வீ. சீ. இராமச்சந்திரன்
வீரம்பாக்கம் சீனிவாசன் இராமச்சந்திரன் (Veerambakkam Srinivasan Ramachandran) இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தாவரவியலாளர் ஆவார்.[1][2] முன்னதாக பாரதியார் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். தற்போது கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத் துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைப்பு பேராசிரியராகவும் பணிபுரிகிறார்.[3]
வீ.சீ. இராமச்சந்திரன் V.S. Ramachandran | |
---|---|
இயற்பெயர் | வீரம்பாக்கம் சீனிவாசன் ராமச்சந்திரன் |
பிறப்பு | 1 திசம்பர் 1953 வீரம்பாக்கம் கிராமம், திருவண்ணாமலை மாவட்டம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
துறை | பூக்கும் தாவரம் வகைப்பாட்டியல் |
Author abbrev. (botany) | வீ.சீ. இராமச். |
தொழில்
தொகுகோயம்புத்தூர் தெற்கு வட்டத்தில் உள்ள இந்திய தாவரவியல் ஆய்வகத்தில் முனைவர் என்.சி. நாயரின் தலைமைப் பொறுப்பில் ராமச்சந்திரன் இளநிலை ஆராய்ச்சி உறுப்பினராகச் சேர்ந்தார். முனைவர் வி.ஜே.நாயரின் வழிகாட்டுதலின் கீழ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். வி.ஜே. நாயர் நன்கு அறியப்பட்ட புல் ஆராய்ச்சி நிபுணர் ஆவார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசிரியராகப் பணியாற்றி 2014 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். கண்ணனூரின் தாவரவளம் (1988),[4] தமிழ்நாட்டின் நீலகிரியில் பெரணியும் பெரணிசார் தாவரங்களும் (2017),[5] இந்தியாவில் ஒபெக்கிராபா சென்சு லேட்டோ எனப்படும் பூஞ்சைப்பாசியின் வகைப்பிரித்தல் திருத்தம் (2018) [6]என்பன இவர் எழுதிய நூல்களாகும். குறைவாகப் பயன்படுத்தப்பட்ட உண்ணக்கூடிய காட்டுத் தாவரங்கள்,[7] தாவர பன்முகத்தன்மை மற்றும் பாதுகாப்பு [8] என்ற தலைப்புகளின் கீழ் நடைபெற்ற தேசிய கருத்தரங்கின் செயல்பாடுகள் அடங்கிய இரண்டு புத்தகங்களை ஒரு பத்திரிகை ஆசிரியாகத் திருத்தினார். மேற்கூறியவற்றைத் தவிர, தேசிய மற்றும் பன்னாட்டு இதழ்களில் 125 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[9] எட்டு புதிய இனங்களையும் கண்டுபிடித்துள்ளார்.[10]
விருதுகள்
தொகு- இந்திய மூடுவிதைத் தாவரங்கள் வகைப்பிரிக்கும் சங்கத்தின் உறுப்பினர்-1992
- இனக்குழு தாவரவியல் சங்கத்தின் உறுப்பினர்-1992
- கல்லூரி ஆசிரியர்களுக்கான வருகைதரும் உறுப்பினர்-1997-1998
மேற்கோள்கள்
தொகு- ↑ "Veerambakkam Srinivasan Ramachandran - Wikispecies". species.wikimedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-05.
- ↑ "Veerambakkam Srinivasan Ramachandran". www.wikidata.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-05.
- ↑ Ramach, V. s; BotanyMSc, ranBharathiar University · Department of; college, BEd Ph D. Serving as adjunct Faculty in the Horticultural; Institute, Research; University, Tamil Nadu Agricultural; Cbe. "V.s. RAMACHANDRAN | Professor (Full) | MSc.,BEd.Ph.D. | Bharathiar University, Coimbatore | Department of Botany". ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-05.
- ↑ Ramachandran, V. S; Nair, V. J (1988). Flora of Cannanore (in English). Calcutta: Botanical Survey of India. இணையக் கணினி நூலக மைய எண் 19784477.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Ramachandran V S (2017). Ferns and fern allies of the Nilgiris Tamilnadu (in English) (01 ed.). Coimbatore: Kalaikathir printers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-927355-8-0.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ Joseph, Siljo (2018). Taxonomic revision of the lichen genus opegrapha sensu lato (roccellaceae) in India. G. P. Sinha, V. S. Ramachandran. Dehra Dun, India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-211-0967-3. இணையக் கணினி நூலக மைய எண் 1029086480.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ "PROCEEDINGS OF THE NATIONAL SEMINAR / 978-3-8383-8415-3 / 9783838384153 / 3838384156". www.lap-publishing.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-05.
- ↑ Plant diversity and conservation. V. S. Ramachandran. Jaipur: Pointer Publishers. 2013. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7132-727-0. இணையக் கணினி நூலக மைய எண் 816956877.
{{cite book}}
: CS1 maint: others (link) - ↑ "Ramachandran V. S. - efloraofindia". sites.google.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-05.
- ↑ "Ramachandran, Veerambakkam Srinivasan | International Plant Names Index". www.ipni.org. பார்க்கப்பட்ட நாள் 2021-12-05.