வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம்

இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம் (Westminster Cathedral) இங்கிலாந்து மற்றும் வேல்சு கத்தோலிக்க மக்களின் தாய்க் கோவில் ஆகும். தவிர வெஸ்ட்மின்ஸ்டர் பேராயரின் மறைமாவட்ட ஆலயமாகவும் மண்டலப் பெருங்கோவிலாகவும் உள்ளது. இது இயேசு கிறித்துவின் தூய திரு இரத்தத்திற்கு நேர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம்
இயேசுவின் தூய திரு இரத்தப் பெருங்கோவில்
வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம் விக்டோரியா தெருவிலிருந்து
51°29′46″N 0°08′23″W / 51.4961°N 0.1397°W / 51.4961; -0.1397
அமைவிடம்வெஸ்ட்மின்ஸ்டர் நகரம், இலண்டன்
நாடுஇங்கிலாந்து
சமயப் பிரிவுகத்தோலிக்க திருச்சபை
வலைத்தளம்westminstercathedral.org.uk
வரலாறு
நேர்ந்தளித்த ஆண்டு1910
Architecture
கட்டடக் கலைஞர்ஜான் பிரான்சிசு பெண்ட்லீ
பாணிபுது-பிசான்சியப் பாணி
கட்டப்பட்ட வருடம்1895-1903
இயல்புகள்
நீளம்110மீட்டர்
கோபுர எண்ணிக்கை1
கோபுர உயரம்87மீட்டர்
நிருவாகம்
மறைமாவட்டம்வெஸ்ட்மின்ஸ்டர் (since 1884)
Provinceவெஸ்ட்மின்ஸ்டர்
குரு
ஆயர்பேராயர் வின்சென்ட் நிக்கோல்சு
வழிபாட்டு குருக்கள்கிறிஸ்தோபர் டக்வெல்
பொதுநிலையினர்
இசை இயக்குனர்மார்ட்டின் பேக்கர்
Organist(s)பீட்டர் ஸ்டீவன்சு

இந்த தேவாலயம் உள்ள இடமானது முன்பு புனித பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்) சபைத் துறவியரின் உடைமையாக இருந்தது. இக்கோவிலின் அண்மையிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் துறவியர் இல்லத்தை நிறுவியதும் அவர்களே. 1885ஆம் ஆண்டில் வெஸ்மின்ஸ்டர் உயர் மறைமாவட்டம் இந்த நிலத்தை வாங்கியது.[1]

இந்தப் பேராலயம் வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் விக்டோரியா பகுதியில் அமைந்துள்ளது. இது இங்கிலாந்து மற்றும் வேல்சில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களிலேயே மிகப் பெரியது. இதனை அருகிலுள்ள இங்கிலாந்து திருச்சபையின் வெஸ்ட்மின்ஸ்டர் துறவியர் இல்லத்துடன் குழப்பல் ஆகாது.

வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம் வெஸ்ட்மின்ஸ்டர் உயர் மறைமாவட்டப் பேராயரின் ஆட்சிபீடமாக உள்ளது. தற்போது மேதகு முனைவர் வின்சென்ட் நிக்கோல்சு பேராயராக உள்ளார். இம்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர்கள் அனைவருமே கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டதைக் கருதும்போது, நிக்கோல்சும் விரைவில் கர்தினால் பதவி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு