வெண்தலை மைனா

வெண்தலை மைனா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சுடுருனிடே
பேரினம்:
சுடுருனியா
இனம்:
சு. பிளைத்தீ
இருசொற் பெயரீடு
சுடுருனியா பிளைத்தீ
(ஜெர்டான், 1845)

வெண்தலை மைனா [Malabar starling (சுடுருனியா பிளைத்தீ)] அல்லது பிளைத் மைனா என்பது சாம்பல் தலை மைனாவின் ஓர் உள்ளினமாகக் கருதப்பட்டு வந்து, 2005க்குப் பிறகு தனிச் சிற்றினமாகக் கருதப்படும் இந்த மைனா வகைப் புள்ளானது தென்னிந்தியாவின் மலபார் பகுதிகளில் (குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி) மட்டுமே காணப்படும்[1] எனவே இது மலபார் நாகணவாய் எனவும் அழைக்கப்படுகின்றது. இது ஓர் அகணிய உயிரி ஆகும்.

உடலமைப்பு

தொகு

தலை, தொண்டை, மார்பு இவையனைத்தும் பளிச்சிடும் வெண்ணிறம்; மேல்பகுதியும் பின்புறமும் சாம்பல் நிறம். வயிற்றுப்பகுதியும் வாலடிப் பகுதியும் அடர் செம்பழுப்பு நிறம்[2]. மற்ற உடலமைப்புக் கூறுகள் பெரும்பாலும் சு. ம. மலபாரிகாவினைப் போலவே இருக்கும்.

பரவல்

தொகு

மலபார் வனப்பகுதிகளில் (குறிப்பாக வயநாடு, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள்) கடல் மட்டத்திலிருந்து 600 m உயரம் வரையிலும் காணப்படுகின்றது[2]; தற்காலத் தரவுகளின் படி, இப்பறவையின் பரவல் வடக்கே விரார் பகுதியிலிருந்து தெற்கே கீரிப்பாறை வரையுள்ள மலபார் பகுதி[1] (கிழக்கே தோராயமாக 760 E வரையுள்ள பரப்பு)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Range Map (ebird -- Malabar starling)". பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.
  2. 2.0 2.1 Jerdon. T.C. (1877). The Birds of India, Vol. II (Part II). p. 331 (689)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்தலை_மைனா&oldid=3756906" இலிருந்து மீள்விக்கப்பட்டது