வெளியன் என்னும் பெயர் வானவெளி போல் உயர்ந்த உள்ளம் கொண்டவன் என்னும் பொருள்படுகையில் பொதுச்சொல்; ஒருவன் பெயரை உணர்த்தும்போது குறிச்சொல்.

  • வெளியனூர் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஓர் ஊர்.
  • வெளியம் என்னும் ஊர் சேரமன்னன் வானவரம்பன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. [1]
  • வெளியன் என்னும் பெயருடன் விளங்கியதாகத் தெரியவரும் மூன்று அரசர்களும் வேளிர் குடியைச் சேர்ந்தவர்கள். இவர்களது பெயரில் ‘வேண்மான்’ (வேள் மகன்) என்னும் அடைமொழி உள்ளதால் இதனை உணரமுடிகிறது.
  • பதிற்றுப்பத்து இரண்டாம் பத்து பாடல்களில் போற்றப்பட்டவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவனது தாயார் வெளியனின் மகள். வெளியன் வேண்மான் நல்லினி [2]
  • வெளியன் வேண்மான் ஆய்எயினன் மிஞிலி தாக்கிய பாழிப்பறந்தலைப் போரில் மாண்டபோது உருவினை நன்னன் அருள் காட்டாமல் ஒதுங்கிக்கொண்டான் [3]
  • (சேலம் மாவட்ட வீரகனூர் அரசன் வெளியன் தித்தன் (வெளியன் மகன் தித்தன்) முரசில் விளக்கேற்றி வைத்தான். வரலாற்றுப் பார்வையில் இந்த விளக்குதான் திருவண்ணாமலைத் தீபம் எனக் கொள்ள இடமுண்டு. [4]
  • பள்ளி வேளான் என அழைக்கப்படும் கலிங்க நாட்டு அடிமைகள் இவன் வம்சத்தினர் என கருதப்படுகிறார்கள்.[சான்று தேவை]

மேலும் காண்க

தொகு
  • தித்தன், தித்தன் வெளியன் – சோழ அரசர்கள்

அடிக்குறிப்பு

தொகு
  1. வானவரம்பன் வெளியத்து அன்ன நம் மாணலம் மாமூலனார் பாடல் அகம் 359
  2. பதிற்றுப்பத்து பதிகம் 2
  3. பரணர் பாடல் அகம் 208
  4. வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கு முதுகூத்தனார் பாடல் - நற்றிணை 58
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளியன்&oldid=2566244" இலிருந்து மீள்விக்கப்பட்டது