வெங்கணை

கூட்டமாக மேயும், பெரும்பாலும் குளூபீடே குடும்பத்தைச் சேர்ந்த மீன்,

வெங்கணை அல்லது வெங்கணா (Herring) என்பது பெரும்பாலும் கூட்டமாக கடலில் மேயும் மீனினமாகும். இது குளூபீடே குடும்பத்தைச் சேர்ந்தது. வெங்கணையில் பல உட்பிரிவுகள் உள்ளன.

வெங்கணை
The Atlantic herring, Clupea harengus
ஐ.நா.வே.அ அறிவித்தபடி
வெங்கணையின் உலகளாவிய வணிக பிடிப்பு மில்லியன் டன்களில் 1950–2010[1]

வெங்கணை மீனானது பெரும்பாலும் மீன்பிடி கரை மற்றும் கடற்கரைக்கு அருகில் கூட்டமாக நகர்கிறது. குறிப்பாக வடக்கு பசிபிக் மற்றும் வட அட்லாண்டிக் பெருங்கடல்களின், பால்டிக் கடல் ஆழமற்ற, கடல் பகுதிகளில் மற்றும் தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் காணப்படுகிறது. குளூபியா குடும்பத்தில் மூன்று இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் பிடிக்கப்படும் மீன்களில் சுமார் 90% வெங்கணையாக உள்ளது. இவற்றில் மிகுதியானது அட்லாண்டிக் வெங்கணை ஆகும், பிடிக்கப்படும் மொத்த வெங்கணை மீன்களில் பாதிக்கு மேல் உள்ளது. அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் வெங்கணை என்று அழைக்கப்படும் மீன்கள் உள்ளன.

ஐரோப்பாவில் கடல் மீன்பிடி வரலாற்றில் வெங்கணை முக்கிய பங்கு வகித்தது. [2] மேலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மீன்வள அறிவியலின் பரிணாம வளர்ச்சிக்கு இவை குறித்த ஆய்வு அடிப்படையாக ஆனது. [3] [4] இந்த எண்ணெய் மீன் ஒரு முக்கியமான உணவு மீனாக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, மேலும் இவை பெரும்பாலும் கருவாடு, புகை போட்டு பதப்படுத்தபட்ட மீன் புகைபிடித்தல் அல்லது வெங்கணா ஊறுகாய் என பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெங்கணாவை "சில்வர் டார்லிங்ஸ்" என்றும் அழைப்பர். [5]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கணை&oldid=3316017" இலிருந்து மீள்விக்கப்பட்டது