சிக்கய்ய நாயக்கர் கல்லூரி

ஈரோட்டில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி
(சிக்கையா நாயக்கர் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிக்கையா நாயக்கர் கல்லூரி என்பது தமிழ்நாட்டின், ஈரோடில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இந்த கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது ஆகும். [1] இந்த கல்லூரியில் கலை, வணிகம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகிறது.

சிக்கையா நாயக்கர் கல்லூரி
Chikkaiah Naicker College
உருவாக்கம்1954
அமைவிடம்ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நகர்பகுதி
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்
இணையதளம்https://www.cncollege.in

வரலாறுதொகு

சிக்கையா நாயக்கர் கல்லூரியானது ஈரோடு நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும், இது கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவுக் கல்லூரியாகும். இக்கல்லூரியானது பெரியார் ஈ. வே. இராமசாமி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 1954 சூலை 12 ஆம் நாள் திரு. எம். எம். சிக்கையா நாயக்கர் அவர்களால் நிறுவப்பட்டது. இக்கல்லூரிக்கு முதலில் "மகாஜன கல்லூரி" என்று பெயரிடப்பட்டிருந்தது. 150 மாணவர்களுடன் சிறியதாக துவக்கப்பட்ட இக்கல்வி நிலையமானது, அறுபது ஆண்டுகளில் 1200 மாணவர்கள் பயிலக்கூடியதாகவும், பட்ட மேற்படிப்புகளை வழங்குவதாகவும், ஆராய்ச்சி நிறுவனமாக வளர்ந்துள்ளது. இங்கு 11 இளங்கலை படிப்புகளும், 03 முதுகலைப் படிப்புகளும், பட்டைய படிப்புகள், முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சி திட்டங்களைக் கொண்டுள்ளது.

இக்கல்லூரியானது பல தசாப்தங்களாக மாநிலத்தின் ஒரு முக்கிய கல்லூரியாக இருந்ததுவந்துள்ளது. இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியும், தற்போதைய கேரள ஆளுநருமான திரு. கே. சதாசிவம் உட்பட பல புகழ்பெற்ற மாணவர்கள் இந்த நிறுவனத்தின் இருந்து வந்தவர்களே.

இக்கல்லூரியில் ஆராய்ச்சிப் படிப்புகள் 1983 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டன. இந்தக் கல்லூரியானது பல புகழ்பெற்ற மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், தணிக்கையாளர்கள், தொழில்முனைவோர், அமைச்சர்கள், துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், வருவாய் அதிகாரிகளை உருவாக்கியுள்ளது என்று பெருமை கொள்கிறது.

இந்தக் கல்லூரியில் மாணவர் சேர்கையானது தகுதி மற்றும் இடஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் அனுமதிப்பதன் வாயிலாக கல்லூரி அதன் சமூக உறுதிப்பாட்டின் பாரம்பரியத்தை தொடர்ந்து வருகிறது. மேலும் மாநில அரசு நிர்ணயித்தபடி மாணவர்களிடமிருந்து பெயரளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இக்கல்லூரியில் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் சமூகத்தின் பின்தங்கிய மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் பிற்படுத்தப்பட்வர்கள், பட்டியலினத்தவர் / பழங்குடியினர், சிறுபான்மையினர், ஊனமுற்றோர் போன்ற பிரிவினரில் பெரும்பான்மையினர் அரசு உதவித் தொகை பெற்று பயின்றுவருகின்றனர்.

இந்த கல்லூரியானது அரசு உதவி பெறும் நிறுவனமாக இருந்தாலும், கடந்த 17 ஆண்டுகளாக (1998 முதல்) தமிழக அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது.

அங்கீகாரம்தொகு

கல்லூரியானது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அங்கீகாரம் பெற்றுள்ளது. மேலும் 'என்ஏசிசி'யால் 'ஏ' தரச் சான்றை பெற்றுள்ளது [2]

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு