வெட்டிகுளங்கரா தேவி கோயில், செப்பாட்
வெட்டிகுளங்கரா தேவி கோயில் கேரளாவின் ஆலப்புழாவில் ஹரிப்பாட் அருகே உள்ள சேப்பாட் என்ற இடத்தில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலின் மூலவர் துர்கா ஆவார். அவர் கார்த்தியாயினி தேவி என்றும் அழைக்கப்படுகிறார்.[1]
துணைத்தெய்வங்கள்
தொகுஇக்கோயிலில் மகாதேவர், விநாயகர், ஐயப்பன், நாகராஜா, நாகயக்சி உள்ளிட்ட பல துணைத்தெய்வங்கள் உள்ளன.
திருவிழாக்கள்
தொகுஇங்கு நவஹம் (கன்னி), சப்தஹம் (விருச்சிகம்), கார்த்திகை (விருச்சிகம்), பர எழுநல்லது (மகரம்), திரு உற்சவம் (கும்பம்) உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
அமைவிடம்
தொகுசேப்பாட் பேருந்து நிறுத்தத்திலிருந்து 1 கி.மீ. தொலைவிலும், ஹரிபாட் கேரள மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், காயம்குளம் KSRTC பேருந்து நிலையத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலும், நங்கியார்குளங்கரா பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் கோயில் உள்ளது. செப்பாட் (1.5 கி.மீ.), ஹரிபாட் (6 கி.மீ.), காயங்குளம் (12 கி.மீ.) ஆகியவை அருகிலுள்ள ரயில் நிலையங்கள் ஆகும்.