சாம்பல் தலை மைனா
சாம்பல் தலை மைனா[2][3] [Chestnut-tailed starling (Sturnia malabarica)] அல்லது சாம்பல் தலை நாகணவாய்[4] என்பது இந்தியத் துணைக்கண்டத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படும் இசுடர்னிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை.
சாம்பல் தலை மைனா | |
---|---|
சட்சாரி தேசியப் பூங்காவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | S. malabarica
|
இருசொற் பெயரீடு | |
Sturnia malabarica கமீலின், 1789 | |
approximate range | |
வேறு பெயர்கள் | |
Temenuchus malabaricus |
உடலமைப்பும் கள அடையாளங்களும்
தொகுநாகணவாயை விட அளவில் சிறியது (நீளம் = 17 – 22 cm[5]); தலையும் நெற்றியும் சாம்பல் நிறம். கழுத்திற்குக் கீழுள்ள அடிப்பகுதி செம்பழுப்பு நிறம்.
வளர்ந்த புள்ளினது அலகின் அடிப்பகுதி நீல நிறத்திலும் நடுப்பகுதி செம்மஞ்சளாகவும் முனை மஞ்சள் நிறத்திலும் இருக்கும். மேலிறகுகள் கருஞ்சாம்பல் நிறத்திலும் ஓரங்கள் கருப்பாகவும் இருக்கும். வாலிறகுகள் செம்பழுப்பும் சாம்பல் நிறமும் கலந்து காணப்படும்[5].
துணையினங்கள்
தொகுS. malabarica இனம் இரு துணையனங்களைக் கொண்டுள்ளது:[6]
முன்னிறுத்தப்பட்ட இனம்: S. m. malabarica; உள்ளினம்: S. m. nemoricola
பரவல்
தொகுமலபாரிக்கா சாம்பல் தலை மைனா (S. m. malabarica) துணையினமானது குஜராத்தின் பூஜ்ஜிலிருந்து வட கிழக்காக சண்டிகருக்குத் தெற்கேயுள்ள இந்தியாவின் பெரும்பகுதி, இமாச்சலப் பிரதேசத்திலிருந்து கிழக்காக நேப்பாளம் வழியாக பூட்டான், வடகிழக்கு அருணாச்சலப் பிரதேசத்தின் மிசுமி மலைகள், வடக்கு அசாம் வரை, தெற்கே ஒடிசா வரை காணப்படுகின்றது. குளிர்காலத்தில் இந்தியாவின் தென் பகுதிகளுக்கு வலசை போகின்றது[7].
வாழ்விடம்
தொகுமலையடிவாரங்கள் (2000 மீ வரை), தாழ்நிலப் பகுதிகள், அடர்ந்து வளராத காட்டிலாக்காத் தோட்டங்கள், மரங்களடர்ந்த பகுதிகளில் (மரங்கள் ஆங்காங்கு உள்ள பகுதிகள் உட்பட) காணலாம்; மனிதர் வாழும் பகுதிகளுக்கு அருகாமையில் காணப்படும் சாம்பல் தலை மைனா மனிதர் வாழும் பகுதிகளிக்குத் தொலைவிலும் காணப்படும்[5].
வலசை
தொகுஉணவு
தொகுபெரும்பாலும் மரத்தில் இருந்தபடியே உணவைப் பிடிக்கும்; அரிதாகவே தரையிறங்கும். உணவு: பெருமளவில் பூச்சிகள், பழங்கள், தேன் ஆகியவை; சில சமயம் மகரந்தம், மொட்டு ஆகியவற்றையும் உண்ணும். கூட்டிலுள்ள குஞ்சுகளுக்கு கம்பிளிப்பூச்சிகளையும் வண்டுகளையும் உணவாகக் கொடுக்கும். ஒரு நாளின் செயல்கள் முடிந்த பின்னர் இவை கூட்டமாகப் புதர்களில் அடைகின்றன[7].
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Sturnia malabarica". IUCN Red List of Threatened Species 2016: e.T22710858A94263973. https://www.iucnredlist.org/species/22710858/94263973. பார்த்த நாள்: 23 May 2021.
- ↑ க. ரத்னம் (1998). தமிழில் பறவைப் பெயர்கள். பக். 57 (280).
- ↑ கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 186:1. பி. என். எச். எஸ்.
- ↑ க. ரத்னம் (2002). தமிழ்நாட்டுப் பறவைகள். பக். 156 (310). மெய்யப்பன் பதிப்.
- ↑ 5.0 5.1 5.2 Feare. C. & Craig. A. (1998). Starlings and Mynas. p. 173 (58)
- ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2023). "Nuthatches, Wallcreeper, treecreepers, mockingbirds, starlings, oxpeckers". IOC World Bird List Version 13.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 14 August 2023.
- ↑ 7.0 7.1 "BOW: Chestnut-tailed Starling: Subspecies distribution". பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.