வெப்ப மண்டலப் பறவை

வெப்ப மண்டலப் பறவைகள் (ஆங்கிலப் பெயர்: Tropicbirds) என்பவை பைதோன்டிடே (Phaethontidae) குடும்பத்தில் உள்ள வெப்ப மண்டலப் பறவைகள் ஆகும். இவை கடல் பறவைகள் ஆகும். பைதோன்டிபார்மசு ( Phaethontiformes) வரிசையில் இப்பறவையினம் மட்டுமே உள்ளது. பல ஆண்டுகளாக இவை பெலிகனிபார்மசு (Pelecaniformes) வரிசையைச் சேர்ந்தவை என்று கருதப்பட்டது, ஆனால் மரபியல் ஆய்வுகள் இவை யூரிபிகிபார்மசு (Eurypygiformes) வரிசையுடன் தொடர்புடையவை என்று கூறுகின்றன. வெப்ப மண்டலப் பறவைகள் 3 இனங்கள் ஆகும். இவை பைதோன் (Phaethon) பேரினத்தின் கீழ் வருகின்றன. பைதோன் என்ற பண்டைய கிரேக்கச் சொல்லுக்கு "சூரியன்" என்று பொருள்.[1] இவை பொதுவாக வெண்மையான இறகுகளுடன் காணப்படுகின்றன. இவற்றின் வால் இறகுகள் நீளமாக இருக்கும். இவற்றின் கால் மற்றும் பாதம் சிறியதாக இருக்கும்.

வெப்ப மண்டலப் பறவைகள்
புதைப்படிவ காலம்:ஆரம்ப இயோசீன்-தற்காலம்
சிவப்பு அலகு வெப்ப மண்டலப் பறவை (Phaethon aethereus mesonauta)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
உயிரிக்கிளை:
வரிசை:
வெப்ப மண்டலப் பறவை

சார்ப், 1891
குடும்பம்:
வெப்ப மண்டலப் பறவை

பிரான்ட், 1840
பேரினம்:
பைதோன்

இனங்கள்

3

விளக்கம்

தொகு
 
சிவப்பு வால் வெப்ப
மண்டலப் பறவை

இவை 76-102 செ.மீ. நீளம், 94-112 செ.மீ. இறக்க நீளம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இவற்றின் நான்கு விரல்களும் சவ்வால் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கால்கள் உடலின் கடைசிப் பகுதியில் இருக்கின்றன. ஆதலால் இவற்றால் நடக்க இயலாது. இவை கால்களால் உந்தி நகர்கின்றன.[2]

குறிப்புகள்

தொகு
  1. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 301. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
  2. Schreiber, E.A. (1991). Forshaw, Joseph (ed.). Encyclopaedia of Animals: Birds. London: Merehurst Press. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85391-186-0.

உசாத்துணை

தொகு
  • Boland, C. R. J.; Double, M. C.; Baker, G. B. (2004). "Assortative mating by tail streamer length in red-tailed tropicbirds Phaethon rubricauda breeding in the Coral Sea". Ibis 146 (4): 687–690. doi:10.1111/j.1474-919x.2004.00310.x.  (HTML abstract)
  • Oiseaux.net (2006): Red-billed Tropicbird. Retrieved 4-SEP-2006.
  • Spear, Larry B.; Ainley, David G. (2005). "At-sea behaviour and habitat use by tropicbirds in the eastern Pacific". Ibis 147 (2): 391–407. doi:10.1111/j.1474-919x.2005.00418.x.  (HTML abstract)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்ப_மண்டலப்_பறவை&oldid=3626337" இலிருந்து மீள்விக்கப்பட்டது