வீ. மதுசூதன ராவ்

வீரமாச்சினேனி மதுசூதன ராவ் ( Veeramachineni Madhusudhana Rao ) (ஜூலை 27,1917-ஜனவரி 11,2012) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் மற்றும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார், இவர் தெலுங்குத் திரைப்படத்துறையில் தனது படைப்புகளுக்காக முக்கியமாக அறியப்படுகிறார். இவர் 'வெற்றி' மதுசூதன ராவ் என்று பிரபலமாக அறியப்படுகிறார்.[2][3] இசை வெற்றிப் படங்களான அன்னபூர்ணா (1960) ஆராதனை (1962) ஆத்ம பாலம் (1964) ஜமீந்தார் (1965) அந்தஸ்துலு (1965) ஆத்மியுலு (1969) கிருஷ்ணவேணி (1974) மற்றும் சுவாதி கிரணம் (1992) ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வீ. மதுசூதனராவ்
பிறப்புவீரமாச்சினேனி மதுசூதன ராவ்
(1923-06-14)14 சூன் 1923
கிருஷ்ணா மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு11 சனவரி 2012(2012-01-11) (அகவை 88)
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தேசியம் இந்தியா
பணிஇயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
வாழ்க்கைத்
துணை
வீரமாச்சினேனி சரோஜினி[1]

விருதுகள்

தொகு
  • 1965 ஆம் ஆண்டில் அந்தஸ்துலு படத்தை இயக்கியதற்காக தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.[4]
  • 1997இல் வாழ்நாள் சாதனைக்கான ரகுபதி வெங்கையா விருது
  • சுவாதி கிரணம் படத்திற்கு சிறந்த குடும்பத் திரைப்பட நந்தி விருது[5]

இறப்பு

தொகு

தனது 94வது வயதில் 2012 ஜனவரி 11 அன்று காலமானார்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Narasimham, M L (25 January 2019). "Chinnari Paapalu (1968)". The Hindu. Archived from the original on 1 March 2019. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
  2. "Victory Madhusudhana Rao passes away". 123telugu.com (in ஆங்கிலம்). 2012-01-12. பார்க்கப்பட்ட நாள் 2022-10-08.
  3. 3.0 3.1 "Veteran film director passes away". News18. 12 January 2012. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
  4. "13th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 15 September 2011.
  5. "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Information & Public Relations of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ._மதுசூதன_ராவ்&oldid=3919767" இலிருந்து மீள்விக்கப்பட்டது