நகர மக்கள் இவரை "சைவ பெருவள்ளல்", "கல்வி வள்ளல்" என்று அன்போடு அழைத்தனர்.[2][3]

வி.வி.சி.ஆர். முருகேச முதலியார்
பிறப்பு(1903-04-22)ஏப்ரல் 22, 1903
திருச்செங்கோடு, நாமக்கல், தமிழ்நாடு
இறப்புமார்ச்சு 30, 1968(1968-03-30) (அகவை 64)
பெற்றோர்இராமலிங்கம் முதலியார்
கணபதியம்மாள்
உறவினர்கள்கந்தப்ப முதலியார் (அண்ணன்)
வையாபுரி முதலியார் (அண்ணன்)
டி. ஆர். சுந்தரம் (தம்பி)


பிறப்பு தொகு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் செல்வம் செழித்த செங்குந்த கைக்கோளர் குலம்[4] புள்ளிக்காரர் கோத்திரம் பங்காளிகளை சேர்ந்த வைத்தியநாத வெள்ளைய காவேரி இராமலிங்கம் முதலியார் - கணபதியம்மாள் தம்பதியினருக்கு 1903-ஆம் ஆண்டு, ஏப்ரல் 22ஆம் நாள் மகனாகப் பிறந்தார்.[5] 

குடும்பம் தொகு

இவருக்கு சண்முகவடிவேல், கந்தசாமி என இரு மகன்கள். இவருக்கு நான்கு சகோதரர்கள் மற்றும் 4 சகோதரிகள். இவரின் அண்ணன் கந்தப்ப முதலியார்(திருச்செங்கோடு முதல் நகர்மன்ற தலைவர்). மற்றொரு அண்ணன் வையாபுரி முதலியார்(புள்ளிக்கார் மில்ஸ் நிறுவனர்). இவரின் தம்பி டி. ஆர். சுந்தரம் (சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர்).[6]

ஆன்மீக சேவை தொகு

பழனி முருகன் கோவிலுக்கு, 25 ஆண்டு காலம் நிர்வாக அறங்காவலராக இருந்தார். 

பழநியாண்டவர் உலா வருவதற்கு 17.081947 அன்று தங்கத் தேர் தானமாக வழங்கினார்.  (இந்து கோவிலில் பயன்படுத்தப்பட்ட முதல் தங்கதேர் இதுவே ஆகும்)[7]

பழனி முருகனுக்கு வைரவேல் மற்றும் தங்க மயில் வாகனம் செய்து கொடுத்தார்.

முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க பழநி அடிவாரத்தில் பொது திருமடம் ஒன்றையும் அமைத்துத் தந்தார்.

பழனியில் செங்குந்தர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பை நிறுவினார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலராக பல ஆண்டுகள் பணியாற்றி அங்கும் பல திருப்பணிகளை செய்து முடித்தார். 

1963ஆம் ஆண்டு பழனி மலைமீது விஞ்ச் (மின் இழுவை இரயில்) அமைத்துக்கொடுத்தார். 

பழனி கிரிவலைப்பாதையில் நான்கு திசைகளிலும் துர்க்கை அம்மன் ஆலயம் அமைத்தார். 

மதுரையில் அன்னை மீனாட்சிக்குப் வெள்ளி பல்லக்குச் செய்துதந்து அழகு பார்த்தவர். 

இத்தகைய கல்விச் சேவை, ஆன்மீகப் பணி, சமுதாயப்பணிக்காக தனது செல்வத்தை அள்ளித் தந்த வள்ளல் ஆவார்.

திருச்செந்தூர் முருகன் கோவில் அறங்காவலராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

திருப்பதி திருவேங்கட ஏழுமலையானை வழிபட வரும் அடியவர்கள் தங்குவதற்கு திருமலையில் விடுதியை அமைத்துத் தந்துள்ளார்.

திருத்தணியில் முருகன் கோவிலில் படிக்கட்டுகள் மண்டபங்கள் கட்டி கொடுத்தார். 

இவர் பிறந்த திருச்செங்கோட்டில் அர்த்தனாரீஸ்வரர் மற்றும் முருகனை மாலை நேரத்தில் வரும் பக்தர்கள் வசதிக்காக திருச்செங்கோடு மலைக் கோவிலுக்கும் முதல் முதலாக மின்சார வசதி மின்விளக்கு வசதி நன்கொடையாக செய்து தந்தார். திருச்செங்கோட்டின் அடையாளமாக இருக்கும் மலைப் படிக்கட்டுகளில் இப்போது விளக்கு எரிவது இவரது உபயத்தினால் தான். இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து திருச்செங்கோட்டில் வருபவர்களுக்கு கலங்கரை விளக்கம் போல் முதலில் கண்ணில்படுவது இந்த மலை படிக்கட்டு விளக்குகள் தான்.

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் அம்மையப்பன் காட்சி தர உபயமாக தங்கச்சப்பரம் அளித்தும், திருச்செங்கோடு செங்கோட்டுவேலவனுக்கு தங்கக்காவடி அளித்தும் அழகு பார்த்தார்.

தமிழ் நூல்களை எழுதும் நூற்றுக்கணக்கான தமிழ் ஆசிரியர்களுக்கும், தமிழ்ப் புலவர்களுக்கும் பொருளுதவி தந்த வள்ளலாய் திகழ்ந்தவர்.[8]

மேலும் பல கோயில்களுக்கு தங்க ஆபரணங்கள் நன்கொடையாக வழங்கினார்.

இவர் செய்த காரியங்களுக்காக, விளம்பரம் தேடிக் கொண்டதே இல்லை, கோவில் திருப்பணி செய்வதற்காக கல்வெட்டுகள் கூட வைக்க விரும்பமாட்டார். கோவில் நிர்வாகமே தனிப்பட்ட முறையில் இவருக்கு வைத்து கல்வெட்டுகள் இன்று காணப்படுகின்றனர்.[9][10] [11]

சிதம்பரம் மேற்கில் உள்ள அகஸ்தியர் கோவில் இவரால் கட்டப்பட்டது.[12]

மருத்துவ தொண்டு தொகு

ஈரோட்டில் தனலட்சுமி பிரசவ வார்டு என்ற பெயரில் மகப்பேறு நிலையம் ஒன்றை நிறுவினார். 

காசநோய் எனும் டி.பி. தீர, ஈரோடு பெருந்துறையில் காசநோய் சேனட்டோரியம் மருத்துவமனையில் விடுதி மற்றும் ஆய்வுக்கூடம் கட்டித்தந்தார்.[13] 

கல்விப்பணி தொகு

ஈரோடு சிக்கைய்யா நாயகர் மாசனக்கல்லூரி நிறுவுவதற்காகவும் 50களிலேயே பல லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். 

மேலும் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர், மதுரை லேடி டொக் பெருமாட்டி  கல்லூரிக்கு (6,000 பவுன்)ஆறாயிரம் தங்க பொற்காசுகளை நன்கொடையாக அளித்தார். 

அன்றைய தமிழக முதல்வர்(1963) பக்தவத்சலம் முதலியார் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, பழனியில் முருகேச முதலியார் தொழிற்சாலை துவங்க வைத்திருந்த இடத்தை பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பசுத்தாய் கணேசன் பண்பாட்டுக் கல்லூரி துவங்க பல ஏக்கர் நிலத்தை தானமாக அளித்து கல்லூரி கட்டுவதற்கான செலவுகளையும் இவர் ஏற்றார். 

நமது நாடு அடிமைப்பட்டு மக்கள் பஞ்சத்திலும் வறுமையிலும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தபோதே சமுதாய அக்கறை கொண்டு தனது செல்வத்தை முனிவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சென்றடைய வேண்டும் என்ற சிந்தனையோடு 1942ஆம் ஆண்டு துவக்கப்பட்டது தான் ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகம் வி.வி.சி.ஆர். முருகோ முதலியார் மற்றும் அவரது உறவினர் எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் சேர்ந்து, ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகத்தை 24.12.1942ஆம் ஆண்டு பதிவு செய்தனர். அதன் நிர்வாகத்தின் கீழ் முதன் முதலில் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியை 1.6.1944 ஆம் ஆண்டு துவக்கினர் முருகேச முதலியார்.

ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகம் தோற்றுவிக்கப்பட்டபோது, 50,000 தங்க  பொற்காசுகளை வழங்கி, அவர் தோற்றுவித்த கல்வி நிறுவனம் இன்று 75 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது.

மேலும் பல கல்விப் பணிகளுக்காக  வழங்கி வள்ளல் இவர் ஆவார்.[14] 

மறைவு தொகு

சமுதாயப்பணிக்காக தனது செல்வத்தை அள்ளித் தந்த வள்ளல் வி.வி.சி. ஆர். முருகேச முதலியார் 30.3.1968-ஆம் ஆண்டு முருகப்பெருமானின் இறையடி சேர்ந்தார்.

நினைவு பள்ளி தொகு

ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகத்தில் ஐயாவுக்கு முழு உருவ சிலை உள்ளது.[15] ஐயாவின் மறைவிற்குப் பின்பு ஈரோடு செங்குந்தர் கல்வி கழகம் VVCR முருகேசனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளியை ஐயாவின் நினைவாக ஆரம்பித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.[16]

பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஐய்யாவின் பெயரில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.[17]

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. வித்தியா வாணி 2019 ஜூலை மலர். விவேகானந்தா வித்யாலயா பள்ளி, சென்னை. 2019.
  2. "வித்தியா வாணி 2019 ஜூலை மலர்" (PDF). விவேகானந்தா வித்யாலயா பள்ளி, சென்னை. 2019. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  3. "முதலாளி" (in தமிழ்). தினமலர். 2013. https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14421&Print=1. 
  4. https://books.google.co.in/books?id=orI_AAAAIAAJ&q=%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwihnpak6sruAhVl7HMBHR0NBV8Q6AEwAXoECAMQAg
  5. வித்தியா வாணி 2019 ஜூலை மலர். விவேகானந்தா வித்யாலயா பள்ளி, சென்னை. 2019.
  6. "முதலாளி" (in தமிழ்). தினமலர். 2013. https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14421&Print=1. 
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-01-25. பார்க்கப்பட்ட நாள் 2021-02-02.
  8. http://www.tamilhindu.com/2009/08/variyar-and-vadalur-renovation/?fdx_switcher=true
  9. வித்தியா வாணி 2019 ஜூலை மலர். விவேகானந்தா வித்யாலயா பள்ளி, சென்னை. 2019.
  10. "முதலாளி" (in தமிழ்). தினமலர். 2013. https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14421&Print=1. 
  11. பழனி தல வரலாறு.
  12. A Silver Jubilee Souvenir of the Annamalai University: The University's Environs, Cultural and Historical (in ஆங்கிலம்). Annamalai University. 1957.
  13. வித்தியா வாணி 2019 ஜூலை மலர். விவேகானந்தா வித்யாலயா பள்ளி, சென்னை. 2019.
  14. வித்தியா வாணி 2019 ஜூலை மலர். விவேகானந்தா வித்யாலயா பள்ளி, சென்னை. 2019.
  15. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/2012/mar/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-466034.html
  16. http://www.icbse.com/schools/sengunthar-girls-higher-school-erode/33100707503
  17. http://www.apcac.edu.in/Endownments
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._வி._சி._ஆர்._முருகேசர்&oldid=3853958" இலிருந்து மீள்விக்கப்பட்டது