வெங்கடகிரி பாளையம்

வெங்கடகிரி பாளையம் அல்லது வெங்கடகிரி சமீன்(The estate of Venkatagiri) என்பது முன்னாள் சென்னை மாகாணத்தினுடைய ஒசு சமீன் ஆகும். இந்த இடம் தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சமீனின் தலைநகராக வெங்கடகிரி நகரம் இருந்துள்ளது.[1]

வெங்கடகிரி பாளையம்
ஜமீன்தாரி பிரித்தானிய இந்தியா
1600–1949

Coat of arms of வெங்கடகிரி

சின்னம்

வரலாறு
 •  நிறுவப்பட்டது 1600
 •  சமீன்தாரி ஒழிப்பு 7 செப்டம்பர் 1949
பரப்பு
 •  1901 4,103.34 km2 (1,584 sq mi)
Public Domain இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 

வரலாறு

தொகு

வரலாற்று இடைக்காலம்

தொகு

இந்த இராச்சியமானது சுமார் கி.பி 1208 வாக்கில் போராளி அரசர் வேலுகோட்டி ரெச்சார்ல சென்வி ரெட்டி பெத்தல நாயுடுவால் நிறுவப்பட்டது.[2] இந்த அரசானது காக்கத்தியர் ஆட்சிக்காலத்தில் காக்கத்தி கணபதி தேவராயர் ஆட்சி வரையிலும் நீடித்திருந்தது. பின்னர் இந்த அரசு விஜயநகரப் பேரரசிற்கு கப்பம் கட்டும் ஓர் அரசாக மாறியது.

விஜயநகரப் பேரரசின் கீழ்

தொகு

விஜயநகரப் பேரரசின் கீழ் இருந்த இந்த அரசானது வேலுகோட்டி ராயுடப்பா நாயனி என்பவரால் மீண்டும் கி.பி 1600 ஆண்டில் நிறுவப்பட்டது.[3][4]. சென்னை மாகாண சமீன் (ஒழிப்பு மற்றும் இரயத்வாரி முறையிலிருந்து மாற்றம்) சட்டத்தின் படி, 1948 (1948 ஆம் ஆண்டின் 26ஆவது சட்டம்) 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் நாள மாநிலத்தால் கையகப்படுத்தபடும்வரை இந்த சமீன் நீடித்திருந்தது. இந்த அரசர்கள் பத்மநாயக்க வேலம்மாவின் வேலுகோட்டி வம்சத்தை சேர்ந்தவர்களாவர். இராஜகோபால கிருஷ்ண யச்சேந்திரா போன்றோர் குறிப்பிடத்தக்க ஆட்சியாளராக உள்ளனர்.(1857–1916)[5].

யச்சமா நாயுடு

தொகு

16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த வம்சத்தின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவராக யச்சமா நாயுடு இருந்தார். அவர் இரண்டாம் வெங்கடா மற்றும் இரண்டாம் சிறீரங்கா ஆகியோரின் விசுவாசியாக இருந்தார். யச்சமா நாயுடு வேங்கடகிரியின் அரச குடும்பத்தின் மற்றொரு பிரபலமான கஸ்தூரிரங்காவின் மகனும் ஆவார். யச்சமா நாயுடு இரண்டாம் வெங்கடாவிற்கு, தக்காண சுல்தான்களின் பிரதேசத்தை கைப்பற்ற உதவியதுடன் வேலூர் மற்றும் மதுரை நாயக்கர்களின் கிளர்ச்சிகளைக் களைந்தெறியவும் உதவினார். விசயநகர மன்னர் வெங்கடபதி ராயனுக்கும் அடுத்து இரண்டாம் சிறீரங்கா அரியணையில் அமர்ந்தபோது, ஜக்கராயாவின் எதிர்ப்பினை மீறி இரண்டாம் சிறீரங்காவிற்கு ஆதரவாக இருந்தார். இரண்டாம் சிறீரங்கா குடும்பமானது ஜக்கராயாவால் சிறை வைக்கப்பட்டபோது, சலவைத் தொழிலாளி ஒருவரின் உதவியுடன், இரண்டாம் சிறீரங்காவின் மகன் ராம தேவ ராயாவை வேலூர் சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்து காப்பாற்றினார். இருப்பினும், இரண்டாம் சிறீரங்காவின் குடும்பத்தினர் அனைவரும் கொலை செய்யப்பட்டதை அவரால் தடுக்க முடியவில்லை. தஞ்சாவூரின் இரகுநாத நாயக்கரின் ஆதரவோடு தோப்பூரில் ராம தேவ ராயா சார்பில் போரிட்டு ஜக்கராயாவைக் கொன்றார். அத்தோடு பழவேற்காடு, செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் ஆகியவற்றின் பகுதிகளை உள்ளடக்கிய கோபுரி பாளையத்தையும் கைப்பற்றினார். பின்னர் இவை விஜயநகரப் பேரரசர் இராம தேவ ராயாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததன. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சில கிராமங்கள் வெங்கடகிரி அரசரால் விலைக்கு வாங்கப்பட்டன.[6]

ஆற்காட்டார் மற்றும் பிரித்தானியர் ஆட்சியின் கீழ்

தொகு

17ஆம் நூற்றாண்டில், இந்த அரசானது பகுதி சுதந்திரம் பெற்ற, ஆற்காட்டு நவாப் ஆட்சிக்கு கப்பம் செலுத்தக்கூடிய அரசாக இருந்தது. 1695 ஆம் ஆண்டில் மொகலாய பேரரசரால், அவர்களின் இராணுவ உதவிக்காக சர்வபள்ளி சர்க்காரின் சர்வபள்ளி, நெல்லூர், ராபூர் மற்றும் வெங்கடகிரி ஆகிய நான்கு தாலுகாக்கள், காளஹஸ்தியின் தாலுகாக்கள், சத்தியநெரு, சென்னூர், கூடூர், திருப்பதி மற்றும் சந்திரகிரி சர்காரில் சகுதூர், காஞ்சி சர்க்காரில் மூன்று தாலுகாக்கள் விஷ்ணுகாஞ்சி, கரங்குடி மற்றும் மொரசரவாக்கம் மற்றும் திருப்பாச்சூர் சர்க்காரில் உள்ள பூந்தமல்லி ஆகியவற்றிற்கு இலவச ஜாகிர் அளிக்கப்பட்டது.[7].வெங்ககிரி பாளையமானது, வெங்கடகிரி பாளைய வருவாய் நிர்வாக மண்டலத்துடன், முந்தைய பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக ஆனது. இந்த நேரத்தில் பாளையமானது, 736 கிராமங்கள் மற்றும் 617 மாஜரா கிராமங்கைள உள்ளடக்கியதாக இருந்தது.[8]

1892 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசுடன் ஆற்காட்டு அரசு இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் சமீனாக மறுசீரமைக்கப்பட்டது, சுதந்திரம் வரை அது அந்த நிலைையத் தொடர்ந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Imperial Gazetteer of India, v. 24, p. 307.
  2. ALLADI JAGANNATHAySA^RI, b.a. & L.T. (1922). A FAMILY HISTORY OF VENKATAGIRI RAJAS. ADDISON PRESS, Madras. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9785519483643. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |author= and |last= specified (help)
  3. https://archive.org/stream/familyhistoryofv00sastrich/familyhistoryofv00sastrich_djvu.txt
  4. https://indiankanoon.org/doc/1062835/
  5. http://www.thehindu.com/features/metroplus/society/chennais-illustrious-clubs/article7689063.ece
  6. ALLADI JAGANNATHAySA^RI, b.a. & L.T. (1922). A FAMILY HISTORY OF VENKATAGIRI RAJAS. ADDISON PRESS, Madras. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9785519483643.
  7. ALLADI JAGANNATHAySA^RI, b.a. & L.T. (1922). A FAMILY HISTORY OF VENKATAGIRI RAJAS. ADDISON PRESS, Madras. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9785519483643.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-08-06. பார்க்கப்பட்ட நாள் 2018-05-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கடகிரி_பாளையம்&oldid=3925728" இலிருந்து மீள்விக்கப்பட்டது